5089 தக்கவிர் போலும் தகுதிப்பாட்டினை உடையீர் போலே இருந்தீர்
5090 தக தக்கிருக்கும்படி, பொருந்த
5091 தகடு பூவின் புறவிதழ்
5092 தகடூர் அதியமான் என்னும் தமிழ்ச் சிற்றரசனுக்குத் தலைநகராய் இருந்ததும் சேலம் ஜில்லாவில் உள்ளதுமான தர்மபுரி
5093 தகர் ஆட்டுக்கிடாய், மேட்டு நிலம், வருடைமான் கிடாய்
5094 தகரம் ஒரு மரம், மயிர்ச் சாந்து
5095 தகவு கற்பு, தகுதி
5096 தகாஅய் தகுதிப்பாடுண்டாகாய்
5097 தகாஅர் தகுதியில்லாதோர்
5098 தகு அமைவு
5099 தகுதி பொருத்தம்
5100 தகுந தக்கவை
5101 தகுவி தகுதியை உடைய பரத்தை
5102 தகை தகைமை, அழகு, இயல்பு, உரிமை, தகுதி, தன்மை, மாலை, மேம்பாடு, கூறுபாடு, பயில அடியிட்டு நடத்தல்
5103 தகைக்குநர் விலக்குவார்
5104 தகைத்தல் கட்டுதல், சுற்றுதல், தடுத்தல், விலக்குதல்
5105 தகைத்து தகைமையையுடைத்து, தடுத்து
5106 தகைதல் அழகு பெற்றிருத்தல், உள்ளடக்குதல், தடுத்தல்
5107 தகைப்ப தடுப்பன
5108 தகைப்பன தடுப்பன
5109 தகைப்பு படை வகுப்பு, மாளிகைக் கட்டணம், வீட்டின்கண் உள்ள கட்டு
5110 தகைம் தகையும்
5111 தகைமலர் அழகினையுடைத்தாகிய மலர்
5112 தகைமை அழகு, தகுதிப்பாடு
5113 தகையோ தான் தகைமைப்பாடோதான்
5114 தகையோன் அழகையுடையோன்
5115 தகைவு தடை, விலக்குவார்
5116 தங்காது தங்காமல், மீளாதே
5117 தங்கால் தண்கால் என்பதன் மரூஉ மொழி, இராமநாதபுரம் ஜில்லாவில் மங்களாசாஸனம் பெற்ற ஒரு விஷ்ணு ஸ்தலம்
5118 தங்குதல் தாழ்க்க நிற்றல்
5119 தச்சன் மரவேலை செய்பவன்
5120 தசும்பு குடம், மிடா
5121 தசை ஊன்
5122 தஞ்சம் எளிது என்னும் பொருளை உணர்த்தும் ஓர் இடைச்சொல், எளியது
5123 தட்கும் தளையா நிற்கும்
5124 தட்டம் கச்சு
5125 தட்டுதல் தடுத்தல், அறைதல், கட்டுதல், தங்குதல்
5126 தட்டை மூங்கில், கிளி கடி கருவி, கரடிகைப் பறை, மூங்கிற் பிளாச்சைச் சிறிது பிளந்து அப் பிளப்பிலே சிறுகல்லை வைத்துச் சுழற்றி வீசும் கருவி
5127 தட்டோர் தடுத்தோர்
5128 தட்ப தகைத்துக் கொள்ள, தடுத்துக் கொள்ள, தடுக்க, தடுக்கும்படி
5129 தட பெருமை, பெரிய, வளைந்த, வளைவு
5130 தடக் கை வளைந்த கை, பெரிய கை
5131 தட நீர் பரந்த நீர்
5132 தடம் குளம்
5133 தட மருப்பு வளைந்த மருப்பு
5134 தடமலர்த் தண் தாழை வளைவையுடைத்தாகிய மலரையுடைய தாழை
5135 தடவரல் வளைவு, பெருமை, இடையறாது, வருதல்
5136 தடவு ஓம குண்டம், ஒரு மரம், தடா
5137 தடவுச் சினை பெரிய கொம்பு
5138 தடவுதல் அசைதல்
5139 தடவு நிலை பெரிதாய் நிற்றல், வளைந்த நிலை
5140 தடவுபு வளைந்து
5141 தடவுவாய் மலைச் சுனை
5142 தடாரி உடுக்கை
5143 தடி தசை, மரம் முதலியவற்றின் பிளந்த துண்டம்
5144 தடிகள் இறைச்சித் துண்டம்
5145 தடிதல் வெட்டுதல், கொல்லுதல்
5146 தடிவு தடிதல்
