| 6990 |
பஃறி |
ஓடம், படகு |
| 6991 |
பஃறுளி |
குமரி யாற்றின் தெற்கே இருந்து, கடலாற் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஓர் யாறு |
| 6992 |
பக்கம் |
சிறகு, திதி, பட்சம் |
| 6993 |
பக்கரை |
குதிரைச் சேணம் |
| 6994 |
பக்கு |
பை |
| 6995 |
பக |
பிளக்க |
| 6996 |
பகடு |
எருது, எருமைக் கடா, ஏர், பரப்பு, பெருமை, வலிமை |
| 6997 |
பகர்தல் |
உணர்த்துதல், கொடுத்தல், அருளிச் செய்தல், கைம்மாறாகக் கொடுத்தல், விளைந்து கொடுத்தல் |
| 6998 |
பகர்நர் |
பண்ட வணிகர் |
| 6999 |
பகர்பவர் |
விற்பவர் |
| 7000 |
பகர்வர் |
பண்ட வாணிகர் |
| 7001 |
பகல் |
இள வெயில், ஊழிக்காலம், பகற் காலத்தின் ஒளி, பகற்காலம், காலை முதல் மாலை வரையுள்ள காலம், சூரியன், நடுவுநிலைமை, நுகத்துப் பகலாணி, பகுத்தல், ஒரு முகூர்த்தம் |
| 7002 |
பகல் ஆற்றி |
பகற்பொழுதை முறைமையாற் கழித்து |
| 7003 |
பகல் தீ வேட்டல் |
பகலில் பகைவர் ஊர்களை எரித்தல் |
| 7004 |
பகலின் விளங்கும் நின் செம்மல் |
ஞாயிறு போல் விளங்குகின்ற நின் தலைமை |
| 7005 |
பகழி |
அம்பு |
| 7006 |
பகழி மாய்த்தல் |
அம்பைத் தீட்டுதல் |
| 7007 |
பகன்றை |
சிவதை, ஒரு கொடி |
| 7008 |
பகன்றைக் கண்ணி |
சிவதைப் பூவாலாகிய மாலை |
| 7009 |
பகாஅர் |
பகர்வார், விற்பார் |
| 7010 |
பகுத்தல் |
பிளத்தல் |
| 7011 |
பகு வாய் |
பிளந்த வாய், மலர்ந்த வாய் |
| 7012 |
பகை |
மாறு, பகுப்பு |
| 7013 |
பகை அறு பயவினை |
பகை அறுதற்குக் காரணமான நாடாகிய பயனைத் தரும் காவற் பிரிவு |
| 7014 |
பகை இல் நோய் |
மருந்து இல்லாத நோய் (காம நோய்) |
| 7015 |
பகை நெறித் தழை |
மாறுபட்ட வண்ணமும் வடிவமும் கொண்ட முழுநெறியை யுடைய தழையுடை |
| 7016 |
பகைப்புலம் |
மாற்றார் தேயம் |
| 7017 |
பகைபட்டு |
மாறுபட்டு |
| 7018 |
பகை மிக்க நெஞ்சம் |
பகைகளால் வருத்தம் மிக்க நெஞ்சம் |
| 7019 |
பகை முனை |
போர்க் களம் |
| 7020 |
பங்கம் |
சேறு |
| 7021 |
பங்கு |
சனி |
| 7022 |
பங்குனி முயக்கம் |
பங்குனி விழா |
| 7023 |
பச்சிலை |
பசுமையாகிய இலை |
| 7024 |
பச்சூன் |
செவ்வித் தசை, பச்சிறைச்சி |
| 7025 |
பச்சை |
பிரத்தியும்நன்; திருமாலின் வியூக மூர்த்திகளுள் ஒருவர்; தோல், போர்வை |
| 7026 |
பசத்தல் |
காமத்தால் மேனி பசலை நிறமாதல், காம நோய் முதலியவற்றால ஒளி மங்குதல், பசப்புறுதல் |
| 7027 |
பசந்தன்று |
பசந்தது |
| 7028 |
பசப்பு |
பசலை, தலைவனைப் பிரிந்திருக்கும் மகளிர்க்குப் பிரிவாற்றாமையான் வருவதொரு நிற வேறுபாடு |
| 7029 |
பசப்பூர்தல் |
பசப்புப் பரத்தல் |
| 7030 |
பசலை |
காம நோயால் உண்டாகும் நிற வேறுபாடு, பொன்னிறம், இளமை, வருத்தம் |
| 7031 |
பசி |
வறுமை |
| 7032 |
பசிப்பிணி |
பசி நோய் |
| 7033 |
பசு |
பசு மாடு |
| 7034 |
பசுங்கட் கடவுள் |
பசிய நிறத்தைத் தன் பாகத்தேயுடைய உருத்திரன் |
| 7035 |
பசுங்கதிர் |
குளிர்ந்த சுடர் |
| 7036 |
பசுங்காழ் |
பசிய சரத்தால் ஆகிய மேகலை |
