| 8206 |
பை |
இளமை, உடல் வலி, பசுமை, படம், உறை |
| 8207 |
பைக்கலம் |
பச்சைக் குப்பி |
| 8208 |
பைங்கண் |
கோபத்தாற் பசிய கண், பசிய உடம்பு |
| 8209 |
பைங் கனி |
செவ்விக் கனி |
| 8210 |
பைங் காய் |
செவ்விக் காய், பசுமையான காய் |
| 8211 |
பைங் கொடி |
பச்சிலைக் கொடி வகை |
| 8212 |
பைஞ்சாய் |
பஞ்சாய்க் கோரை |
| 8213 |
பைஞ்சுரம் |
பஞ்சுரம், பாலைப் பண் |
| 8214 |
பைஞ் சுனை |
பசிய சுனை |
| 8215 |
பைஞ் சேறு |
சாணம் |
| 8216 |
பைஞ் ஞிணம் |
புதிய இறைச்சி, செவ்வி நிணம் |
| 8217 |
பைஞ் ஞிலம் |
மக்கட் தொகுதி, படைத் தொகுதி |
| 8218 |
பைத்த |
சோபித்த, படம் விரித்த |
| 8219 |
பைத்தல் |
படம் விரித்தல் |
| 8220 |
பைதல் |
குளிர், துன்பம், நோய், வருத்தம் |
| 8221 |
பைதல் நோய் |
வருத்தத்தையுடைய காம நோய் |
| 8222 |
பைதல |
வருத்தத்தை யுடையன |
| 8223 |
பைதிரம் |
நாடு |
| 8224 |
பை தீர் |
பசுமை அற்ற |
| 8225 |
பைது |
ஈரம், பசுமை |
| 8226 |
பைந் தலை |
பசிய தலை |
| 8227 |
பைந் தாது |
செவ்வித் தாது |
| 8228 |
பைந் தார் |
செவ்வி மாலை |
| 8229 |
பைந் தொடி |
பசிய தொடியினை யுடையாள் |
| 8230 |
பைபய, பைப்பய |
மெத்தென மெத்தென |
| 8231 |
பைம் புதல் |
பசிய தூறு |
| 8232 |
பைய |
மெல்ல |
| 8233 |
பையாத்தல் |
வருந்துதல் |
| 8234 |
பையுள் |
துன்பம், நோய், வருத்தம் |
| 8235 |
பையென்ற நெஞ்சம் |
ஒளி குறைந்த நெஞ்சம் |
| 8236 |
பையென்றன |
ஒளி மழுங்கின |
| 8237 |
பையென |
மெல்ல, மெத்தென |
| 8238 |
பையெனல் |
ஒளி மழுங்குதற் குறிப்பு, மெதுவாதற் குறிப்பு, வருந்தற் குறிப்பு, ஒளி பாழ்படல் |