| 1 |
அ |
அழகு, சுட்டு |
| 2 |
அஃகுதல் |
குறைதல் |
| 3 |
அஃது |
சுட்டுச் சொல் |
| 4 |
அஃதை |
சோழன் ஒருவனது மகள் |
| 5 |
அக்கால் |
அப்பொழுது, அக்காலத்து |
| 6 |
அக்குளு |
கூச்சம் |
| 7 |
அக்குளுத்து |
அக்குளுக் காட்டுதலை உடைத்து (அக்குளுக் காட்டுதலாவது, கக்கம் முதலிய உறுப்பில் தீண்டிக் கூச்சம் உண்டாக்குதல்) |
| 8 |
அகடு |
நடு, வயிறு, உள்வாய், உள்ளிடம் |
| 9 |
அகத்த |
உள்ளிடத்தன |
| 10 |
அகத்தது |
நடுவில் உள்ளது |
| 11 |
அகத்தோர் |
அகத்துள்ளோர் |
| 12 |
அக நாடு |
உள் நாடு |
| 13 |
அகப்படுதல் |
சிக்கிக் கொள்ளுதல் |
| 14 |
அகப்படுப்ப |
அகப்படுத்திக் கொள்ள |
| 15 |
அகப்படுப்பேன் |
அகப்படுத்திக் கொள்வேன்; வசமாக்கிக் கொள்வேன் |
| 16 |
அகப்படேஎனாயின் |
கொண்டிலேனாயின் |
| 17 |
அகப்பா |
மதில் அகப்பா என்னும் ஓர் அரண் |
| 18 |
அகம் |
உள், உள்ளிடம், உள்ளம், மார்பு, வீடு |
| 19 |
அகம் நனைப்ப |
மார்பை நனைப்ப |
| 20 |
அகரு |
அகில் |
| 21 |
அகல் |
சட்டி, கலம் |
| 22 |
அகல் இலை |
அகன்ற இலை |
| 23 |
அகல்தல், அகலுதல் |
விசாலித்தல் விட்டுப் பிரிதலைச் செய்தல், நீங்குதல் |
| 24 |
அகல |
நீங்க, நீங்குகையினால் |
| 25 |
அகலம் |
மார்பு, பெருமை |
| 26 |
அகலம் |
புகுதல்-மார்பிடத்தே முயங்கல் |
| 27 |
அகலறை |
பாசறை, மலைப் பக்கம் |
| 28 |
அகலாங்கண் |
அகன்ற ஊரிடம் |
| 29 |
அகலுள் |
அகன்ற இடம் |
| 30 |
அகவர் |
அழைத்துப் புகழ்வோர், சூதர், நாட்டில் வாழ்வோர் |
| 31 |
அகவல் |
அழைத்தல், பாடுதல் |
| 32 |
அகவலன் |
பாணன் |
| 33 |
அகவன் மகள் |
பாண்மகள், தெய்வங்களை அழைத்துப் பாடும் கட்டுவிச்சி |
| 34 |
அகவா |
அழைத்தன இல்லை, ஒலி செய்யா |
| 35 |
அகவுதல் |
ஒலித்தல் |
| 36 |
அகவுநர் |
பாடுபவர், பாணர், கூத்தர் |
| 37 |
அகவுவம் |
பாடுவேம் |
| 38 |
அகழ் |
அகழி, குளம் |
| 39 |
அகழ்தல் |
தோண்டுதல் |
| 40 |
அகழி |
கிடங்கு |
| 41 |
அகளம் |
நீர்ச் சால், யாழின் பத்தர், தாழி |
| 42 |
அகற் பெய் குன்றி |
அகலில் பெய்யப்பட்ட குன்றிமணி |
| 43 |
அகற்றல் |
அகலச் செய்தல் |
| 44 |
அகற்றுதல் |
விசாலமாக்குதல், இடத்தை விட்டு அகலச் செய்தல், நீக்குதல் |
| 45 |
அகறல் |
நீங்குதல், பிரிதல் |
| 46 |
அகன் |
உள்ளம் |
| 47 |
அகன் அகலம் |
அகன்ற மார்பு |
| 48 |
அகன் கிடக்கை |
அகன்ற உலகம் |
| 49 |
அகன்தலை |
விரிந்த இடம் |
| 50 |
அகன் துறை |
நீரை உண்ணுதற்கு ஏற்ற அகன்ற துறை |
| 51 |
அகன் பறந்தலை |
அகன்ற பாசறை, போர்க் களம் |
| 52 |
அகன்று ஒரீஇ |
நீங்கிப் போய் |
| 53 |
அகில் |
புகைக்கும் ஒரு வாசனைப் பண்டம் |
| 54 |
அகுதை |
ஒரு வள்ளல் |
| 55 |
அகை எரி |
சுடர்விட்டு மிக்கு எரிகின்ற தீ, சுடப்பட்டு எரிகின்ற காமத் தீ |
| 56 |
அகைத்த |
கிளைத்த |
| 57 |
அகைத்தல் |
கிளைத்தல், முறித்தல், கூறுபடுத்தல், தழைத்தல் |
| 58 |
அகைதல் |
வருந்துதல், தளிர்த்தல், கிளைத்து எரிதல் |
| 59 |
அங்கண் |
கண்ணோட்டம் |
| 60 |
அங்கணாளன் |
கண்ணோட்ட முடையவன் |
| 61 |
அங்காடி |
கடை வீதி |
| 62 |
அங்கி |
கார்த்திகை |
| 63 |
அங்கு |
அவ் இடம், அவன்பால் |
| 64 |
அங்கை |
உள்ளங்கை, அழகிய கை |
| 65 |
அச்சம் |
பயம் |
| 66 |
அச்சிரம் |
அச்சிரக் காலம், முன் பனிக்காலம் |
| 67 |
அச்சு |
அச்சம், சகடம் செலுத்தும் உருள், வண்டியின் அச்சு, அச்சுமரம் |
| 68 |
அசா |
துன்பம், வருத்தம், தளர்ச்சி |
| 69 |
அசாஅ |
அசா |
| 70 |
அசாஅம் |
வருந்துகின்ற |
| 71 |
அசாவா |
தளராத, வருந்தாத |
| 72 |
அசாவிடுதல் |
இளைப்பாறுதல் |
| 73 |
அசாவிடூஉம் |
இளைப்பாறும் |
| 74 |
அசுணம் |
இசை அறிவதொரு விலங்கு |
| 75 |
அசும்பு |
சேறு, நீர், அறாத குழி |
| 76 |
அசை |
செயலறவு |
| 77 |
அசைஇ |
அசைத்து, உடுத்து, சார்ந்திருந்து, வைத்து, இளைத்து, தளர்ந்து வருத்தி, இளைப்பாறி, தங்கி |
| 78 |
அசைஇய |
ஓய்ந்த, தங்கிய, இளைத்த, பள்ளிகொண்ட |
| 79 |
அசைஇயது |
கிடந்தது |
| 80 |
அசைத்தல் |
உடுத்தல், தட்டுதல், வைத்தல் |
| 81 |
அசைதல் |
இயங்குதல், மெலிதல் |
| 82 |
அசை நடை |
அசைந்து நடக்கின்ற நடை, மெதுவாக நடந்து செல்லுதல் |
| 83 |
அசைநுகம் |
பூண்ட நுகம் |
| 84 |
அசையியல் |
மனம் அசைந்த இயல்பினை உடையாள், தடுமாற்றம் உற்றவள் |
| 85 |
அசையினை |
இளைத்தாய் |
| 86 |
அசைவரல் |
அசைந்து வருதல் |
| 87 |
அசைவளி |
அசைந்துவரும் காற்று, தென்றல், அசைத்த காற்று |
| 88 |
அசை வாடை |
அசைதலை உடைய வாடைக் காற்று |
| 89 |
அசைவிடுதல் |
அசைபோடுதல், இளைப்பாறுதல் |
| 90 |
அசைவிடூஉம் |
இளைப்பாறும் |
| 91 |
அசைவு |
தளர்ச்சி |
| 92 |
அஞ்சல் |
அஞ்சுதல், அஞ்சாதே |
| 93 |