| 7037 |
பசு நனை |
புதிய தேன் |
| 7038 |
பசும் பதம் |
உணவுக்குரிய பண்டம் |
| 7039 |
பசும் பாண்டில் காசு |
பசுமையான வட்டக் காசு |
| 7040 |
பசும் பிடி |
பச்சிலை |
| 7041 |
பசும் புண் |
புதுப் புண் |
| 7042 |
பசும் புல் |
தருப்பைப் புல் |
| 7043 |
பசும் பூண் |
பசும் பொன்னாற் செய்த பூண் |
| 7044 |
பசும் பொன் |
மாற்றுயர்ந்த பொன், கிளிச்சிறை, என்னும் பொன் |
| 7045 |
பசு மஞ்சள் |
மஞ்சள் வகை |
| 7046 |
பசுமை |
இளமை, குளிர்ச்சி, செவ்வி, புதுமை |
| 7047 |
பசு மோரோடம் |
பசுமையான செங் கருங்காலிப் பூ |
| 7048 |
பசு வீ |
பசிய மலர் |
| 7049 |
பசு வெயில் |
மாலை வெயில் |
| 7050 |
பசை |
பற்று, பிசின் |
| 7051 |
பசைஇ |
விரும்பியதனால் |
| 7052 |
பஞ்சவர் |
பாண்டியர் |
| 7053 |
பஞ்சாய் |
கோரை வகை, தண்டான் கோரை |
| 7054 |
பஞ்சாய்க் கோதை |
பஞ்சாயால் அமைந்த மாலை |
| 7055 |
பஞ்சி |
நார், பஞ்சு, வெண் துகில் |
| 7056 |
பஞ்சுரம் |
குறிஞ்சி அல்லது பாலையாழ்த்திறத்தொன்று |
| 7057 |
பஞ்ஞிலம் |
தொகுதி, மக்கள் தொகுதி |
| 7058 |
பஞிலம் |
மக்கள் தொகுதி |
| 7059 |
பட்டம் |
யானையின் நெற்றி அணி |
| 7060 |
பட்டமாறு |
பட்டபடியால் |
| 7061 |
பட்டற்று |
அகப்பட்ட தன்மைத்து |
| 7062 |
பட்டன்று |
பட்டது |
| 7063 |
பட்டாம் |
மனை வாழ்க்கையிலே பொருந்தினேம் |
| 7064 |
பட்டாய் |
போனாய் |
| 7065 |
பட்டி |
காவலின்றி வேண்டியவாறு ஒழுகுபவன் |
| 7066 |
பட்டினம் |
நெய்தனிலத்து ஊர், காவிரிப்பூம்பட்டினம் |
| 7067 |
பட்டினி |
உணவு கொள்ளாமை |
| 7068 |
பட்டீமோ |
படுவாய் |
| 7069 |
பட |
உண்டாக, ஒலிப்ப, படிய |
| 7070 |
படஞ் செய் பந்தர் |
கூடாரம் |
| 7071 |
படப்பு |
வைக்கோற்போர் |
| 7072 |
படப்பை |
கொல்லை, பக்கத்துள்ள இடம், புழைக்கடை |
| 7073 |
படம் |
சட்டை |
| 7074 |
படம் புகுதல் |
சட்டையிடுதல் |
| 7075 |
படர் |
செல்லுகை, துன்பம், நினைவால் உண்டாகிய துன்பம், நினைவு, வருத்தம், உள்ளுதல் |
| 7076 |
படர் அணி அந்தி |
பல்லுயிரும் வருத்தத்தை அணிகின்ற ஊழி முடிவு |
| 7077 |
படர்கிற்பீர் |
நடப்பீர் |
| 7078 |
படர் கூந்தல் |
நினைவு மிகுதல், வருத்தம் மிகுதல் |
| 7079 |
படர் தக |
படர்தல் தகும்படி |
| 7080 |
படர் தருதல் |
ஓடி வருதலைச் செய்தல், வருதலைச் செய்தல், மீண்டு வருதல் |
| 7081 |
படர்தல் |
நினைத்தல், நினைத்துச் செல்லுதல், போதல், நடத்தல், நினைதல் |
| 7082 |
படர்பு |
செல்லுதல் |
| 7083 |
படர்வித்தல் |
உள்ளுவித்தல் |
| 7084 |
படரன்மின் |
வருத்தமுறாதீர் |
| 7085 |
படரெவ்வம் |
நினைவால் உண்டாகும் நோயின் வருத்தம் |
| 7086 |
படல் |
உறக்கம் |
| 7087 |
படலம் |
கூடு |
| 7088 |
படலை |
தழை, தழையோடு மலர்கள் விரவித் தொடுத்த மாலை, பனையோலையாலேனும் முள்ளாலேனும் செய்யப்பட்ட அடைப்பு |
| 7089 |
படலைக் கண்ணி |
கலம்பகமாகிய மாலை, படலை மாலை |
| 7090 |
படா |
துயிலா |
| 7091 |
படாஅ |
