| 7677 |
புக்க |
குதித்த |
| 7678 |
புக்கக்கால் |
செல்ல |
| 7679 |
புக்க வழி |
சென்ற இடங்கள் |
| 7680 |
புக்காற்கு |
சென்றவனுக்கு |
| 7681 |
புக்கில் |
புகலிடம், எப்பொழுதும் புக்கிருத்தற்குரிய வீடு, புகும் இல் |
| 7682 |
புக்கீமோ |
செல்வாயாக, செல்வீராக |
| 7683 |
புக்கு |
சென்று |
| 7684 |
புக |
போக |
| 7685 |
புகர் |
கஞ்சி, கபில நிறமுள்ள மாடு, குற்றம், நிறம், புள்ளி, யானை மத்தகத்துப் புள்ளி |
| 7686 |
புகர்க் கலை |
புள்ளிமான் கலை |
| 7687 |
புகர்முகம் |
யானை |
| 7688 |
புகரி |
மான் |
| 7689 |
புகரினம் |
புகரையுடைய பசுத் திரள் |
| 7690 |
புகல் |
புகுகை, இருப்பிடம், கொண்டாடுகை, புகழ், பற்றுக்கோடு, விருப்பம், உட்புகுதல், புகும் இடமாகிய மரப்பொந்து, கூடு முலியவை |
| 7691 |
புகல்தல், புகலுதல் |
கொண்டாடுதல், விரும்புதல் |
| 7692 |
புகல் நல் ஏறு |
புகற்சியையுடைய நல்ல ஏறு |
| 7693 |
புகல்வி |
விலங்கின் ஏறு |
| 7694 |
புகல்வு |
விருப்பம், மனச் செருக்கு |
| 7695 |
புகவு |
உணவு, புகுகை, மேலேறுகை |
| 7696 |
புகழ் |
கீர்த்தி |
| 7697 |
புகழ் பாடுவோர் |
புகழ்ந்துரைப்போர் |
| 7698 |
புகழ்பு |
புகழ்தல், புகழ்ந்து |
| 7699 |
புகழ்பு ஏத்தி |
புகழ்ந்து வாழ்த்தி |
| 7700 |
புகழ் பூத்து |
பிறர் புகழ்தல் பொலிவு பெற்று |
| 7701 |
புகழா வாகை |
அகத்தி |
| 7702 |
புகற்சி |
விருப்பம், மனச் செருக்கு |
| 7703 |
புகா |
உணவு |
| 7704 |
புகாஅ |
புகுந்து |
| 7705 |
புகாஅர் |
ஆற்றுமுகம், துறைமுகம் |
| 7706 |
புகாமை |
இயலாமை |
| 7707 |
புகார் |
ஆற்றுமுகம், கழிமுகம், காவிரிப் பூம்பட்டினம் |
| 7708 |
புகின் |
செல்லில், வீழில் |
| 7709 |
புகுத்தல் |
புகுத விடுதல் |
| 7710 |
புகுத்தனர் |
புகுத விட்டார் |
| 7711 |
புகுதந்தார் |
புகுந்தார், வந்தார் |
| 7712 |
புகுதர்வாய் |
புகுவாய் |
| 7713 |
புகுதராக்கால் |
வாராத இடத்து |
| 7714 |
புகுதருதல் |
புகுதல் |
| 7715 |
புகுதல் |
ஏறுதல், செல்லுதல், பாய்தல் |
| 7716 |
புகுதி |
புகா நின்றாய் |
| 7717 |
புகை |
ஆவி |
| 7718 |
புகைஇ |
புகைத்து |
| 7719 |
புகை கொடுத்தல் |
தூபம் காட்டுதல் |
| 7720 |
புகைத்தல் |
புகையச் செய்தல் |
| 7721 |
புகூஉம் |
புகாநின்றன |
| 7722 |
புங்கவம் |
காளை |
| 7723 |
புட் கொள்ளுதல் |
நிமித்தம் கொள்ளுதல் |
| 7724 |
புட்டகம் |
புடைவை |
| 7725 |
புட்டில் |
ஒரு வகைப் பெட்டி, கூடை, கெச்சை என்னும் அணி, தக்கோலத்தின் காய், ஓலைப் பெட்டி, தண்டை |
| 7726 |
புட்பகை |
சோழன் நலங்கிள்ளியின் புனைபெயர் |
| 7727 |
புடை |
