| 4323 |
சா |
சாக்காடு, இறப்பு |
| 4324 |
சாஅய் |
சாய்ந்து, மிடித்து, மெலிந்து, பஞ்சாய்ப் பாவை |
| 4325 |
சாஅய்ச் சாஅய் |
அசைந்தசைந்து, ஒழுக மெலிந்து மெலிந்து வந்து |
| 4326 |
சாஅய்தல் |
மெலிதல் |
| 4327 |
சாக்குத்தி |
சாவக் குத்தி, சாகும்படி குத்தி |
| 4328 |
சாகாடு |
வண்டியுருளை, சகடம் |
| 4329 |
சாடி |
உழுசால் |
| 4330 |
சாடுதல் |
துகைத்தல், குத்திக் கிழித்தல், கோபித்தல், குத்துதல், திறத்தல், வடுச் செய்தல் |
| 4331 |
சாடு |
வண்டி |
| 4332 |
சாணம் |
தழும்பு |
| 4333 |
சாத்தர் |
வெளி நாடுகளில் வியாபாரம் செய்யும் வணிகர் கூட்டத்தார் |
| 4334 |
சாத்தன் |
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன், ஓர் உபகாரி |
| 4335 |
சாத்து |
திரள், வணிகர் கூட்டம் |
| 4336 |
சாதி |
திரள் |
| 4337 |
சாந்தம் |
சந்தனம் |
| 4338 |
சாந்த மரம் |
சந்தன மரம் |
| 4339 |
சாந்தி |
பூசை |
| 4340 |
சாந்து |
கலவைச் சந்தனம், சந்தனம், மயிர்ச் சாந்து, சந்தன மரம், விழுது |
| 4341 |
சாந்து உரல் |
சந்தன மரத்தால் செய்த உரல் |
| 4342 |
சாந்து உளர் கூழை |
மயிர்ச் சாந்து பூசி உலர்த்தின மயிர் |
| 4343 |
சாபம் |
வில் |
| 4344 |
சாம்பல் |
வாடற் பூ, வாடல் |
| 4345 |
சாம்பு |
சேக்கை, படுக்கை |
| 4346 |
சாம்புதல் |
வாடுதல், கெடுதல், குவிதல் |
| 4347 |
சாம்புலம் |
புலர்கின்ற நிலம் |
| 4348 |
சாமரை |
கன்ன சாமரை |
| 4349 |
சாமன் |
காமன் தம்பி |
| 4350 |
சாய் |
தண்டான் கோரை, மென்மை, செறும்பு |
| 4351 |
சாய் இறை |
வளைந்த முன்கை |
| 4352 |
சாய் இறைப் பணைத் தோள் |
வளைந்த சந்தினையுடைய பருத்த தோள் |
| 4353 |
சாய்குவள் |
வருந்துவள் |
| 4354 |
சாய்த்தல் |
சாயச் செய்தல், கெடுத்தல், சாய்த்திருத்தல் |
| 4355 |
சாய்தல் |
கவிழ்தல், மெலிதல், வளைதல், வருந்துதல், கெடுதல், தேய்தல், வாடுதல் |
| 4356 |
சாய்மார் |
சாய்தற்கு |
| 4357 |
சாய |
அலைவு பெற, கெடுத்தற்கு |
| 4358 |
சாயல் |
இளைப்பு, அழகு, மென்மை, அருள், ஐம்பொறியால் நுகரும் மென்மை |
| 4359 |
சாயல் இன் மார்பு |
மென்மையால் இனிய மார்பு, மென்மை இனிதாகிய மார்பு |
| 4360 |
சாயின்று |
சாய்ந்தது |
| 4361 |
சாயினம் |
மென்மையுள்ள மகளிர் கூட்டம் |
| 4362 |
சாயினள் |
மெலிந்தனள் |
| 4363 |
சாயினும் |
மெலியினும் |
| 4364 |
சார் |
இடப் பொருளுணர்த்தும் ஏழனுருபு, பக்கம் |
| 4365 |
சார்ச் சார் |
இடந் தொறும் இடந் தொறும், சார்ந்த சார்ந்த இடங்கள் |
| 4366 |
சார்தர |
சேர |
| 4367 |
சார்தல் |
கலத்தல், தழுவுதல், கிட்டுதல் |
| 4368 |
சார்வு |
புகலிடம் |
| 4369 |
சாரல் |
பக்கமலை, மலைச் சாரல் |
| 4370 |
சாராது |
சாராமல் |
| 4371 |
சாரான் |
பொருந்தாமல் |
| 4372 |
சாரிகை |
கதி |
| 4373 |
சால் |
அமைந்த, படைச்சால், மிடா |
| 4374 |
சால் அவிழ் |
மிடாச் சோறு |
| 4375 |
சால்பு |
அமைதி, தகுதி |
| 4376 |
சாலகம் |
சாளரம் |
| 4377 |
சாலா |
ஒவ்வா, அமையா, போதா |
| 4378 |
சாலி நெல் |
செந்நெல் |
| 4379 |
சாலியர் |
மிகுக |
| 4380 |
சாலினி |
அருந்ததி, தேவராட்டி |
| 4381 |
சாலுதல் |
அமைதல் |
| 4382 |
சாலேகம் |
சாளரம் |
| 4383 |
சாவகர் |
விரதங் கொண்டோர் |
| 4384 |
சாவம் |
வில் |
| 4385 |
சாற்றல் |
விற்றல் |
| 4386 |
சாற்றுதல் |
விளம்பரப் படுத்துதல், நிரைத்தல் |
| 4387 |
சாறு |
பூசை, வாசனைப் பண்டங்கள் ஊறின நீர், திருவிழா |
| 4388 |
சான்ம் |
அமையும் |
| 4389 |
சான்ற |
அமைந்த, பொருந்தின |
| 4390 |
சான்றவர் |
அமைந்தவர், அறிவுடையோர் |
| 4391 |
சான்றவிர் |
சான்றீராயுள்ளீர், நற் குணங்களெல்லாம், அமைந்தீர் |
| 4392 |
சான்றார் |
அமைதியை யுடையோர் |
| 4393 |
சான்றாள் |
அமைந்தவள் |
| 4394 |
சான்றார் |
அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர், போர் வீரர், அமைந்தோர் |
| 4395 |
சான்றோன் |
அறிவொழுக்கங்களால் சிறந்தவன் |