பட்டு |
| 7092 |
படாஅகை |
வெற்றிக் கொடி |
| 7093 |
படாஅமை |
துயிலாமை |
| 7094 |
படா அர் |
செடி, சிறு தூறு |
| 7095 |
படாத கண் |
துயிலாத கண் |
| 7096 |
படாம் |
சீலை |
| 7097 |
படாமை |
துயிலாமை |
| 7098 |
படார் |
சிறு தூறு |
| 7099 |
படி |
நித்தியக் கட்டளை, பகை, பூமி |
| 7100 |
படிக்கால் |
ஏணி |
| 7101 |
படிதல் |
தங்குதல், குடைதல் |
| 7102 |
படி மகன் |
செவ்வாய் |
| 7103 |
படிமம் |
பாவை |
| 7104 |
படியுண்பார் |
படி பெற்று உண்பவர் |
| 7105 |
படியோர் |
பகைவர் |
| 7106 |
படிவம் |
வழிபடு தெய்வம், விரதம் |
| 7107 |
படிறு |
கொடுமை, வஞ்சனை |
| 7108 |
படீஇ |
உண்டாகப் பெற்று, படிவித்து |
| 7109 |
படீஇயர் |
துயில்க, படுக |
| 7110 |
படு |
மடு, குளம், பெரிய |
| 7111 |
படு கண் |
முழங்கும் பக்கம் |
| 7112 |
படு கண் ஆகுளி |
முழங்கும் கண்ணையுடைய சிறு பறை |
| 7113 |
படு கண் முழவு |
முழங்கும் கண்ணையுடைய மத்தளம் |
| 7114 |
படுகர் |
வழி, இழிந்தேறும் வழி |
| 7115 |
படுகால் |
மேகலை |
| 7116 |
படுகுவை |
உண்டாவை |
| 7117 |
படு சினை |
தாழ்ந்த கிளை |
| 7118 |
படு சுடர் அமையம் |
ஞாயிறு மறையும் பொழுது, ஒளி மழுங்கும் நேரம் |
| 7119 |
படு ஞெமல் |
மிக்க சருகுகள் |
| 7120 |
படுத்தல் |
உடம்பிற் பூசுதல், சேர்ப்பித்தல், வீழச் செய்தல் |
| 7121 |
படுதல் |
அழிதல், அஸ்தமித்தல், உண்டாதல், உதித்தல், ஒலித்தல், தொங்குதல், பாய்தல், புகுதல், எய்துதல், துயிலுதல், போதல், பெய்தல், மொய்த்தல், அகப்படுதல், தங்குதல், அடங்குதல், இறத்தல் |
| 7122 |
படுப்பவர் |
மெய்ப்படுப்பவர், பூசிக்கொள்பவர் |
| 7123 |
படுபு |
தோன்றுதல் |
| 7124 |
படு புழை |
குறுகிய வாயில் |
| 7125 |
படு மலை |
படு மலைப் பாலை என்ற பாலைப் பண் |
| 7126 |
படு மழை |
சொரியும் மழை, பெய்கின்ற மழை |
| 7127 |
படு வலை |
அகப்படுத்தற்குக் காரணமான வலை |
| 7128 |
படூஉ |
வைத்து |
| 7129 |
படூஉம் |
அகப்படுத்தும் |
| 7130 |
படை |
குதிரைக் கலனை, சேனை, அம்பு, படுத்தல், பரப்புதல், படைக் கலம், படைவாள் |
| 7131 |
படைத்தல் |
பெற்றிருத்தல், சிருட்டித்தல் |
| 7132 |
படைத்திசினோர் |
படைத்தவர் |
| 7133 |
படைத் தானை |
படையினையுடைய சேனை |
| 7134 |
படைப்பு |
செல்வம், படைக்கப்படும் செல்வம் |
| 7135 |
படை மடம் |
அறப் போர் நெறியினின்றும் மாறுபடுகை; வீரரல்லாதார் மேலும், முதுகிட்டார் மேலும், புண்பட்டார் மேலும், மூத்தார் இளையார் மேலும், போர் செய்தற்குச் செல்லுதல் |
| 7136 |
படை வீடு |
திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர்சோலை, குன்றுகள், என்ற அறுவகைப்பட்ட குமரக் கடவுள் இருப்பிடம் |
| 7137 |
பண் |
இராகம், பண்ணுதல் |
| 7138 |
பண்டம் |
சரக்கு |
| 7139 |
பண்டாரம் |
பொக்கிஷசாலை |
| 7140 |
பண்டு |
முற்காலம், முன்பு |
| 7141 |
பண்டு அறியாதீர் |
பண்டு கண்டறியாதீர் |
| 7142 |
பண்டை |
முற்காலம், முன் |
| 7143 |
பண்ணல் |
