8171 பே அச்சம்
8172 பேஎம் அச்சம்
8173 பேஎன் பேன்
8174 பேகன் கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன்
8175 பேடை பெண் பறவை
8176 பேணாமை உட்கொள்ளாமை, பரிகரி யாமை, பாதுகாவாமை
8177 பேணார் அஞ்சார், வழிபடாதார்
8178 பேணான் பாதுகாவான், பேணுகின்றிலன்
8179 பேணி விரும்பி
8180 பேணுதல் பாதுகாத்தல், மதித்தல், வழிபடுதல், விரும்புதல், அறிதல், இலட்சியம் பண்ணுதல், அலங்கரித்தல், உட்கொள்ளுதல், ஒத்தல், பரிகரித்தல்
8181 பேது இறந்துபாடு, மயக்கம்
8182 பேதுற்றிசின் மயங்கியுளேன்
8183 பேதுறுதல் வருந்துதல், மயக்க முறுதல் பித்தேறுதல்
8184 பேதுறூஉம் மயக்க முறுத்தும்
8185 பேதை பேதைமை, அறியாமை
8186 பேதைமை அறிவின்மை
8187 பேதை ஊர் பேதைமையையுடைய ஊர்
8188 பேதையார் அறியாதார்
8189 பேதையை அறியாமையையுடையை, பேதைத் தன்மையையுடையை
8190 பேய் பிசாசு
8191 பேய்த்தேர் கானல்
8192 பேர் அஞர் பெரிய வருத்தம்
8193 பேர் அமர் உண்கண் பெரிய அமர் செய்யும் மை உண்ட கண்
8194 பேர் அமர்க் கண் பெருத்து அமர்ந்த கண்
8195 பேர் இசை பெரும் புகழ்
8196 பேர் ஊர் பெரிய ஊர்
8197 பேர்தந்து பேர்ந்து
8198 பேர் மகிழ் பெரு மகிழ்ச்சி
8199 பேரணி கிம்புரி
8200 பேராண்மை பெரிய ஆண்மை
8201 பேரியாழ் பெரிய யாழ்
8202 பேழ் பெருமை
8203 பேழ் வாய் பெரிய வாய்
8204 பேழை பெட்டி
8205 பேன் தலைமயிருள் வாழும் சிறு செந்து
மேல்