4564 சீ பெருக்கு
4565 சீஇ சீவி
4566 சீக்கும் தூக்கும், குப்பையை வாரும்
4567 சீத்தல் கூர்மையாகச் சீவுதல், துடைத்தல், பெருக்குதல், போக்குதல்
4568 சீத்தை கைவிடப்பட்டவன், கெட்ட தன்மையுடையவன், கைவிடப்படுமவன், சீ! கெட்டது
4569 சீதை இராமபிரான் தேவி
4570 சீப்பு காற்று முதலியவற்றால் அடித்துக் கொண்டு வரப்படுவது; கதவுக்கு வலியாக உள் வாயிற் படியிலே நிலத்தே வீழ இடும் மரம், ஒரு வகைத் தாழ்
4571 சீயா தூவாத
4572 சீர் அழகு, அளவு, பெருமை, கனம், காத்தண்டு, தலைமை, தாளம், சிறப்பு, பாட்டு, புகழ், சீர்மை, தாளம் முடிந்து விடுங் காலத்தினைத் தன்னிடத்தே உடையது
4573 சீர் ஆர் சேயிழை தலைமை நிறைந்த சிவந்த சிலம்பு முதலியன
4574 சீர் ஆர் ஞெகிழம் தலைமை நிறைந்த சிலம்பு
4575 சீர்த்தி மிக்க புகழ்
4576 சீர்ப்படுதல் அளவிற்படுதல்
4577 சீர்மிகு சிறப்பினோன் புகழ் மிகுகின்ற தலைமையினையுடைய தக்கணாமூர்த்தி தேவர்
4578 சீர் முற்றுதல் தலைமை முதிர்தல்
4579 சீர சீர்மையுடைய
4580 சீரலைவாய் அலைவாய் என்னும் பதி
4581 சீரை கிழிந்த கந்தைத் துணி, துலாத் தட்டு, மரவுரி
4582 சீற்றம் சினம், கோபம்
4583 சீறடி சிறிய அடி
4584 சீறிடம் சிறிய இடம்
4585 சீறிய நாடு கோபித்து அழித்த நாடு
4586 சீறியாழ் சிறிய யாழ்
4587 சீறில் சிறு வீடு
4588 சிறுங்கால் சீறுமிடத்து
4589 சீறுதல் கோபித்து அடித்தல், கோபித்துப் பற்றுதல்
4590 சீறூர் சிறிய ஊர்
மேல்