அஞ்சன உருவன் |
மை போன்ற கரிய திருமேனியை உடையவன், திருமால் |
| 94 |
அஞ்சாதி |
அஞ்சாதே |
| 95 |
அஞ்சி |
அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் ஒரு வள்ளல;் பயந்து |
| 96 |
அஞ்சிறை |
உட்சிறகு, அழகிய சிறகு |
| 97 |
அஞ்சு தகவுடையார் |
அஞ்சத்தகும் தகுதிப்பாட்டினை யுடையார் |
| 98 |
அஞ்சுதல் |
பயப்படுதல் |
| 99 |
அஞ்சுவல் |
அஞ்சுவேன் |
| 100 |
அஞ்செவி |
உட்செவி |
| 101 |
அஞ்ஞான்று |
அந் நாள் |
| 102 |
அஞ்ஞை |
அன்னை |
| 103 |
அஞர் |
இடுக்கண், நடுக்கம், மன வருத்தம், மனக் கவற்சி, துன்பம் |
| 104 |
அஞர் உறல் |
துன்பமுறல் |
| 105 |
அஞர் உறுவி |
மயக்கமுற்றவள் |
| 106 |
அஞர் எவ்வம் |
மனக் கவற்சியைச் செய்யும் வருத்தம் |
| 107 |
அட்ட |
கொன்ற, சமைத்த |
| 108 |
அட்டி |
இட்டு, மிக இட்டு |
| 109 |
அட்டில் |
மடைப் பள்ளி |
| 110 |
அடக்கல் |
உட்கொள்ளல், ஒடுக்கல் |
| 111 |
அடகு |
இலை, இலைக் கறி |
| 112 |
அடங்க |
நெருங்க |
| 113 |
அடங்கக் கேள் |
சுருங்கக் கேள் |
| 114 |
அடங்கக் கொண்டு |
வலி அடங்கத் தழுவி |
| 115 |
அடங்காதார், அடங்காதோர் |
எல்லை கொள்ளாதவர், பகைவர் |
| 116 |
அடங்குதல் |
நெருங்குதல், கிடத்தல், இகழ்ந்து கூறுதலைத் தவிர்தல் இறைஞ்சுதல் |
| 117 |
அடர் |
தகடு |
| 118 |
அடர்தல் |
செறிதல், நெருங்குதல், தட்டுதல், தட்டி உருவாக்குதல் |
| 119 |
அடர் பொன் |
தகடாகிய பொன் |
| 120 |
அடல் |
கொல்லுதல், வருத்துதல், வெற்றி |
| 121 |
அடல் மா |
வெற்றியினையுடைய குதிரை |
| 122 |
அடா |
அடக்கி |
| 123 |
அடார் |
பொறி, கருங்கற் பலகையை ஒருபால் சாய்வாக நிமிர்த்திக் கீழே முட்டுக் கொடுத்து உள்ளால் உணவு வைப்பது, புலிப் பொறி |
| 124 |
அடி |
பாதம், கால் |
| 125 |
அடி அமை பகழி |
குதை அமைந்த அம்பு |
| 126 |
அடிசில் |
சோறு |
| 127 |
அடி சேர்தல் |
அடியைச் சேர்தல், வணக்கஞ் செய்தல் |
| 128 |
அடி தொட்டேன் |
அடியைத் தொட்டுச் சூளுற்றேன் |
| 129 |
அடிப்படுத்துதல் |
நிலைபெறச் செய்தல் |
| 130 |
அடி புதை யரணம் |
செருப்பு |
| 131 |
அடிய |
அடியை உடையன |
| 132 |
அடியுறை |
அடியிலே உறைதல், வழி பட்டு உறைதல், அடிமை, 'பாதத்தில் வாழ்வேன்' என்னும் பொருளில் வரும் ஒரு வணக்க மொழி |
| 133 |
அடியைத் தலையினால் தொட்டு உற்றேன் சூள் |
அடியைத் தலையாலே வணங்கிக் கையாலே தொட்டுச் சூளுற்றேன் |
| 134 |
அடுக்கம் |
படுக்கை, பாறை, வரிசை, மலைச் சாரல், அரைமலை, பக்கமலை |
| 135 |
அடுகலம் |
சமைக்கும் பாத்திரம் |
| 136 |
அடுகள் |
காய்ச்சிய கள், வடித்த கள் |
| 137 |
அடுகளம் |
கொல்லும் போர்க்களம் |
| 138 |
அடுத்துணல் |
பலகாலும் அனுபவித்தல் |
| 139 |
அடுதல் |
அழித்தல், குற்றுதல், கொல்லுதல், சமைத்தல், வருத்தல், வெல்லுதல், பெய்தல் |
| 140 |
அடுதீ |
சமைக்கும் நெருப்பு |
| 141 |
அடுநறா |
காய்ச்சிய சாராயம் |
| 142 |
அடுநன் |
அடுபவன் |
| 143 |
அடுநிலை |
கொன்ற நிலை |
| 144 |
அடுநை |
கொல்லுவாய் |
| 145 |
அடுப்பல் |
சேர்த்துவேன் |
| 146 |
அடுபுணை |
கடக்கும் தெப்பம் |
| 147 |
அடும்பு |
அடம்பு, அடும்பங் கொடி |
| 148 |
அடுமகள் |
சோறு ஆக்கும் பெண் |
| 149 |
அடை |
பொருந்துகை, சேர்ப்பிக்கை, இலை, முளை, தண்ணடை |
| 150 |
அடைகரை |
கரைப்பக்கம், பரந்த கரை |
| 151 |
அடைச்சி |
அணிந்து |
| 152 |
அடைச்சுதல் |
சேரச் செய்தல், உடுத் துக் கொள்ளுதல், அடைவித்தல், தரித்தல் |
| 153 |
அடை சூழ்தல் |
அடுத்தலைச் சூழ்தல் |
| 154 |
அடைபு |
சேர்ந்து |
| 155 |
அடை முதிர் முகை |
இலையை விட்டு முற்றின தாமரை மொட்டு |
| 156 |
அடையல் |
செருப்பு வகை |
| 157 |
அண்கணாளன் |
கண் முன்னே வந்து நிற்கும் தலைவன் |
| 158 |
அண்டர் |
இடையர் |
| 159 |
அண்டிரன் |
ஆய் அண்டிரன் என்னும் அரசன் |
| 160 |
அண்ணணித்து |
மிகவும் அணித்து, மிக அருகில் உள்ளது |
| 161 |
அண்ணல் |
தலைமை, தலைவன், இறைவன் |
| 162 |
அண்ணா (அண்-நா) |
உள்நாக்கு |
| 163 |
அண்ணாத்தல் |
மேல் நோக்குதல் |
| 164 |
அண்மை |
அணுமை, சமீபம் |
| 165 |
அணங்காக்குதல் |
வருத்தத்தை உண்டாக்குதல் |
| 166 |
அணங்காதல் |
வருத்தமாதல் |
| 167 |
அணங்கிய |
வருத்துவிக்க, வருத்த |
| 168 |
அணங்கு |
வருத்தம், பேய், அச்சம், தெய்வம், வீற்றுத் தெய்வம்,அழகு |
| 169 |
அணங்குதல் |
பின்னிவளர்தல், வருந்துதல், வருத்துதல் |
| 170 |
அணந்து |
அண்ணாந்து |
| 171 |
அணல் |
தாடி, அலைதாடி, மீசை, கவுள்,கழுத்து |
| 172 |
அணவருதல் |
தலையை மேலே தூக்கிப் பார்த்தல் |
| 173 |
அணற் காளை |
தாடியை உடைய வீரன் |
| 174 |
அணி |
அழகு, அலங்காரம், அணி கலம்,ஒப்பனை, கோலம், திரட்சி |
| 175 |
அணி அயர்ப |
