| 8239 |
பொகுட்டு |
கலங்கல் நீரில் எழுங் குமிழ், கொட்டை |
| 8240 |
பொகுவல் |
பறவை வகை |
| 8241 |
பொங்கடி |
யானை |
| 8242 |
பொங்கர் |
சோலை, மரக் கொம்பு |
| 8243 |
பொங்கல் |
பொங்குதல், பரவி எழுதல் |
| 8244 |
பொங்கல் வெண் காழ் |
பஞ்சினையுடைய வெள்ளிய கொட்டை |
| 8245 |
பொங்கலாடுதல் |
பஞ்சு போலப் பரவி யெழுதல் |
| 8246 |
பொங்கழி |
தூற்றாப் பொலி |
| 8247 |
பொங்குதல் |
துள்ளுதல், மேற் கிளர்தல், மிக்கெழுதல் |
| 8248 |
பொடி |
சாம்பல் |
| 8249 |
பொடித்தல் |
வெறுத்தல் |
| 8250 |
பொடிதல் |
தீய்தல், வெறுத்தல், தீய்ந்து போதல் |
| 8251 |
பொடியழல் |
பொடி மூடு தழல் |
| 8252 |
பொத்தி |
ஒரு பழைய சோழனது நகர், ஒரு புலவர் |
| 8253 |
பொத்திய |
பொதிந்த |
| 8254 |
பொத்திற்று |
மூண்டது |
| 8255 |
பொத்து |
புரை, தவறு, பொந்து |
| 8256 |
பொத்துதல |
மூட்டுதல், கொளுந்துதல், மறைத்தல், முடைதல் |
| 8257 |
பொதி |
கொத்து, நெல், முளை, பொதிதல், பட்டை, போது, மூங்கில் முதலியவற்றின் பட்டை, உயிரைப் பொதிந்து நின்ற உடல், பொருள் |
| 8258 |
பொதிதல் |
குவிதல் |
| 8259 |
பொதியம் |
பாண்டிய நாட்டிலுள்ளதும் அகத்திய முனிவரின் இருப்பிடமாகக் கருதப்படுவதுமான மலை |
| 8260 |
பொதி அவிழ்தல் |
மொட்டு மலர்தல் |
| 8261 |
பொதியில் |
அம்பலம், பொதிய மலை மன்றம் |
| 8262 |
பொதிர்த்தல் |
பருத்தல் |
| 8263 |
பொதினி |
பழனி |
| 8264 |
பொது |
சிறப்பின்மை, மன்று |
| 8265 |
பொதுச் சொல் |
உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை |
| 8266 |
பொதுத்தல் |
துளைத்தல் |
| 8267 |
பொது நோக்கு |
எல்லாரையும் ஒப்ப நோக்குகை |
| 8268 |
பொதும்பர் |
இளமரக் கா |
| 8269 |
பொதும்பு |
குகை, சோலை |
| 8270 |
பொதுமகள் |
இடைக்குலப் பெண் |
| 8271 |
பொதுமகளிர் |
ஆய்ச்சியர் |
| 8272 |
பொது மீக் கூற்றம் |
பொதியில் |
| 8273 |
பொதுமை |
பொதுவாயிருத்தல் |
| 8274 |
பொது மொழி |
சிறப்பில்லாச் சொல், பொதுச் செல், உறுதியில்லாத மொழி, 'உலகம் பலர்க்கும் பொது' என்ற சொல் |
| 8275 |
பொதுவர் |
இடையர், ஆயர் |
| 8276 |
பொதுவன் |
இடையன் |
| 8277 |
பொதுவனோடு அவள் தோள் பாராட்டி |
பொதுவன் தோளையும் அவள் தோளையும் கொண்டாடி |
| 8278 |
பொதுவனோடு எண்ணி |
பொதுவனோடே கூட்டம் என்று எண்ணி |
| 8279 |
பொதுளிய |
நெருங்கிய, தழைத்த |
| 8280 |
பொதுளல் |
பொதுளுதல், தழைத்தல், நிறைதல் |
