| 6531 |
நிகர் |
ஒளி |
| 6532 |
நிகர்த்தல் |
மாறுபடுதல் |
| 6533 |
நிகழ்ச்சி |
நிலைமை |
| 6534 |
நிச்சம் |
நித்தம், நாள்தோறும் |
| 6535 |
நிணத்தல் |
கட்டுதல் |
| 6536 |
நிணம் |
கொழுப்பு |
| 6537 |
நித்தம் |
நிருத்தம், நடனம் |
| 6538 |
நிதிக் கிழவன் |
குபேரன் |
| 6539 |
நிதியம் |
நிதி |
| 6540 |
நிமிர்தல் |
இடையிடுதல், நுடங்குதல், மிகைத்தல், மேல்நோக்குதல், கடத்தல், வளர்தல் |
| 6541 |
நிமிர் தோள் |
நெடிய தோள் நிமிர்பு ஆலும் குயில் தலை நிமிர்ந்து ஆரவாரிக்கும் குயில் |
| 6542 |
நிமிரல் |
சோறு, நிமிர்ந்த சோறு |
| 6543 |
நியமம் |
கடைத் தெரு |
| 6544 |
நிரந்து இலங்கு அருவி |
இடையறாது வீழ்ந்து விளங்குகின்ற அருவி |
| 6545 |
நிரப்பம் |
ஒப்புமை |
| 6546 |
நிரப்பம் இல் யாக்கை |
வடிவு ஒத்தல் இல்லாத யாக்கை |
| 6547 |
நிரப்பு |
வறுமை |
| 6548 |
நிரம்பா |
அளவிலடங்காத |
| 6549 |
நிரம்பா நீடு அத்தம் |
தொலையாத நீண்ட காடு |
| 6550 |
நிரம்பா நீள் இடை |
செல்லத் தொலையாத நீண்ட இடம், செல்லத் தொலையாத நெடிய வழி |
| 6551 |
நிரம்பா நோக்கு |
இடுக்கிப் பார்க்கும் பார்வை |
| 6552 |
நிரம்புதல் |
முடிவுறுதல் |
| 6553 |
நிரயம் |
நரகம் |
| 6554 |
நிரல் |
ஒப்பு, வரிசை |
| 6555 |
நிரவுதல் |
சமனாக்குதல் |
| 6556 |
நிரை |
கோபுரம், கூட்டம், ஆட்டின் தொகுதி, ஒழுங்கு, பசுத் திரள், வரிசை |
| 6557 |
நிரைத்த |
நிரைத்தாற் போன்ற |
| 6558 |
நிரைத்தல் |
நிரப்புதல், வரிசையாய்க் கிடத்தல் |
| 6559 |
நிரைத் தார் |
இணைந்த மாலை |
| 6560 |
நிரையம் |
நரகம் |
| 6561 |
நில்லாதி |
நில்லாதே |
| 6562 |
நிலம் கிளையா |
நாணத்தால் நிலத்தைக் கீறி |
| 6563 |
நிலம் தரு திருவின் நெடியோன் |
நிலந்தரு திருவிற் பாண்டியன் |
| 6564 |
நிலம் |
பூவுலகு |
| 6565 |
நிலம் தூங்கு அணல் |
நிலத்தளவும் தொங்குகின்ற அலை தாடி |
| 6566 |
நிலமகள் |
பூதேவி |
| 6567 |
நிலவர் |
நிலத்துள்ளவர் |
| 6568 |
நிலவன்மார் |
நிலவாதொழிக |
| 6569 |
நிலவு |
நிலா, நிலைத்தல் |
| 6570 |
நிலவுலகம் |
மண்ணுலகம் |
| 6571 |
நிலவு வேல் |
புகழ்ச்சி நிலைபெறும் வேல் |
| 6572 |
நிலன் |
நிலத்திலுள்ளார் (ஆகு பெயர்) |
| 6573 |
நிலா |
நில்லாவாய், சந்திரன் ஒளி |
| 6574 |
நிலாமுற்றம் |
நிலவின் பயன் கொள்ளுதற்கு உரித்தாய் மேலே வேயாத மேல் தளம் |