அமைத்தல், அலங்கரித்தல் |
| 7144 |
பண்ணியம் |
பண்டம், சோறு, நுகர் பொருள் |
| 7145 |
பண்ணிய விலைஞர் |
பண்ட வாணிகர் |
| 7146 |
பண்ணுதல் |
இசை வாசித்தல், ஆயத்தஞ் செய்தல், சமைத்தல், திருத்தி வாசித்தல், கட்டுதல் |
| 7147 |
பண்ணை |
பண், ஒரு வகைக் கீரை, விளையாட்டிடம் |
| 7148 |
பண்ணை பாய்தல் |
புனலிற் பாய்ந்து விளையாடுதல், விளையாட்டிடத்தே பாய்தல் |
| 7149 |
பண்பிற்று |
பண்பினையுடைத்து |
| 7150 |
பண்பு |
பிறர் இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம், தன்மை, உண்மை, குணம், செய்தி, மக்கட் பண்பு |
| 7151 |
பண்பு இல் மாக் கணம் |
நற்குணம் இல்லாத விலங்கின் கூட்டம் |
| 7152 |
பண்புடை நல் நாடு |
நற்குணங்களை உடைய நல்ல நாடு |
| 7153 |
பணவை |
கிளை, பரண் |
| 7154 |
பணி |
ஏவல், கட்டளை |
| 7155 |
பணித்தல் |
தாழ்த்தல் |
| 7156 |
பணிதல் |
தாழ்தல், வணங்குதல் |
| 7157 |
பணிபு |
பணிந்து |
| 7158 |
பணிமொழி |
மெல்லிய மொழி |
| 7159 |
பணியா |
பணிந்து, குனிந்து |
| 7160 |
பணியியர் |
தாழ்க |
| 7161 |
பணிலம் |
சங்கு |
| 7162 |
பணீஇயர் |
அடக்கும் பொருட்டு |
| 7163 |
பணை |
குதிரைப் பந்தி, பெருமை, மருத நிலம், வயல், யானைக் கூடம், மூங்கில், முரசு, கம்பம், பந்தி |
| 7164 |
பணைத்தல் |
பிழைத்தல் |
| 7165 |
பணைத் தோள் |
மூங்கில் போலுந் தோள் |
| 7166 |
பணையம் |
ஈடு |
| 7167 |
பத்தல் |
பத்தர், கிணற்றின் நீரை எடுத்து ஊற்றி ஆனிரையை உண்பித்தற்குத் தோண்டப்படுவது, குழி, மரத்தாலான நீரிறைக்கும் கருவி, யாழின் ஓர் உறுப்பு |
| 7168 |
பத்திரம் |
ஒரு வகை வாள் |
| 7169 |
பதடி |
பயனின்மை |
| 7170 |
பதணம் |
மதிலுள் மேடை |
| 7171 |
பதத்தை |
செவ்வியை |
| 7172 |
பதப்பர் |
வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற் கோட்டை |
| 7173 |
பதம் |
உணவு, கள், கால், காலம், செவ்வி, தரம், பக்குவம் |
| 7174 |
பதலை |
ஒரு பக்கத்தையுடைய பகுவாய்ப் பறை |
| 7175 |
பதவம் |
அறுகு |
| 7176 |
பதவு |
அறுகு, அறுகங் கிழங்கு |
| 7177 |
பதன் |
காலம், செவ்வி |
| 7178 |
பதாகை |
பெருங் கொடி |
| 7179 |
பதி |
ஊர், சேக்கை, இருப்பிடம் |
| 7180 |
பதிபு |
பதிந்து |
| 7181 |
பதியெழவு |
வலசை போகை, வேற்று நாட்டுக்குக் குடி போதல் |
| 7182 |
பதிவதம் |
பதி விரதம் |
| 7183 |
பதுக்கை |
இலைக் குவியல், உடலம் மறைய இட்ட இலைக் குவை, கற்குவியல், மணற் குன்று, திட்டை |
| 7184 |
பதுக்கைக் கடவுள் |
மணற் குன்றின் மேலுள்ள நடுகல் தெய்வம் |
| 7185 |
பதுமம் |
தாமரை |
| 7186 |
பதைத்தல் |
அசைதல் |
| 7187 |
பந்தர் |
கால் நட்டுக் கீற்றுக்கள் பரப்பிய இடம், பண்டசாலை, முத்துக்குப் பேர் போன ஒரு புராதனக் கடற்கரைப் பட்டினம் |
| 7188 |
பந்து |
விளையாட்டுப் பொருள் |
| 7189 |
பம்புதல் |
செறிதல், பரவுதல் |
| 7190 |
பம்மை |
ஒரு வகை வாச்சியம் |
| 7191 |
பயக்கிற்பது |
பயன் தருவது |
| 7192 |
பயத்தல் |
