6730 நுகம் கதவுக்குக் காப்பாக இடப்படும் கணைய மரம், காளையின் கழுத்தில் பூட்டப்படும் தடி, பாரம், வலிமை
6731 நுகர்ச்சி அனுபவம், போகம்
6732 நுகர்தல் அனுபவித்தல்
6733 நுகும்பு பனை வாழை முதலியவற்றின் மடல் விரியாத குருத்து
6734 நுங்கின் தடி கண் நுங்கினது வெட்டின கண்
6735 நுங்கு நுங்குக் காய்
6736 நுங்குதல் உண்ணுதல், விழுங்குதல்
6737 நுசுப்பு இடை
6738 நுடக்கம் கூத்து, துவட்சி
6739 நுடக்கல் கழுவல்
6740 நுடக்கு நுடக்கம்
6741 நுடக்குதல் கழுவுதல், மாய்த்தல்
6742 நுடங்கல அசையா
6743 நுடங்குதல் அசைதல்
6744 நுண் எழில் கூரிய அழகு
6745 நுண் ஏர் கூரிய அழகு
6746 நுண் சேறு சாதிலிங்கம்
6747 நுண்ணுருக்குதல் கரைய உருக்குதல்
6748 நுண் துகள் நுண்ணிய புழுதி
6749 நுண் பல் தித்தி நுண்ணிய பல தேமல்புள்ளி
6750 நுண் பூண் நுண்ணிய தொழிலுடைய பூண்
6751 நுண்மை மென்மை, வேலை நுட்பம்
6752 நுணங்கிறை அசைகின்ற இறையினை யுடைய பெண் (அன்மொழித் தொகை)
6753 நுணங்கு நுண்மை
6754 நுணங்கு அமைத் திரள் நுண்மையை யுடைய மூங்கில்
6755 நுணங்கு எழில் கூரிய அழகு
6756 நுணங்குதல் அசைதல்
6757 நுணல் மணலுக்குள் முழுகி மறைந்து கிடக்கும் ஒரு வகைப் பிராணி
6758 நுணவம் நுணா
6759 நுணுகல், நுணுகுதல் மெலிதல்
6760 நுதல் தலை, நெற்றி, மத்தகம்
6761 நுதி தலை, நுனி, கொழுந்து, முனை
6762 நுந்தை உன் தந்தை
6763 நும்மின் தகுமோ உமக்குத் தகுமோ
6764 நும்முன் உன் தந்தை, உன் முன்னோன்
6765 நும்மோர் நும்மால் மதிக்கப்படுவோர்
6766 நுமர் நும்முடைய சுற்றத்தார், நும்முடைய தாய்மார்
6767 நுரை நீர் நுரை, வெண்ணெய்
6768 நுவ்வை உன் தங்கை
6769 நுவணை இடித்த மா
6770 நுவலாதி கூறாதே
6771 நுவலுதல் சொல்லுதல், கூறுதல், புகழ்ந்து கூறுதல்
6772 நுவலுநர் சொல்வார்
6773 நுவறிய அராவிய
6774 நுவறுதல் அராவுதல்
6775 நுழை சிறு வழி, கூர்மை
6776 நுழைத்தல் சொருகுதல்
6777 நுழைதல் புகுதல், கூரிதாதல், நுண்மையாதல்
6778 நுழை நொசி மட மருங்குதல் நோக்கினார் கண் சென்று நுழைந்து பார்க்கும் நுண்மையாலே அவர்க்கு அறியாமையைக் கொடுக்கும் மருங்குல்
6779 நுழை மீன் ஒரு வகை மீன்
6780 நுளம்பு
6781 நுளை வலைச் சாதி
6782 நுனை நுனி, முனை
மேல்