| 8399 |
போக்குதல் |
கட்டுதல், விரிவுறச் செய்தல், போக விடுதல் |
| 8400 |
போக்கு நினைந்து |
போக்கு தனக்குச் செய்யும் வருத்தத்தை நினைந்து |
| 8401 |
போகம் |
இன்பம் |
| 8402 |
போகி |
போய், சென்று, மீண்டு, வளர்ந்து |
| 8403 |
போகிய |
ஒழிந்த, இறந்த, ஓங்கிய, தொலைந்த |
| 8404 |
போகியார் |
போனவர் |
| 8405 |
போகில் |
பறவை |
| 8406 |
போகுதல் |
வளர்தல் |
| 8407 |
போகுதி |
போவை |
| 8408 |
போகுவாய் |
போகின்றவனே |
| 8409 |
போங்கம் |
மஞ்சாடி மரவகை |
| 8410 |
போத்தருதல் |
புறப்பட விடுதல், புறப்படுதல், போக்குதல், போதலைச் செய்தல், வெளி வருதல் |
| 8411 |
போத்து |
விலங்கின் ஆண், ஆண் முதலை |
| 8412 |
போதந்தான் |
போதவிட்டவன் |
| 8413 |
போதர் |
போதருவாயாக |
| 8414 |
போதரல் |
புறப்படல் |
| 8415 |
போதரின் |
போதுவாயாயின் |
| 8416 |
போதல் |
செல்லுதல், ஒழிதல், பரத்தல், பிரிதல் |
| 8417 |
போது |
அலரும் பருவத்து அரும்பு, பூ, பொழுது |
| 8418 |
போந்தை |
ஓர் ஊர், பனைமரம் |
| 8419 |
போந்தைத் தோடு |
பனை ஓலை |
| 8420 |
போந்தை மடல் |
பனை மடல் |
| 8421 |
போயினர் |
போனவர் |
| 8422 |
போர் |
யுத்தம், சூது போர், செறிந்து பொருந்துகை |
| 8423 |
போர் அடங்கு அகலம் |
பகைவர் போர் ஒழிதற்குக் காரணமாகிய மார்பு |
| 8424 |
போர் அமை புணர்ப்பு |
இரட்டைக் கதவு |
| 8425 |
போர் ஆர் கதவம் |
பலகை பொருத நிறைந்த கதவம் |
| 8426 |
போர் எதிர்தல் |
போர் செய்தலை மேற்கொள்ளுதல் |
| 8427 |
போர் ஏறு |
பொருகின்ற ஏறு |
| 8428 |
போர்க்கண் |
போர்க் களம் |
| 8429 |
போர்க் கதவு |
பலகைகளை இணைத்த கதவு |
| 8430 |
போர்த்த சினம் |
மெய்யை மறைத்த சினம் |
| 8431 |
போர்த்தல் |
மறைத்தல் |
| 8432 |
போர் தொலைந்தார் |
போரிலே தோல்வியடைந்தவர் |
| 8433 |
போர்ப்பது |
மறைப்பது |
| 8434 |
போர்ப்பு |
போர்வை |
| 8435 |
போர்பு |
தானியப் போர் |
| 8436 |
போர் மடி இறை |
கூரை மடிந்த இறப்பு |
| 8437 |
போர் வாய்க் கதவம் |
இரட்டைக் கதவு |
| 8438 |
போர்வு |
போர்பு |
| 8439 |
போர்வை |
தேர்த் தட்டின் வெளி மறையப் பாவின பலகை |
| 8440 |
போரா |
போர்த்தலைச் செய்யா |
| 8441 |
போல்வல் |
போலே இராநின்றேன், போலேயும் இருப்பேன் |
| 8442 |
போலவும் |
போலேயும் |
| 8443 |
போலாது |
போல இருக்கின்றதில்லை |
| 8444 |
போலும் |
அசைநிலை, ஒக்கும், போல இராநின்றது, போலே இருக்கின்றது, போலே இருந்தீர் |
| 8445 |
போழ் |
துண்டம், தோலால் அமைந்தவார், பனங் குருத்து, வகிர் |
| 8446 |
போழ் ததைஇய |
பனங் குருத்தின் போழுடனே சேர்த்துத் தொடுத்த |
| 8447 |
போழ்தல் |
பிளத்தல், ஊடறுத்தல், வருத்துதல் |
| 8448 |
போழ்து |
நன் முகூர்த்தம், காலம் |
| 8449 |
போழ்வாய் |
பிளந்த வாய், பிளந்தாற் போலும் வாய், அலகு |
| 8450 |
போற்றல், போற்றுதல் |
பாதுகாத்தல், கருதல், விரும்புதல், பேணுதல் |
| 8451 |
போற்றார் |
பகைவர் |
| 8452 |
போற்றிக் கேள் |
பேணிக் கேள் |
| 8453 |
போற்றிய |
போற்றுதற்கு |
| 8454 |
போற்றுநர் |
சுற்றத்தார், நன்கு உணர்வார் |
| 8455 |
போற்றுபு |
பேணி |
| 8456 |
போறி |
போல இருந்தாய், போலே இராநின்றாய் |
| 8457 |
போறிர் |
போல இருந்தீர் |
| 8458 |
போன்ம் |
ஒக்கும், போலும் |
| 8459 |
போன்றதை |
போல இருந்தது |