5147 தடுக்கும் வெளியிற் செல்ல விடாது தடுக்கும்
5148 தடுத்தல் தகைதல், மாற்றுதல்
5149 தடுமாற்று தடுமாற்றம்
5150 தடுமாறுதல் ஐயமுறுதல், பிறந்து இறந்து தடுமாறித் திரிதல், மனந் தடுமாறுதல்
5151 தடை அணை
5152 தடைஇ சரிந்து, தடவி, பெருத்து
5153 தடைஇய திரண்ட, பெருத்து வளர்ந்த, பெருத்த
5154 தடைஇய மென் தோள் பெருத்த மென்மையான தோள்
5155 தடையா தடையில்லாத
5156 தடையின பெருத்தன
5157 தண்(மை) குளிர்ச்சி, இழிவு
5158 தண் அறல் குளிர்ந்த அறுதியையுடைய மணல்
5159 தண் கமழ் நறுந் தேறல் குளிர்ந்த நறிய கள்
5160 தண் கலுழ் தண்ணிய கலங்கல்
5161 தண்கா குளிர்ந்த பொழில்
5162 தண் குரல் மெல்லிய மொழி
5163 தண் சிதர் உறைப்ப தண்ணிய பனித் துளிகள் மிக வீழ
5164 தண்டம் தண்டனை
5165 தண்டல் அமைதல், தணிதல், நீங்கல்
5166 தண்டலை சோலை, பூந்தோட்டம்
5167 தண்டா அமையாத, கெடாத, நீங்காத
5168 தண்டாத் தீம் சாயல் அமையாத இனிய மென்மை
5169 தண்டாமை அமையாமை
5170 தண்டி பலகால் அலைத்து
5171 தண்டு கோல், ஓடத்தின் ஓர் உறுப்பு
5172 தண்டுதல் அமைதல், மனமமைதல், வருத்துதல், விருப்பங் கொள்ளுதல்
5173 தண்டுவென் அமைவேன்
5174 தண்ணடை மருத நிலத்து ஊர், மலைப்பச்சை
5175 தண்ணுமை எழுச்சிக்குரிய வாச்சியம், முழவு
5176 தண் தார் குளிர்ந்த மாலை
5177 தண் நடை மெல்லிய நடை
5178 தண் பணியம் இழிந்த பண்டம்
5179 தண்பணை மருத நிலம்
5180 தண்பனி நீர்
5181 தண்பனி வைகல் குளிர்ந்த பனிக் காலம்
5182 தண் பெயல் எழிலி தண்ணிய மழையைச் சொரியும் மேகம்
5183 தண்பொருநை ஆன் பொருந்தம் என்ற நதி
5184 தண் பொழில் குளிர்ந்த பொழில்
5185 தண்மை குளிர்ச்சி, மென்மை, இழிவு
5186 தண் வளி தண்ணிய காற்று
5187 தணக்கம் தணக்கு, தணக்கமரம்
5188 தணத்தல் பிரிதல், நீங்குதல்
5189 தனந்து இட்டு வைத்துப் பிரிந்து
5190 தணி ஆற்று குளிர்ச்சி
5191 தணித்தல் ஆற்றுதல் போக்கல்
5192 தணிதல் ஆறுதல், நீங்குதல்
5193 தணிந்தீக தணிவதாக
5194 தணிப்ப போக்க
5195 தணியா நோய் சிறிதும் குறையாத துன்பம், மீளாத காம நோய்
5196 தணிவு இல் வெங் கோடை மாறுதல் இல்லாத வெய்ய கோடை
5197 தத்த அசைய
5198 தத்துதல் தாவிச் செல்லுதல், தாவி ஏறுதல்
5199 தத்துபு பாய்ந்து
5200 தத்துற்று குதித்து, மேலே கொண்டு
5201 தத்துறுதல் தத்தி வருதல்
5202 ததர் கொத்து, சிதறுகை, செறிவு
5203 ததர் கோல் செறிந்த கோல்
5204 ததர் படுதல் சிதறுதல்
5205 ததர் பிணி நெருங்கிய பிணிப்பு
5206 ததும்பல் ஒலித்தல்
5207 ததும்புதல் நிரம்பி வழிதல், மனம் நிரம்புதல், மிகுதல், ஒலித்தல்
5208 ததைஇ பெற்று
5209 ததைதல் நெருங்குதல், சிதறல், மலர்தல்
5210 ததைந்த செறிந்து மலர்ந்த
5211 ததைய அழிய
5212 தந்த கொண்டு வந்த
5213 தந்தாங்கே தந்த அப்பொழுதே
5214 தந்தார் பெற்றோர், இட்டவர்
