7546 பிச்சை சூழ் பிச்சைக்கு வந்த
7547 பிசிர் நீர்த் துளி, ஊற்று நீர், சிம்பு, பனங் குருத்து, ஓர் ஊர்
7548 பிசைதல் உரசுதல், தேய்த்தல்
7549 பிடகை பூந்தட்டு
7550 பிடர் பின் கழுத்து
7551 பிடவு பிடா
7552 பிடவூர் ஓர் ஊர்
7553 பிடி ஆயுதப் பிடி, ஆசு, குசை, குதிரையின் வாய்க் கருவியிற் கோக்குங் குசை, பெண் யானை, பிடித்தல்
7554 பிடி அமை நூல் கையாற் பிடித்தல் அமைந்த வாய்க் கயிறு
7555 பிடி மாண்டு அகப்படுத்துதலாலே மாட்சிமைப்பட்டு
7556 பிண்டம் உடல், உருவற்ற கரு, சோற்றுத் திரள், தொகுதி
7557 பிண பிணா, பெண் விலங்கு
7558 பிணக்குதல் பின்னச் செய்தல்
7559 பிணங்கு அரில் பின்னிய சிறு காடு
7560 பிணம் பயில் அழுவம் பிணங்கள் நெருங்கிய போர்க்களப் பரப்பு
7561 பிணர் சருச்சரை, சுரசுரப்பு
7562 பிணவல் பெண் பன்றி
7563 பிணவு பெண், பெண் விலங்கு
7564 பிணன் பிணம்
7565 பிணி கட்டுகை, கட்டு, காவல், பசிப் பிணி, பிணித்தல், அரும்பு, முறுக்கு, சிறு துயில், சுருள், தளை, பற்று, நோய், காம நோய், தழுவுதல், வருத்தம்
7566 பிணிக் கொண்ட பிணித்தலைச் செய்த
7567 பிணி கொள்ளும் கண் பிணித்தலைக் கொள்ளும் கண்
7568 பிணித்தல் சேர்த்துக் கட்டுதல், சுற்றுதல், தன் வசமாக்குதல், தொடுத்தல்
7569 பிணித்தற்று பிணித்தது
7570 பிணித்தன்று பிணித்தது
7571 பிணித்தியாத்தல் தொடுத்துக் கட்டுதல்
7572 பிணிமுகம் முருகக் கடவுளின் யானை, மயில்
7573 பிணியகம் காவலிடம்
7574 பிணிவிடுதல் அரும்பவிழ்தல், பின்னின பின்னலை விடுதல்
7575 பிணி வீடு இடையூறு நீங்குகை, கட்டுவிடுதல்
7576 பிணை பெண் மான், பொருத்து, விருப்பம்
7577 பிணைஇ தழுவி
7578 பிணைத்தல் கை கோத்தல்
7579 பிணைதல் செறிதல், கோத்தல்
7580 பிணைந்தன்ன தொடுத்தாலொத்த
7581 பிணை மான் பெண் மான்
7582 பிணையல் ஒன்று சேர்க்கை, மாலை
7583 பிணையல் அம் கண்ணி கட்டுதலையுடைய அழகிய கண்ணி
7584 பித்திகம் சிறு சண்பகம், பிச்சிப் பூ
7585 பித்தை மக்கள் தலைமயிர்
7586 பிதிர் பொறி
7587 பிதிர்தல் திரிதல்
7588 பிதிர்ந்த சிதறின
7589 பிதிர் மல்க துவலை மிகாநிற்க
7590 பிதிர்வு பிதிர்ச்சி
7591 பிதிர திவலை எழ
7592 பிரசம் ஒரு வகை வண்டு, தேன் இறால்
7593 பிரப்பு குறுணி வீதம் கொள்கலங்களிற் பரப்பி வைக்கும் நிவேதனப் பொருள்
7594 பிரம்பு பிரப்பங் கொடி
7595 பிரமதாயம் பிராமணர்க்கு விடப்படும் இறையிலி நிலம்
7596 பிரமம் வீணை வகை
7597 பிரிகிற்பவர் பிரிந்து செல்லும் ஆற்றலுடையவர்
7598 பிரிதல் நீங்குதல்
7599 பிரிந்தக்கால் நீங்கினால்
7600 பிரிந்து உள்ளார் பிரிந்து நினையார்
7601 பிரிந்துறைதல் பிரிந்திருத்தல்
7602 பிரியலென் பிரியேன்
7603 பிரியன்மின் பிரியாதீர்
7604 பிரிவஞ்சாதவர் பிரிந்துறைதற்கு அஞ்சாதவர்
7605 பிரிவு பிரிதல்
7606 பிரிவோய் பிரிந்திருப்பாய்
7607 பிருங்கலாதன் பிரகலாதன்
7608 பிலிற்றல் சொரிதல்
