5019 சோணாடு சோழ தேசம்
5020 சோணை ஒரு நதி
5021 சோபன நிலை படிப்படியாகச் சிறக்கின்ற நிலை, மங்கல நிலைமை
5022 சோபனம் மங்கலம்
5023 சோர் மழை
5024 சோர்தல் கண்ணீர் முதலியன வடிதல், தளர்தல், வாடுதல், ஒழுகுதல், கவிழ்தல், விழுதல்
5025 சோர்ந்து உதிர்ந்து
5026 சோர்ந்து உகல் வாடி உதிருதல்
5027 சோர் பதன் தளர்ந்த காலம், நெஞ்சு அழிந்த செவ்வி
5028 சோர்பு விழுந்து
5029 சோலை பல வகை மரங்கள் செறிந்து நிழல் செய்யும் இடம்
5030 சோலை மலை சோலைகளையுடைய மலை, பாண்டி நாட்டில் உள்ள ஒரு மலை, கண்ணனுக்கும் பலதேவருக்கும் இது உரியது
5031 சோழர் சோழ நாட்டு அரசர்
5032 சோழன் சோழவரசன்
5033 சோற்றமலை சோற்றுக் கட்டி
5034 சோறு அன்னம்
5035 சோறு வாய்த்தல் செஞ்சோற்றுக் கடன் கழித்தல்
மேல்