| 4396 |
சிகழிகை |
தலைமயிரின் முடிப்பு, துஞ்சு, மயிர்முடி |
| 4397 |
சிகை |
சேடம், குறை |
| 4398 |
சித்திர மாடம் |
சிங்கார மாளிகை |
| 4399 |
சிதடன் |
குருடன் |
| 4400 |
சிதடி |
சிள் வண்டு |
| 4401 |
சிதடு |
குருடு, உள்ளீடின்மை |
| 4402 |
சிதர் |
சிந்துதல், மழைத் துளி, மெத்தனவு, சிந்துகை, வண்டு |
| 4403 |
சிதர் கால் |
மெல்லிய கால் |
| 4404 |
சிதர்வை |
நைந்து அற்றுப் போன சீரை |
| 4405 |
சிதரல் |
சிதறுகை, கிளரல் |
| 4406 |
சிதரினம் |
வண்டின் திரள் |
| 4407 |
சிதல் |
கறையான் |
| 4408 |
சிதலை |
சிதல், கறையான் |
| 4409 |
சிதவல் |
சீலைத் துணி, தலையில் அணியும் துகில் |
| 4410 |
சிதறல் |
சிதறியவை, சொரிதல் |
| 4411 |
சிதறு |
சிதறுவாயாக |
| 4412 |
சிதறுதல் |
இறைத்தல், மிகுதியாகக் கொடுத்தல் |
| 4413 |
சிதாஅர் |
சீரை, சீலை, கந்தைத் துணி |
| 4414 |
சிதாஅர் வள்பு |
சிதைந்த வார்க்கட்டு |
| 4415 |
சிதைஇ |
சிதைத்து |
| 4416 |
சிதை செய்தல் |
சிதைத்தலைச் செய்தல் |
| 4417 |
சிதைத்ததை |
கெடுத்தது |
| 4418 |
சிதைத்தல் |
கெடுத்தல், அழித்தல் பசப்பித்தல் |
| 4419 |
சிதைதல் |
தன்மை கெடுதல், சிதறுதல், அறுபடுதல், நிறங்கெடல் |
| 4420 |
சிதையாமை |
கெடாமை |
| 4421 |
சிதைவு |
கேடு, குற்றம் |
| 4422 |
சிந்தியேன் |
நினையேன் |
| 4423 |
சிந்துவாரம் |
கரு நொச்சி |
| 4424 |
சிந்தை |
எண்ணம் |
| 4425 |
சிமிலி |
உறி |
| 4426 |
சிமை |
மலையுச்சி, சிகரம் |
| 4427 |
சிமையம் |
உச்சி, சிகரம், மலை, மலையுச்சி |
| 4428 |
சிரகம் |
கரகம் |
| 4429 |
சிரல் |
சிச்சிலி, மீன் கொத்திக் குருவி |
| 4430 |
சிரற்றாது |
கோபியாத படி |
| 4431 |
சிரற்றுதல் |
கோபித்தல் |
| 4432 |
சிரறல் |
ஒலித்தல் |
| 4433 |
சிரறுதல் |
மாறுபடுதல் |
| 4434 |
சிரறுபு |
வேறாகி |
| 4435 |
சில் ஓதி |
சிலவாகிய கூந்தலையுடையவள் |
| 4436 |
சில் காற்று |
தென்றல் |
| 4437 |
சில்கி |
சிலவாகி |
| 4438 |
சில்குதல் |
சிலவாதல் |
| 4439 |
சில் நாட்டு |
சில நாட்களையுடையது |
| 4440 |
சில் நிரை வளை |
சிலவாகிய வரிசையையுடைய வளை |
| 4441 |
சில்பத உணவு |
உப்பு |
| 4442 |
சில்பதம் |
சிறிய உணவு |
| 4443 |
சில் பலி |
சிறு பலி |
| 4444 |
சில்லை |
சிலுவைக் குணம், சிறுமைக் குணம், முருட்டுத்தனம் |
| 4445 |
சில் விளை வரகு |
சிலவாக விளைந்த வரகு |
| 4446 |
சில |
சிறிது |
| 4447 |
சில சொல் |
மெத்தென்ற சொல் |
| 4448 |
சிலதன் |
ஏவல் செய்வோன் |
| 4449 |
சிலம்பல் |
ஒலித்தல் |
| 4450 |
சிலம்பன் |
குறிஞ்சித் தலைவன் |
| 4451 |
சிலம்பாறு |
பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஆறு |
| 4452 |
சிலம்பி |
சிலந்தி |
| 4453 |
சிலம்பு |
பக்கமலை, குகை, மலை, மகளிர் காலணி வகை |
| 4454 |
சிலம்புதல் |
ஒலித்தல், எதிரொலித்தல் |
| 4455 |
சில வித்து அகலவிட்டு |
சிலவாகிய விதைகளைக் கலப்பாக விதைத்து |
| 4456 |
சிலை |
ஒரு மரம், சிலைத்தல், முழக்கம், வானவில், வில் |
| 4457 |
