| 8000 |
பூ |
மலர், நிறம், புகர், பூத் தொழில், பொலிவு, கூர்மை, யானையின் நுதற்புகர், யானையின் நெற்றிப் பட்டம், தாமரைப் பூ, பூவின் தன்மை |
| 8001 |
பூ அணி வதுவை |
பூப்பேசிக் கொள்ளுகின்ற கலியாணம், பரிசம் கொடுத்து விலைமாதரை மணத்தல் |
| 8002 |
பூ எழில் உண்கண் |
பூவினது அழகையுடைய மை உண்ட கண் |
| 8003 |
பூக் கண் |
கூரிய கண் |
| 8004 |
பூக்குந்து |
மலரும் |
| 8005 |
பூக் குறுதல் |
மலர் பறித்தல் |
| 8006 |
பூக் கொய்தல் |
பூப் பறித்தல் |
| 8007 |
பூக் கோட் காஞ்சி |
பூக்கோள் நிலை, போரை மேற்கொள்ளும் போது வெட்சி முதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக் கொள்ளுதலைக் கூறும் புறத்துறை |
| 8008 |
பூக்கோள் |
பூக்கோள் நிலை |
| 8009 |
பூங் கண் |
அழகிய இடம் |
| 8010 |
பூங் கண் மடந்தை |
நீலமலர் போன்ற கண்களையுடைய பெண் |
| 8011 |
பூங் கரை நீலம் |
பூத் தொழிலினையும் கரையினையுமுடைய நீலத்தையுடைய ஆடை, பூத்தொழிலையுடைத்தாகிய கரையினையுடைய நீல ஆடை |
| 8012 |
பூங் கோடு |
பொலிவு பெற்ற சங்கு |
| 8013 |
பூசல் |
ஆரவாரம், ஓசை, கழுவல், வருத்தம் |
| 8014 |
பூசல் தொடங்கினன் |
கூப்பிடத் தொடங்கினான் |
| 8015 |
பூசலிடுவேன் |
கூப்பிடுவேன் |
| 8016 |
பூசா வாயர் |
கழுவாத வாயினையுடையர் |
| 8017 |
பூசுதல் |
தேய்த்தல் |
| 8018 |
பூஞ்சினை |
பூக்களை யுடைய கிளை |
| 8019 |
பூஞ் சுமடு |
பூவினாலாகிய சும்மாடு |
| 8020 |
பூஞ் செய் கண்ணி |
பூவாற் செய்த கண்ணி |
| 8021 |
பூஞ்சோலை |
மலர்ச் சோலை |
| 8022 |
பூட்கை |
ஒரு வினையை முடித்தற்கு மேற்கொள்ளும் உறுதி, வலிமை |
| 8023 |
பூட்டு |
பிணிப்பு, பூட்டுதல் |
| 8024 |
பூட்டுதல் |
அணிதல், எருது முதலியவற்றைப் பிணைத்தல் |
| 8025 |
பூண் |
அணி |
| 8026 |
பூண் ஆகம் நோக்கி |
பூணை உடைய ஆகத்திற் புணர்ச்சியை மனத்தால் கருதி |
| 8027 |
பூண்க |
பூண்பதாக |
| 8028 |
பூண் ஞாண் |
பூணூல் |
| 8029 |
பூண்டல் |
அணிதல் |
| 8030 |
பூண்டவை |
பூணப்பட்டவை |
| 8031 |
பூண்டி |
பூண்டனை |
| 8032 |
பூணல் |
தாங்கல் |
| 8033 |
பூணினாற் குறி கொண்டாள் |
பூணாலே கருதுதலை மனத்தாற் கொண்டவள் |
| 8034 |
பூணுதல் |
மேற் கொள்ளுதல், மாலை அணிதல், அணியப் படுதல் |
| 8035 |
பூத்தல் |
பொலிவு பெறுதல், மலர்தல் |
| 8036 |
பூதம் |
பூத கணம் |
| 8037 |
பூந் தாமரைப் போது |
பொலிவையுடைய தாமரையினது பூ |
| 8038 |
பூந்தார் |
பூமாலை |
| 8039 |
பூந்துகில் |
பீதாம்பரம் |
| 8040 |
பூ நீர் |
அரக்கு நீர் |
| 8041 |
பூ நுதல் |
பொலிவு பெற்ற நுதலினையுடையாள் |
| 8042 |
பூப் பலி விடல் |
பூவைப் பலியாகப் போக விடுதல் |
| 8043 |
பூம் பரப்பு |
பூக்களையுடைய சோலை |
| 8044 |
பூரித்தல் |
நிறைத்தல் |
| 8045 |
பூரிமம் |
தெருவின், சிறகு, வீட்டின் வரிசை |
| 8046 |
பூரிய மாக்கள் |
பூரியார், கீழோர் |
| 8047 |
பூவல் |
செம்மண், செம்மண் நிலம், சிவப்பு |
| 8048 |
பூவல் ஊட்டி |
செம்மண்ணைப் பூசி |
| 8049 |
பூவன் |
பிரமன் |
| 8050 |
பூவா வஞ்சி |
வஞ்சி என்னும் ஊர் |
| 8051 |
பூ விருந்து |
பூவினது தேன் |
| 8052 |
பூ விலை |
போகத்துக்கு உரிய விலை |
| 8053 |
பூ வீ கொடி |
பூக்கள் ஒழியப் பெற்ற கொடி |
| 8054 |
பூவுயிர்த்தல் |
மலர்தல் |
| 8055 |
பூவை |
நாகணவாய்ப் புள், பெண் |
| 8056 |
பூவை நிலை |
அரசனைத் தேவரோடு ஒப்பக் கூறும் புறத்துறை |
| 8057 |
பூழ் |
குறும்பூழ்ப் பறவை |
| 8058 |
பூழி |
புழுதி, பொடி |
| 8059 |
பூழியர் |
பூழி நாட்டார் |
| 8060 |
பூழியர் பெருமகன் |
சேரமான் |
| 8061 |
பூழில் |
அகில் |
| 8062 |
பூளை |
செடி வகை |