5215 தந்திட்டது தந்தது
5216 தந்திட கொண்டு வந்து போடுதலால்
5217 தந்து கொடுக்கப்பட்டு, கொண்டுவந்து
5218 தந்தை பெயரன் மகன்
5219 தப்பல் குற்றம், கொல்லுதல்
5220 தப்பாத வாள் தானை தவறாமல் வெட்டுகின்ற வாட்படை
5221 தப்பித்தான் தப்புப் பண்ணிக் கொண்டவன், தவறு செய்தவன்
5222 தப்பியோன் கொன்றவன்
5223 தப்பு தவறு
5224 தப்புதல் அழித்தல், பிழை செய்தல்
5225 தப்பந தவறுவன
5226 தப கெடும்படி, கெடும்படியாக
5227 தபு இயலாத
5228 தபுத்த கொன்றன
5229 தபுத்தல் கெடுத்தல்
5230 தபுதல் அறுதல், நீங்குதல்
5231 தபுதி அழிவு
5232 தம் தமது, தாரும்
5233 தம் ஐயர் தமையன்மார்
5234 தம்பலம் தாம்பூலம், வெற்றிலை பாக்கு
5235 தம்புல ஏறு பரத்தர தாம் மேயும் புலத்திலே ஏறு பரத்தலைச் செய்யவேண்டி
5236 தம்மின் தருமின், தாருங்கள்
5237 தம்முன் தமையன்
5238 தம்மோன் தம்மவன், தலைவன்
5239 தம தம்முடையன
5240 தமது தம்முடைய பொருள்
5241 தமர் தமக்கு வேண்டியோர்
5242 தமனியம் பொன்
5243 தமி தனி
5244 தமித்தல் தனியாதல்
5245 தமியர் தனியர்
5246 தமியவே தேயும் தானே தானாகத் தேயா நிற்பன், தன்னந் தனியனாக நின்று மெலிவான்
5247 தமியள் தனியள்
5248 தமியார் தனித்திருப்பவர்
5249 தமியோன் தனியோன்
5250 தமிழகம் தமிழ்நாடு
5251 தமின் தம்மின், தாருங்கோள்
5252 தயக்கு அற துளக்கம் நீங்க
5253 தயங்கல் வெளிப்பட்டுத் தோன்றல், விளங்கல், அசைதல்
5254 தயங்குதல் அசைதல், விளங்குதல்
5255 தரல் தருதல், பெய்வித்தல்
5256 தரலும் தந்த அந்த அளவில்
5257 தரவு தருகை
5258 தராய் மேட்டு நிலம்
5259 தரீஇய தர, தரவேண்டி
5260 தருக்கிய மிக்கு நடக்கின்றவை
5261 தருக்கு மனச் செருக்கு
5262 தருக்குதல் மனம் செருக்குதல், மிகுதல்
5263 தருகிற்கும் பெருமை தரவல்ல பெருமை
5264 தருகிற்பாய் தருவாய்
5265 தருதல் அளித்தல், அழைத்தல், கூறுதல், கொண்டு வருதல்
5266 தருநன் கொடுப்பவன்
5267 தருமணல் திருவிழா முதலியவற்றில் புதிதாகக் கொண்டு வந்து பரப்பும் மணல், கொண்டு வந்து குவித்த மணல்
5268 தருமன் யமன்
5269 தருமார் கொணரும் பொருட்டு
5270 தருமோ தருவானோ
5271 தரூஉந்து தரும்
5272 தரூஉம் தரும், கொடுக்கும்
5273 தரூஉமார் தருவதற்கு
5274 தலை அசைநிலை, இடம், உச்சி
5275 தலை அலர் முதலில் பூக்கும் மலர்கள்
5276 தலைஇ பெய்து, தலைப்பட்டு
5277 தலைஇய சொரிந்த, தழைத்த, பெய்த, பெய்து விட்ட, இடத்தே கொண்ட
5278 தலைக்கீடு காரணம்
5279 தலைக்கூடல் சென்று பொருந்தல்
5280 தலைக்கூடி கூடியிருந்து
5281 தலைக்கை முதற்கை
5282 தலைக்கை தருதல் கையால் தழுவி அன்பு காட்டுதல்
5283 தலைக்கொண்ட தன்னிடத்தே கொண்ட
5284 தலைக்கொண்ட நெஞ்சு இடத்தைப் பற்றிக் கொண்ட நெஞ்சு
