| 4705 |
செக்கர் |
சிவப்பு, செக்கர்வான் |
| 4706 |
செக்கர் கொள் பொழுது |
செக்கர் வானத்தைக் கொண்ட அந்திக் காலம் |
| 4707 |
செகில் |
தோள், செவ்வானம், சிவந்த ஏறு |
| 4708 |
செகீஇய |
கொல்லும் பொருட்டு |
| 4709 |
செகுத்தல் |
கொல்லுதல், போக்கிவிடுதல் |
| 4710 |
செங்கட்காரி |
வாசுதேவன் |
| 4711 |
செங் கண் |
சிவந்து விளங்கும் விழி |
| 4712 |
செங்களம் |
போர்க்களம் |
| 4713 |
செங் காய் |
சிவந்த காய் |
| 4714 |
செங்குட்டுவன் |
இளங்கோவடிகட்குத் தமையனும் பெரும் புகழ் பெற்றவனுமான சேர அரசன் |
| 4715 |
செங்குணக்கு |
நேர் கிழக்கு |
| 4716 |
செங்குரலி |
ஒரு வகைக் கொடி |
| 4717 |
செங்கொடி |
செவ்விய கொடி |
| 4718 |
செங் கொடு வேரி |
செங் கொடி வேலி, ரோஜா நிறப் பூவுள்ள கொடி வகை |
| 4719 |
செங் கோல் |
நேர்மை, அரசாட்சிச் சின்னமாகிய நேர் கோல், சிவந்த காம்பு |
| 4720 |
செச்சை |
வெட்சி, வெள்ளாட்டுக் கிடாய் |
| 4721 |
செஞ்சால் உழவர் |
செவ்விய பல படியாக மறித்து உழுகின்ற உழவர் |
| 4722 |
செஞ்சுடர் |
செவ்விய தீபம் |
| 4723 |
செஞ் சூட்டுக் குழை |
சிவந்த மணிகள் பதித்த குழை |
| 4724 |
செண் |
கொண்டை |
| 4725 |
செண்ணிகைக் கோதை |
பூமாலை வகை |
| 4726 |
செத்தல் |
கருதுதல் |
| 4727 |
செத்து |
அறிந்து, ஒத்து, கருதி |
| 4728 |
செதுக்கண் |
ஒளி மழுங்கின கண், செதுக்கின குடர் |
| 4729 |
செதுக்கு |
பூ முதலியவற்றின் வாடல் |
| 4730 |
செதுக்கை நீழல் |
குறைந்த நீழல் |
| 4731 |
செதுத்தல் |
ஒளி முதலியன மழுங்குதல், சோர்தல் |
| 4732 |
செதும்பல் |
சேற்று நிலம் |
| 4733 |
செதும்பு |
சிலவாக ஓடும் நீர், சின்னீர் |
| 4734 |
செதுமொழி |
பொல்லாச் சொல் |
| 4735 |
செந் தார் |
கழுத்திலிட்ட வரை, கிளிக்கழுத்தின் செவ்வரை |
| 4736 |
செந்தில் |
முருகக் கடவுள் தலமாகிய திருச் செந்தூர் |
| 4737 |
செந் தினை |
சிவந்த தினை |
| 4738 |
செந்தீச் செவ்வழல் |
செந்தீயால் உண்டான விளக்கு |
| 4739 |
செந் தொடை |
அம்பு முதலியவற்றை எய்யுங் குறி, செவ்விய அம்புத் தொடை |
| 4740 |
செந்நா |
செவ்விய நா |
| 4741 |
செந்நாய் |
செந்நிறமுள்ள நாய் வகை |
| 4742 |
செந்நெல் |
செஞ்சாலி நெல் |
| 4743 |
செப்பம் |
கூர்மை, செம்மை, செவ்விய வழி |
| 4744 |
செப்பீ |
சொல்லுவாய் |
| 4745 |
செப்பு |
சொல், பூச் செப்பு, ஒருவகைப்பாத்திரம், நீர் வைக்கும் கரகம் |
