6014 தை ஒரு மாதம்
6015 தைஇ பொருந்தி, உடுத்து, செய்து, அழுத்தி, எழுதி, சூடி
6016 தைஇத் திங்கள் தை மாதம்
6017 தைஇய பொருந்திய, புனைந்து செய்த, உடுத்த, கட்டின, செருகி வைத்த, பண்ணப்பட்ட
6018 தைஇனர் கட்டினார்
6019 தைத்தல் அலங்கரித்தல், இடுதல், உடுத்துதல், கோத்தல், சித்திரித்தல், சூழ்தல், நிருமித்தல், பதித்தல், மாலை தொடுத்தல்
6020 தைந்நீராடல் தைமாதத்தில் கன்னிப் பெண்கள் நீராடும் நோன்பு, சாந்திரமானத் திஷ்ய மாதத்தில் கன்னிப் பெண்கள் நீராடும் சடங்கு
6021 தையல் பெண்
6022 தையின கட்டப் பெற்றன
6023 தையுபு கட்டி
6024 தையெனல் இசைக் குறிப்பு
6025 தைவரல் இயக்கல், தடவுதல்
6026 தைவருதல் தடவி இன்புறுதல், தடவி வருதல், வருடுதல்
மேல்