| 4591 |
சுகிர்தல் |
வடித்தல், பிளத்தல் |
| 4592 |
சுகிர்புரிதல் |
யாழ் நரம்பினை வடித்து முறுக்குதல் |
| 4593 |
சுட்டிய |
நன்கு மதிக்கப்பெற்ற |
| 4594 |
சுட்டுக் குவி |
'பிணங்களைச் சுட்டுக் குவி' எனப் பொருள் படும்படி அமைந்த ஆந்தையின் ஒலிக் குறிப்பு |
| 4595 |
சுட்டுதல் |
குறிப்பிடுதல், நன்கு மதித்தல், நினைத்தல் |
| 4596 |
சுடர் |
ஒளி, கிரகம், சூரியன், சந்திரன், பிறை, நெருப்பு, விளக்கு, கிரணம் |
| 4597 |
சுடர் சினம் |
கதிரவன் வெம்மை |
| 4598 |
சுடர்த்தீ |
கொழுந்தினையுடைய நெருப்பு |
| 4599 |
சுடர்த்தொடீஇ |
ஒளி பொருந்தின வளையினையுடையாய் |
| 4600 |
சுடர்த் தோன்றி |
விளக்குச் சுடர் போன்ற செங்காந்தள் |
| 4601 |
சுடர்தல் |
விளங்குதல் |
| 4602 |
சுடர் நுதல் |
ஒளியையுடைய நுதல், பிறை போன்ற நுதல் |
| 4603 |
சுடர் நெடு வேல் |
ஒளியை விடுகின்ற நெடிய வேற்படை |
| 4604 |
சுடர் நேமி |
சுடர்ச் சக்கரம் |
| 4605 |
சுடர் விடு நெடுங் கொடி |
எரிச்சுடரை விடுகின்ற நெடுங் கொடி |
| 4606 |
சுடலை |
சுடு காடு |
| 4607 |
சுடுதரும் |
சுடுதலைச் செய்யும் |
| 4608 |
சுடுபடை |
சூட்டுக் கோல் |
| 4609 |
சுடுபுன மருங்கு |
மரங்களை வெட்டிச் சுட்ட கொல்லை |
| 4610 |
சுடுபொன் |
புடமிட்ட பொன் |
| 4611 |
சுடுமண் |
சுடு மட் பலகை, செங்கல், சுட்ட ஓடு |
| 4612 |
சுண்ண நீறு |
சுண்ணமாகிய நீறு |
| 4613 |
சுண்ணம் |
சுண்ணப் பொடி |
| 4614 |
சுணங்கறை |
புணர்ச்சி |
| 4615 |
சுணங்கு |
தேமல், பூந்தாது |
| 4616 |
சுதை |
சுண்ணச் சாந்து |
| 4617 |
சுதை மாடம் |
சாந்து வாரின மாடம் |
| 4618 |
சும்மை |
ஆரவாரம், ஓசை |
| 4619 |
சுமட்டினள் |
சுமையினையுடையள் |
| 4620 |
சுமடு |
சும்மாடு, சுமை |
| 4621 |
சுமத்தல் |
தாங்குதல் |
| 4622 |
சுமப்ப |
சுமந்து நிற்ப |
| 4623 |
சுரத்தல் |
மிகக் கொடுத்தல், பெய்தல் |
| 4624 |
சுரத்துப் பதுக்கை |
வழியில் இட்ட குவியல் |
| 4625 |
சுரந்த வான் |
நீரைச் சுரந்த மேகம் |
| 4626 |
சுரபுன்னை |
புன்னை வகை |
| 4627 |
சுரம் |
அரிய வழி, பாலை நிலம், வழி, காடு |
| 4628 |
சுரம் இறத்தல் |
சுரத்தைக் கடத்தல் |
| 4629 |
சுரம் போகியார் |
சுரத்தில் போனவர் |
| 4630 |
சுரன் |
பாலை நிலம் |
| 4631 |
சுரன் முதல் |
சுரத்தினிடத்தில் |
| 4632 |
சுரி |
எருத்தின் நெற்றி வெள்ளைச் சுழி, முறுக்கு, சுட்டி |
| 4633 |
சுரிகை |
உடைவாள் |
| 4634 |
சுரிதகம் |
ஒரு வகைத் தலையணி |
| 4635 |
சுரிதல் |
சுருளுதல், சுழித்தல் |
| 4636 |
சுரி முகிழ் |
முறுக்குண்ட அரும்பு |
| 4637 |
சுரியல் |
சுருள், சுருண்ட தலைமயிர் |
| 4638 |
சுருக்கல் |
கட்டுதல் |
| 4639 |
சுருக்குதல் |
கட்டுதல், வலை பை முதலியன சுருக்குதல் |
| 4640 |
சுருணை |
பூண் |
| 4641 |
சுரும்பு |
வண்டு |
| 4642 |
சுரும்பு ஆர் கண்ணி |
வண்டுகள் நிறைந்த கண்ணி |
| 4643 |
சுரும்பு ஆற்றுப்படுத்தல் |
சுரும்புகளைப் போக்குதல் |
| 4644 |
சுரை |
சுரப்பு, சுரக்கை, பசு முதலியவற்றின் மடி, திரிக் குழாய், மூங்கிற்குழாய், மூட்டுவாய், பூண், கூரான தோண்டு பாரை வகை |
| 4645 |
சுரை அம்பு |
மூட்டு வாயையுடைய அம்பு |
| 4646 |
சுவர் |
வீடு முதலியவற்றின் சுவர் |
| 4647 |
சுவல் |
கழுத்து, குதிரைக் கழுத்து மயிர், தோள், தோட்கட்டு, மேடு, மேட்டு நிலம் |
| 4648 |
சுவை |
இனிமை, நுகர் |
| 4649 |
சுவைத்தல் |
உண்ணுதல், நுகர்தல் |
| 4650 |
சுவைத்து |
நுகர்ந்து |
| 4651 |
சுவைமை |
உருசி |
| 4652 |
சுழல் மரம் |
தானியம் திரிக்கும் மர எந்திரம் |
| 4653 |
சுழற்றுதல் |
சுழலப்பண்ணுதல் |
| 4654 |
சுள்ளி |
ஆச்சாவகை, மரா மரப் பூ |
| 4655 |
சுளகு |
முற வகை |
| 4656 |
சுளை |
பலாப் பழம் முதலியவற்றின் சதைப் பற்று |
| 4657 |
சுற்றம் |
ஆயத்தார், சுற்றத்தார் |
| 4658 |
சுற்றிய |
சூழப்பட்ட |
| 4659 |
சுற்று |
கால் விரலணி, காற் சரி |
| 4660 |
சுற்றுதல் |
கட்டுதல், சூழ்ந்து கொள்ளுதல் |
| 4661 |
சுற்றும் |
கொழு கொம்பாகச் சுற்றிப் படரும் |
| 4662 |
சுற |
சுறா |
| 4663 |
சுறவு |
சுறா |
| 4664 |
சுறவு வாய் |
மகர வாய் என்னும் தலைக் கோலம் |
| 4665 |
சுறா |
சுறா மீன், சுறா வடிவாகிய மூட்டு வாய் அரும்பு |
| 4666 |
சுறாஅக் கொடியான் |
காமன் |
| 4667 |
சுறா ஏறு |
சுறவில் ஏறு |
| 4668 |
சுனை |
மலையூற்று, கல்லிடத்து நீர் நிலை |