| 4746 |
செப்புவேன் |
கூறுவேன் |
| 4747 |
செம்பாகம் |
செம்பாதி வடிவு |
| 4748 |
செம்பியன் |
சோழன் |
| 4749 |
செம்பு சொரி பானை |
செம்பால் செய்து கடைந்து வைக்கப்பட்ட பானை |
| 4750 |
செம்புலப் பெயல் நீர் |
செம்மண் நிலத்தின் கண்ணே பெய்த மழை நீர் |
| 4751 |
செம்புலம் |
செழிப்பான பூமி |
| 4752 |
செம்புனல் |
சிவந்த நீர், புது வெள்ள நீர் |
| 4753 |
செம்பூ |
செந்நிறப் பூவுள்ள செடி வகை |
| 4754 |
செம்பூழ் |
ஒரு வகைப் பறவை |
| 4755 |
செம்மல் |
உள்ள நிறைவு, செல்வ மாக்கள், தலைமை, பழம் பூ, சாதிப் பூ, தலைவன், பிள்ளை |
| 4756 |
செம்மலன் |
தலைமையையுடையவன் |
| 4757 |
செம்மலை |
தலைமையையுடையயை |
| 4758 |
செம்மற்று |
தலைமையையுடையது |
| 4759 |
செம்மறுத் தூவி |
செந்நிறத்தையுடைய தூவி |
| 4760 |
செம்மாத்தல் |
தலைமை தோன்றியிருத்தல், இறுமாத்தல் |
| 4761 |
செம்மீன் |
செவ்வாய், அருந்ததி |
| 4762 |
செம் மூதாய் |
தம்பலப் பூச்சி |
| 4763 |
செம்மை |
நேர்மை, பெருமை, விளைவு இன்மை, செவ்விதாக நிகழ்த்துதல், முறைமை, நடுவு நிலைமை |
| 4764 |
செய் |
செய்கை, வயல் |
| 4765 |
செய்க் கடன் |
நிலவரி |
| 4766 |
செய்கு |
செய்குவேன் |
| 4767 |
செய்குவம் |
செய்வோம் |
| 4768 |
செய்தல் |
உண்டாக்குதல், கொடுத்தல் |
| 4769 |
செய்தன்று |
செய்தது |
| 4770 |
செய்தி |
செய்கை, செய்ந்நன்றி, செயல், தொழில், செய்கின்றாய், செய்வை |
| 4771 |
செய்தி கொல்லுதல் |
நன்றி மறத்தல் |
| 4772 |
செய்து |
செய்கையினாலே |
| 4773 |
செய்ப |
செய்யத்தகுவன |
| 4774 |
செய்பொருள் |
புருஷார்த்தம், செய்யும் பூசனையாகிய பொருள், தேடும் பொருள் |
| 4775 |
செய் போழ் |
சிவந்த பனங் குருத்து |
| 4776 |
செய்ம்மே |
செய்வாயாக |
| 4777 |
செய்யலர் |
செய்யார் |
| 4778 |
செய்யவள் |
திருமகள் |
| 4779 |
செய்யா |
செய்யாதன |
| 4780 |
செய்யா மொழிவது |
செய்யாதனவற்றைப் பெரிதாகச் சொல்லுவது |
| 4781 |
செய்யாய் |
செய்யோளே |
| 4782 |
செய்யார் |
ஏவல் செய்யாதார், பகைவர் |
| 4783 |
செய்யாள் |
இலக்குமி |
| 4784 |
செய்யோள் |
செந்நிறமுள்ளவள், செய்யாள் |
| 4785 |
செய்யோன் |
முருகன் |
| 4786 |
செய்வது |
செய்யத்தக்கது, செய்யுங்காரியம், செய்வதொரு பரிகாரம் |
| 4787 |
செய்வன சிறப்பு |
செய்யும் சிறப்பு |
| 4788 |
செய்வினை |
செய்யுங் காரியம், செய்யுந் தொழில் |