| 6575 |
நிலீஇயர் |
நிலை பெறுவாயாக |
| 6576 |
நிலை |
இடம், கதவுநிலை, தன்மை, நிற்கை, ஒருவன் நிற்கக் கூடிய நீராழம், நிலைமை, படி |
| 6577 |
நிலைஇ |
நின்று |
| 6578 |
நிலைஇய |
நிலை பெற்ற |
| 6579 |
நிலைஇயர் |
நிலை பெறுவாயாக, நிற்பதாக |
| 6580 |
நிலை உயர் கடவுள் |
யான் நிற்கின்ற நிலைமை உயர்தற்குக் காரணமான கடவுள் |
| 6581 |
நிலைக்குந்து |
நிலைக்கும் |
| 6582 |
நிலைச் செரு |
இடையறாப் போர் |
| 6583 |
நிலைத் துறை |
வழக்கமாக இறங்கும் நிலையாழமுள்ள நீர்த் துறை |
| 6584 |
நிலைப்பால் |
நிலைகளின் கூறு, நிலைமைப் பகுதி |
| 6585 |
நிலை பெறுதல் |
ஒன்று நிற்கக் கூடிய அளவு ஆழ முடைத்தாதல் |
| 6586 |
நிலைமை |
புகழ் |
| 6587 |
நிலைய |
நிலைமையுடைய |
| 6588 |
நிலையலை |
நிலைபேறுடையை யல்லை |
| 6589 |
நிலையழிதல் |
பழைய தன்மை கெடுதல் |
| 6590 |
நிலையாது |
நிலை நில்லாமல், நிலையில்லாமல் |
| 6591 |
நிலையிற்று |
நிலைமை பெற்றது |
| 6592 |
நிலையின்று |
நிலை பெறுதல் இன்றா யிருந்தது |
| 6593 |
நிலையுமோ |
நிலைபெறுமோ |
| 6594 |
நிவத்தல் |
உயர்தல், ஒத்தல், ஓடுதல், படர்தல், மேல் வழிதல், வளர்தல், மேலெழுதல், மேலோங்குதல் |
| 6595 |
நிவந்த பள்ளி |
ஓங்கிய கட்டில் |
| 6596 |
நிவப்பு |
உயரம் |
| 6597 |
நிழத்த |
ஓய்ந்த |
| 6598 |
நிழத்துதல் |
இல்லையாக்குதல், தின்று அழித்தல், முன்னுள்ள நிலையினின்றும் நுணுகுதல், மணி முதலியன அடித்தல் |
| 6599 |
நிழல் |
அருள், ஒளி, நிறம், குடை நிழல் |
| 6600 |
நிழல் சேர்ந்தார் |
நிழலாக வந்தடைந்தார் |
| 6601 |
நிழல |
நிழலிடத்தன |
| 6602 |
நிழற்றல் |
நிழல் செய்தல், காப்பமைதல் |
| 6603 |
நிழற்றுதல் |
ஒளி விடுதல், நிழலைச் செய்தல் |
| 6604 |
நிற்றந்தோன் |
நின்றோன் |
| 6605 |
நிற்றர |
நிற்றலைச் செய்ய |
| 6606 |
நிற்றல் |
அடங்குதல், நிற்கும் தன்மை |
| 6607 |
நிறம் |
உயிர்நிலை, தோல், மார்பு, மருமம், வண்ணம் |
| 6608 |
நிறீஇ |
நிறுத்தி |
| 6609 |
நிறீஇய |
நிறுத்திய |
| 6610 |
நிறுக்கல்லா |
நிறுத்தமாட்டாத |
| 6611 |
நிறுக்கல்லேன் |
நிறுக்கமாட்டேன் |
| 6612 |
நிறுக்கும் குழல் |
நிறுத்தும் வங்கியம் |
| 6613 |
நிறுக்குவேன் |
நிறுத்துவேன் |
| 6614 |
நிறுத்தல் |
தீர்மானித்தல், நிற்கச் செய்தல், தூக்குதல், நிறுத்துதல் |
