7405 பா பரப்பு, பரத்தல்
7406 பா அடி பரந்த அடி, நிலத்தே பாவும் அடி
7407 பாஅய் பரவி, பரந்து
7408 பாஅல் பக்கம்
7409 பாக்கம் ஊர், நெய்தல் நிலத்தூர், பக்கத்திலுள்ள ஊர்
7410 பாகர் தேர், குழம்பு
7411 பாகல் பலா மரம், பாகற் கொடி,
7412 பாகன் தேரைச் செலுத்துபவன், யானைப்பாகன்
7413 பாகு வெல்லப் பாகு, பகுதி
7414 பாகுடி வெகு தூரம்
7415 பாங்கர் உகாய், ஓமை மரம், ஒரு கொடி, பக்கம்
7416 பாங்கன் தோழன்
7417 பாங்கு நல்ல இடம், பக்கம்
7418 பாங்கு அருங் கானம் பக்கத்திலுண்டான செல்லுதற்கு அரிய கானம்
7419 பாசகன் சமையற்காரன்
7420 பாசடை பசிய இலை
7421 பாசடும்பு பசுமையான அடுப்பங் கொடி
7422 பாசம் பேய்
7423 பாசவர் ஆட்டிறைச்சி விற்கும் வாணிகர்
7424 பாசவல் அப்பொழுது இடித்த அவல், பசிய விளைநிலம்
7425 பாசறை பகைமேற் சென்ற படை தங்கும் இடம், பாடி வீடு, மூங்கிலால் கட்டப்பெற்ற அறைகளை உடையது
7426 பாசி கிழக்கு, நீர்ப் பாசி
7427 பாசிழை பசிய அணி
7428 பாசினம் பசிய கிளிக் கூட்டம்
7429 பாசுவல் பசிய தழை
7430 பாட்டங்கால் முற்றூட்டாகிய தோட்டம்
7431 பாட்டம் தோட்டம், மேகம், பயிர் செய்கின்ற தோட்டம்
7432 பாட்டி கிழவி, பாடல் மகளிர்
7433 பாட்டியர் பாணிச்சியர்
7434 பாட விழும்படி, பாடுதலைச் செய்ய
7435 பாடல் புகழ், பெருமை, பாட்டு
7436 பாடலி பாடலிபுரம்
7437 பாடறித்தொழுகல் உலக ஒழுக்கம் அறிந்து ஒழுகுதல்
7438 பாடன்மார் பாடுதலைத் தவிர்வார், பாடார்
7439 பாடி சேரி, நகரம், பாடுதலைச் செய்து
7440 பாடித்தை பாடு (முன்னிலை வினைத் திரி சொல்)
7441 பாடிமிழ்தல் ஒலித்தல்
7442 பாடியம் சேரியிடத்தேம்
7443 பாடிற்று சொல்லியது
7444 பாடினி பாணிச்சி, விறலி
7445 பாடு உலகவொழுக்கம், ஓசை, கூறு, கேடு, செவ்வி, தூக்கம், பூசுகை, பெருமை, முறைமை, விழுகை, முறிதல், வீழ்தல், அத்தமித்தல், அழிதல், ஒலி, இமைத்தல், உலகியல், துயில்
7446 பாடு இல் கண் துயிலுதல் இல்லாத கண்
7447 பாடு ஓவாது ஒலி அடங்கியதில்லை
7448 பாடுகம் பாடுவோம்
7449 பாடுகோ பாடுவேனோ
7450 பாடுதல் கூறுதல், துதித்தல், பண்ணி சைத்தல், சொல்லுதல், புகழுதல்
7451 பாடு துறை புலவர்கள் பாடுதற்குரிய போர்த்துறை
7452 பாடுநர் புலவர், பாடுவார்
7453 பாடு பெயல் விடா மழை
7454 பாடு பெயல் நிற்றல் சொரிகின்ற மழை மாறாமல் நிற்றல்
7455 பாடுவாம் பாடக்கடவேம்
7456 பாடுவான் பாடகன்
7457 பாடுவி புகழ்பவள், மிகுத்துப் புகழ் கின்றவள்