அணிகளை அணிவார் |
| 176 |
அணிக்கு அணியாக |
அழகிற்கு மேலே ஓர் அழகாக |
| 177 |
அணி கயிறு |
குதிரையின் வாய்க் கயிறு |
| 178 |
அணிதல் |
அழகாதல், பொருந்துதல், பரத்தல், சூழ்தல் |
| 179 |
அணிந்தன்று |
அழகு செய்தது |
| 180 |
அணிநிற்ப |
திரண்டு நிற்ப |
| 181 |
அணி பெறல் |
அழகு பெறுதல் |
| 182 |
அணிமலை |
திரண்ட மலை |
| 183 |
அணிமார் |
அணிதலைச் செய்தற்கு |
| 184 |
அணிமை |
அருகு |
| 185 |
அணியர் |
அணிமையிடத்துள்ளார் |
| 186 |
அணியல் |
அழகு செய்தல் |
| 187 |
அணியவர் |
அழகினையுடையவர் |
| 188 |
அணியாள் |
சூடிக்கொள்ளாள் |
| 189 |
அணில் வரிக் கொடுங்காய் |
வெள்ளரிக்காய் |
| 190 |
அணிவரம்பு அறுத்தல் |
அழகின் எல்லையைப் போக்குதல் |
| 191 |
அணிவனப்பு |
அணி தலாற் பெற்ற செயற்கை நலம் |
| 192 |
அணுகல் |
அடைதல் |
| 193 |
அணை |
மெத்தை, படுக்கை |
| 194 |
அணைஇய |
அணைந்த |
| 195 |
அணைகொடுத்தல் |
கூடுதற்குக் கொடுத்தல் |
| 196 |
அணைத்தல் |
சேர்த்தல் |
| 197 |
அணையரும் வெம்மைய |
அணைவதற்கு அரிய வெம்மையையுடைய |
| 198 |
அத் தக்கோன் |
அத் தகுதியையுடை யோன் |
| 199 |
அத்தக |
அழகு பொருந்த |
| 200 |
அத்தத்தா என்பான் |
அத்தா அத்தா என்று கூறுகின்றவன் |
| 201 |
அத்தத்தா எனல் |
குழந்தை தந்தையைக் கூப்பிடுதற் குறிப்பு |
| 202 |
அத்தம் |
பாலை நிலம், வழி, அருநெறி, அருஞ் சுரம், காடு |
| 203 |
அத்தன் |
தந்தை |
| 204 |
அத்திரி |
கோவேறு கழுதை |
| 205 |
அத்து |
சாரியை |
| 206 |
அத்தை |
ஓர் முன்னிலை அசை |
| 207 |
அதர் |
வழி |
| 208 |
அதரிகொள்ளுதல் |
நெற்கதிரைக் கடா விட்டு உழக்குதல், பகையழித்தல் |
| 209 |
அதரி திரித்தல் |
நெற்கதிரைகக் கடா விட்டு உழக்குதல் |
| 210 |
அதவம் |
அத்தி |
| 211 |
அதள் |
தோல் |
| 212 |
அதற்கொண்டு |
அக்காலந் தொடங்கி, அதனை முதலாகக் கொண்டு |
| 213 |
அதற்பட |
அதன் கண்ணே பட |
| 214 |
அதன் தலை |
அதற்கு மேலே |
| 215 |
அதிகன் |
மேற்பட்டவன், அதியமான் |
| 216 |
அதியமான் |
அதியமான் நெடுமான் அஞ்சி, ஒரு தலைவன், கடை வள்ளல்கள் எழுவரில் ஒருவன் |
| 217 |
அதியர் |
அதியமான் வம்சத்தோர், ஒரு சிற்றரசர் குலத்தினர் |
| 218 |
அதியர் கோமான் |
அதியமான் |
| 219 |
அதிர் |
நடுக்கம் |
| 220 |
அதிர்தல் |
எதிரொலித்தல், நடுங்குதல் முழங்குதல் |
| 221 |
அதிர்ப்பு |
எதிரொலி |
| 222 |
அதிர்பு |
அதிர்ந்து, நடுங்கி |
| 223 |
அதிர்வு |
நடுக்கம் |
| 224 |
அதிரதிர |
அதிர அதிர |
| 225 |
அதிரல் |
புனலி, காட்டுமல்லிகை, மோசிமல்லிகை |
| 226 |
அந்தணன் |
இறைவன், சிவபிரான், வியாழன் |
| 227 |
அந்தரப் பல்லியம் |
அந்தர துந்துமி |
| 228 |
அந்தரம் |
வெளி, உள்வெளி, தேவருலகம் |
| 229 |
அந்தி |
சந்தியா காலம், அந்திக் காலம், செக்கர், ஊழி முடிவு |
| 230 |
அந்தில் |
ஓர் அசைச் சொல், ஆங்கு |
| 231 |
அந்துவஞ் சாத்தன் |
ஓர் உபகாரி |
| 232 |
அந்தோ |
ஐயோ |
| 233 |
அந்நிலை |
அப்பொழுது |
| 234 |
அப்பு |
அம்பு, அம்பின் நுனியில் செருகும் மல்லிகை மொட்டுப் போன்ற உறுப்பு |
| 235 |
அம் |
அழகு, இனிமை, ஒரு சாரியை |
| 236 |
அம் கலுழ் மாமை |
அழகு ஒழுகுகின்ற மாமை |
| 237 |
அம் பகை நெறித்தழை |
அழகிய மாறுபட்ட முழுநெறியை உடைய தழையுடை |
| 238 |
அம்பணம் |
வீட்டிலுள்ள கூடுவாய் மூலை, கூடுவாய் மூலையில் அமைத்த நீரை வீழ்த்தும் கருவி |
| 239 |
அம்பர் |
அங்கே |
| 240 |
அம்பர் கிழவோன் |
அம்பர் கிழான் அருவந்தை என்னும் ஒரு தலைவன் |
| 241 |
அம்பல் |
பழிமொழி, சிலர் அறியக் கூறும் பழிமொழி |
| 242 |
அம்பா ஆடல் |
தைந் நீராடல் |
| 243 |
அம்பி |
தோணி, ஓடம், சிறிய தெப்பம், மரக்கலம் |
| 244 |
அம்பினவை |
அம்பினை உடையை |
| 245 |
அம்பு |
கணை |
| 246 |
அம்புலி |
சந்திரன் |
| 247 |
அம்புலி காட்டல் |
குழந்தைக்குச் சந்திரனைக் காட்டி மகிழ்தல் |
| 248 |
அம் புளி |
இனிய புளிப்பு |
| 249 |
அமபு விடுதல் |
அம்பைச் செலுத்துதல் |
| 250 |
அம்ம |
அசைநிலை, உரையசை, கேட் பித்தற் பொருளில் வரும் ஓர் இடைச்சொல் |
| 251 |
அம் மா |
அழகிய மாமை நிறம் |
| 252 |
அமயம் |
பொழுது |
| 253 |
அமர் |
விருப்பம், பொருத்தம், போர் |
| 254 |
அமர்க் கண் |
அமர்த்த கண், போரைச் செய்யும் கண், முகத்திற்குப் பொருந்தின கண் |
| 255 |
அமர்த்த |
மாறுபட்ட, பொருந்தின |
| 256 |
அமர்தல் |
மேவுதல், பொருந்துதல், மனம் பொருந்துதல் |
| 257 |
அமர் துணை |
நெஞ்சிற்கு அமர்ந்த பரத்தையர் |
| 258 |
அமர்ந்து ஆடி |
பொருந்தி உண்டு |
| 259 |
அமரர் |
தேவர் |
| 260 |
அமரா |
பொருந்தாத |
| 261 |
அமரிய |
மாறுபட்ட |
| 262 |
அமரியள் |
விரும்பியவள் |
| 263 |