பக்கம், புடைப்பு, முதுகு, ஒலி |
| 7728 |
புடைத்தல் |
ஆரவாரித்தல், கொட்டுதல், அடித்தல் |
| 7729 |
புடைபெயர்தல் |
நிலைமாறுதல், நீங்குதல், முயங்குதலைத் தவிர்தல் |
| 7730 |
புடையல் |
மாலை, ஒலித்தல் |
| 7731 |
புடையுநள் |
அடித்துத் தூத்தலையுடையள் |
| 7732 |
புண் |
வடு |
| 7733 |
புண் அரிந்து |
புண்ணாகும்படி வெடித்து |
| 7734 |
புண் இல்லார் |
மனத்திற் காம வேட்கை இல்லாத இருடிகள் |
| 7735 |
புண் தாள் அத்திரி |
புண்ணுற்ற காலையுடைய கோவேறு கழுதை |
| 7736 |
புணர் |
புணர்ச்சி |
| 7737 |
புணர் குறி |
தலைவன் தலைவியர் சந்திக்கும் குறியிடம், புணர்தற்கு வேண்டும் நிமித்தம் |
| 7738 |
புணர்ச்சி |
கலவி |
| 7739 |
புணர்ச்சியாற் புலம்பல் |
கூட்டம் பெறாமையால் வருந்துதல் |
| 7740 |
புணர்த்தல் |
கட்டுதல் |
| 7741 |
புணர்தல் |
ஏற்புடையதாதல், கூடுதல், பரிசித்தல், முயங்குதல் |
| 7742 |
புணர் திரை |
இடைவிடாது வருகின்ற திரை |
| 7743 |
புணர்ந்த |
கூடிக் கிடந்த, பொருந்தின |
| 7744 |
புணர்ந்தக்கால் |
புணர்ந்திருக்க |
| 7745 |
புணர்ந்து போதல் |
கூடிப் போதல் |
| 7746 |
புணர் நிலை |
கூடுதல், சேர்தல் |
| 7747 |
புணர்ப்பு |
சூழ்ச்சி |
| 7748 |
புணர்பு பிரிந்து இசைத்தல் |
இணைந்தும் தனித்தும் கூறல் |
| 7749 |
புணர் மருப்பு |
இணைந்த கொம்பு |
| 7750 |
புணர்வு |
புணர்ச்சி |
| 7751 |
புணரி |
அலை, கடல் |
| 7752 |
புணரியோர் |
ஒன்று கூட்டியவர் |
| 7753 |
புணை |
ஆதாரம், உதவி, ஒப்பு, தெப்பம், வாயில் |
| 7754 |
புணை இல்லா எவ்வ நோய் |
தனக்கு உவமை கூறவொண்ணாத வருத்தத்தையுடைய காம நோய் |
| 7755 |
புணையாய மார்பு |
தெப்பமாகிய மார்பு |
| 7756 |
புத்தகல் |
புதிய அகல் |
| 7757 |
புத்தேள் |
தெய்வம், தேவர், புதியவள் |
| 7758 |
புத்தேள் இல் |
புதியவள் இல்லம் |
| 7759 |
புதல் |
அரும்பு, தூறு, சிறு தூறு, புதர், பசிய தூறுகள் |
| 7760 |
புதல்வன் |
மகன் |
| 7761 |
புதலவை |
புதல் இடங்கள் |
| 7762 |
புதவம் |
அறுகம் புல் |
| 7763 |
புதவு |
கதவு, வாயில், மதகு, அறுகு |
| 7764 |
புதா |
ஒரு வகை நாரை |
| 7765 |
புதாஅ |
புதா என்னும் நாரை |
| 7766 |
புதிது |
புதுமை, பூவிலுள்ள தேன் |
| 7767 |
புதுத் திங்கள் |
பிறைச் சந்திரன் |
| 7768 |
புது நிறை |
ஆறு முதலியவற்றின் புதுப் பெருக்கு |
| 7769 |
புதுவது |
புதிது, புதிதாக |
| 7770 |
புதுவ மலர் |
புதியனவாகிய மலர் |
| 7771 |
புதுவன ஈகை |
புதியவாயிருக்கின்ற கொடை |
| 7772 |
புது வீ |
புதிய மலர் |
| 7773 |
புதுவை |
புதியாய் |
| 7774 |
புதுவோர் |
புதிய மாந்தர் |
| 7775 |
புதுவோர்த்து |