| 4789 |
செய்வு |
செய்தல், பண்ணுதல் |
| 4790 |
செய்வுறு பாவை |
அலங்காரம் செய்யப் பெற்ற பாவை |
| 4791 |
செயல் |
பொருள் தேடுகை |
| 4792 |
செயலை |
அசோகு |
| 4793 |
செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர் |
அசோகினது பவளத்தை ஒத்த தளிர் |
| 4794 |
செயற்கை |
தொழில் |
| 4795 |
செயற்பாலது |
செய்தற் பகுதியையுடைய காரியம் |
| 4796 |
செயிர் |
குற்றம், கோபம் |
| 4797 |
செயிர் அயர்தல் |
குற்றத்தைச் செய்தல் |
| 4798 |
செயிர் சினம் |
குற்றத்தைச் செய்யும் சினம் |
| 4799 |
செயிர்த்தல் |
குற்றஞ் செய்தல், வருத்துதல், வெகுளுதல் |
| 4800 |
செயிர்த்தன்று |
வெகுண்டது |
| 4801 |
செயிரி |
குற்றத்தைச் செய்வது |
| 4802 |
செயின் அல்லால் |
செய்தொழுகுமதல்லது, செய்வது அல்லாமல் |
| 4803 |
செரீஇ |
செருகி |
| 4804 |
செரீஇய |
செருகும் பொருட்டு, செருகி வைத்த |
| 4805 |
செரு |
போர், ஊடல் |
| 4806 |
செருக்கம் |
கள் முதலியன உண்டலால் வரும் மயக்கம் |
| 4807 |
செருக்கு |
மகிழ்ச்சி, களி |
| 4808 |
செருக்குதல் |
அகந்தை கொள்ளுதல், மயங்குதல் |
| 4809 |
செருக் குறித்தார் |
கோபிக்கக் கருதினவர் |
| 4810 |
செருத்தல் |
மடி |
| 4811 |
செருந்தி |
நெட்டிக் கோரை, வாட் கோரை |
| 4812 |
செருப் பறை |
போர்ப் பறை |
| 4813 |
செருப்பு |
மிதியடி, பூழி நாட்டிலுள்ள தோர் மலை |
| 4814 |
செரு மிகு நேமியான் |
போரின்கண் மிகுகின்ற சக்கரத்தையுடைய திருமால் |
| 4815 |
செருவஞ் செய்தல் |
மாறுபடுதல் |
| 4816 |
செருவம் |
போர் |
| 4817 |
செருவிளை |
வெள்ளைக் காக்கணம் |
| 4818 |
செருவுறுதல் |
ஊடுதல் |
| 4819 |
செரு வெங் குருசில் |
போரை விரும்பும் தலைவன் |
| 4820 |
செல் |
இடி, போ |
| 4821 |
செல்கம் |
செல்வேம் |
| 4822 |
செல் சமம் |
எதிர்ந்து வரும் போர் |
| 4823 |
செல் சார்வு |
புகலிடம் |
| 4824 |
செல்லல் |
செய்தல், செல்லாதே செல்லுதலை ஒழிக, துன்பம், வருத்தம் |
| 4825 |
செல்லலம் |
செல்லேம் |
| 4826 |
செல்லா |
ஆற்றாத |
| 4827 |
செல்லாதீம் |
நீர் செல்லாது இங்கே இருமின் |
| 4828 |
செல்லா நல் இசை |
பிறரிடத்து நில்லாமற் போகின்ற புகழ் |
| 4829 |
செல்லாமை |
ஆற்றாமை, செய்யாமை, நீங்காமை |
| 4830 |
செல்லார் |
ஒழுகார் |
| 4831 |
செல்லா விடுவாயேல் |
செல்லாதொழி வையாயின் |
| 4832 |
செல்லுதல் |
செய்தல், தேய்தல், நடத்தல் |