நிகழ்தல், பசத்தல், பூத்தல், பெறுதல் |
| 7193 |
பயந்த |
பெற்ற, வளர்ந்த |
| 7194 |
பயந்திசினோர் |
பெற்றோர் |
| 7195 |
பய நிரை |
பயனைத் தருகின்ற ஆநிரை |
| 7196 |
பயம் |
இன்பம், பால், பழம், உணவு, பயன் |
| 7197 |
பயம் பகர்தல் |
பயன்படுதல் |
| 7198 |
பயம்பு |
குழி, பள்ளம் |
| 7199 |
பய மலை |
பயன் தருகின்ற மலை |
| 7200 |
பயலை |
பசலை |
| 7201 |
பயிர் |
குறி |
| 7202 |
பயிர்தல் |
அழைத்தல், விலங்கு முதலியன ஒன்று ஒன்றினைக் குறியிட்டு அழைத்தல் |
| 7203 |
பயிர்ந்து அகவும் |
அழைத்துக் கூப்பிடும் |
| 7204 |
பயிர்ப்பு |
பிசின் |
| 7205 |
பயிரிடுதல் |
விலங்கும் பறவையும் ஒலிக்குறி காட்டி ஒன்றை மற்றொன்று அழைத்தல் |
| 7206 |
பயிரும் |
ஒலிக்கும் |
| 7207 |
பயில்தல், பயிலுதல் |
நெருங்குதல் |
| 7208 |
பயில் திரை |
பயின்ற திரை |
| 7209 |
பயிற்றல் |
பலகாலுங் கூறல், தோற்று வித்தல் |
| 7210 |
பயிற்றாதீமே |
எடுத்துக் குழறி எம்மை வருத்தாதே |
| 7211 |
பயிற்றுதல் |
பலகாற் கூறுதல், கற்பித்தல், கற்றல் |
| 7212 |
பயின் |
கப்பலின் சுக்கான், அரக்கு |
| 7213 |
பயின்று வருதல் |
அடுத்தடுத்து வருதல் |
| 7214 |
பயினி |
குறிஞ்சி நிலத்து உண்டாம் ஒரு வகை மரம் |
| 7215 |
பரக்கும் |
பரக்கின்ற |
| 7216 |
பரங்குன்றம் |
திருப்பரங்குன்றம் |
| 7217 |
பரணர் |
எட்டுத் தொகையுள் பல பாடல்களை இயற்றியவரான கடைச் சங்கப் புலவர் |
| 7218 |
பரத்த |
பரத்தைமையை உடையவனே |
| 7219 |
பரத்தமை |
அயலாந் தன்மை |
| 7220 |
பரத்தர |
பரத்தலைச் செய்ய |
| 7221 |
பரத்தரூஉம் |
பரத்தலைத் தாரா நிற்கும் |
| 7222 |
பரத்தல் |
பரவுதல், மிகுதல் படர்தல் |
| 7223 |
பரத்தன் |
பரத்தமைத் தொழிலுடையவன் |
| 7224 |
பரத்தை |
பரத்தைமை |
| 7225 |
பரதர் |
செட்டிகள் |
| 7226 |
பரதவர் |
தென்றிசைக்கண் ஆண்ட ஒரு சார் குறுநில மன்னர், நுளையர் |
| 7227 |
பரப்ப |
பரக்க |
| 7228 |
பரப்பு |
இட விரிவு |
| 7229 |
பரப்புதல் |
நிலைபெறுத்தல் |
| 7230 |
பரம் |
பாரம் |
| 7231 |
பரல் |
பருக்கைக் கல், பாறைக் கல், விதை, கப்பணம் என்னும் ஆயுதம் |
| 7232 |
பரவாமை |
பரவுக்கடன் பூணாமை |
| 7233 |
பரவுதல் |
துதித்தல் |
| 7234 |
பரவுதும் |
பரவுவேம், வாழ்த்துவேம் |
| 7235 |
பரவை |
பரவல் |
| 7236 |
பராஅய் |
பரவி |
| 7237 |
பராரை |
பரு அரை, மரத்தின் பருத்த அடி, விலங்கின் பருத்த மேல் தொடை |
| 7238 |
பரி |
குதிரை, குதிரைக் கதி, செலவு, நடை, நடை வேகம் |
| 7239 |
பரிகாரம் |
பொருள் |
| 7240 |
பரிகு |
வருந்துவேன் |
| 7241 |
பரிசம் |
பரியம், மணப் பரிசு, பொருள் |
| 7242 |
பரிசில் கடாநிலை |
பரிசில் நீட்டித்த தலைவனுக்குப் பரிசில் வேட்டோன் தன் இடும்பை கூறிக் கேட்கும் புறத்துறை |
| 7243 |
பரிசில் மாக்கள் |
பரிசிலர் |
| 7244 |
பரிசிலர் |
பரிசில் வேண்டி இரப்போர் |
| 7245 |
பரிசு |
இயல்பு |
| 7246 |
பரித்தல் |
ஓடுதல், சூழ்தல், நிருவகித்தல் |
| 7247 |