7458 பாடேற்றல் கொம்புகள் தம் மேலே படுதலை ஏற்றுக் கொள்ளுதல்
7459 பாண் பாணர் சாதி, பாணர், பாண்மை
7460 பாண் சேரி பாணர் தெரு
7461 பாண்டி எருது, மாட்டு வண்டி
7462 பாண்டியஞ் செய்வான் உழவாடியாகி இருப்பான், உழவுத் தொழில் புரிவான், உழைப்பாளியாயிருப்பன்
7463 பாண்டியம் உழவு
7464 பாண்டில் கிண்ணி, குதிரைச் சேணம், குதிரை பூட்டிய தேர், நாரையெருது, வட்டம், வட்டக் கட்டில், வட்டத்தோல், வண்டி, விளக்கின் கால், எருது
7465 பாண்டில் விளக்கு கால் விளக்கு
7466 பாண் தலையிட்ட பல வல் புலையன் தலைமேல் ஏறட்டுக் கொண்ட பாண்மையாலே வஞ்சனையை மறைத்து வசீகரித்தல் தொழில் பலவும் வல்ல பாணன்
7467 பாண்மகன் பாணன்
7468 பாணர் ஒரு சாதியார்
7469 பாணர் பெருமகன் தலைவன்
7470 பாணி காலம், அழகு, ஓசை, இசை யுறுப்பாகிய தாளம், தாளத்தின் முதலெடுக்குங் காலத்தினையுடையது, கைச்சரடு, கையிடம்
7471 பாணிச் சீர் கைத் தாளம்
7472 பாணித்தல் தாமதித்தல், தாமதப்படுதல்
7473 பாணிதூங்குதல் தாளத்துக்கு ஏற்றபடி ஆடுதல்
7474 பாணி நிற்றல் தாழ்ந்து நிற்றல்
7475 பாத்தருதல் பரவுதலைச் செய்தல்
7476 பாத்தல் பகுத்தல்
7477 பாத்தி பகுதி, பிரிவு, கரையிட்டு வகுத்த நிலம்
7478 பாத்துற்றன பிரிவுற்றன
7479 பாதிரி ஒரு மரம், பாதிரி மலர்
7480 பாந்தள் பாம்பு
7481 பாப்புப் பகை கருடன்
7482 பாம்பு இராகு அல்லது கேது
7483 பாம்பு உமிழ் மணி பாம்பினால் உமிழப்படும் மணி, நாக ரத்தினம்
7484 பாம்பு உரி பாம்பின் தோல்
7485 பா மாண்ட பல அணை பரத்தல் மாட்சிமைப்பட்ட பலவாகிய அணை
7486 பாமுளூர் சேர நாட்டுள்ளதோர் ஊர்
7487 பாய் கப்பற் பாய்
7488 பாய்தல் தாவுதல், மடிப்பு விரிதல், தைத்தல், பரத்தல், முயங்குதல், வெட்டுதல், அறைதல், குத்துதல், குதித்தல், தழுவுதல், தாக்குதல்
7489 பாய்ந்த தானை மடி விரிந்த புடைவை
7490 பாய்பு பாய்ந்து
7491 பாய் புனல் பரந்த புனல்
7492 பாய்மான் பாய்ந்து செல்லுங் குதிரை
7493 பாய பரவிய
7494 பாயம் புணர்ச்சி விருப்பம், மனத்துக்கு விருப்பமானது
7495 பாயல் உறக்கம், படுக்கை
7496 பாயல் கொள்ளுதல் துயில் கொள்ளுதல், படுக்கையை இடமாகக் கொள்ளுதல்
7497 பாயியர் பாய்கைக்கு
7498 பாயிருள் பரந்த இருள்
7499 பாயின்று பரவி நின்றது
7500 பாயின பசலை பரந்த பசலை நிறம்
7501 பாயுந்து பாயும்
7502 பார் பாறை, வண்டியின் அடிப் பாகத்துள்ள நெடுஞ் சட்டம், வன்னிலம், மண்டலம்
