| 6783 |
நூக்கு |
நூக்கம், உயரம் |
| 6784 |
நூக்குதல் |
முறித்தல் |
| 6785 |
நூல் |
பஞ்சி நூல், வாய் கயிறு |
| 6786 |
நூல் ஏணி |
நூற் கயிற்றால் அமைந்த ஏணி |
| 6787 |
நூல் நெறி |
நூல் வழி |
| 6788 |
நூலரி மாலை |
நூலை அரிந்து கட்டிய மாலை |
| 6789 |
நூலாக் கலிங்கம் |
பட்டாடை |
| 6790 |
நூழில் |
பொருள் கருதி வழிபறிப்பார் மக்களைக் கொன்று குவிக்கும் இடம் மிடைந்த போர் |
| 6791 |
நூழிலாட்டு |
கொன்று குவிக்கை |
| 6792 |
நூழிலாட்டுதல் |
கொன்று குவித்தல் |
| 6793 |
நூழை |
துவாரம் |
| 6794 |
நூற்கழி |
நூல் சுற்றிய கழி |
| 6795 |
நூற்றுவர் |
துரியோதனாதிகள் |
| 6796 |
நூற்றுவர் தலைவன் |
துரியோதனன் |
| 6797 |
நூறல் |
அறைதல், வெட்டுதல், அழித்தல் |
| 6798 |
நூறி |
கெடுத்து |
| 6799 |
நூறு |
மா பொடி முதலியன, சுண்ணாம்பு |
| 6800 |
நூறு அடுக்கினை |
நூறாக அடுக்கினை |
| 6801 |
நூறுதல் |
அறைந்து கொள்ளுதல், பொடியாக்குதல், வெட்டுதல் |
| 6802 |
நூறை |
வள்ளிக்கிழங்கு வகை |