பரிதல் |
அறுத்தல், ஓடுதல், முறிதல், வருந்துதல் |
| 7248 |
பரிதி |
வட்ட வடிவு, சூரிய மண்டிலம் |
| 7249 |
பரித்து |
கரையற்று |
| 7250 |
பரிப்பு |
இயக்கம் |
| 7251 |
பரிபு |
அறுத்து, விரும்பி |
| 7252 |
பரிய |
செலவினையுடைய |
| 7253 |
பரியல் |
இரங்குகை, வருத்தம், விரைந்து செல்லுகை |
| 7254 |
பரிவு |
அன்பு, இரக்கம் |
| 7255 |
பரிவேட்பு |
பறவை வட்டமிடுகை |
| 7256 |
பரீஇ |
பருத்தி, கதி |
| 7257 |
பருகீத்தை |
பருகு |
| 7258 |
பருகு |
குடி |
| 7259 |
பருகுதல் |
குடித்தல் |
| 7260 |
பருத்திப் பெண்டு |
பருத்தி நூற்கும் பெண் |
| 7261 |
பருத்தி வீடு |
பருத்தியின் சுகிர்ந்த பஞ்சு |
| 7262 |
பருதி |
பருதி வட்டம், ஞாயிறு, வட்டப்பலகை |
| 7263 |
பருந்து |
ஒரு வகைப் பறவை |
| 7264 |
பருமம் |
குதிரைக் கலனை, பதினெட்டு வடம் கொண்ட மேகலை வகை, அரைப்பட்டிகை, யானைக் கழுத்து மெத்தை, குதிரைச் சேணம் |
| 7265 |
பருவம் |
காலம் |
| 7266 |
பருவரல் |
துன்பம், வருந்தல், வருத்தம் |
| 7267 |
பரூஉ |
பருமை |
| 7268 |
பரூஉக் கண் |
பெரிய உடல் |
| 7269 |
பரூஉக் கை |
வண்டியின் தெப்பக்கட்டை |
| 7270 |
பரூஉப் புகை |
மிக்க புகை |
| 7271 |
பரேர் |
மிக்க அழகு |
| 7272 |
பரேர் எறுழ் |
பருத்த அழகிய வலி |
| 7273 |
பரேரம் புழகு |
செம்பூ, புன முருங்கை மலையெருக்கு |
| 7274 |
பரைஇ |
பரவி, வணங்கி |
| 7275 |
பல் |
எயிறு, பல, பல காரியங்கள் |
| 7276 |
பல் ஆன் |
மிக்க பசுக்கள், பல பசு |
| 7277 |
பல் இதழ் |
மலர் |
| 7278 |
பல் இதழ் உண்கண் |
பல பூக்களையும் போலும் மையுண்ட கண் |
| 7279 |
பல் இயம் |
பல் வகை வாத்தியங்கள் |
| 7280 |
பல் ஊழ் |
பல தடவை |
| 7281 |
பல் கண் இறாஅல் |
பலவாகிய கண்களை உடைய இறாஅல் |
| 7282 |
பல் கதிர்ச் செல்வன் |
சூரியன் |
| 7283 |
பல் கதிர் ஞாயிறு |
பல கதிரையுடைய சூரியன் |
| 7284 |
பல் கதிர் மண்டிலம் |
சூரியன் |
| 7285 |
பல் கலை |
எண் கோவையாகிய மேகலை |
| 7286 |
பல் கால் |
பலமுறை |
| 7287 |
பல் காழ் |
மேகலை |
| 7288 |
பல் காழ் மாலை |
பல வடமான மாலை |
| 7289 |
பல் காழ் முத்து |
பல வடங்களையுடைத்தாகிய முத்து |
| 7290 |
பல் காற் பறவை |
வண்டு |
| 7291 |
பல்குதல் |
பலவாதல் |
| 7292 |
பல் குரல் |
பல கதிர் |
| 7293 |
பல் பாடு |
பல படி |
| 7294 |
பல் பொறி |
பல புள்ளிகள் |
| 7295 |
பல் மலை |
பல மலைகள் |
| 7296 |
பல் மா (பல் மாறு) |
பல படி |
| 7297 |
பல் மாண் |
பல படியாக, பல மாட்சி |
| 7298 |
பல் மாண் நகுதரும் |
பலகாலும் நகைத்தலைச் செய்யும் |
| 7299 |
பல்லர் |
பல்லினையுடையர் |
| 7300 |
பல்லவர் |
பலர் |
| 7301 |
பல்லார் |
பலர் |
| 7302 |
பல்லி |
சிறு பிராணி வகை, பலுகுக் கட்டை |
| 7303 |
பல்லியாடுதல் |
விதைத்த பின் பலு கடித்தல்; தாளியடித்தல், ஊடடித்தல் என்றும் இதனைக் கூறுவார்; அதாவது நெருங்கி முளைத்த பயிர்களை விலக்குதற்கும், வருத்தமின்றிக் களை பிடுங்குதற்குமாகக் கீழ் நோக்கியுள்ள கூரிய பல முனைகளையுடைய பலகையால் உழுது பண்படுத்துதல் |