| 4833 |
செல்லுமவர் |
செல்லுபவர் |
| 4834 |
செல்வக் கடுங்கோ |
ஒரு சேர அரசன் |
| 4835 |
செல்வம் |
பாக்கியம், வீறு, மேம்பாடு |
| 4836 |
செல்வர் |
செல்வம் மிகுந்தவர், சக்கரவர்த்திகள் |
| 4837 |
செல்வன் |
இறைவன், சக்கரவர்த்தி |
| 4838 |
செல்வு |
செல்வம் |
| 4839 |
செல்வுழி |
செல்லுமிடத்து, செல்லுமிடத்தை |
| 4840 |
செல்வுறு திண் தேர் |
உருட்டுதல் உறுகின்ற திண்ணிய தேர் |
| 4841 |
செல்வேம் |
போகா நின்றேம், போவேம் |
| 4842 |
செல்வேன் |
செல்லா நின்றேன், சென்று தேடுவேன் |
| 4843 |
செல்வோய் |
போகின்றவனே |
| 4844 |
செல |
போதற்கு |
| 4845 |
செலல் |
செல்லுதல், போதல் |
| 4846 |
செலவயர்ந்திசின் |
செல்லுமாறு யான் உடன்படாநின்றேன் |
| 4847 |
செலவழுங்குதல் |
தலைவன் தலைவியிடமிருந்து பிரிதலைத் தவிர்தல் |
| 4848 |
செல வியங்கொண்மோ |
போகும்படி ஏவுவாயாக |
| 4849 |
செலவு |
செல்லுதல், போக்கு, ஓட்டம், நடை, பயணம், பிரிவு, வழி |
| 4850 |
செலவும் |
செல்லுதல் செய்தேயும், போகவும் |
| 4851 |
செலியர் |
தணிக, போவதாக |
| 4852 |
செலின் |
சென்றேனாயின், போகின் |
| 4853 |
செலீஇய |
செல்ல |
| 4854 |
செலீஇயர் |
சென்று |
| 4855 |
செவ் அழல் |
விளக்கு |
| 4856 |
செவ் உளை |
சிவந்த தலையாட்டம் |
| 4857 |
செவ்வரக்கு |
சாதிலிங்கம் |
| 4858 |
செவ்வரி |
நாரை வகை |
| 4859 |
செவ்வரை |
சிவந்த மலை |
| 4860 |
செவ்வழி |
செவ்வழி என்னும் பண், பெரும் பண்களுள் ஒன்றாகிய முல்லைப்பண் |
| 4861 |
செவ்வழி யாழ் இசை |
செவ்வழிப் பாட்டு |
| 4862 |
செவ்வாய் |
சிவந்த வாய் |
| 4863 |
செவ் வானம் |
செக்கர் வானம் |
| 4864 |
செவ்வி |
காலம், பருவம், அழகு |
| 4865 |
செவ்விதின் |
நேரே |
| 4866 |
செவ்விய |
வஞ்சனையில்லாதன |
| 4867 |
செவ்வியோர் |
நடுவு நிலையுடையோர் |
| 4868 |
செவ்வியோன் |
செவ்வியன் |
| 4869 |
செவ்விரல் சிவப்பூர |
சிவந்த விரல் மிகச் சிவப்புப் பரக்க |
| 4870 |
செவ் வீ மருது |
செம்மையாகிய மலர் களையுடைய மருது |
| 4871 |
செவ்வேர் |
சிவந்த வேர் |
| 4872 |
செவி |
காது |
| 4873 |
செவி சாய்த்தல் |
சொல்வதைக் கேட்கச் செவி தாழ்த்தல் |
| 4874 |
செவிடுபடுதல் |
சத்த மிகுதியால் காது கேளாது போதல் |
| 4875 |
செவிமறை |
செவியில் மறுவையுடைய எருது |
| 4876 |
செவிமுதல் |
காதடியில் உள்ள கொம்பு, செவியிடம் |
| 4877 |
