| 8063 |
பெட்கும் |
விரும்பிப் பெறும் |
| 8064 |
பெட்டல் |
விரும்புதல் |
| 8065 |
பெட்டவை |
விரும்பியவை |
| 8066 |
பெட்டாங்கு |
விரும்பியபடி |
| 8067 |
பெட்ப |
விரும்ப |
| 8068 |
பெட்பு |
பேணுகை, விருப்பம் |
| 8069 |
பெடை |
பெண் பறவை, அன்னப் பேடு, பெண் எருமை, பெண் புறா |
| 8070 |
பெண் |
மண மகள், மனைவி |
| 8071 |
பெண் அன்று |
பெண் தன்மை அன்று |
| 8072 |
பெண் இன்றி |
பெண் தன்மை இன்றி |
| 8073 |
பெண் கொலை |
ஸ்திரீ ஹத்தி |
| 8074 |
பெண்டு |
மனைவி |
| 8075 |
பெண்ணை |
பனை, ஓர் ஆறு, தென் பெண்ணையாறு |
| 8076 |
பெண்ணைப் பிணர்த்தோட்டுப் பைங் குரும்பை |
பனையினது சருச்சரையோடு கூடிய முகிழையுடைய பசிய குரும்பை |
| 8077 |
பெண்ணைப் பிழி |
பனங் கள் |
| 8078 |
பெண்ணை மடல் |
பனை மடல் |
| 8079 |
பெண் நீர்மை |
பெண் தன்மை |
| 8080 |
பெண்மை |
பெண்ணின் தன்மை |
| 8081 |
பெய் கரும்பு |
எழுது கரும்பு |
| 8082 |
பெய்தல் |
அணிதல், எழுதுதல், கட்டுதல், பரப்புதல், வார்த்தல், இடுதல், சொரிதல், புகுதல், முடித்தல், விடுதல் |
| 8083 |
பெய்ம்மார் |
பெய்ய |
| 8084 |
பெய்மணி |
நாப் பெய்த மணி |
| 8085 |
பெயர் |
நாமம், புகழ், பொருள், பொருளிலக்கணம் கூறும் நூல், வஞ்சினம், வடிவு |
| 8086 |
பெயர்க்குந்து |
பெயர்க்கும் |
| 8087 |
பெயர்த்தரல் |
மீட்டல் |
| 8088 |
பெயர்த்தல் |
அப்புறப் படுத்துதல், ஒடுக்கிக் கொள்ளுதல், செலுத்துதல், பிரித்தல், மாறி வாசித்தல், வாங்கிக் கோடல், ஏறட்டுக் கோடல், நீட்டல், போக்குதல், மறுத்தல், மீட்டு ஒடுக்கிக் கொள்ளுதல், மீண்டும் தன்னிடத்தே ஒடுக்கிக் கொள்ளுதல் |
| 8089 |
பெயர்த்தாற்றுதல் |
மீண்டு செய்தல் |
| 8090 |
பெயர்த்து |
பெயர்த்தும் |
| 8091 |
பெயர்த்து ஒற்றி |
மீண்டு அடிப் பறித்துச் சேர்ந்து |
| 8092 |
பெயர்த்தும் |
பின்னும் |
| 8093 |
பெயர்தந்து |
பெயர்த்து |
| 8094 |
பெயர்தருதல் |
மீளுதல் |
| 8095 |
பெயர்தல் |
கை விட்டுப் போதல், நீங்கிச் செல்லுதல், கிளர்தல், படுதல், மாறுதல், கைவிடுதல், மீண்டு போதல், மீளுதல் |
| 8096 |
பெயர்தொறும் |
மீண்டு வருந்தோறும் |
| 8097 |
பெயர்ந்தனன் |
தவிர்ந்தனன் |
| 8098 |
பெயர்ந்தாங்கு |
மீண்டு சென்றாற்போல |
| 8099 |
பெயர்ப்பின் |
போக்குதலான் |
| 8100 |
பெயர்பு |
உலாவி |
| 8101 |
பெயர்பு பெயர்பு |
மீண்டு மீண்டு |
| 8102 |
பெயர் புறம் |
புறங் கொடுக்கை |
| 8103 |
பெயரன் |
பெயரையுடையவன் |
| 8104 |
பெயரி |
பெயர்த்து |
| 8105 |
பெயரிய |
பெயர் பெற்ற, பெயரால் அழைத்த |
| 8106 |
பெயல் |
மழை, மேகம், பெய்தல் தொழிலையுடைய மேகம் |
| 8107 |
பெயல் ஆன்று |
பெயல் நீங்கி |
| 8108 |
பெரிதாயின் |
மிகுமாயின் |
| 8109 |
பெரிது |
மிகவும் அரிது, மிக |
| 8110 |
பெரிது கமழ் அலரி |
பெரிதும் மணம் வீசுகின்ற மலர் |
| 8111 |
பெருக்கு |
வெள்ளம், பெருகுதல் |
| 8112 |
பெருகுதல் |
வளர்த்தல், பெருகச் சுரத்தல், பெருத்தல் |
| 8113 |