| 8281 |
பொம்மல் |
சோறு, பொலிவு |
| 8282 |
பொய் |
வஞ்சனை |
| 8283 |
பொய்கை |
நீர்நிலை |
| 8284 |
பொய்கையார் |
கடைச் சங்கப் புலவருள் ஒருவர் |
| 8285 |
பொய்ச் சூள் |
பொய் ஆணை, பொய்யாகிய சூள், பொய்யாகிய சூளுறவு |
| 8286 |
பொய்ச் சூள் அஞ்சுதல் |
பொய்யாகிய சூளால் வருத்தம் வரும் என்று அஞ்சுதல் |
| 8287 |
பொய்த்தல் |
பொய் சொல்லுதல், பொய்யாக்குதல் |
| 8288 |
பொய்த்தார் |
பொய்க்கப்பட்ட பரத்தையர் |
| 8289 |
பொய்த் துயில் துஞ்சும் |
பொய்யாகிய துயிலைக் கொண்டு வருந்தும் |
| 8290 |
பொய்தல் |
சிற்றில் விளையாடுதல் |
| 8291 |
பொய்தல மகளை |
விளையாட்டினையுடைய மகளாந் தன்மையை யுடையை |
| 8292 |
பொய் தீர் உலகம் |
பொய்யற்ற நன் மக்கள் |
| 8293 |
பொய் தீர்ந்த புணர்ச்சி |
நனவிற் புணர்ச்சி |
| 8294 |
பொய்ந் நகா |
பொய்யாகவே நக்கு |
| 8295 |
பொய்ப்பது |
பொய்யாக்குவது |
| 8296 |
பொய்ப்ப விடேஎம் |
பொய் சொல்ல விடேம் |
| 8297 |
பொய் போர்த்தல் |
வஞ்சனையை மறைத்தல் |
| 8298 |
பொய்யாடல் |
வினயமில்லாத சிறு பிள்ளைகள் விளையாட்டு |
| 8299 |
பொய்யாமை |
நடு நிலைமை தப்பாமை |
| 8300 |
பொய்யேம் |
தப்ப மாட்டேம். தவறேம் |
| 8301 |
பொய்யோடு |
பொய்யோடு கூடிய |
| 8302 |
பொய் வல் காளை |
பொய் கூறுதலில் வல்ல தலைவன் |
| 8303 |
பொய் வல் பெண்டிர் |
கட்டுவிச்சி |
| 8304 |
பொரி |
பொரிந்த நெல் முதலியன |
| 8305 |
பொரித்தல் |
பொரியச் செய்தல் |
| 8306 |
பொரீஇ |
ஒப்பிட்டுப் பார்த்து |
| 8307 |
பொரு அற |
ஒப்பு மிக |
| 8308 |
பொரு கரை |
நீர் பொருகின்ற கரை |
| 8309 |
பொருட் திறம் |
பொருட் கூறு |
| 8310 |
பொருட் பிணி |
பொருட் பற்று, பொருள் முயற்சிக்கண் ஈடுபடும் உள்ளப் பிணிப்பு |
| 8311 |
பொருள் மொழிக் காஞ்சி |
உயிர்க்கு இம்மை மறுமைகளில் உறுதி தரும் பொருளை ஒருவனுக்குக் கூறுதல் பற்றிய புறத்துறை |
| 8312 |
பொருத்துதல் |
கூட்டுதல் |
| 8313 |
பொருத்துறு |
இசைத்தலுற்ற |
| 8314 |
பொருதல் |
அலைத்தல், தாக்குதல், போர் செய்தல், மாறுபடுதல், முட்டுதல், ஊடுதல், தருதல் |
| 8315 |
பொருந்தாதார் |
பகைவர் |
| 8316 |
பொருந்திய கேண்மை |
இருவர் மனமும் பொருந்திய நட்பு |
| 8317 |
பொருந்துதல் |
அடைதல் |
| 8318 |
பொருந்துபு |
எதிர்ப்பட்டு |
| 8319 |
பொருந |
ஒப்பற்றவனே, கூத்தனே |
| 8320 |
பொருநர் |
பகைவர், போர் செய்வார், தடாரிப் பறை வாசிப்போர் |
