4923 சே ஏறு
4924 சேஎ சிவந்த ஏறு
4925 சேஎய் முருகன், சிவந்த ஏறு
4926 சேஎய் நாடு தூரிய நாடு
4927 சேக்கும் தங்கும்
4928 சேக்கை தங்குமிடம், படுக்கை, கட்டில் முதலிய மக்கள் படுக்கை
4929 சேக்கோள் ஆகோள்
4930 சேகன் சேவகன்
4931 சேகா சேவகா
4932 சேகில் சிவந்த ஏறு
4933 சேட்சென்றாய் நெடும் பொழுது நின்று வாங்கினாய், நீண்ட நேரம் நின்று பறித்தாய்
4934 சேட் சென்னி சோழன் நலங்கிள்ளி
4935 சேட் படுதல் நெடுங்காலத்தாதல்
4936 சேட் புலம் தூரமான இடம்
4937 சேடல் பவள மல்லிகை
4938 சேடு அழகு, பெருமை
4939 சேடு இயல் வள்ளம் பெருமை இயன்ற வெள்ளி வட்டில்
4940 சேண் சேய்மை, நெடுந் தூரம், நெடுங்காலம், உச்சி, பரண்
4941 சேண் புலம் தூரிய நிலம்
4942 சேண் முயலல் நெடிது முயலல்
4943 சேண உயர
4944 சேணன் நெடுந் தூரத்தில் உள்ளவன்
4945 சேணோன் இழிகுலத்தோன், மரத்தின் மேல் பரணிலிருந்து விலங்குகள் பயிர்களை அழிக்கா வண்ணம் காப்பவன், மலைவாசி
4946 சேத்தல் தங்குதல், எய்துதல், உறங்குதல், கிடத்தல், சிவத்தல்
4947 சேதா சிவப்புப் பசு
4948 சேதிகை மூங்கிலுழக்கு, நாழி முதலியவற்றின் பின்புறத்தால் குதிரையுடலிற் குத்தும் வண்ணத் தொழில், குதிரைக்கு உரித்தானதொரு சித்திர விசேடம்
4949 சேந்தனை சென்மோ தங்கிச் செல்வாயாக
4950 சேந்து சிவந்து, தங்கி
4951 சேந்து வரல் சென்ற ஊரின் கண்ணே தங்கிப் பின் வருதல்
4952 சேப்ப சிவப்ப
4953 சேப்பு சிவப்பு; தான்தோன்றுங்கிழங்கு, ஒருவகைக் கிழங்கு
4954 சேப்புதல் தங்குதல்
4955 சேம அச்சு அச்சு முறிந்தபொழுது உதவும் அச்சு
4956 சேமத்திரை பாதுகாவலாகிய திரைச் சீலை
4957 சேமம் காவல்
4958 சேய் சிவப்பு, புதல்வன், முருகன், சிவந்த ஏறு
4959 சேய் உயர் ஊசற் சீர் மிக உயர்ந்த ஊசற் பாட்டு
4960 சேய் உறைதல் தூரிய நிலத்தே உறைதல்
4961 சேய் குன்றம் முருகக் கடவுள் வாழ்விடமாகிய திருப்பரங்குன்றம்
4962 சேய்த்து தூரம்
4963 சேய்து சேய்த்து
4964 சேய் நின்று சேயனாய் நின்று, முன் நில்லாது ஒரு சிறைப்போய் நின்று
4965 சேய் மலை நெடுந்தூரத்திலுள்ள மலை
4966 சேயார் சேணிடைப் பிரிந்தவர்
4967 சேயாறு தொண்டை நாட்டில் ஓடும் செய்யாறு என்னும் நதி
4968 சேயளை நெடிய குகை
4969 சேயிழை பெண், சிவந்த சிலம்பு முதலியன
4970 சேயிறா சிவந்த இறா மீன்
4971 சேயேன் உறவில்லாதேன்
4972 சேர், சேஎர் திரட்சி
4973 சேர்க்குந்து சேர்க்கும்
4974 சேர்தல் சென்றடைதல், பொருந்துதல்
4975 சேர்ந்த சேர்ந்து மறைந்த
4976 சேர்ந்தார் அடைந்தவர்
4977 சேர்ப்ப சேர்ப்பனே
4978 சேர்ப்பன் கடலைச் சேர்ந்த நிலத்தை உடையவன்
4979 சேர்ப்பு கடற் கரை
4980 சேர்பு சேர்தல்
4981 சேர ஒருமிக்க, சேரா நிற்க
4982 சேரமான் சேரலன்
4983 சேரல் சேரன்
4984 சேரலன் சேர நாட்டரசன்
4985 சேரலாதன் சேரமான் கடுங்கோ வாழியாதன்
4986 சேரி தெரு, சேரியிலுள்ளார்
4987 சேரியாற் செல்லல் சேரிதோறுஞ் செல்லல்
4988 சேவடி சிவப்ப சிவந்த அடி மிகச் சிவக்கும்படி
4989 சேவல் ஆண் அன்னம், ஆண் பறவை, கருடன்
4990 சேற்று அள்ளல் குழம்பாகிய சேறு
4991 சேறல் செல்லுதல்
4992 சேறி செல்லாநின்றனை, போகின்றாய்
4993 சேறு இனிமை, கள், குழம்பு, சகதி, சாறு, செறிந்த நீர், செறிவு, தேன், பனம் பழம் தேங்காய் முதலியவற்றின் செறிந்த உள்ளீடு, பாகு, மண் சேறு
4994 சேறும் செல்லுதும், போவேம்
4995 சேனை படை
மேல்