| 5576 |
தீ |
பஞ்ச பூதங்களுள் ஒன்றாகிய நெருப்பு |
| 5577 |
தீட்டல் |
கோதுதல் |
| 5578 |
தீட்டுதல் |
கோதுதல் |
| 5579 |
தீண்டுதல் |
அடித்தல், அளைதல், வரைந்து கொண்டு கூடுதல் |
| 5580 |
தீதிலன் |
தீதுடையேனல்லேன் |
| 5581 |
தீது |
குற்றம், கேடு, கொடுமை |
| 5582 |
தீது இன்று |
தீதின்றி |
| 5583 |
தீது சேண் இகத்தல் |
தீமை முதலியன சேய்மையிலே நீங்குதல் |
| 5584 |
தீந்த |
கரிந்த |
| 5585 |
தீப்பாய்தல் |
உடன்கட்டை யேறுதல், அக்கினிப் பிரவேசம் செய்தல் |
| 5586 |
தீம் |
இனிமை, இனிய |
| 5587 |
தீம் கட் கரும்பு |
இனிய கண்ணிடத்தே தோன்றின கரும்பு |
| 5588 |
தீம் கதிர் |
இனிய கிரணம் |
| 5589 |
தீம் கரை |
இனிதாகிய நீரையுடைய ஆற்றங் கரை |
| 5590 |
தீம் கழைக் கரும்பு |
இனிய கோலை யுடைய கரும்பு |
| 5591 |
தீம் கனி |
இனிய பழம் |
| 5592 |
தீம் கிளவி |
(கேட்ட காலத்தில்) இனிய சொல் |
| 5593 |
தீம் குழல் |
இனிமையான குழல் |
| 5594 |
தீம் சாறு |
இனிய சாறு |
| 5595 |
தீம் சுளை |
இனிய சுளை |
| 5596 |
தீம் செறி தசும்பு |
இனிய செறிவை உடைத்தாகிய மதுக்குடம் |
| 5597 |
தீம் சேற்றுக் கடிகை |
கண்ட சருக்கரைத் தேறு, கண்ட சருக்கரைத் துண்டு |
| 5598 |
தீம் சேறு |
இனிய பாகு |
| 5599 |
தீம் தொடை |
இனிய நரம்புக் கட்டு |
| 5600 |
தீம் நீர் |
இனிய நீர், இனிய இளநீர், நன்னீர் |
| 5601 |
தீம் பிழி எந்திரம் |
இனிய சாற்றை எடுக்கும் கரும்பாலை |
| 5602 |
தீம்புழல் |
இனிய பண்ணிகாரம், இருப்பைப் பூ |
| 5603 |
தீம்புளி |
கருப்புக் கட்டி கூட்டிப் பொரித்த புளி |
| 5604 |
திமூட்டு |
தீமூட்டுதற்குரிய பொருள் |
| 5605 |
தீமை |
கொடுமை |
| 5606 |
தீ மொழி |
தீயமொழி |
| 5607 |
தீயது |
தீவினை |
| 5608 |
தீயழல் |
சுவாலை |
| 5609 |
தீயாரைப் போல உடற்றுதி |
தீய மக்களை உடற்றுமாறு போல உடற்றாநின்றாய் |
| 5610 |
தீயேன் |
தீவினையேன் |
| 5611 |
தீர்கினி |
தீர்க இனி, இனி நீங்குவதாக |
| 5612 |
தீர்த்தல் |
போக்குதல் |
| 5613 |
தீர்தல் |
அறுதல், நீங்குதல், ஆறுதல், மாறுதல் |
| 5614 |
தீர்ந்தன்று |
தீர்ந்தது, அற்றது, போயிற்று |
| 5615 |
தீர்ந்து |
இன்றி |
| 5616 |
தீர்ப்பது |
மாற்றத் தக்கது |
| 5617 |
தீர்வை |
கீரிப்பிள்ளை |
| 5618 |
தீர |
நீங்குதலால், நீங்கும்படி |
| 5619 |
தீரம் |
கரை |
| 5620 |
தீரா முயக்கம் |
நீங்காத முயக்கம் |
| 5621 |
தீரிய |
தீர்க்க வேண்டி, ஒழிய |
| 5622 |
தீவிய |
இனிமையான, இனிய |
| 5623 |
தீ வேட்டல் |
யாகஞ் செய்தல் |
| 5624 |
தீற்றல் |
உண்பித்தல் |
| 5625 |
தீற்றுதல் |
ஊட்டுதல் |