| 5405 |
தா |
அழிவு, பரப்பு, வருத்தம், வலி, தாவுதல் |
| 5406 |
தாஅம் |
பரக்கும், தாகம் |
| 5407 |
தாஅய் |
பரந்து |
| 5408 |
தாஅய |
பரந்த, பாய்ந்த |
| 5409 |
தா இல் உள்ளம் |
வருத்தம் இல்லாத உள்ளம் |
| 5410 |
தா இல் தாள் |
அழிவில்லாத திருவடி |
| 5411 |
தாக்கல் |
எதிரே செல்லல், பாய்தல் |
| 5412 |
தாக் கலை |
தாவுதலையுடைய ஆண் குரங்கு |
| 5413 |
தாக்கு அணங்கு |
தாக்கி வருந்துந் தெய்வம் |
| 5414 |
தாக்கு இரை |
எறிந்து எடுக்கும் இரை |
| 5415 |
தாக்குதல் |
எதிர்த்தல், வெட்டுதல், போர் செய்தல் |
| 5416 |
தாக்குபு |
தாக்கி |
| 5417 |
தாக்குறுதல் |
காணுதல் |
| 5418 |
தாங்கல் |
சுமத்தல், தடுத்தல், பொருத்தல், விலங்கல், வேண்டுமளவிலே பிடித்தல் |
| 5419 |
தாங்காச் சினம் |
பிறரால் தாங்கவொண்ணாத சினம் |
| 5420 |
தாங்காது |
தாமதியாது |
| 5421 |
தாங்குதல் |
இளைப்பாறுதல், குதிரை முதலியவற்றின் வேகத்தை அடக்கிச் செலுத்துதல், தடுத்தல், தாமதித்தல், நிறுத்தல், காத்தல், பொறுத்தல் |
| 5422 |
தாங்குந்து |
தாங்கும் |
| 5423 |
தாங்குநன் |
காப்பாற்றுவோன் |
| 5424 |
தாங்குமதி |
ஆற்றுவாயாக |
| 5425 |
தா சினை |
பரந்த கொம்பு |
| 5426 |
தாடி |
மோவாய் மயிர் |
| 5427 |
தாது |
தேன், நீறு, பூந்தாது |
| 5428 |
தாது அவிழ் தண்போது |
தாதை அலர்ந்த குளிர்ந்த பூ |
| 5429 |
தாது எரு |
எருப் பொடி, தாது எரு மன்றம் |
| 5430 |
தாது எரு மன்றம் |
இடையர் குரவை முதலியன நிகழ்த்துதற்கு இடமானதும் எருக்கள் சூழ்ந்ததுமான மரத்து அடியில் உள்ள பொதுவிடம் |
| 5431 |
தாது தேர் பறவை |
தாதைத் தேடி உண்ணும் வண்டு |
| 5432 |
தாம் |
தாகம் |
| 5433 |
தாம்பில் பிணித்து |
தாம்பால் கட்டி |
| 5434 |
தாம்பு |
தாமணிக் கயிறு |
| 5435 |
தாமா இருவர் |
அசுவினி தேவர்கள் |
| 5436 |
தாய் |
அன்னை, தாவி, பரந்து |
| 5437 |
தாய |
தாவிய, பரந்த, அளந்த |
| 5438 |
தாயம் |
உரிமை, நாடு |
| 5439 |
தாயர் |
தாய்மார் |
| 5440 |
தாயிர் |
தாயாந் தன்மையுடையீர் |
| 5441 |
தாயின |
பரந்தன |
| 5442 |
தார் |
உபாயம், ஒழுங்கு, கொடிப்படை, பிடரி மயிர், மார்பின் மாலை, மாலை, பூ மாலை |
| 5443 |
தார் அகலம் |
தாரையுடைய மார்பம் |
| 5444 |
தாரம் |
அரும் பண்டம், பல பண்டம் |
| 5445 |
தாரல் |
தருதலை ஒழிக |
| 5446 |
தாலம் |
உண்கலம் |
| 5447 |
தாலி |
ஐம்படைத் தாலி, சிறுவர் கழுத்தில் அணியும் ஆபரண விசேடம்; பலகறை |
| 5448 |
தாவல் |
வருத்தம் |
| 5449 |
தாவா |
தாவாத, கெடாத |
| 5450 |
தாவாத |
வருத்தம் இல்லாத |
| 5451 |
தாவார் |
கெடார் |
| 5452 |
தாவா விருப்பு |
கெடாத விருப்பு |
| 5453 |
தாவுதல் |
ஓடுதல், குதித்தல், தழைத்தல், பரத்தல் |
| 5454 |
தாழ் |
மோதிரம், வணங்குதல் |
| 5455 |
தாழ் கா |
இளமரச் சோலை |
| 5456 |
தாழ் காது |
வடிந்த செவி |
| 5457 |
தாழ் குரல் |
தாழ்ந்த கதிர் |
| 5458 |
தாழ் செறி கடுங் காப்பிற்றாய் |
தாழிட்டு அடைத்தாற் போலும் கடிய காவலை உடையதாய் |
| 5459 |
தாழ்த்தல் |
தாமதித்தல் |
| 5460 |
தாழ்தல் |
குலைதல், குறைதல், சிறிது குலைந்து வீழ்தல், சேர்த்தல், தங்குதல், தாழ்ந்து கிடத்தல், நிறங் குறைதல், நீளுதல் |
| 5461 |
தாழ்ந்தன்று |
தங்கியது |
| 5462 |
தாழ்ந்து |
தாழ்கையினாலே |
| 5463 |
தாழ்ந்துபடுதல் |
ஓரிடத்தைச் சேர்ந்து தங்குதல் |
| 5464 |
தாழ் நீர முத்து |
தாழ்ந்த கடலில் பிறந்த முத்து |
| 5465 |
தாழ்பு |
தங்கி, தாழ்ந்து |
| 5466 |
தாழ்வு |
குறுமை |
| 5467 |
தாழ |
தங்கும்படி, தங்கும்படியாக |
| 5468 |
தாழாது |
நீட்டியாது |
| 5469 |
தாழி |
பானை, பிணங்களைக் கவிக்கும் தாழி, முதுமக்கட் சாடி |
| 5470 |
தாழை |
செடி வகை, தெங்கம் பாளை, தென்னை |
| 5471 |
தாள் |
அடி, காம்பு, படி, மரத்தின் அடி, முயற்சி, மூட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி, வால் மீன் விசேடம், கைவிரலணி, திருவடி, தினையரிதாள் |
| 5472 |
தாளாண்மை |
முயற்சி |
| 5473 |
தாளி |
கொடி வகை, ஒரு வகை அறுகு, தகளி |
| 5474 |
தாறு |
வாழை முதலியவற்றின் குலை, அங்குசம், இரும்பு முள் |
| 5475 |
தான் |
அசைநிலை |
| 5476 |
தானை |
சேனை, துகில், புடைவை |