7609 பிலிற்றுதல் வெளிவிடுதல்
7610 பிழா தட்டுப் பிழா
7611 பிழி கள், தேன்
7612 பிழி மகிழ் வல்சி பிழிந்தெடுத்த மது வாகிய உணவு
7613 பிழை தவறு
7614 பிழைத்தல் தவறு செய்தல்
7615 பிழைத்தேன் தப்பினேன்
7616 பிழைப்பு கெடுதல், தவிர்தல், தப்பு
7617 பிழையாது தப்பாது
7618 பிழையா வஞ்சினம் பிழையாமையைப் புலப்படுத்தும் சபதம்
7619 பிள்ளை குட்டி, பறவைக் குஞ்சு
7620 பிள்ளைப் பெயர்ச்சி பிள்ளைத் தன்மையுள்ள போர் வீரனொருவன் தீ நிமித்தங்களுக்கு அஞ்சாது போருக்குச் செல்வதையும் அதற்காக அரசன் அவனைப் புகழ்வதையும் கூறும் புறத்துறை
7621 பிளவை பிளக்கப்பட்ட துண்டு
7622 பிளிற்றல், பிளிற்றுதல் ஒலித்தல், முழங்குதல்
7623 பிற்றை நிலை வழிபாட்டு நிலை
7624 பிற அசைநிலை, வேறு
7625 பிறக்கடி பின் வாங்கின அடி
7626 பிறக்கிடுதல் கொண்டையிலே முடித்தல்
7627 பிறக்கு பின்பு, கொண்டை, பிறப்பேன்
7628 பிறக்குதல் அடுக்குதல்
7629 பிறங்கடை வழித்தோன்றல்
7630 பிறங்கல் பிறங்குதல், மலை
7631 பிறங்கல் மலை செறிந்த மலை
7632 பிறங்கிய விளங்கிய
7633 பிறங்கு இணர் பெருமையினையுடைய பூங்கொத்து
7634 பிறங்கு இரு முந்நீர் மிக்கு வருகின்ற கரிய கடல்
7635 பிறங்கு குரல் இறடி விளங்குகின்ற கதிரையுடைய தினை
7636 பிறங்குதல் உயர்தல், செறிதல், பெருகுதல், பெருத்தல், விளங்குதல்
7637 பிறங்கு நீர் விளங்குகின்ற நீர், கங்கை
7638 பிறங்கு மலை பெரிய மலை
7639 பிறத்தல் தோன்றுதல்
7640 பிறப்பு குடிப் பிறப்பு, குடிப் பிறப்பிற்கு உரிய ஒழுக்கம்
7641 பிறர் பகைவர்
7642 பிறழ்தரும் இறந்துபடும்
7643 பிறழ்தல் இறந்துபடுதல், திகைத்தல், துள்ளுதல், புடை பெயர்தல், புரளுதல், மாறுபட்டுக் கிடத்தல், முரிதல்
7644 பிறழிய பிறழ்ந்த
7645 பிறன் பகைஞன், மனம் வேறுபட்டவன்
7646 பிறன் பெண்டிர் தனக்கு அயலாயிருக்கின்ற தந்தையுடைய பரத்தையர்
7647 பிறிதாதல் வேறுபடுதல், பசலைத் தாதல்
7648 பிறிது புலம் வேற்றிடம்
7649 பிறை பிறைச் சந்திரன், இளம்பிறை, ஓர் அணிகலன்
7650 பிறை நுதல் பிறை போலும் நுதல், பிறை போன்ற நுதலையுடையாள்
7651 பிறை நுதி நுதியையுடைய பிறை
7652 பிறை புரை நுதல் பிறையை ஒத்த நெற்றி, பிறையை ஒத்த நுதலினையுடையாய்
7653 பின் குத்துதல், பின்னுதல், பின்னல், முதுகு
7654 பின் பகல் அந்தி வேளை
7655 பின்றை பின்பு
7656 பின்னகம் பின்னின மயிர்
7657 பின்னல் பின்னப்பட்டது
7658 பின்னன் பின்னுள்ளான்
7659 பின்னிலை ஈயாது பின்னிற்றல் செய்யாது
7660 பின்னிலை முனியா நம் வயின் பின்னின்று இவள் ஆராயுமளவும் வெறுப்படையாது திரிகின்ற நம்மிடத்து
7661 பின்னிற்றல் இரந்து வேண்டி நிற்றல்
7662 பின்னு பின்னுதல்
7663 பின்னுதல் தழுவுதல், பிணித்தல், முயங்குதல்
7664 பின்னு விடு கதுப்பு பின்னல் நால விடப்பட்ட கூந்தல்
7665 பின்னொடு கெழீஇய பின்னி முடிக்கின்ற இளமைப் பருவத்தே வந்து பொருந்தின
மேல்