பெருங் கடை இறந்து |
பெரிய தலைக் கடை வாயிலையும் நீங்கி |
| 8114 |
பெருங் கருங் கூத்து |
பெரிய இழிந்த நாடகம் |
| 8115 |
பெருங் காடு |
சுடுகாடு |
| 8116 |
பெருங்கை |
யானை |
| 8117 |
பெருங் கோக் கிள்ளி |
கோப்பெருஞ் சோழன் |
| 8118 |
பெருஞ் செய் |
மேம்பாடுள்ள செயல் |
| 8119 |
பெருஞ் செய்யாளன் |
பெரிய வீரச் செயலுள்ளவன் |
| 8120 |
பெருஞ்சோறு |
அரசன் தன் படைத் தலைவர்க்கு அளிக்கும் பேருணவு |
| 8121 |
பெருந்தகை |
பெருமையுள்ளவன் |
| 8122 |
பெருந் தண் காலை |
மிக்க தண்மையையுடைய பருவம் |
| 8123 |
பெருந் திணை |
பொருந்தாக் காமம் |
| 8124 |
பெருந்தேன் |
கூட்டும் தேன், தேனீக்கள், பெருந் தேனீ, மலைத்தேன் |
| 8125 |
பெரு நகை |
பேரிகழ்ச்சி, பெரியதோர் இகழ்ச்சி |
| 8126 |
பெரு நன்று |
பெரிய நன்மை |
| 8127 |
பெருநீர் |
கடல் |
| 8128 |
பெருப்ப |
மிக |
| 8129 |
பெரும் பயறு |
காராமணி |
| 8130 |
பெரும் பாட்டீரம் |
பெரிய செவ்வியை யுடைய ஈரம் |
| 8131 |
பெரும்பாணன் |
பெரிய பாணன் |
| 8132 |
பெரும் பாழ் செய்தல் |
முழுதும் அழித்தல் |
| 8133 |
பெரும்பிறிது |
மரணம் |
| 8134 |
பெரும்புலர் விடியல் |
பெரும்புலர் காலை, அதிகாலை |
| 8135 |
பெரும் பூண் |
பேரணிகலம் |
| 8136 |
பெரும் பூண் பொறையன் |
பெரிய அணிகலத்தை யுடைய சேரன் |
| 8137 |
பெரும்பெயர் |
மோட்சம், பெரும்புகழ் |
| 8138 |
பெரும் பெயர் உலகம் |
துறக்கம் |
| 8139 |
பெரும் பெயல் |
கனத்த மழை |
| 8140 |
பெரும்பேது |
சாக்காடு, பெரும் பித்து |
| 8141 |
பெரும் பேதுறுதல் |
பெரியதாகிய பித்தேறுதல் |
| 8142 |
பெரும் பொன் படுதல் |
தோற்றப் பொலிவுண்டாதல் |
| 8143 |
பெரும் பொளி வெண் நார் |
பெரிதாக உரித்த வெள்ளிய நார் |
| 8144 |
பெரும |
பெருமா |
| 8145 |
பெருமகன் |
தலைவன் |
| 8146 |
பெருமணம் |
கலியாணம் |
| 8147 |
பெருமணித் திண் தேர் |
பெரிய மணி அழுத்தின திண்ணிய தேர் |
| 8148 |
பெருமான் |
பெரியோன் |
| 8149 |
பெருமிதம் |
செருக்கு |
| 8150 |
பெருவாய்மலர் |
இருவாட்சி |
| 8151 |
பெருவாரி |
பெரு வெள்ளம் |
| 8152 |
பெருவிதுப்பு |
பெரிய விரைவு, பெரிய நடுக்கம் |
| 8153 |
பெரு விறல் |
முருகக் கடவுள், தலைவன் |
| 8154 |
பெயர் பெயர்த்தல் |
புதல்வனை ஈன்றதனால் பருவப் பெயர் மாறுபடுதல் |
| 8155 |
பெற்றத்தார் |
பசுவை உடைய ஆய்ச்சியர் |
| 8156 |
பெற்றதை |
பெற்றது |
| 8157 |
பெற்றம் |
பசு |
| 8158 |
பெற்றிகும் |
பெற்றோம் |
| 8159 |
பெற்றிசின் |
பெற்றாள் |
| 8160 |
பெற்றிசினோர் |
பெற்றோர் |
| 8161 |
பெற்றியாள் |
தன்மையையுடையவள் |
| 8162 |
பெறல் |
பெறுதல் |
| 8163 |
பெறாஅ |
பெறாமல் நின்ற |
| 8164 |
பெறீஇயர் |
பெறுவாயாக |
| 8165 |
பெறுகற்பின் |
பெறின் |
| 8166 |
பெறுதல் |
அடைதல், அறிதல், கூடுதல் |
| 8167 |
பெறுதுமோ |
பெறுவேமோ |
| 8168 |
பெறுநர் |
பெறுகின்றவர் |
| 8169 |
பெறுபவோ |
பெறுவார்களோ |
| 8170 |
பெறூஉம் |
பெறும், கூடும், கொள்ளும் |