| 7304 |
பல உன்னலம் |
பல பொருள்களை நினைந்தேமல்லேம் |
| 7305 |
பலகை |
கேடகம் |
| 7306 |
பல கோள் |
பல வகை |
| 7307 |
பலரேம் |
பலராக உள்ளேம் |
| 7308 |
பல வல் புலையன் |
பலவும் வல்ல இழிசினன், பாணன் |
| 7309 |
பலவு |
பலா மரம் |
| 7310 |
பலவுக் காய் |
பலாக் காய் |
| 7311 |
பலவுறு கண்ணுள் |
பல அருப்புத் தொழில் |
| 7312 |
பலவுறுதல் |
பெருவிலை பெறுதல் |
| 7313 |
பலாசம் |
புரசமரம் |
| 7314 |
பலி |
பூசையில் அர்ச்சிக்கும் பூ முதலியன யாகம் முதலியவற்றில் தேவர் பிதிரர் முதலியோரை உத்தேசித்து இடும் உணவுப் பொருள், காக்கை முதலிய பிராணிகள் உண்ண இடும் சோறு |
| 7315 |
பலி கொடுத்தல் |
தெய்வத்திற்குப் பலியிடுதல் |
| 7316 |
பவ்வம் |
கடல் |
| 7317 |
பவர் |
கொடி |
| 7318 |
பவழம் |
பவளம் |
| 7319 |
பவளம் |
நவமணியுள் ஒன்று |
| 7320 |
பழங்கண் |
துன்பம் |
| 7321 |
பழங்குடி |
பழைமையான குடி |
| 7322 |
பழஞ் செய்க் கடன் |
நில வரிப் பாக்கி |
| 7323 |
பழஞ்சோறு |
பழைய அன்னம் |
| 7324 |
பழ முதிர் சோலை |
முருகக் கடவுளின் படை வீடு ஆறனுள் ஒன்று |
| 7325 |
பழ விறல் |
பழைய தன்மை, பழைய வெற்றி |
| 7326 |
பழவினை |
நல் வினை |
| 7327 |
பழன் |
பழம் |
| 7328 |
பழனக் கா |
வயல்களை அருகிலுடைய சோலை |
| 7329 |
பழனத்த புள் |
பழனத்திடத்தனவாகிய பறவைகள் |
| 7330 |
பழனம் |
பொய்கை, மருத நிலம், வயல், நீர் நிலச் செறு, பொது நிலம் |
| 7331 |
பழனவெதிர் |
கரும்பு |
| 7332 |
பழி |
குற்றம் |
| 7333 |
பழிச்சுதல் |
புகழ்தல், வணங்குதல், வாழ்த்துதல் |
| 7334 |
பழித்தல் |
இழித்துக் கூறுதல், குறை கூறுதல் |
| 7335 |
பழி தீர்ந்த |
பழித்தல் அற்ற |
| 7336 |
பழு |
பழுப்பு நிறம், பொன் நிறம், பேய் |
| 7337 |
பழுதாக |
பாழே போம்படி |
| 7338 |
பழுது |
குற்றம், வறுமை |
| 7339 |
பழுநி |
முதிர்ந்து |
| 7340 |
பழுநுதல் |
நிறைதல், முதிர்தல், முற்றுப் பெறுதல் |
| 7341 |
பழுப் பயன் |
பழமாகிய பயன், பழுத்த பழம் |
| 7342 |
பழுமரம் |
ஆலமரம், பழுத்த மரம் |
| 7343 |
பழுனிய |
முதிர்ந்த |
| 7344 |
பழுனுதல், பழுநுதல் |
பழுத்தல், முதிர்தல் |
| 7345 |
பழுஉ |
பேய் |
| 7346 |
பழையர் |
கள் விற்போர் |
| 7347 |
பழையன் |
போர் என்னும் ஊரின் தலைவனும் சோழன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன்; மோகூரின் தலைவனும் பாண்டியன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன் |
| 7348 |
பழையோள் |
துர்க்கை |
| 7349 |
பள்ளி |
இடம், இடைச் சேரி, சாலை, தூக்கம் |
| 7350 |
பள்ளி புக்கது |
துயில்கொண்ட தன்மை |
| 7351 |
பள்ளி அயர்தல் |
நித்திரை செய்தல் |
| 7352 |
பளிங்கு |
கண்ணாடி, பளிக்குக் கல் |
| 7353 |
பற்றலிலியர் |
கோடாதொழிக |
| 7354 |
பற்றாமாக்கள் |
பகைவர் |
| 7355 |
பற்று |
தங்குமிடம், பற்றுதல் |
| 7356 |
பற்றுதல் |