அமல்தல், அமலுதல் |
செறிதல், நெருங்குதல், நிறைதல் |
| 264 |
அமலை |
சோற்றுருண்டை, பெருஞ் சோற்றுத் திரளை, கட்டி, நெருக்கம், ஒலி |
| 265 |
அமளி |
படுக்கை |
| 266 |
அமன்ற |
நெருங்கின |
| 267 |
அமன்றன்று |
நெருங்கிற்று |
| 268 |
அமிழ்தம் |
அமுதம், தேவர்களின் உணவு, வாயில் ஊறும் இனிய நீர் |
| 269 |
அமிழ்து |
நீர் |
| 270 |
அமை |
மூங்கில் |
| 271 |
அமைகல்லேன் |
அமைந்திரேன் |
| 272 |
அமைகுதல் |
ஆற்றியிருத்தல் |
| 273 |
அமைத்தல் |
சமைத்தல் |
| 274 |
அமைதல் |
அடங்குதல், நெருங்குதல், தாங்குதல், ஆற்றியிருத்தல், தவிர்தல், முடிதல், பொருந்துதல், வேட்கை தணிதல் |
| 275 |
அமைதி |
பொருந்துகை, தாழ்வு |
| 276 |
அமைந்தன்று |
அமைந்தது, பொருந்திற்று |
| 277 |
அமைந்தனர் |
உடன் கிடந்தனர் |
| 278 |
அமையம் |
காலம் |
| 279 |
அமையலென், அமையலேன் |
உயிர் வாழேன் |
| 280 |
அமையாமை |
ஆற்றியிராமை, வேட்கை தணியாமை |
| 281 |
அமைவரல் |
அமைந்து வருதல் |
| 282 |
அயம் |
நீர், பள்ளம், நீர்நிலை |
| 283 |
அயர்கம் |
செய்வோம் |
| 284 |
அயர்தல் |
விளையாடுதல், செலுத்துதல், அணிதல், ஆடுதல், செய்தல், நடத்தல், நிகழ்த்துதல், மறத்தல், விரும்புதல் |
| 285 |
அயர்ந்தீகம் |
செய்வேம் |
| 286 |
அயர்ப்பிய |
கையறவு எய்துவிக்க |
| 287 |
அயர்மதி |
செலுத்துவாயாக |
| 288 |
அயர்மார் |
செய்தற்கு |
| 289 |
அயர்வு |
மறத்தல், மனக் கவற்சி |
| 290 |
அயல் |
பக்கம் |
| 291 |
அயலதை |
அயலது |
| 292 |
அயலிலாட்டி |
அயல் மனைக் கிழத்தி |
| 293 |
அயறு |
புண் வழலை, புண்ணிலிருந்து வடியும் சீழ் |
| 294 |
அயா |
இளைப்பு |
| 295 |
அயாம் |
வருந்தும் |
| 296 |
அயாவுயிர்த்தல் |
நெட்டுயிர்ப்புக் கொள்ளுதல், பெருமூச்செறிதல் |
| 297 |
அயிர் |
நுண்மை, நுண் மணல், கண்ட சருக்கரை |
| 298 |
அயிர்த்தல் |
ஐயமுறுதல் |
| 299 |
அயிராது |
ஐயுறாமல் |
| 300 |
அயிரை |
நொய்ம்மீன், சேர நாட்டுள்ளதொரு மலை |
| 301 |
அயில் |
கூர்மை, வேல் |
| 302 |
அயில் வாய் |
வண்டி உருளையின் விளிம்பு |
| 303 |
அயிலுதல் உண்ணுதல் |
|
| 304 |
அயிலை |
ஒரு மீன் |
| 305 |
அயின்றற்றா |
உண்டாற் போல |
| 306 |
அயினி |
உணவு |
| 307 |
அயினிய |
உணவு மிக்க |
| 308 |
அர |
அரா, பாம்பு |
| 309 |
அரக்கல் |
அமுக்கித் தேய்த்தல் |
| 310 |
அரக்கம் |
அவலரக்கு, அரக்கில் ஒருவகை |
| 311 |
அரக்கு |
எள்ளின் காயில் உள்ள குற்றம், சாதிலிங்கம் |
| 312 |
அரக்குதல் |
துடைத்தல் |
| 313 |
அரங்கம் |
விழாக் களம் |
| 314 |
அரங்கு |
நாடகம் ஆடும் இடம் |
| 315 |
அரசு |
அரசன், அரசாட்சி |
| 316 |
அரண் |
பாதுகாப்பு, மதில் |
| 317 |
அரணம் |
செருப்பு, காவல், பாதுகாப் பான இடம் |
| 318 |
அரந்தை |
மனக் கவற்சி, துன்பம் |
| 319 |
அரம் |
வாளரம் |
| 320 |
அரம்பு |
குறும்பர்கள், குறும்பு |
| 321 |
அரமியம் |
நிலாமுற்றம் |
| 322 |
அரலை |
கொடும்பு, குற்றம், விதை, மரல் விதை, அரளி, அரலை என்னும் மலை |
| 323 |
அரவணை |
பாம்பணை |
| 324 |
அரவம் |
ஒலி, ஆரவாரம், பாம்பு |
| 325 |
அர வாய் |
அரத்தைப் போன்ற வாய் |
| 326 |
அரவிந்தம் |
தாமரை |
| 327 |
அரவு |
பாம்பு |
| 328 |
அரவுக் கிளர்ந்தன்ன |
பாம்பு படம் எடுத்தாற் போன்ற |
| 329 |
அரற்றல் |
ஒலித்தல் |
| 330 |
அரற்று |
அழுகையன்றிப் பலவுஞ் சொல்லித் தன் குறை கூறுதல், உறக்கத்தின்கண் வரும் வாய்ச் சொலவு, கனவு |
| 331 |
அரற்றுதல் |
ஆரவாரித்தல், ஒலித்தல், கதறுதல் |
| 332 |
அரா |
பாம்பு |
| 333 |
அரி |
அரிகை, கதிர் அறுக்கும் பருவம், அரிக்கை, இடைவிடுகை, வண்டு, பருக்கைக் கல், மென்மை, கண்வரி, பொன், நிறம், அழகு, ஒருவகைப்பறை, கலம், நறவு, உள்ளிடு மணி,செவ்வரி கருவரி, பகை, சூரியன்,தவளை, மாமிசம், அரிசி |
| 334 |
அரி ஆர் ஞெகிழம் |
உள்ளிடு மணி அமைந்த சிலம்பு |
| 335 |
அரிக் குரல் |
அரித்தெழுகின்ற ஓசை, ஒலி நிரம்பாத ஓசை |
| 336 |
அரிக் குழை |
அழகையுடைய மகரக் குழை |
| 337 |
அரிகால் |
அரிந்த தாள் |
| 338 |
அரிகோல் |
அரித்தெழும் ஓசையை யுடைய கோல் |
| 339 |
அரிசில் |
சோணாட்டுள்ள ஒரு நதி |
| 340 |
அரி சில் நீர் |
அரித்து ஓடும் சின்னீர் |
| 341 |
அரிஞர் |
அரிபவர்கள் |
| 342 |
அரி ஞியிறு |
அழகிய வண்டு |
| 343 |
அரித்தல் |
தினவெடுத்தல், பூச்சி தின்னுதல், இடை விடுதல், வடித்தல் |
| 344 |
அரிதின் |
அரிதாயிருத்தலால் |
| 345 |
அரிநர் |
அறுப்பார் |
| 346 |
அரி நரை |
மெல்லிய நரை |
| 347 |
அரி நிழல் |
அறல் பட்ட நிழல் |
| 348 |
அரிப்ப அரி வார |
அரித்து விழுகின்ற நீர் ஒழுக அரிப்பறை அரித்தெழும் ஓசையை யுடைய பறை |
| 349 |
அரிப்பன ஒலிப்ப |
விட்டுவிட்டு ஒலித்திட |