புதிய மனிதர்களை உடையது |
| 7776 |
புதுவோர்ப் புணர்தல் |
புதிய பரத்தையரை மணஞ் செய்தல் |
| 7777 |
புதைத்தல் |
மூடுதல் |
| 7778 |
புதைதல் |
மறைதல் |
| 7779 |
புதைபெறுதல் |
புதைத்தலைப் பெறுதல் |
| 7780 |
புந்தி |
புதன் |
| 7781 |
புய்க்கலாது |
வாங்கமாட்டாது |
| 7782 |
புய்க்கும் |
பறிக்கும் |
| 7783 |
புய்த்தல் |
பறித்தல் |
| 7784 |
புயல் |
மழை, மேகம் |
| 7785 |
புயலேறு |
இடி |
| 7786 |
புரட்டுதல் |
உருட்டுதல் |
| 7787 |
புரத்தல் |
காத்தல் |
| 7788 |
புரப்போர் |
புரக்கப்படும் கேளிர் |
| 7789 |
புரவலன் |
காத்துதவுவோன் |
| 7790 |
புரவி |
குதிரை |
| 7791 |
புரவு |
அரசனால் அளிக்கப்பட்ட இரையிலி நிலம், அரசிறை, கொடை, பாதுகாப்பு |
| 7792 |
புரள |
அசைய |
| 7793 |
புரி |
கயிறு, முறுக்கு, வடம், விருப்பம் |
| 7794 |
புரி அவிழ் பூ |
தளை அவிழ்ந்த பூ |
| 7795 |
புரி அறும் நரம்பு |
முறுக்கு அறும் நரம்பு |
| 7796 |
புரி உளைக் கலிமான் |
புரிந்த பிடரி மயிரினையுடைய குதிரை |
| 7797 |
புரிசை |
மதில் |
| 7798 |
புரிசை வியலுள்ளோர் |
மதிலையுடைய ஊரிற் காவலாளர் |
| 7799 |
புரிதல் |
முறுக்குதல், ஆக்குதல், பொருந்துதல், மேவி ஆராய்தல், மனம் விரும்புதல், மனம் வேறுபடுதல் |
| 7800 |
புரி தலை தளை அவிழ்ந்த பூ |
முறுக்குண்ட தலைகள் அம் முறுக்கு நெகிழ்ந்த செவ்விப் பூ |
| 7801 |
புரி திரிபு |
வேறுபட்டுத் தப்புதல் |
| 7802 |
புரி நெகிழ் முல்லை |
முறுக்கு நெகிழ்ந்த முல்லை பூ |
| 7803 |
புரிபு |
விரும்பி |
| 7804 |
புரிபு புரிபு |
விரும்பி விரும்பி |
| 7805 |
புரி புனை பூங் கயிறு |
முப்புரியாக முறுக்கின கயிறு |
| 7806 |
புரிவு |
விருப்பம், பின்னுதல், விரும்புதல், மனம் பொருந்துதல் |
| 7807 |
புரிவுண்ட புணர்ச்சி |
ஒருவர் மனம் ஒருவரிடத்தே விரும்புதலுண்ட கூட்டம் |
| 7808 |
புருவை |
ஆடு, பெண்ணாடு |
| 7809 |
புருவைப் பன்றி |
இளமைப் பன்றி |
| 7810 |
புரை |
உயர்ச்சி, குற்றம், தேவாலயம், பெருமை, வீடு, வெளி, துவாரம் |
| 7811 |
புரைதல் |
உயர்ச்சி, ஒத்தல், நேர்தல் |
| 7812 |
புரை தீர்ந்தான் |
உயர்ச்சி தீர்ந்தவன் |
| 7813 |
புரை படுதல் |
வருந்துதல் |
| 7814 |
புரைம் |
பொருந்தும் |
| 7815 |
புரைமை |
உயர்ச்சி |
| 7816 |
புரையர் |
ஒத்தவர் |
| 7817 |
புரையுநர் |
ஒப்பவர் |
| 7818 |
புரையோர் |
பெரியோர், மெய்ப்பொருளுணர்ந்தோர் காதல் மகளிர், குற்றத்தையுடைய மறவர் |
| 7819 |
புரையோன் |
உயர்ந்தோன் |
| 7820 |
புரோசு |
புரோகிதன் |
| 7821 |
புல் |
புல்லரிசி, புன் செய்த் தானியம், தருப்பை, புல்லுதல் |
| 7822 |
புல் அணல் |
இளந் தாடி |
