4997 சொரிதல் பெய்தல், பொழிதல்
4998 சொரிந்தன்று சொரிந்தது
4999 சொரியக் குத்தி சரியும்படி குத்தி
5000 சொல் புகழ் மாலை
5001 சொல் இறத்தல் வாக்கினைக் கடந்து நிற்றல்
5002 சொல்லாட்டி சொல்லை உடையவள், திறமையாய்ப் பேசுபவள்
5003 சொல்லாடிக் காண்பேன் வார்த்தை சொல்லிப் பார்ப்பேன்
5004 சொல்லாதி சொல்லாதே
5005 சொல்லாது உடன் இருப்போரிடமும் சொல்லாமல்
5006 சொல்லிய போக்குதற்கு
5007 சொல்லியாள் சொல்லப்பட்டவள்
5008 சொல்லினுள் சொல்லால்
5009 சொல்லுதல் களைதல், கெடுதல், தணிதல், பரவுதல்
5010 சொல்லுதோறும் கூறும்தோறும்
5011 சொல்லுமதி சொல்லுவாயாக
5012 சொலவும் போக்கவும்
5013 சொலி மூங்கில் போன்ற தாவரம் முதலியவற்றின் தோல்
5014 சொலித்தல் உரித்தல்
5015 சொலிய நீங்க, பெயர
5016 சொற்கேளான் சொல்லைக் கொள்ளான்
5017 சொறிதல் தினவு நீங்க நகத்தால் தேய்த்தல்
5018 சொன்றி சோறு
மேல்