பிடித்தல், பிடித்தக் கொள்ளுதல் |
| 7357 |
பறந்தலை |
சுடுகாடு, பாழிடம், படை வீடு, போர்க்களம் |
| 7358 |
பறந்தவை |
பறந்த பறவை, வண்டுகள் |
| 7359 |
பறம்பு |
பாரியின் நாடு, பாரியின் மலை |
| 7360 |
பறம்பு நாடு |
பாரிக்குரிய நாடு |
| 7361 |
பறவை |
பறத்தல், வண்டு |
| 7362 |
பறழ் |
மரங்களில் வாழ்வன, தவழ்வன, மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி இவற்றின் இளமைப் பெயர் |
| 7363 |
பறாஅக் குருகு |
பறவாக் குருகு, உலை மூக்கு |
| 7364 |
பறாஅப் பருந்து |
குருகு, வளையல் |
| 7365 |
பறி |
பனையோலைப் பாய், மீன் பிடிக்குங் கருவி |
| 7366 |
பறிக்குந்து |
பறிக்கும் |
| 7367 |
பறித்தல் |
சூழ்தல் |
| 7368 |
பறித்து இடல் |
ஒடித்துப் போடல் |
| 7369 |
பறிமுறை |
பல் விழுந்து முளைக்கை, விழுந்தெழுந்த முறைமை |
| 7370 |
பறை |
இறகு, ஒரு தோற்கருவி, தமருகம், பறத்தல், பறவை, வட்டம் |
| 7371 |
பறைஇய |
பறத்தற்கு |
| 7372 |
பறைக்கண் |
தேய்தலை உடைய இடம் |
| 7373 |
பறை தபு முது குருகு |
பறக்க இயலாத கிழ நாரை |
| 7374 |
பறைதல் |
தேய்தல், நீங்குதல் |
| 7375 |
பறைந்து |
மோதி |
| 7376 |
பறை நிவத்தல் |
பறத்தலில் உயர்தல் |
| 7377 |
பறைய |
தேய, கழல |
| 7378 |
பறை யறைதல் |
செய்தி தெரிவிக்குமாறு பறை அடித்தல் |
| 7379 |
பறையன் |
நால்வகைப் பழங்குடி மக்களுள் ஒருவன் |
| 7380 |
பன்மை |
தொகுதி |
| 7381 |
பன்றிப் பறை |
காட்டுப் பன்றிகளை வெருட்டக் கொட்டும் பறை |
| 7382 |
பன்னல் |
பருத்தி |
| 7383 |
பனங் குடை |
பதநீர் சோறு முதலியவற்றை வைப்பதற்குப் பனையோலையால் செய்த பட்டை |
| 7384 |
பனஞ் செறும்பு |
பனைமரத்திற் செறிந்து உள்ள நரம்பு |
| 7385 |
பனம் புடையல் |
பனம் பூ மாலை |
| 7386 |
பனம் போந்தை |
பனங் குருத்து |
| 7387 |
பனி |
கண்ணீர், குளிர், பனிக் கட்டி, நடுக்கம், நீர், குளிர்ச்சி, பனிக்காலம் |
| 7388 |
பனிக்கும் |
நடுங்கும், வருத்தும் |
| 7389 |
பனி செய்தோன் |
நீர் உறும்படி செய்தவன் |
| 7390 |
பனித்தல் |
குளிர்தல், நடுங்குதல், குளிரால் நடுங்குதல், ததும்புதல், நடுங்கச் செய்தல் |
| 7391 |
பனி தின |
பனிக்காலம் அறிவைத் தின்று விட |
| 7392 |
பனி நீங்கும் வழி நாள் |
பனிக் காலம் கழிந்த பின்னாளாகிய இளவேனிற் காலம் |
| 7393 |
பனிப் புதல் |
குளிர்ச்சியை உடைய புதல் |
| 7394 |
பனிப் பொய்கை |
குளிர்ச்சியை உடைய பொய்கை |
| 7395 |
பனிபடு நெடு வரை |
இமயமலை |
| 7396 |
பனிய கண் |
நீரையுடையனாவாகிய கண் |
| 7397 |
பனிற்றுதல் |
தூவுதல் |
| 7398 |
பனுவல் |
கேள்வி, சுகிர்ந்த பஞ்சு, பாட்டு, அறநூல் |
| 7399 |
பனை |
மரவகை, அனுட நாள் |
| 7400 |
பனை இதக்கை |
பனை முகிழ் |
| 7401 |
பனை ஈன்ற மா |
பனை ஈன்ற மடலாற் செய்த குதிரை |
| 7402 |
பனைக் கொடியோன் |
பலராமன் |
| 7403 |
பனைப்போழ் |
பனந்தோடு, பனந்தோட்டின் பிளவு |
| 7404 |
பனை மீன் |
எட்டரை அங்குல வளர்ச்சியும் கறுப்பு நிறமும் உள்ள மீன் வகை |