| 7823 |
புல் அரை ஓமை |
புல்லிய அடிப் பாகத்தையுடைய ஓமை மரம் |
| 7824 |
புல் ஆகம் |
தான் புல்லுதலையே விரும்பின இளமைச்செவ்வியையுடைய மார்பு |
| 7825 |
புல் இருள் |
புற்கென்ற இருள் |
| 7826 |
புல் இலை வைப்பு |
இலைகளால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊர் |
| 7827 |
புல் இனிது |
புல்லுதற்கு இனிது |
| 7828 |
புல் உணா |
புல்லரிசியாலாகிய உணவு |
| 7829 |
புல்லல் |
தழுவாதே, தழுவுதல், முயங்குதல் |
| 7830 |
புல்லாயோ |
புல்லாதிருந்தாயோ |
| 7831 |
புல்லார் |
பகைவர் |
| 7832 |
புல்லார்தல் |
தோல்வியுறுதல் |
| 7833 |
புல்லாராப் புணர்ச்சி |
முயங்குதல் அமையாத கூட்டம் |
| 7834 |
புல்லாரா மாத்திரை |
புல்லுதல் நிறையாத அளவு |
| 7835 |
புல்லிகை |
கன்னசாமரை, கன்னப் பூ |
| 7836 |
புல்லிகைச் சாமரை |
புல்லிகை |
| 7837 |
புல்லி முயங்குதல் |
இறுகப் புல்லிக் கூடுதல் |
| 7838 |
புல்லியார் |
புன்மைக் குணமுடையார் |
| 7839 |
புல்லியேம் |
வறியேம் |
| 7840 |
புல்லினத்தாயன், புல்லினத்தான் |
ஆட்டிடையன் |
| 7841 |
புல்லினம் |
ஆட்டினம் |
| 7842 |
புல்லீயாய் |
புல்லுதலைத் தாராய் |
| 7843 |
புல்லு |
சேருதல் |
| 7844 |
புல்லுதல் |
பொருந்துதல், கட்டுதல், கூடுதல், தழுவுதல் |
| 7845 |
புல்லூறு |
பறவை வகை |
| 7846 |
புல்லென் கண்ணர் |
பொலிவழிந்த கண்ணை உடையவர் |
| 7847 |
புல்லென் சடை |
பொலிவற்ற சடை |
| 7848 |
புல்லென்ற துறை |
பொலிவழிந்த துறை |
| 7849 |
புல்லென்றல் |
பொலிவழிதல் |
| 7850 |
புல்லென்ற வனப்பு |
பொலிவு அழிந்த அழகு |
| 7851 |
புல்லெனல் |
புற்கெனல், பொலிவழிதல் |
| 7852 |
புல்வாய் |
மான் |
| 7853 |
புல்வாய் இரலை |
ஆண்மான் |
| 7854 |
புல் வீழ் இற்றி |
புல்லிய விழுதை உடைய இற்றி மரம் |
| 7855 |
புல் வேய் குரம்பை |
புல்லால் வேயப் பெற்ற வீடு |
| 7856 |
புலக்குவள் |
புலப்பள் |
| 7857 |
புலத்தகை |
புலக்கும் தகுதி, புலக்குந் தகைமை |
| 7858 |
புலத்தல் |
வெறுத்தல், தணித்தல், தனித்து வருந்துதல் |
| 7859 |
புலத்தி |
வண்ணாத்தி |
| 7860 |
புலப்பது |
புலக்கின்ற தொழில் |
| 7861 |
புலப்பவர் |
வெறுப்பவர் |
| 7862 |
புலம் |
அறிவு, இடம், திக்கு, வேதம், நிலம், நிலத்திற் பயிர், மேயும் புலம் |
| 7863 |
புலம்பன் |
நெய்தல் நிலத் தலைவன் |
| 7864 |
புலம்பு |
ஒலி, கடற்கரை, தனிமை, தனிமையிடம், வருத்தம், வறுமை |
| 7865 |
புலம் புகழ் ஒருவன் |
யாவரும் அறிவைப் புகழப்படும் ஒப்பில்லாதவன் |
| 7866 |
புலம்புதல் |
தனித்தல், வாடுதல், தனித்து நிற்றல், தனித்து உறைதல், வருந்திக் கூறுதல், வருந்துதல் |