| 350 |
அரிப் பனி |
இடைவிட்ட துளி |
| 351 |
அரி பொலி கிண்கிணி |
உள்ளிடு மணியால் பொலிந்த சதங்கை |
| 352 |
அரி மணல் |
அறல் பட்ட மணல் |
| 353 |
அரி மதர் உண்கண் |
செவ்வரியினையும் செருக்கினையும் கொண்ட மை உண்டகண்கள் |
| 354 |
அரி மயிர் |
மிகவும் மெல்லிய மயிர் |
| 355 |
அரி மலர் |
விளங்கும் மலர்கள் |
| 356 |
அரி மா |
சிங்கமாகிய மா |
| 357 |
அரிமான் |
அரிமா |
| 358 |
அரி முன்னகை |
அழகினையுடைய முன்கை, ஐதாகிய மயிரினை யுடைய முன்கை, மெல்லிய முன்கை |
| 359 |
அரியல் |
கள் |
| 360 |
அரில் |
ஒன்றோடொன்று பிணங்குதல்,பிணக்கம், சிறு தூறு, சிறு கோடு, தூறு பட்ட காடு |
| 361 |
அரில் வலை |
முறுக்குண்டு கிடந்த வலை |
| 362 |
அரிவார் |
அரிபவர்கள் |
| 363 |
அரிவை |
பெண் |
| 364 |
அரீஇ |
அறுத்து |
| 365 |
அருக்குதல் |
அருமை பாராட்டுதல், அருமை செய்தல் |
| 366 |
அருகுதல் |
அரிதாதல், கெடுதல், குறைதல் |
| 367 |
அருகுவித்தல் |
அரியராம்படி பண்ணுதல் |
| 368 |
அருங் கங்குல் |
வருதற்கு அரிய இரவு |
| 369 |
அருங் கடி |
அரிய கலியாணம், அரிய காவல் |
| 370 |
அருங் கல வெறுக்கை |
பெறுதற்கு அரிய ஆபரணமும் செல்வமும் |
| 371 |
அருங்குரைய |
அரிய |
| 372 |
அருச்சிப்போர் |
அருச்சனை செய்வோர் |
| 373 |
அருஞ் சமத்தான் |
பெரிய போரை உடையவன் |
| 374 |
அருஞ் சுனை |
நிலைத்தல் இல்லாத சுனை |
| 375 |
அருத்தல் |
ஊட்டுதல் |
| 376 |
அருந்ததி அனைய கற்பு |
அருந்ததியை ஒத்த கற்பு |
| 377 |
அருந்தவம் |
மிகவும் பெருமை வாய்ந்த தவம் |
| 378 |
அருந் தானை |
வெல்லுதற்கரிய படை |
| 379 |
அருந்தியோர் |
நுகர்ந்தவர் |
| 380 |
அருந்து |
ஆர்ந்து |
| 381 |
அருந்துதல் |
தன்னிடத்துக் கொள்ளுதல், உண்ணுதல், அனுபவித்தல் |
| 382 |
அருந்துபு |
ஆர்ந்து |
| 383 |
அருந்தேமாந்த |
உண்ண ஆசைப்பட்ட |
| 384 |
அரு நோய் |
மாற்றமுடியாத நோய் |
| 385 |
அருப்பம் |
அருமை, அரிய, அரண், திண்மை |
| 386 |
அருப்பமுடைத்து |
அரணின் தன்மை யுடைத்து |
| 387 |
அருப்பு |
அருப்பம், காட்டரண் |
| 388 |
அரும் படர் அவல நோய் |
அரிய நினைவையுடைய அவலத்தைச் செய்யும் காமநோய், பொறுத்தற்கு அரிய வருத்தத்தை யுடைய காமநோய் |
| 389 |
அரும் படர் எவ்வம் |
பொறுத்தற்கு அரிய நினைவால் உண்டாகும் துன்பம் |
| 390 |
அரும் புண் |
விழுப்புண் |
| 391 |
அரும் புணர்வினன் |
அருமையாக நம்மை வந்தடைபவன் |
| 392 |
அரும்பு முதிர் அவிழ் இணர் |
அரும்பு முதிர்ந்து மலரும் பூங்கொத்து |
| 393 |
அரும் பெறல் உயிர் |
பெறுதற்கு அரிய உயிர் |
| 394 |
அரும் பெறல் உலகம் |
பெறுதற்கரிய உலகம், வீரர் எய்தும் துறக்கம் |
| 395 |
அரும் பெறற் புதல்வன் |
பெறுதற்கு அரிய புதல்வன் |
| 396 |
அரு வரை அடுக்கம் |
ஏறுதற்கு அரிய உச்சி மலைகளையுடைய பக்கமலை |
| 397 |
அரு வரைத் தீம் தேன் |
பெரிய மலையிலே உள்ள இனிய தேன் இறால் |
| 398 |
அருவி |
மலையின் வீழ்புனல், நீர், உருவமில்லாதது |
| 399 |
அரு விடர் |
அரிய குகை, அரிய மலையின் பிளப்பு |
| 400 |
அருவித்து |
அருவியை யுடைத்து |
| 401 |
அருவியோடு அணி கொண்ட மலை |
அருவியாலே அழகு கொண்ட மலை |
| 402 |
அருவெஞ்சுரம் |
போதற்கு அரிய சுரம் |
| 403 |
அருள் |
அருளுதல், ஒன்றின் துயர் கண்டால் காரணமின்றித் தோன்றும் இரக்கம் |
| 404 |
அருளன்மாறு |
அருளுதலால் |
| 405 |
அருளி |
அருள் பண்ணி |
| 406 |
அருளின் மாறு |
மறம் |
| 407 |
அருளீயல் |
அருளுதல் |
| 408 |
அருளுகம் |
அருளுவோம் |
| 409 |
அரை |
இடம், வயிறு, தண்டு அடிமரம், தாழ் வரை, பக்கம், இடை |
| 410 |
அரை இருள் |
அர்த்த ராத்திரி, நடு இரவு |
| 411 |
அரைசு |
அரசன் |
| 412 |
அரை நாள் |
நடு ராத்திரி |
| 413 |
அரை மண் |
அரைத்த மண் |
| 414 |
அல் |
அந்திவேளை |
| 415 |
அல்கல் |
தங்குகை, இரவு, தினம் |
| 416 |
அல்கலும் |
நாடோறும் |
| 417 |
அல்கினை |
தங்கினாய் |
| 418 |
அல்கு |
இராப்பொழுது |
| 419 |
அல்குதல் |
சேமித்துவைத்தல், இருத்தல், கிடத்தல், தங்குதல், சுருங்கல் |
| 420 |
அல்குநர் |
குடியிருப்பவர், குடிகள் |
| 421 |
அல்குபதம், அல்குமிசைவு |
இட்டு வைத்து உண்ணும் உணவு |
| 422 |
அல்குல் |
பக்கம், மருங்குல், இடை |
| 423 |
அல்ல |
அல்லாதவை, அறம் அல்லாதவை |
| 424 |
அல்லங்காடி |
அந்திக் கடை |
| 425 |
அல்லது |
அல்லாமல், அன்றி, ஒழிய, நீதியல்லது, தீவினை |
| 426 |
அல்லதை |
அல்லாமல், அல்லது, அன்றி |
| 427 |
அல்லல் |
வருத்தம், வருத்தல் |
| 428 |
அல்லல் அரும் படர் |
நீங்குதற்கு அரிய அல்லலாகிய துன்பம் |
| 429 |
அல்லல் நோய் |
வருத்தத்தையுடைய காமநோய் |
| 430 |
அல்லற்படுதல் |
