6889 நே ஈரம்
6890 நேஎ அன்பு
6891 நேமி சக்கரம், ஆஞ்ஞா சக்கரம், சக்கரவாகம், சக்கரவாளம், தேர் உருளை, சக்கரப் படை
6892 நேமியான் சக்கரப் படையையுடைய திருமால்
6893 நேர் செவ்வை, மெல்லிய
6894 நேர் இணர் தம்மிலொத்த இணர்
6895 நேர் இதழ் ஒத்த இதழ்
6896 நேர் கட் சேறு கண்ணுக்கினிய சேறு
6897 நேர் கதிர் நிறைத்த நிரம்பிய கதிர்களின் ஒழுங்கினைக் கொண்ட
6898 நேர் கோல் நேர்நிற்கும் துலாக் கோல்
6899 நேர் சிலம்பு காலுக்குப் பொருந்தின சிலம்பு
6900 நேர்தல் உடம்படுதல், ஒத்தல், தீண்டுதல், பொருந்துதல், இணையொத்தல், சேர்தல், நேர்ந்து விடுதல்
6901 நேர் நிரத்தல் சமமாய் நிற்றல
6902 நேர் நிரந்து சமமாய் நின்று
6903 நேர்படுதல் நேரே இருத்தல்
6904 நேர் மணி இன மொத்த மணி
6905 நேர் முகை தன்னில் ஒத்த முகை
6906 நேர்மை நுண்மை
6907 நேர் வாய்க் கட்டளை மாடத்தின்கண் உள்ள சாலேகம்
6908 நேராகி ஒப்பாகி
6909 நேராதார் பகைவர்
6910 நேரார் பகைவர்
6911 நேரி தமிழ் நாட்டிலுள்ளதும் சோழர்க் குரியதுமான ஒரு மலை
6912 நேரிழாய் ஒத்த இழையினை யுடையாய்
6913 நேரிழை ஒத்த இழை, ஒத்த இழையினையுடையாள்
மேல்