| 7867 |
புலமை |
மெய்ஞ்ஞானம் |
| 7868 |
புலர் |
உலர்கை, புலர்ச்சி |
| 7869 |
புலர் குரல் |
முற்றின ஏனல் |
| 7870 |
புலர்தல் |
முற்றுதல், உலர்தல் |
| 7871 |
புலர்ந்து |
முற்றி |
| 7872 |
புலர்பு |
புலரி |
| 7873 |
புலர்வது |
வெளிப்படுவது |
| 7874 |
புலர்வில புண் |
புலர்ச்சியிலவாகிய புண்கள் |
| 7875 |
புலர |
காய, புலால் நாற |
| 7876 |
புலராக் கண் |
நீர் மாறாத கண்கள் |
| 7877 |
புலரி |
இரவு, விடியற்காலம் |
| 7878 |
புலரி விடியல் |
புலர்தலையுடைய விடியற்காலம் |
| 7879 |
புலவர் |
புலமையுடையோர், அறிவுடையோர் |
| 7880 |
புலவராற்றுப்படை |
ஒரு புலவன் தனக்குப் பரிசளித்த அரசனையும் அவனது தலைநகரையும் வேறு புலவனிடம் சிறப்பித்து அவ் அரசினிடத்து அவனை ஆற்றுப்படுத்தலைக் கூறும் புறத்துறை |
| 7881 |
புல வரை |
அறிவின் எல்லை, நில எல்லை |
| 7882 |
புலவல் |
புலவு, புலத்தல், வெறுப்பு, புலால் நாற்றம் |
| 7883 |
புலவாதி |
புலவாதே |
| 7884 |
புலவு |
புலால், புலால் நாற்றம் |
| 7885 |
புலவுதல் |
புலால் நாற்றமடித்தல், வெறுத்தல் |
| 7886 |
புலவுதி |
வெறுக்கின்றாய் |
| 7887 |
புலவேன் |
வெறேன் |
| 7888 |
புலன் |
அறிவு, வயல் |
| 7889 |
புலன் நா |
அறிவினையுடைய சான்றோருடைய நா |
| 7890 |
புலன் நா உழவர் |
புலவர் |
| 7891 |
புலன் நாவில் பிறந்த சொல் |
அறிவினையுடைய சான்றோரின் நாவிற் பிறந்த கவிகள் |
| 7892 |
புலனுழுதுண்மார் |
கற்றோர் |
| 7893 |
புலா |
புலவு |
| 7894 |
புலாஅ அம்பு |
புலால் நாறும் அம்பு |
| 7895 |
புலால் |
புலால் நாற்றம் |
| 7896 |
புலாவுதல் |
புலவு |
| 7897 |
புலி |
காட்டு விலங்குகளுள் ஒன்று, புலிப் பொறி |
| 7898 |
புலி கடிமால் |
புலியைக் கொன்று முனிவரை மீட்ட இருங்கோவேள் என்னும் சிற்றரசன் |
| 7899 |
புலி செத்து |
புலியோ என்று கருதி |
| 7900 |
புலித் தொடர் |
சங்கிலி வகை |
| 7901 |
புலிப் பற் தாலி |
புலியின் பற்களாலாகிய கழுத்தணி |
| 7902 |
புலிப் போத்து |
புலிக் குட்டி |
| 7903 |
புலியுறை |
புலித்தோலாற் செய்த ஆயுதத்தின் மேலுறை |
| 7904 |
புலைத்தி |
இழிகுலத்துப் பெண், வண்ணாத்தி |
| 7905 |
புலையன் |
புரோகிதன், புலைத் தொழிலையுடைய பாணன் |
| 7906 |
புவ்வத் தாமரை |
திருமாலின் நாபியினின்று எழுந்த பழைய கமலம் |
| 7907 |
புழகு |
மலையெருக்கு |
| 7908 |
புழல் |
உள் தொளை, பண்ணியாரம் |
| 7909 |
புழல் வல்சி |
உள்தொளையையுடைய சிற்றுண்டி, தேங்குழல் |
| 7910 |
புழற் காளாம்பி |
உட்பொய்யாகிய காளான் |
| 7911 |
புழற் கோடு |
உள்தொளையுள்ள கொம்பு |
| 7912 |
புழுக்கல் |
சோறு |
| 7913 |
புழுக்கு |