| 8321 |
பொருநன் |
உவமிக்கப் படுவோன், அரசன், பகைவன் |
| 8322 |
பொரு நாகு |
ஏனையவற்றிற்கு ஒப்புச் சொல்லப்படும் நாகு |
| 8323 |
பொருநை |
ஒரு நதி |
| 8324 |
பொருப்பன் |
பாண்டியன் |
| 8325 |
பொருப்பு |
மலை, பொதியில் மலை |
| 8326 |
பொரு முரண் |
ஊடுகின்ற மாறுபாடு, பொருகின்ற மாறுபாடு |
| 8327 |
பொருவர் |
பகைவர் |
| 8328 |
பொருவரும் |
ஒப்புவரும் |
| 8329 |
பொருள் |
காரியம், நன்கு மதிக்கப்படுவது, அறம், பொருள், இன்பம்; இனிமையாகிய பொருள் |
| 8330 |
பொருள் அல் காட்சி |
உண்மையற்ற அறிவு |
| 8331 |
பொருள் செய்தல் |
பொருள் தேடுதல் |
| 8332 |
பொருள் தரல் |
பொருளைத் தேடிக் கொண்டு வருதல் |
| 8333 |
பொருள்வயிற் பிரிதல் வேண்டும் |
பொருள் தேடுகின்ற இடத்தே இவளைப் பிரிந்திருத்தலை (நெஞ்சு) விரும்பும் |
| 8334 |
பொருள்வயிற் போகுவாய் |
பொருளிடத்தே வேட்கை நிகழ்ந்து போகின்றவனே |
| 8335 |
பொரூஉம் |
போர் செய்யும், மாறுபடும் |
| 8336 |
பொரேரெனல் |
விரைவுக் குறிப்பு |
| 8337 |
பொல்லம் பொத்துதல் |
கிழிந்த துணியின் இரண்டு தலையையுங் கூட்டித் தைத்தல் |
| 8338 |
பொலங் கலம் |
பொன்னாபரணம், பொன்னணி |
| 8339 |
பொலங் காழ் |
பொன் மணிகளையுடைய வடம் |
| 8340 |
பொலங் கிண்கிணி |
பொன்னாற் செய்த சதங்கை |
| 8341 |
பொலஞ் செய் மழு |
பொன்னாற் செய்த மழு |
| 8342 |
பொலந் தார் |
பொன்னாற் செய்த மார்பின் மாலை, பொன்னரிமாலை |
| 8343 |
பொலம் |
அழகு, பொன் |
| 8344 |
பொலம் படை |
பொன்னாலாய சேணம் |
| 8345 |
பொலம் பிறை |
பொன்னாற் செய்த பிறை |
| 8346 |
பொலம் புனை புகழ் நேமி |
பொன்னாற் புனைந்த புகழையுடைத்தாகிய சக்கரம் |
| 8347 |
பொலம்பூ |
பொற் பூ |
| 8348 |
பொலம் பூங்கா |
கற்பகக் கா |
| 8349 |
பொலன் |
பொன் |
| 8350 |
பொலி |
தானியக் குவியல் |
| 8351 |
பொலிகமா |
பொலிவதாக |
| 8352 |
பொலிதல் |
சிறத்தல், மிகுதல், விளங்குதல், பொலிவு பெறல் |
| 8353 |
பொலிவு |
விளக்கம், அழகு |
| 8354 |
பொழிதல் |
தங்குதல், பெய்தல், சொரிதல் |
| 8355 |
பொழிந்தற்று |
பொழிந்த தன்மைத்து |
| 8356 |
பொழிந்து |
பெய்தேன் |
| 8357 |
பொழில் |
நாட்டின் கூறு, பூமி சோலை |
| 8358 |
பொழுதினான் |
பொழுதின்கண், காலத்தில் |
| 8359 |
பொழுது |
காலம், வாழ்நாள் |
| 8360 |
பொழுது மறுத்துண்ணுதல் |
அக்காலத்தில் உண்ணுதல் |
| 8361 |
பொழுதோடு தோன்றிய கார் |