அல்லலிலே அழுந்துதல், வருத்தமுறுதல் |
| 431 |
அல்லா |
அல்லாந்து, வருத்தம் |
| 432 |
அல்லாக்கால் |
அல்லாத இடத்து |
| 433 |
அல்லாகியர் |
அல்லவாக |
| 434 |
அல்லாத்தல் |
அலமருதல், மன மயங்குதல், துன்பமுறுதல், மகிழ்தல் |
| 435 |
அல்லாந்தார் |
அலமந்தவர், வருத்த முற்றவர் |
| 436 |
அல்லாந்தான் |
அலமந்தான், வருந்தினான் |
| 437 |
அல்லாந்து |
வருந்தி |
| 438 |
அல்லால் |
அல்லது, அன்றி |
| 439 |
அல்லி |
அகவிதழ், கேசரம், தாமரைப் பூவில் கொட்டையைச் சூழ்ந்த உறுப்பு |
| 440 |
அல்லி உணவு |
அல்லியரிசியாலான உணவு |
| 441 |
அல்லிப் பாவை |
அல்லியக் கூத்தில் ஆட்டும் பிரதிமை, அல்லியம் என்னும் கூத்தை ஆடும் பாவை |
| 442 |
அல்லை |
அல்லாய் |
| 443 |
அல |
கலப்பையை உடையோய் |
| 444 |
அலகு |
பலகறை, சோழி, மூக்கு |
| 445 |
அலங்கல் |
அசைதல், தார் |
| 446 |
அலங்காந்தள் |
அலங்கு காந்தள், அசைந்து விளங்கும் காந்தள் |
| 447 |
அலங்குதல் |
அசைதல், விளங்குதல் |
| 448 |
அலத்தல் |
அலமருதல், துன்புறுதல், மிடியுறுதல், வறுமைப்படுதல் |
| 449 |
அலத்தற் காலை |
வறுமைக் காலம் |
| 450 |
அலந்த |
வாடிய |
| 451 |
அலந்தலை |
துன்பம், அலந்த தலை, விரிந்த தலை |
| 452 |
அலந்தவர் |
அலந்த மகளிர், மிடியுற்றவர் |
| 453 |
அலந்தனென் |
துன்புற்றேன் |
| 454 |
அலந்தாள் |
அலமந்தாள் |
| 455 |
அலந்து |
அலவுற்று, வருந்தி |
| 456 |
அலந்தோன் |
துன்பமடைந்தவன் |
| 457 |
அலப்பிய |
அலைத்த |
| 458 |
அலப்புதல் |
அலைத்தல் |
| 459 |
அலம்வருதல் |
சுழலுதல் |
| 460 |
அலமந்து |
திரிந்து |
| 461 |
அலமரல் |
சுழற்சி, சுழலுதல், சுழலாதே |
| 462 |
அலமரல் உண்கண்ணார் |
(தம் வயத்தராதற் குரியாரைத் தேடிச்) சுழல்கின்ற மையுண்ட கண்ணினையுடைய பரத்தையர் |
| 463 |
அலமரல் நோய் |
சுழலுதலுடைய காம நோய் |
| 464 |
அலமருதல் |
அசைதல், சுழலுதல் சுழன்று திரிதல், மனம் தடுமாறுதல் |
| 465 |
அலமலக்குறுதல் |
மிக்க கலக்கத்தை யடைதல் |
| 466 |
அலர் |
பழிமொழி, மலர் |
| 467 |
அலர் தருதல் |
பரத்தல் |
| 468 |
அலர் தல் |
பெருத்தல், சுரத்தல், அடிக் கொள்ளுதல், அடி பரத்தல், பரத்தல், மலர்தல், விம்முதல் |
| 469 |
அலர்வீத்த ஆம்பல் |
அலர்ந்த ஆம்பல் |
| 470 |
அலரி |
ஞாயிறு பூ |
| 471 |
அலரெடுத்தல் |
அலரை மிகக் கூறுதல் |
| 472 |
அலவல் |
அலமருதல் |
| 473 |
அலவலை |
மனச் சஞ்சலம் |
| 474 |
அலவன் |
நண்டு |
| 475 |
அலவுறல் |
வருத்தமுறல் |
| 476 |
அலறல் |
அழுதல் |
| 477 |
அலறுதல் |
விரிதல், கூப்பிடுதல் |
| 478 |
அலன் |
பலராமன் |
| 479 |
அலைத்தக்கால் |
அலைக்க |
| 480 |
அலைத்தருதல் |
அலைத்தலைச் செய்தல், வருத்தத்தைத் தருதல் |
| 481 |
அலைத்தல் |
வருத்துதல், அடித்தல், உருட்டுதல் |
| 482 |
அலைத்தீவாய் |
அலைக்கக் கடவாய் |
| 483 |
அலைப்ப |
வருத்த |
| 484 |
அலைவாய் |
திருச்செந்தூர் |
| 485 |
அவ் |
அவை |
| 486 |
அவ் இதழ் |
அழகிய பூவிதழ் |
| 487 |
அவ் வயிறு |
அழகிய வயிறு |
| 488 |
அவ் வரி |
அழகிய சுணங்கு |
| 489 |
அவ் வழி |
அவ் இடத்து |
| 490 |
அவ் வளை |
அழகிய வளை |
| 491 |
அவ் வாய் |
அழகிய இடம், அழகிய வாய் |
| 492 |
அவ் விசும்பு |
அழகிய விசும்பு |
| 493 |
அவ்வே |
அவையே |
| 494 |
அவரை |
கொடிவகை, மொச்சை |
| 495 |
அவல் |
நெற் பொரி யிடியல், பள்ளம், விளைநிலம் |
| 496 |
அவலநோய் |
அவலத்தைச் செய்யுங் காமநோய், வருத்தத்தையுடைய காம நோய் |
| 497 |
அவலம் |
கேடு, துன்பம், தரித்திரம், குற்றம், தீது, வருத்தம், இன்னாமை |
| 498 |
அவலம்படுதல் |
அவலம் பிறத்தல் |
| 499 |
அவவு |
அவா |
| 500 |
அவா |
வேட்கை |
| 501 |
அவாம் |
அவாவும் |
| 502 |
அவாவுறுதல் |
பெற விரும்புதல் |
| 503 |
அவித்தல் |
அணைத்தல், கெடுத்தல் |
| 504 |
அவிதல் |
அடங்குதல், துயிலல், பணிதல் |
| 505 |
அவிநயம் |
அபிநயம், மனக் கருத்தைக் குறிப்பாய் விளக்கும் அங்கச் செய்கை |
| 506 |
அவியன் |
ஓர் உபகாரி |
| 507 |
அவியுணவினோர் |
தேவர் |
| 508 |
அவிர் |
பிரகாசம், விளக்கம் |
| 509 |
அவிர்தல் |
விளங்குதல் |
| 510 |
அவிர்வருதல் |
விளங்குதல் வருதல் |
| 511 |
அவிழ் |
சோறு |
| 512 |
அவிழ்தல் |
மலர்தல், தோற்றுவித்தல், நெகிழ்தல், விரிதல் |
| 513 |
அவிழ்பு |
அவிழ்ந்து |
| 514 |
அவிழகம் |
மலர்ந்த பூ |
| 515 |
அவுணர் |
அசுரர் |
| 516 |
அவைத்தல் |
குற்றுதல் |
| 517 |
அவைப்பு |
குற்றுதல் |
| 518 |
அவையம் |
நியாயம் உரைக்கும் சபை யோர் |
| 519 |
அவையல் |
குற்றலரிசி |
| 520 |
அழல் |
அழுதல் தீக் கொழுந்து, காமத் தீ, நெருப்பு, விளக்கு, வெம்மை தழல் செவ்வாய் |
| 521 |
அழல்தல், அழலுதல் |
எரிதல், வெம்மை, செய்தல் |