5285 தலைக்கொண்டு என்னிடத்தே நின்று, தலைமைப்பாடு கொண்டு, தனக்கு உள்ளாக்கிக் கொண்டு
5286 தலைக்கொண்மார் சேர
5287 தலைக்கொள்ளல் தொடங்குதல்
5288 தலைக் கொள்ளுதல் கெடுத்தல், தொடங்குதல், இடத்தைக் கைக்கொள்ளுதல், மேலிடுகை
5289 தலைக்கோதை நெற்றிக்கட்டு மாலை
5290 தலைச் செல்லல் மேற்செல்லல்
5291 தலைச் சென்று அதனிடத்தே சென்று
5292 தலைசாய்த்தல் நாணுதல், வணங்குதல்
5293 தலைத்தந்து எம்மிடத்தே தந்து, முதலில் கொடுத்து
5294 தலைத்தந்தோர் தொடுத்தோர்
5295 தலைத்தலை இடந்தோறும், ஒவ்வொருவரும், மேன்மேல்
5296 தலைத்தருதல் தலைமையான அன்பினைக் கையால் தழுவிக் காட்டுதல்
5297 தலைத்தோற்றம் வீரனொருவன் பகைவர் பசுநிரையைக் கைப்பற்றி வருதலை அறிந்து அவனது உறவுமுறையார் மனம் மகிழ்தலைக் கூறும் ஒரு புறத்துறை
5298 தலைதல் கூடுதல், மழை பெய்தல், மிகக் கொடுத்தல், பரத்தல்
5299 தலைதொடுதல் தலையைத் தொட்டு ஆணையிடுதல்
5300 தலை நாண்மீன் உச்சமான நட்சத்திரம்
5301 தலைநாள் இளவேனிற் காலம் தொடங்குகின்ற நாள், முதல் நாள்
5302 தலைப் படுதல் எய்துதல், கூடுதல், பெறுதல், மனை வாழ்க்கையிலே படுதல்
5303 தலைப்பாடு தற்செயல் நிகழ்ச்சி, நேர்ப்படுதல்
5304 தலைப்பாளை ஓர் அணிகலம்
5305 தலைப்பிரிதல் நீங்குதல்
5306 தலைப்புணர்த்தல் பை முதலியவற்றின் வாயைக் கட்டுவதற்காகச் சுருக்குதல்
5307 தலைப்புணை முன்னிடத்துள்ள தெப்பம், முக்கியமான ஆதாரம்
5308 தலைப்பெய்தல் கூடுதல், கலத்தல்
5309 தலைப்பெய்து தலையிலே இட்டு
5310 தலைப்பெயர்தல் இடத்தினின்றும் நீங்கல், கழிதல்
5311 தலைப்பெயல் முதல் மழை
5312 தலைப்போகுதல் முடிவுபோதல்
5313 தலைபோகன்மை முடிவு போகாமை
5314 தலைபோகாமை கெடாமை
5315 தலைபோதல் அழிதல், முடிதல்
5316 தலைமணத்தல் நெருங்கிக் கலத்தல்
5317 தலைமயங்கல் கைகலத்தல்
5318 தலைமயங்குதல் கைகலத்தல், பிரிதல்
5319 தலைய தலையினுடையன, பெய்ய
5320 தலையல் நீங்குதல், அறுதல்
5321 தலையளித்தல் தலையளி செய்தல்
5322 தலையாலங்கானம் சோணாட்டில் பாண்டியன் நெடுஞ்செழியன் போர் புரிந்து வெற்றி கொண்ட ஓர் ஊர்
5323 தலையிட்ட தலைமேல் ஏறட்டுக்கொண்ட
5324 தலையும் மேலேயும்
5325 தலையோர் முன் செல்வோர்
5326 தலைவருதல் கூடுதல், முடிதல்
5327 தலைவன் முதல்வன்
5328 தலைவாய் முதல் மடை, வாய்க்காலின் தலைப்பு, வாய்த் தலை
5329 தலை விளை வயலின் முதல விளைவு
5330 தவ்வென்று தவ்வெனும் ஓசைப்பட்டு
5331 தவ்வெனல் மழையின் ஒலிக் குறிப்பு
5332 தவ மிக, மிகும்படி, கெடும்படி
5333 தவச் சில மிகவும் சில
5334 தவச் சிறிது மிகச் சிறிது
5335 தவ நெடிது மிகவும் நீட்டித்தது
5336 தவல் கெடுத்தல், கெடுதல், கேடு, மரணம்
5337 தவல் இல் நோய் கேடில்லாத காம நோய்
5338 தவறு குற்றம்
5339 தவா கெடாத
5340 தவாலியர் கெடாதொழிக