சிலை எழில் ஏறு |
முழக்கம் செய்யும் எழுச்சியுள்ள எருது |
| 4458 |
சிலைத்தல் |
கொட்டுதல், முழங்குதல் |
| 4459 |
சிலைத் தார் |
இந்திரவில் போன்ற மாலை |
| 4460 |
சிலைப்பவை |
முழங்குமவை |
| 4461 |
சிலை வல்லான் |
வில்லைத் தொழில் கொள்ள வல்ல காமன் |
| 4462 |
சிலை வில் |
சிலை மரத்தால் செய்த வில் |
| 4463 |
சிவணல் |
பொருந்தல் |
| 4464 |
சிவணிய |
பொருந்திய |
| 4465 |
சிவணுதல் |
பொருந்துதல் |
| 4466 |
சிவத்தல் |
கோபித்தல், செந்நிறங்கொள்ளுதல் |
| 4467 |
சிவந்தன்று |
சிவந்தது |
| 4468 |
சிவந்தனை |
கோபித்தாய் |
| 4469 |
சிவந்து |
கோபித்து |
| 4470 |
சிவப்பு |
செந்நிறம், கோபம் |
| 4471 |
சிவப்பூர்தல் |
சிவந்த நிறமடைதல் |
| 4472 |
சிவலை |
சிவப்பு நிறமுள்ளது |
| 4473 |
சிவிறி |
நீர் வீசுங் கருவி |
| 4474 |
சிள்வீடு |
சிள் வண்டு |
| 4475 |
சிள்ளென |
ஒலிக் குறிப்பு |
| 4476 |
சிள்ளெனல் |
விரைவுக் குறிப்பு |
| 4477 |
சிற்றடிசில் |
சிறுசோறு |
| 4478 |
சிற்றில் |
சிறு குடில், சிறுமியர் கட்டி விளையாடும் மணல் வீடு |
| 4479 |
சிற்றில் புனைதல் |
சிற்றில் இழைத்து விளையாடுதல் |
| 4480 |
சிற்றினம் |
நல்லறிவு இல்லாத தாழ்ந்தோர் |
| 4481 |
சிறகர் |
சிறகு |
| 4482 |
சிறத்தல் |
கனத்தல், மிகுதல், மேன்மையுடையதாதல், இன்றியமையாததாதல் |
| 4483 |
சிறந்தன்று |
கனத்தது |
| 4484 |
சிறந்தான் |
கணவன் |
| 4485 |
சிறந்து |
மிக்கு |
| 4486 |
சிறந்தோர் |
தேவர் |
| 4487 |
சிறப்பு |
செல்வம், தலைமை, இன்றியமையாமை |
| 4488 |
சிறாஅர் |
சிறுவர்கள், சிறு பிள்ளைகள் |
| 4489 |
சிறிது |
சிறய அளவு, மிக இன்று, அற்பமானது |
| 4490 |
சிறியவன் |
கொடுத்தற்கு மனம் சிறியனானவன் |
| 4491 |
சிறியிலை |
சிறிய இலை |
| 4492 |
சிறு |
சிறிய |
| 4493 |
சிறுக்கண் |
சிறிய கண் |
| 4494 |
சிறு கண் |
சிறிய இடங்கள் |
| 4495 |
சிறு குடி |
சிறிய ஊர், குறிஞ்சி முல்லை நிலங்களிலுள்ள சிறிய ஊர், பண்ணன் என்னும் ஓர் உபகாரியின் ஊர் |
| 4496 |
சிறுகுபு |
சிறுகி |
| 4497 |
சிறு குழி |
சிறிய குழி |
| 4498 |
சிறு குழை |
தாளுருவி என்னும் அணி |
| 4499 |
சிறு கோடு |
சிறு கொம்பு |
| 4500 |
சிறு செங்குரலி |
கருந்தாமக் கொடி |
| 4501 |
சிறு சொல் |
இழி சொல் |
| 4502 |
சிறு சோறு மடுத்து |
சிறு சோற்றைச் சமைத்து ஆயத்திற்கு இட்டு |
| 4503 |
சிறுதடி |
பாத்தி |
| 4504 |
சிறுதலைப் பிணை |
சிறிய தலையை யுடைய பெண்மான் |
| 4505 |
சிறு தலை ஆயம் |
ஆட்டினம் |
| 4506 |
சிறு தலை வெள்ளைத் தோடு |
சிறிய தலையினையுடைய வெள்ளாட்டின் தொகுதி |
| 4507 |
சிறு நணி |
சிறு நனி, விரைவாக |
| 4508 |
சிறு நல்லூர் |
சிறிய நல்ல ஊர் |
| 4509 |
சிறு நனி |
சிறிது நேரம், விரைவாக |
| 4510 |
சிறு நா ஒண் மணி |
சிறிய நாக்கை யுடைய ஒள்ளிய மணிகள் |
| 4511 |
சிறு நுரை |
சிறிய நுரை |
| 4512 |
சிறு பசு மஞ்சள் |
மஞ்சளுள் ஒரு சாதி விசேடம் |
| 4513 |
சிறுபட்டி |
கட்டுக்கு அடங்காத இளைஞன் |
| 4514 |