| 522 |
அழற்குட்டம் |
கார்த்திகை |
| 523 |
அழற்கொடி |
ஒள்ளிய கொடி |
| 524 |
அழற் புறந்தரல் |
தழலாலே நிறம் உண்டாகப்படுதல், நெருப்பாற் பண்ணப்படுதல் |
| 525 |
அழாஅல் |
அழுகை |
| 526 |
அழாஅற்கோ |
அழாமல் இருப்பேனோ |
| 527 |
அழி |
வருத்தம், வைக்கோல், மிகுதி, இரக்கம் |
| 528 |
அழித்தருதல் |
அழித்தல் |
| 529 |
அழித்தல் |
நீக்குதல், குலைத்தல், கெடுதல், மாற்றுதல், முறித்தல் |
| 530 |
அழித்து |
மீட்டும் |
| 531 |
அழிதக |
நெஞ்சழியும் படியாக, வருத்தம் தரும்படியாக |
| 532 |
அழிதல் |
இரங்குதல், வருந்துதல், குலைதல், கெடுதல், நீங்குதல், நெஞ்சழிதல் |
| 533 |
அழி துளி |
மிக்க துளி |
| 534 |
அழிப்படுதல் |
நெற்கதிரைக் கடா விட்டு உழக்குதல் |
| 535 |
அழிபடர் |
நெஞ்சழிகின்ற நினைவு, மிக்க நினைவு |
| 536 |
அழி பூங்கானல் |
மிக்க பூக்களையுடைய சோலை |
| 537 |
அழிபெயல் |
மிக்க மழை |
| 538 |
அழிய |
மிகக் குதிக்கையினால், மிகுதியாக விழுதலால் |
| 539 |
அழியல் |
சஞ்சலம் |
| 540 |
அழியாதி |
நெஞ்சழியாதே |
| 541 |
அழியும் நோய் |
நெஞ்சழியும் நோய் |
| 542 |
அழிவருதல் |
இரக்கம் வருதல் |
| 543 |
அழிவல் |
நெஞ்சழிவேன் |
| 544 |
அழிவு |
அழிதல், கெடுதல், நெஞ்சழிவு, வருத்தம் |
| 545 |
அழிவுறல் |
கெடல், வருத்த முறுதல் |
| 546 |
அழுக்கு |
மாசு |
| 547 |
அழுகல் |
அசுத்தம் |
| 548 |
அழுங்க |
கெடும்படியாக |
| 549 |
அழுங்கல் |
ஆரவாரம், அழிதல், இரங்குதல் |
| 550 |
அழுங்குதல் |
தவிர்தல், வருந்துதல், உருவழிதல், ஒலித்தல் |
| 551 |
அழுத்திய |
அழுத்தின |
| 552 |
அழுத்துதல் |
அழுந்தச் செய்தல், எய்தல் |
| 553 |
அழுந்த |
இறுக |
| 554 |
அழுந்தல் |
இறுகுதல், வடுப்படல் |
| 555 |
அழுந்துதல் |
மூழ்குதல் |
| 556 |
அழுந்து பட்டிருத்தல் |
நெடுங்காலம் அடிப்பட்டிருத்தல் |
| 557 |
அழுந்துபடல் |
மூடப்படுதல் |
| 558 |
அழுந்துபடுதல் |
தொன்றுதொட்டு வருதல் |
| 559 |
அழும்பில் |
மானவிறல் வேள் என்னும் குறு நிலமன்னனுடைய ஊர் |
| 560 |
அழுவம் |
ஆழம், குழி, கடற் பரப்பு, காடு, போர்க்களம் |
| 561 |
அள் |
செறிவு, கூர்மை |
| 562 |
அள் இலை |
செறிந்த இலை |
| 563 |
அள்ளல் |
சேற்றின் குழம்பு |
| 564 |
அளக்கர்த் திணை |
கடலாற் சூழப்பட்ட பூமி |
| 565 |
அளகு |
கோழிப் பெடை |
| 566 |
அளத்தல் |
கருதுதல், வரையறுத்தல் |
| 567 |
அளவல் |
அளவளாவுதல் |
| 568 |
அளவு |
எல்லை |
| 569 |
அளவுபு |
கலந்து |
| 570 |
அளவுறல் |
கலத்தல் |
| 571 |
அளவை |
தன்மை, அளவில், எல்லை, மாத்திரை |
| 572 |
அளறு |
நீர், சேறு, மணச் சாந்து |
| 573 |
அளி |
குளிர்ச்சி, அருள், அளித்தல், முயக்கம், வரைந்துகொள் |
| 574 |
அளி இன்மை |
அருள்இன்றி வருத்துதல் |
| 575 |
அளிக்கும் |
அருள் பண்ணாநிற்கும், உயிரை அளியாநிற்கும் |
| 576 |
அளிக்கை |
அளித்தல் |
| 577 |
அளித்தக்கால் |
அளிக்க, கூட |
| 578 |
அளித்தக்காற் போன்று |
அளித்த பொழுது போன்று |
| 579 |
அளித்தல் |
அருள் செய்தல், கொடுத்தல், தலையளி செய்தல் |
| 580 |
அளித்து |
அளிக்குந் தன்மை யுடையது, இரங்குதற்கு உரியது |
| 581 |
அளிதல் |
ஞெகிழ்தல் |
| 582 |
அளிது |
அளிசெய்யத் தக்கது, இரங்கத் தக்கது |
| 583 |
அளிமதி |
அளிப்பாய் |
| 584 |
அளிய |
அளிக்கத்தக்க |
| 585 |
அளியர் |
அளிக்கத்தக்கார், இரங்கத் தக்கவர் |
| 586 |
அளியள் |
அளிக்குந் தன்மையள் |
| 587 |
அளியன் |
அளிக்கத் தக்கான், காக்கப்படத் தக்கவன் |
| 588 |
அளியை |
இரங்குவதற்கு உரியை |
| 589 |
அளை |
எறும்பின் வளை, நண்டின் வளை, முழை, குகை, மோர் |
| 590 |
அளைஇ |
கலந்து |
| 591 |
அளைஇய |
கலந்த |
| 592 |
அளைதல் |
தீண்டுதல், கலத்தல் |
| 593 |
அளை மாய் கல் |
குகையில் மறைந்துள்ள மணிகள் |
| 594 |
அற்கம் |
தங்குதல் |
| 595 |
அற்சிரம் |
முன்பனிக்காலம் |
| 596 |
அற்றக்கால் |
அற்ற இடத்து |
| 597 |
அற்றம் |
ஆளறுதி, குற்றஞ் செய்தல், துன்பம் |
| 598 |
அற்று |
அத்தன்மைத்து, ஒத்தது |
| 599 |
அற்றை |
அந் நாள், அந் நாட்கு உரிய |
| 600 |
அற |
தெளிவாக, நீங்கும்படி, போம்படி |
| 601 |
அறத்துறை அம்பி |
தரும ஓடம் |
| 602 |
அறம் |
அறக் கடவுள், அறநூல், நீதி நூல் |
| 603 |
அறல் |
அறுத்துச் செல்லும் நீர், அற்று வருதலையுடைய நீர்,அரித்தோடுகை, அறுதலையுடைத்தா யிருத்தல், அறுதியையுடையது, அறுதியை யுடைய நீர், அறுதியை யுடைய மணல் நீர், நீரறுதல், கருமணல் |
| 604 |
அறல் சாஅய் பொழுது |
நீரற்று ஓடுதல் சுருங்கின இளவேனிற் காலம் |
| 605 |
அறல் வார்தல் |
அறலுண்டாம்படி ஒழுகல், அறுதலையுடைத்தாய் ஒழுகல்,அறுதியுடைத்தாய் ஒழுகுதல் |
| 606 |
அறவர் |