கார் காலத்தில் தவறாது தோன்றிய பருவ மழை |
| 8362 |
பொளி |
உரிக்கப்பட்டது, பட்டை |
| 8363 |
பொளித்து |
உரித்து |
| 8364 |
பொளிதல் |
உளியாற் கொத்துதல் |
| 8365 |
பொற்ப |
பொலிவு பெற |
| 8366 |
பொற்பு |
அழகு |
| 8367 |
பொற் பூ |
பாணர்க்கு அரசர் சூட அளிக்கும் தாமரை உருவான பொன் அணிவகை |
| 8368 |
பொற் பூண் |
பொன்னாற் செய்த தலைக் கோலங்கள் |
| 8369 |
பொற்றாமரை |
பொற் பூ |
| 8370 |
பொறாஅர் |
பகைவர் |
| 8371 |
பொறாதார் |
பொறாத அயலார் |
| 8372 |
பொறி |
அடையாளம், இலக்கணம், இலாஞ்சனை, எந்திரம், ஒளி, ஐம் பொறிகள், சீதேவி, திரட்சி, பீலி, புள்ளி, மூட்டுவாய், வரி, புகர் |
| 8373 |
பொறி உழுவை |
வரியினையுடைய புலி |
| 8374 |
பொறி செய் புனை பாவை |
பொறியாகச் செய்த புனைந்த பாவை |
| 8375 |
பொறித்த புண் |
அழுந்தின வடுக்கள் |
| 8376 |
பொறித்தல் |
அழுத்துதல், இலாஞ்சனையிடுதல், எழுதுதல், சுவடு உண்டாக்குதல், வைத்தல் |
| 8377 |
பொறீஇ |
ஆற்றி, தாங்கி |
| 8378 |
பொறுக்கல்லா நோய் |
பொறுக்கல்லாத காம நோய் |
| 8379 |
பொறுக்குநர் |
சுமப்பவர் |
| 8380 |
பொறுத்தல் |
தாங்குதல் |
| 8381 |
பொறை |
கல், சிறு குன்று, மலை, பாரம், சுமை பொறுக்கும் அளவு, பொறுத்தல், பொறுமை |
| 8382 |
பொறை அரு நோய் |
பொறுத்தற்கு அரிய காம நோய் |
| 8383 |
பொறை ஆற்றா நுசுப்பு |
தன் மென்மையால் அணிகளைப் பொறுத்தலாற்றாத இடை |
| 8384 |
பொறை நில்லா நோய் |
பொறுக்கும் அளவில் நில்லாத காம நோய் |
| 8385 |
பொறை மரம் |
காவு மரம் |
| 8386 |
பொறையன் |
சேரன் |
| 8387 |
பொறை யுயிர்த்தல் |
இளைப்பாறும்படி சுமை யிறக்குதல் |
| 8388 |
பொன் |
இரும்பு சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூனதம், என நான்குவகைப் பட்ட தங்கம் திருமகள், பசலை, கண்ணாடி, விழுப் பொருள், பசப்பு |
| 8389 |
பொன் காண் கட்டளை |
பொன்னுரை கல் |
| 8390 |
பொன் செய் கொல்லன் |
தட்டான் |
| 8391 |
பொன் செய்தல் |
நற்காரியம் புரிதல் |
| 8392 |
பொன் நிறம் |
பசலை நிறம் |
| 8393 |
பொன் படுகுவை |
பொன் உண்டாவை, பொன் கடவை |
| 8394 |
பொன் படுதல் |
தோற்றப் பொலிவுறுதல் |
| 8395 |
பொன் மலை |
அத்தமனமலை |
| 8396 |
பொன்றுதல் |
இறத்தல் |
| 8397 |
பொன்னுரை |
உரை கல்லில் உரைத்த பொன்னின் தேய்மானம் |
| 8398 |
பொன்னுரை மணி அன்ன மாமை |
பொன்னை உரைத்ததொரு மணியுண்டாயின் அதனை ஒத்த பசலை பரந்தமாமை நிறம் |