சிறு பதம் |
தண்ணீராகிய உணவு |
| 4515 |
சிறு பாகர் |
ஏறமாட்டாத பாகர் |
| 4516 |
சிறு புறம் |
சிறு கொடை, புறக் கழுத்து, முதுகு |
| 4517 |
சிறு புறம் தழுவுதல் |
பிடரியைத் தழுவுதல் |
| 4518 |
சிறு புன் மாலை |
சிறிய புல்லிய மாலைக் காலம் |
| 4519 |
சிறு பேராளர் |
சிறிய பெரிய ஆண்மையையுடையோர் |
| 4520 |
சிறு பொழுது ஐந்து |
காலை, உச்சி, மாலை, யாமம், விடியல் என்பன |
| 4521 |
சிறு மறி |
சிறிய ஆட்டுக் குட்டி |
| 4522 |
சிறுமனை |
சிற்றில் |
| 4523 |
சிறு மாரோடம் |
செங்கருங்காலி |
| 4524 |
சிறு மா வையம் |
சிறிய குதிரை பூட்டப்பெற்ற சிறு வண்டி |
| 4525 |
சிறுமி |
சிறியவள் |
| 4526 |
சிறு மீன் |
அருந்ததி |
| 4527 |
சிறுமுத்தன் |
ஆண் பொம்மை, சிறிய குழமகன் |
| 4528 |
சிறுமுதுக் குறைவி |
இளமையிலேயே அறிவு முதிர்ந்தவள் |
| 4529 |
சிறுமுழா |
ஓர் இசைக் கருவி |
| 4530 |
சிறு மெல் ஆகம் |
சிறிய மெல்லிய மேனி |
| 4531 |
சிறுமை |
நோய், புன்மை, தடுமாற்றம் |
| 4532 |
சிறுவரை |
சிறிது நேரம், சிறிதாகிய காலம், சிறிது நாழிகை |
| 4533 |
சிறுவழி |
சிறிய இடம் |
| 4534 |
சிறுவன் |
சிறியன் |
| 4535 |
சிறு வித்தம் |
சிறு தாயம், சூதாட்டத்தில் ஒட்டமாக வைக்கப்பட்ட சிறு தனம் |
| 4536 |
சிறு வீ ஞாழல் |
சிறிய பூக்களையுடைய ஞாழல் மரம், ஞாழல் மரத்தின் சிறிய பூ |
| 4537 |
சிறு வெண் காக்கை |
கழுத்திற் சிறு வெண்மையுடைய காகம் |
| 4538 |
சிறு வெதிர் |
சிறிய மூங்கில் |
| 4539 |
சிறு வெம்மையள் |
சிறிய வெம்மையையுடையாள் |
| 4540 |
சிறை |
அணை, கரை, தோகை, பக்கம், வரம்பு, காவல், சிறகு |
| 4541 |
சிறைதல் |
நிறங் கெடுதல் |
| 4542 |
சிறைப் பிள்ளை |
சிறகையுடைய பிள்ளை |
| 4543 |
சிறைப் புறம் |
வேலிப்புறம், மறைவிடம் |
| 4544 |
சிறையழித்தல் |
அணையை முறித்தல் |
| 4545 |
சின் |
ஓரிடைச் சொல், முன்னிலையசைச் சொல் |
| 4546 |
சின் மொழி |
சிலவாகிய சொற்கள், சிலவாகிய மொழியினையுடையாள், சிலவான மொழியினையுடையாய் |
| 4547 |
சின்னீர் |
சிலவாகிய நீர் ஓடும் கால், சிறிய நீர் |
| 4548 |
சினத்தால் |
சினத்தோடே |
| 4549 |
சினம் |
கோபம், நெருப்பு, வெம்மை, வெயில் |
| 4550 |
சினம் தெறுதலின் |
சினத்தாற் சுடுகையினால் |
| 4551 |
சினவல் |
சினத்தல் |
| 4552 |
சினவின் |
கொதித்தெழுந்தால் |
| 4553 |
சினவுதல் |
கொதித்தெழுதல், கோபித்தல் |
| 4554 |
சினவுவது |
சினக்கின்ற குறை |
| 4555 |
சினவுவாய் |
சினப்பாய், கோபிப்பாய் |
| 4556 |
சினை |
அரும்பு, கவடு, மரக்கிளை, விலங்கு முதலியவற்றின் சூல், மரத்தின் கொம்பு, சிறிய கொம்பு, தேரின் உறுப்பாகிய தாமரை முகை |
| 4557 |
சினைஇ |
சினந்து, கோபித்து |
| 4558 |
சினைஇய |
சினங் கொண்ட |
| 4559 |
சினைஇய வேந்தன் |
சினந்த அரசன் |
| 4560 |
சினைஇயோர் |
சினப்பித்தோர், கோபங் கொள்ளச் செய்தவர் |
| 4561 |
சினைப்பூ |
கோட்டுப் பூ |
| 4562 |
சினை மருள் திரள் வீ |
முட்டையைப் போன்ற திரண்ட மலர்கள் |
| 4563 |
சினைய |
கொம்புகளையுடைய |