செழியன் |
பாண்டியன், நெடுஞ்செழியன் |
| 4878 |
செழுமை |
வளமை |
| 4879 |
செற்றம் |
மனவைரம் |
| 4880 |
செற்றன்று |
கறுவு கொண்டது |
| 4881 |
செற்றார் |
பகைவர், செறப்பட்டவர், பகைத்து அலர் கூறுகின்ற மகளிர் |
| 4882 |
செற்று |
கோபித்து |
| 4883 |
செற்றும் |
செறியும் |
| 4884 |
செற்றை |
சிறு தூறு |
| 4885 |
செற்றோர் |
செற்றார், பகைவர் |
| 4886 |
செறல் |
வெகுட்சி, சினம் |
| 4887 |
செறாஅது |
கோபியாதே |
| 4888 |
செறாஅமை |
கெடாதிருத்தல் |
| 4889 |
செறாது |
தகையாமல் |
| 4890 |
செறாமை |
முகம் மாறாமை |
| 4891 |
செறித்தல் |
அடக்குதல், அடைத்தல், அணியாக இடுதல் |
| 4892 |
செறித்து நிறுத்தல் |
தேக்கி வைத்தல் |
| 4893 |
செறிதல் |
அடங்குதல், இறுகலாயிருத்தல், இறுகுதல், பொருந்துதல், மிகுதல், உறவாதல், நெருங்குதல், பயிலுதல் |
| 4894 |
செறி துனி |
செறிந்த துயர் |
| 4895 |
செறிப்பு |
செறித்தல் |
| 4896 |
செறி முறை |
செறிந்த முறைமை, சேரும் முறைமை |
| 4897 |
செறிய |
செறிகையினால் |
| 4898 |
செறியக் கட்டுதல் |
நெருங்கக் கட்டுதல் |
| 4899 |
செறியாப் பரத்தை |
அடங்காத பரத்தமைக் குணம் |
| 4900 |
செறிவினான் |
காமன் |
| 4901 |
செறிவு |
உறவு, நெருக்கம், வேட்கை அடங்கியிருத்தல், அடக்கம் |
| 4902 |
செறின் |
வருத்தின் |
| 4903 |
செறு |
செய், வயல், பாத்தி |
| 4904 |
செறுத்தல் |
அடைத்தல், அடக்கல், உள்ளடங்கச் செய்தல், நீர் முதலியன அடைதல், கோபித்தல், வெல்லுதல், கொல்லுதல் |
| 4905 |
செறுதக்காய் |
செறுக்கத்தக்கவனே |
| 4906 |
செறுதக்கான் |
கோபித்தல் தக்கான் |
| 4907 |
செறுதல் |
கோபித்தல் |
| 4908 |
செறுநர் |
பகைவர் |
| 4909 |
செறுவர் |
செறுநர், பகைவர் |
| 4910 |
செறுவோர் |
பகைவர் |
| 4911 |
செறூஉம் |
நெகிழ்ச்சி நீங்கி நெருக்கும் |
| 4912 |
செறேற்க |
சினவாதே |
| 4913 |
சென்மோ |
வருவாயாக |
| 4914 |
சென்ற ஞான்றை |
நேற்றைத் தினம் |
| 4915 |
சென்றாலியர் |
செல்லாதொழியாதாக |
| 4916 |
சென்றீ |
செல், செல்வாய், செல்வாயாக, நில்லாமற் போ |
| 4917 |
சென்றீக |
செல்லுக |
| 4918 |
சென்றீமோ |
செல்வாய் |
| 4919 |
சென்றீவாய் |
போதலைச் செய்ய வேண்டும் |
| 4920 |
சென்றுவிடுதல் |
போருக்குப் போய்த் தங்கியிருத்தல் |
| 4921 |
சென்றுழி |
சென்ற விடத்து |
| 4922 |
சென்னி |
உச்சி, நெற்றி, தலை, பாணன், தலைமை, சோழன் |