6027 தொக்கிருத்தல் திரண்டிருத்தல்
6028 தொக்கு திரண்டு
6029 தொகல் கொள தொகுதியாக
6030 தொகுத்தல் திரட்டுதல்
6031 தொகுதல் வீணாதல், திரளுதல்
6032 தொகுநிலை கூட்டம்
6033 தொகுபு சேர்ந்து, திரண்டு, தொக்கு
6034 தொகும் வறிதுபட்டிருக்கும்
6035 தொகூம் கூடுகின்ற
6036 தொகை தொகுத்துக் கூறுதல்
6037 தொகைஇ கூட்டி
6038 தொட்டன துளைத்தன
6039 தொட்டி நீர்த் தொட்டி
6040 தொட்டு செறித்து, தோண்டி, பிசைந்து, வாரிப் பிடித்து
6041 தொட்டேன் தொட்டுச் சூளுற்றேன்
6042 தொடக்கத்துத் தாய் (பரத்தமை) தொடங்குகின்ற காலத்து உள்ளாகிய தாய்
6043 தொடங்கல் ஆதி சிருட்டி
6044 தொடங்குதல் ஆரம்பித்தல், துவங்குதல்
6045 தொடர் சங்கிலி, தொடர்ச்சி, பிணிப்பு
6046 தொடர்தல் இடையறாது வருதல், நெருங்குதல், கட்டுதல், தொங்க விடுதல், மிகுதல்
6047 தொடர்ந்து செல்லல் விடாமற் செல்லுதல்
6048 தொடர் நோய் இடையறாத நோய்
6049 தொடர்பு தொடர்ந்து போதல், உறவு, தொடர்ச்சி, நட்பினாலுண்டான (காம) நோய்
6050 தொடரி தொடர்ந்து, நாற்றி
6051 தொடல் தொடுதல்
6052 தொடலை தொங்க விடுகை, மணிக்கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை, தூக்கு, மாலை
6053 தொடாஅல் தொடுதலை ஒழிக, தீண்டாதே கொள்
6054 தொடி கைவளை, தோள் வளை, பூண், வீரவளை, வளை
6055 தொடி மகள் விறலி
6056 தொடிய தீண்டுதற்கு
6057 தொடியுற்ற வடு தொடி அழுந்தின வடு
6058 தொடியோர் தொடியினையுடைய மகளிர்
6059 தொடி வடு தொடித் தழும்பு
6060 தொடீஇய தீண்டுதற்கு
6061 தொடீஇயர் தீண்டுதற்கு
6062 தொடு தொழு, தொட்டுச் சூளுறு வாயாக
6063 தொடுக்குநர் வளைத்துக் கொள்பவர்
6064 தொடு கடல் கீழ் கடல்
6065 தொடுகலம் தீண்டேம்
6066 தொடு கழல் கட்டப் பெற்ற கழல்
6067 தொடுகு தொட்டுச் சூளுறுவேன்
6068 தொடுத்த கோல் பிழையாமை தொடுத்த அம்புகள் இலக்குத் தப்பாமை
6069 தொடுத்தல் எய்தல், கட்டுதல், சேர்த்து வைத்தல், வளைத்தல், வளைத்துக் கைக்கொள்ளுதல், வளைத்துப் பிடித்துக் கொள்ளுதல்
6070 தொடுதரல் தீண்டுதல்
6071 தொடுதல் கட்டுதல், இடுதல், தரித்தல், தீண்டுதல், துளைத்தல், தோண்டுதல், வாச்சியம் வாசித்தல், பிழிதல், வளைத்தல்
6072 தொடுதோல் செருப்பு
6073 தொடுப்பு விதைப்பு
6074 தொடுமின் இசையுங்கோள்
6075 தொடு வழித் தொடு வழி தீண்டத்தீண்ட
6076 தொடை கட்டுகை, சந்து, தொடுத்தல், படிக்கட்டு, மாலை, வடம், வீரரின் பஞ்சகிருத்தியத்துள் ஒன்றாகிய அம்பெய்கை, கோவை, நரப்புத்தொடை
மேல்