புழுங்க வெந்த உணவு, பருப்பு இறைச்சி இவற்றின் வேவை |
| 7914 |
புழுகு |
மல்லிகை மொட்டைப் போன்ற அம்புத்தலை |
| 7915 |
புழுகு நெய் |
புழுகு சட்டத்திலிருந்து எடுக்கும் வாசனைப் பண்டம் |
| 7916 |
புழுங்கல் |
அவித்தது |
| 7917 |
புழுதி |
காய்ந்த நிலம் |
| 7918 |
புழை |
சிறு வாயில், ஒடுக்க வழி, காட்டுவழி, சாளரம் |
| 7919 |
புள் |
பறவை நிமித்தம், கைவளை, மது பானம், குருகினம், பறவை, பறவையொலி, வானம்பாடி |
| 7920 |
புள் இயல் கலி மா |
புட்போல நிலம் தீண்டாத செலவினையுடைய முழங்கிய குதிரை |
| 7921 |
புள் இயல் மா |
பறவையின் வேகம் உடைய குதிரை |
| 7922 |
புள்ளி |
பொட்டுக் குறி |
| 7923 |
புள்ளி இரலை |
புள்ளி மான் |
| 7924 |
புள்ளிக் களவன் |
பொறியையுடைய நண்டு |
| 7925 |
புள்ளினம் |
பறவைகள், பறவைத் திரள் |
| 7926 |
புளி |
புளிங் கறி |
| 7927 |
புளிங் கூழ் |
புளியிட்டு ஆக்கிய கூழ்வகை |
| 7928 |
புளிப் பாகு |
குழம்புணவு |
| 7929 |
புளி மிதவை |
புளிங் கூழ் |
| 7930 |
புற்கை |
மிக்க நீரால் அடப்பட்ட உணவு |
| 7931 |
புற்றம் |
புற்று |
| 7932 |
புற |
புறா |
| 7933 |
புறக்கு |
வெளிப்புறம் |
| 7934 |
புறக்கொடுத்தல் |
தோற்றோடுதல் |
| 7935 |
புறக்கொடை |
பிரிந்த நிலை |
| 7936 |
புறங்கடை |
பின் பிறந்தோன், இற் புறம். புறமாகிய புறம் |
| 7937 |
புறங்காணுதல் |
முறியடித்தல் |
| 7938 |
புறங்காத்தல் |
பாதுகாத்தல் |
| 7939 |
புறங் கால் |
பாதத்தின் மேற்புறம் |
| 7940 |
புறச்சேரி |
புறஞ்சேரி |
| 7941 |
புறஞ்சாய்தல் |
தோற்றல் |
| 7942 |
புறஞ்சாய்ந்து |
தோற்று |
| 7943 |
புறஞ்சிறை |
அருகிலுள்ள இடம், மாளிகை முதலியவற்றிற்கு அருகிலுள்ள இடம், வேலிக்குப் புறம்பானது |
| 7944 |
புறஞ் சேர்பு |
புறத்தே சேர்ந்து |
| 7945 |
புறஞ் சேர உயிர்த்தல் |
புறத்தே |
| 7946 |
புல்லுதலால் |
நெட்டுயிர்ப்புக் கொள்ளுதல் |
| 7947 |
புறத்தை |
முதுகையுடையை |
| 7948 |
புறந்தரல், புறந்தருதல் |
பாகதுகாத்தல், போற்றுதல், நிறம் உண்டாதல், உண்டாக்கப்படுதல், பண்ணப்படுதல் |
| 7949 |
புறந்தருநர் |
பாதுகாப்பவர் |
| 7950 |
புறந்துரத்தல் |
எருதுகளை முதுகிலே அடித்து ஓட்டுதல் |
| 7951 |
புறந்தை |
புறையாறு |
| 7952 |
புறநிலை |
வேறுபட்ட நிலை, ஏவல் செய்து பின்னிற்கை |
| 7953 |
புறப்பண் |
முதுகில் பட்ட புண் |
| 7954 |
புறம் |
புறக்கொடை, அலர் மொழி, காலம், பக்கம், உடம்பு, முதுகு, வெளி, புறஞ்சொல், புறப்பொருள், வெளிப்புறம் |
| 7955 |
புறம்பு |
முதுகு |
| 7956 |
புறம்பு அழித்து நீவ |
முதுகைப் பலகால் அழித்தழித்துத் தடவ |
| 7957 |
புறம் புல்லுதல் |