7503 பார்த்தல் கண்ணால் நோக்குதல், மனத்தால் நோக்குதல்
7504 பார்த்துற்றன அவை நம் வருத்தத்தைப் பார்த்துத் தாமும் வருத்தமுற்றன
7505 பார்த்துறூஉம் பார்த்து இன்புறூஉம்
7506 பார் நடை வெருகு இரையைப் பார்த்து நடத்தலையுடைய காட்டுப் பூனை
7507 பார்ப்பனன், பார்ப்பான் அந்தணன், பிராமணன்
7508 பார்ப்பு இளம் பறவை
7509 பார்வல் காவல், பார்வை, பார்த்தற்குரிய இருக்கை
7510 பார்வல் ஒதுக்கு பார்த்தலையுடைய நடை
7511 பார்வை பார்வை மிருகம்
7512 பாரம் பரிக்கப்படும் சுற்றம், பருத்தி, பெருங் குடும்பம், குடி
7513 பாரதாயனார் பாரத்துவாச கோத்திரத்தில் உதித்தவர்
7514 பாரா பார்த்து
7515 பாராட்டு உவந்தோய் பாராட்டுக் கேட்டு மகிழ்ந்தவனே
7516 பாராட்டுதல் அன்பு செய்தல், கொண்டாடுதல்
7517 பாரி கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன்
7518 பாரித்தல் தோன்றுதல், பரப்புதல், பரக்கச் செலுத்துதல்
7519 பாரை கடப்பாரை
7520 பால் ஊழ், குலம், குழவிக்குத் தாய் ஊட்டும் பால், சாராயம், சாறு, பக்கம், பசும் பால், பாதி, பகுதி, பிரித்துக்கொடுக்கை
7521 பால் நாய் ஈன்றணிமையுடைய நாய், பாலினையுடைய நாய்
7522 பால் நிற வண்ணன் பலராமன்
7523 பால் பிரியா ஐங்கூந்தல் ஐம்பாற் பகுதி நீங்காத ஐந்துவகையினையுடைய கூந்தல்
7524 பால் மதி பால் போன்ற சந்திரன்
7525 பாலஃது பகுதியது
7526 பாலவர் பகுதியிலுள்ளவர்
7527 பாலன்ன மேனியான் நம்பி மூத்த பிரான், பலராமன்
7528 பாலாசிரியன் பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன்
7529 பாலை ஒருவகை யாழ், பாலைத் தன்மை, வெப்பம், பாலை நிலத்து உரிப் பொருளாகிய பிரிவு
7530 பாலொடு தடைஇ பாலால் சரிந்து
7531 பாலோடு அலர்ந்த முலை பாலாலே விம்மின முலை
7532 பாவடி பரந்த அடி, நிலத்தே பாவும் அடி
7533 பாவல் பரவல்
7534 பாவை இஞ்சிக் கிழங்கு, கண் மணிப் பாவை, குரவ மலர், விளையாட்டுப்பொருள், பொம்மை
7535 பாழ் விளையா நிலம், புருடன்
7536 பாழூர் குடி நீங்கிய ஊர்
7537 பாளை தெங்கு பனை முதலியவற்றின் பூவை முடிய மடல்
7538 பாற்றானது பகுதியாய் விட்டது
7539 பாறிய துணியாகிய, கிழிந்த
7540 பாறு கேடு, பருந்து
7541 பாறுதல் ஒழுங்கற்றுப் பரந்து கிடத்தல், கிழிபடுதல், சிதறுதல், நீங்குதல்
7542 பாறுபடுதல் கெடுதல்
7543 பாறு மயிர் விரிந்த மயிர்
7544 பானாள் நள்ளிரவு, யாமம்
7545 பானாள் இரவு ஒரு நாளின் பாதியாகிய இராப்பொழுது
மேல்