| 6615 |
நிறுத்தற்றால் |
நேரே நிறுத்தினாற்போல |
| 6616 |
நிறுத்தன்ன |
நிறுத்தினாற் போன்ற |
| 6617 |
நிறுத்து |
நிறுத்தி |
| 6618 |
நிறுத்து என் கை நீட்டித் தருகுவை |
என் முன்னே நிறுத்தி என் கையிலே உன் கையை நீட்டித் தப்பாமல் தருகுவை |
| 6619 |
நிறுத்துதல் |
நிமிர்ந்து நிற்கச் செய்தல் |
| 6620 |
நிறுப்பல் |
நிறுத்துவேன் |
| 6621 |
நிறுப்பவும் |
நிறுத்தவும் |
| 6622 |
நிறுமார் |
நிறுத்தற்கு |
| 6623 |
நிறுமின் |
நிறுத்துமின் |
| 6624 |
நிறூஉம் |
நிறுத்தும் |
| 6625 |
நிறை |
இரண்டு தாக்குடைய தாள வகை, கருப்பம், கனம், நிறுத்தல், நிறைக்கப்பட்டது, பெருக்கு மறை பிறரறியாமை, வெள்ளம், ஒரு குணம் |
| 6626 |
நிறை ஆனாது |
நிறுக்குமளவில் அமையாதே |
| 6627 |
நிறைக்கல் |
நிறைத்தல் |
| 6628 |
நிறைத்தரல் |
மிகுதலைச் செய்தல் |
| 6629 |
நிறைதல் |
பெருகுதல் |
| 6630 |
நிறை நீவுதல் |
நிறுத்தலைக் கை கடத்தல் |
| 6631 |
நிறை புகுதல் |
நிறையப் புகுதல் |
| 6632 |
நிறை புனல் |
பெரும் புனல் |
| 6633 |
நிறையழிதல் |
யானை மதம் பிடித்தல் |
| 6634 |
நிறையாற்றாள் |
மனத்தை நிறுத்துதலைச் செய்ய மாட்டாள் |
| 6635 |
நின் அணங்குற்றவர் |
நின்னால் வருத்தமுற்ற பரத்தையர் |
| 6636 |
நின் இது செய்தார் |
நினக்கு இவ் வருத்தம் செய்தார் |
| 6637 |
நின் உற்ற அல்லல் |
நினக்கு உற்ற வருத்தம் |
| 6638 |
நின் குணங்களைப் பாராட்டும் |
நினக்கு நற்குணங்கள் உளவாகக் கொண்டாடும் |
| 6639 |
நின்தலை |
நின்னிடத்து |
| 6640 |
நின்றதை |
நின்றது |
| 6641 |
நின்றன்று |
நின்றது |
| 6642 |
நின்றீத்தை |
இங்ஙனே நிற்பாயாக |
| 6643 |
நின்றீயல் |
நிற்றல், நிற்றலைச் செய்தல் |
| 6644 |
நின்று |
எப்பொழுதும் |
| 6645 |
நினவ |
உன்னுடையன |
| 6646 |
நினைஇ |
இடை விடாமல் நினைத்து, நினைந்து |
| 6647 |
நினைதல் |
ஆராய்தல் |
| 6648 |
நினைதி |
நினைக்கின்றாய் |
| 6649 |
நினை துயர் உழைப்பவள் |
நினைத்தலாலுண்டான வருத்தத்திலே வருந்துகின்றவள் |
| 6650 |
நினைந்த சொல் |
நினைந்ததனால் பிறந்த சொல் |
| 6651 |
நினையா |
நினைத்து |
| 6652 |
நினையுநள் |
நினைத்து (முற்றெச்சம்) |
| 6653 |
நினையுபு |
நினைந்து |
| 6654 |
நினைவனள் |
நினைத்தாள் |
| 6655 |
நினை வாடு நெஞ்சம் |
நினைவு கெடுகின்ற நெஞ்சம் |