முதுகிலே புல்லுதல் |
| 7958 |
புறம்பெறுதல் |
புறக்கொடையைப் பெறுதல் |
| 7959 |
புறமாறப்பட்டவர் |
தனக்குப் புறஞ் சொல் உண்டாக அருளைக் கைவிடப்பட்ட மகளிர் |
| 7960 |
புறமாறுதல் |
இடம் மாறுதல், வலிமையிழத்தல், கைவிடுதல், அவ்விடம் விட்டுப் போதல், இருந்தவிடத்தினின்றும் எழுந்திருந்து போதல் |
| 7961 |
புறவு |
புறா, ஒரு பறவை, காடு, சிறு காடு, முல்லை நிலம், முல்லைக் கொடி, புறம்பு |
| 7962 |
புறன் |
இடம், பிற்காலம் |
| 7963 |
புறனிலை |
பின்னிலை |
| 7964 |
புன்கண் |
துயரம், பொலிவழிவு, வறுமை, துன்பம் |
| 7965 |
புன்கண்மை |
புன்கண், மிடி |
| 7966 |
புன்கம் |
சோறு |
| 7967 |
புன் கால் |
மெல்லிய காம்பு |
| 7968 |
புன் கால் உகாய் |
புல்லிய அடியை யுடைய உகாய் மரம் |
| 7969 |
புன்கு |
ஒரு மரம் |
| 7970 |
புன்செய் |
புன்செய்ப் பயிர் செய்வற்கேற்ற நிலம், வானம் பார்த்த பூமி |
| 7971 |
புன்தலை |
புல்லிய தலை, இளந் தலை, சிவந்த மயிருள்ள தலை |
| 7972 |
புன் புலம் |
தரிசு நிலம், புன்செய் நிலம் |
| 7973 |
புன் பைதலை |
பெரிய துன்பம் |
| 7974 |
புன்மை |
இழிவு, துன்பம், வருத்தம், வறுமை |
| 7975 |
புன்னம்புலரி |
வைகறை |
| 7976 |
புன்னாகம் |
புன்னை |
| 7977 |
புன்னை |
மரவகை |
| 7978 |
புனம் |
மலைச் சார்பான கொல்லை, மலைக் கொல்லை, காடு, மேயும் புலம் |
| 7979 |
புனல் |
நீர், ஆறு, குளிர்ச்சி |
| 7980 |
புனல் அம் புதவு |
நீர் வழங்கும் வாய்த்தலை |
| 7981 |
புனல் பாய்தல் |
நீரில் விளையாடுதல் |
| 7982 |
புனல் வாயில் |
வாய்த்தலை, மதகு |
| 7983 |
புனலாடப் பண்ணியாய் |
புனலாடும் படி பண்ணின நீ |
| 7984 |
புனலிப் பூ |
மோசி மல்லிகைப் பூ |
| 7985 |
புனலுளாய் |
புனலிடத்தே விளையாடுகின்றாய் |
| 7986 |
புனவர் |
குறிஞ்சி நில மாக்கள் |
| 7987 |
புன வரை |
புனத்தை யுடைய மலை |
| 7988 |
புன வளர் பூங்கொடி அன்னாய் |
புனத்திடத்து வளர்ந்த பூவையுடைய கொடியை ஒப்பாய் |
| 7989 |
புனவன் |
குறவன் |
| 7990 |
புனற் சிறை |
கல்லணை |
| 7991 |
புனற் புதவு |
வாய்த்தலை |
| 7992 |
புனிற்றா |
ஈன்றணிமையுள்ள பசு அல்லது எருமை |
| 7993 |
புனிறு |
ஈன்றணிமை, புதிய ஈரம் |
| 7994 |
புனிறு தீர் ஏனல் |
முற்றின ஏனல் |
| 7995 |
புனை இருங் கதுப்பு |
அலங்கரித்த கரிய கூந்தல் |
| 7996 |
புனைகோ |
புனைவேனோ |
| 7997 |
புனைதல் |
அலங்கரித்தல், சித்திரம் எழுதுதல், கட்டுதல், சூடுதல், ஒழுங்காக அமைத்தல், செய்யுள் அமைத்தல், செய்தல், முடைதல், கைசெய்தல், பொத்துதல் |
| 7998 |
புனை நலம் |
கைசெய்த நலம் |
| 7999 |
புனை மாண் அம்பு |
புனைதல் மாட்சிமைப்பட்ட அம்பு |