அறம் புரிவோர் |
| 607 |
அறவன் |
பிராமணன் |
| 608 |
அறவிலை வணிகன் |
பொருளை விலையாகக் கொடுத்து அறங் கொள்வோன் |
| 609 |
அறவு |
ஒழிகை, அறுதல், தொலைதல் |
| 610 |
அறவை |
தரும நெறி |
| 611 |
அறவோன் |
மருத்துவன், அறம் செய் வோன் |
| 612 |
அறற் குழல் |
தாள அறுதியையுடைய வேய்ங் குழல் |
| 613 |
அறன் |
வேள்வி முதல்வன், கண்ணோட்டம், அறக் கடவுள், அறஞ் செய்தல், அற நூல், உலக ஒழுக்கம் |
| 614 |
அறன் அறிதல் |
அறத்தை அறிந்து போதுதல், அறம் நிகழ்த்தும் முறை மையை அறிதல், அறநெறி அறிதல் |
| 615 |
அறன் இல் பால் |
தீவினை |
| 616 |
அறன் கடை |
பாவ நெறி |
| 617 |
அறனிலாளன் |
தருமச் செயல் இல்லாதவன் |
| 618 |
அறாஅ |
இடையறாத |
| 619 |
அறாஅலியர் |
ஒழியா திருப்பதாக |
| 620 |
அறாஅலின்று |
நீங்குதலின்றாய் |
| 621 |
அறிகல்லாய் |
அறியாய் |
| 622 |
அறிகு |
அறிவேன் |
| 623 |
அறிதி |
அறியக் கடவை, அறிவை |
| 624 |
அறிதிர் |
அறியமாட்டீர் (இகழ்ச்சிக் குறிப்பு) அறிவீர் |
| 625 |
அறிந்தீயாது |
அறியாமல் |
| 626 |
அறிநன் |
அறிபவன் |
| 627 |
அறிநை |
அறிவாய் |
| 628 |
அறியா |
உணராமல் |
| 629 |
அறியாமை |
அறியாமல் ஒழுகுதல் |
| 630 |
அறியினும் |
அறிந்திருந்தேனாயினும் |
| 631 |
அறியுநம் |
அறிவேம் |
| 632 |
அறியுநர் |
அறிவார் |
| 633 |
அறியுமோன் |
அறியுமவன் |
| 634 |
அறிவல் |
அறிவேன் |
| 635 |
அறிவன் |
கணி |
| 636 |
அறிவாரா |
அறியவாரா |
| 637 |
அறிவாராமை |
அறிய ஒண்ணாமை |
| 638 |
அறிவு மடம்படுதல் |
அறிந்தும் அறியான் போன்றிருத்தல் |
| 639 |
அறிவுறால் |
அறிவுறுத்துகை |
| 640 |
அறிவுறீஇ |
அறிவுறுத்தி |
| 641 |
அறிவுறுத்தல் |
கூறுதல் |
| 642 |
அறீஇ |
அறிந்து |
| 643 |
அறீஇய |
அறிவித்தற்கு |
| 644 |
அறீஇயினென் |
அறிவித்தேன் |
| 645 |
அறுகாற் பறவை |
வண்டு |
| 646 |
அறுகு |
சிங்கம் |
| 647 |
அறுகுளம் |
வற்றிய குளம் |
| 648 |
அறுகை |
அறுகம் புல்; ஓர் அரசன் |
| 649 |
அறுகோட்டு யானை |
அறுத்துத் திருத்தியகோட்டையுடைய யானை, சிங்கத்தை வென்ற யானை |
| 650 |
அறுத்தல் |
கெடுத்தல் |
| 651 |
அறுதல் |
நீங்குதல், இல்லாமற் போதல் |
| 652 |
அறுதி |
நிச்சயம் |
| 653 |
அறு தொழில் |
அந்தணர்க்குரிய ஆறு தொழில் |
| 654 |
அறுப்பன |
போக்குவன |
| 655 |
அறும் |
நீங்கும் |
| 656 |
அறுமார் |
நீக்கவேண்டி |
| 657 |
அறுமீன் |
கார்த்திகை நாள், உரோகிணி |
| 658 |
அறுவை |
துகில், ஆடை |
| 659 |
அறுவை வாணிகன் |
ஆடை வியாபாரி |
| 660 |
அறை |
பாத்தி, பாறை, வஞ்சனை, சொல்லுதல். அம்மி, பாசறை, வெட்டு கை |
| 661 |
அறை கொல்லுதல் |
சொல்லுதலைக் கெடுத்தல், வஞ்சனையைக் கெடுத்தல் |
| 662 |
அறைதல் |
சாற்றுதல், தட்டுதல், அடித்தல் |
| 663 |
அறைந்தறைந்து |
பலகாலும் சாற்றிச் சாற்றி |
| 664 |
அறைநன் |
அறுப்பவன் |
| 665 |
அறைபோகும் நெஞ்சு |
கீழ் அற்றுச் செல்லும் நெஞ்சு |
| 666 |
அறைபோதல் |
வஞ்சித்துச் செல்லல் |
| 667 |
அறையுநர் |
சொல்லுவார் |
| 668 |
அறைவனர் |
சாற்றுவோர் |
| 669 |
அறைவாய் |
கணவாய், அற்ற வாய், மலைநெறி |
| 670 |
அன்பிலாளன் |
அன்பு இல்லாதவன் |
| 671 |
அன்பிலி |
அன்பில்லாதவன் |
| 672 |
அன்பிலை |
அன்புடையை அல்லை |
| 673 |
அன்பு |
தன்னால் புரக்கப்படுவார் மேல் உளதாகிய காதல் |
| 674 |
அன்மை |
அல்லாமை |
| 675 |
அன்றி |
அல்லவாக, அன்றாக |
| 676 |
அன்று |
அல்ல |
| 677 |
அன்றே |
அல்லவே |
| 678 |
அன்ன |
போல, அத்தன்மையை, அவை போல்வன |
| 679 |
அன்னச் சேவல் |
ஆண் அன்னம் |
| 680 |
அன்னது |
அத்தன்மையது |
| 681 |
அன்னம் |
அன்னப் பறவை |
| 682 |
அன்னர் |
அத்தன்மையர் |
| 683 |
அன்னவர் |
அத்தன்மையர் |
| 684 |
அன்னன் |
ஒத்தவன் |
| 685 |
அன்னாய் |
அன்னையே |
| 686 |
அன்னார் |
அத்தன்மையார், ஒப்பவர் |
| 687 |
அன்னான் |
அத்தன்மையை உடையவன் |
| 688 |
அன்னேன் |
அத்தன்மையை உடையேன் |
| 689 |
அன்னை |
அத்தன்மையை, செவிலித் தாய், நற்றாய் |
| 690 |
அன்னையோ |
அத்தன்மையையோ |
| 691 |
அன்னோ |
ஐயோ, ஓர் இரக்கக் குறிப்பு |
| 692 |
அனந்தர் (அனந்தல்) |
கள்ளின் மயக்கம் |
| 693 |
அனந்தல் |
மயக்கம், மதம், மந்தவொலி |
| 694 |
அனம் |
அன்னம், அன்னப் பறவை |
| 695 |
அனிச்சம் |
அனிச்சப் பூ |
| 696 |
அனை |
அன்னை, தலைமகள், அத்துணை அளவு |
| 697 |
அனைத்து |
அத்தன்மைத்து, அவ்வளவு |
| 698 |
அனைய |
ஒத்த |
| 699 |
அனையம் |
போன்றுள்ளேம் |
| 700 |
அனையரும் பண்பு |
அத்தன்மைத்தாகிய அரிய நற்குணம் |
| 701 |
அனையவை |
அத்தன்மையவை, அவை |
| 702 |
அனையள் |
அத்தன்மையை யுடையவள் |
| 703 |
அனையன |
அத்தன்மையன |
| 704 |
அனையை |
அத்தன்மையையுடையாய் |