5341 தவழ்தல் பரத்தல், படர்தல்
5342 தவளை நீர் வாழ் சாதி வகை
5343 தவறாதல் சாலாவோ தப்பாதலுக்கு அமையாவோ
5344 தவறிலீர்மற்கொலோ தவறுடையீரல்லீர் போலேயிருந்தது
5345 தவறு குற்றம், தப்பு
5346 தவிர்த்தல் தடுத்தல்
5347 தவிர்தல் ஒழிதல், அவிதல், இருத்தல், தங்குதல்
5348 தவிர்ந்ததை தங்கினபடியை
5349 தவிர்பு தவிர்தல், தவிர்ந்து
5350 தழங்குதல் முழங்குதல், ஒலித்தல்
5351 தழங்குரல் ஒலிக்கின்ற ஓசை
5352 தழல் கிளி கடி கருவி, கையாற் சுற்றின காலத்துத் தன்னிடத்துப் பிறக்கும் ஓசையாற் கிளி முதலியவற்றை ஓட்டும் கருவி
5353 தழால் தழுவுதல்
5354 தழீஇ தழுவி, அணைத்து
5355 தழீஇய சூழ்ந்த, தழுவி ஆடுகின்ற
5356 தழீஇயவன் தழுவினவன்
5357 தழீஇயினர் முயங்கினவர்
5358 தழீஇயினன் தழுவினான்
5359 தழும்பன் முற்காலத்துத் தமிழகத்தில் விளங்கிய உபகாரியான ஒரு சிற்றரசன்
5360 தழுவணி குரவைக் கூத்து
5361 தழுவுதல் உள்ளடக்குதல், சூழ்தல்
5362 தழுவுமவன் தழுவுபவன்
5363 தழுவு வழி தழுவின இனம்
5364 தழுஉ தழுவி, கூடி, மகளிராடுங் குர வைக் கூத்து
5365 தழூஉ அயர்தல் குரவைக் கூத்தாடுதல்
5366 தழூஉகம் கையகப்படுப்பேம்
5367 தழூஉம் தழுவும்
5368 தழை தழை முதலியவற்றால் அமைந்த ஆடை, தழையுடை
5369 தழையணி தழையுடை
5370 தள்(தல்) தடுத்தல், தளைத்தல், நீர் முதலியவற்றைத் தளைத்தல்
5371 தள்ளாதோர் தளையாதவர்
5372 தள்ளுதல் தவிர்தல்
5373 தளம்பு சேறுகுத்தி
5374 தளர்க்கும் ஓடப் பண்ணும், கெடுக்கும்
5375 தளர்தல் இளைத்தல், குலைதல், சிறிது சாய்தல், வருந்துதல்
5376 தளர்நடை தளர்ந்த நடை
5377 தளர்பு ஆற்றாமல், தளர்ந்து
5378 தளர்பு ஒல்கி தளர்ந்து நடந்து
5379 தளரியால் மனந் தளர்கின்ற இயல்பினையுடையாய்
5380 தளவம் முல்லை, செம்முல்லை
5381 தளவு முல்லை, செம்முல்லை
5382 தளி நீர்த் துளி, முகில், மழை, மழைத்துளி, தலைப்பெயல் மழை
5383 தளித்தல் துளித்தல்
5384 தளிர் இலைக் கொழுந்து
5385 தளிர் சூடுதல் தளிர் விரவின மாலை சூடுதல்
5386 தளிர்த்தல் மனம் மகிழ்தல்
5387 தளை பிணிப்பு, முறுக்கு, மலர் முறுக்கு
5388 தளை விட்ட முறுக்கு அவிழ்ந்தன
5389 தளைவிட்ட காதலர் மனம் நெகிழ்ந்த காதலர்
5390 தளை விடுதல் அலர்தல், நெகிழ்தல், முறுக்கு நெகிழ்தல்
5391 தற் கடவின் தன்னை வினவினால்
5392 தற் கண்டார் தன்னைக்கண்டார்
5393 தற் சேர்ந்த தன்னைச் சேர்ந்த
5394 தறி முளைக்கோல், யானைத் தம்பம்
5395 தறுகண் அஞ்சாமை, கொல்லுகை
5396 தறைதல் தட்டையாதல்
5397 தன் தனது
5398 தன் இலள் தனக்கு என ஒரு நெஞ்சுடையள் அல்லள்
5399 தன்னை தலைவன், அவனை
5400 தன்னையர் தமையன்மார்
5401 தனிக் குழல் தனித்த குழல்
5402 தனித்தல் ஏகாந்தமாதல்
5403 தனித்து ஒழிதல் தனியே நீங்குதல்
5404 தனி வைகுதல் தனியே தங்குதல்
மேல்