8462 மக்கள் மனிதர்
8463 மக்கள் முரி வடிவிற் சிறியவன், மக்களிற் பாதி
8464 மக மகன் அல்லது மகள்
8465 மகடுஉ பெண், மனைவி
8466 மகரப்பகுவாய் அங்காந்த வாயுடன் கூடிய மகரமீனின் வடிவம் அமையச்செய்த தலைக்கோல வகை
8467 மகரம் மகரக் கொடி
8468 மகரவலயம் மகரப்பகுவாய்
8469 மகரவாய் மகரப்பகுவாய், மகரவாயாகச் செய்த தலைக்கோலம்
8470 மகவு குழந்தை
8471 மகள் புத்திரி, பெண், மனைவி
8472 மகள் மறுத்தல் மகள் மறுத்து மொழிதல், பகைவீரன் தம் மகளை மணம்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக் கூறும் புறத்துறை
8473 மகளிர் பெண்கள், மனைவியர், பரத்தையர்
8474 மகளேன் மகளாயிருப்பேன்
8475 மகளை மகளாந்தன்மையையுடையை
8476 மகன்றில் ஆண்பெண்களுள் ஒன்றை விட்டு ஒன்று பிரியாத நீர் வாழ் பறவை வகை
8477 மகனேன் ஒரு மகனாதலுளேன்
8478 மகார் பாலர்
8479 மகிழ் இன்பம், கள், குடிவெறி, மகிழ்ச்சி
8480 மகிழ்தல் உண்ணுதல்
8481 மகிழ்ந்தன்று மகிழ்ந்தது
8482 மகிழ்நன் கணவன், மருத நிலத் தலைவன்
8483 மகிழ்ப்பதரம் கள்
8484 மகிழம் மகிழ், ஒரு மரவகை
8485 மகுளி எள்ளுப் பயிர் முதலியவற்றிற்கு வரும் அரக்கு நோய், ஓசை
8486 மகுளி பாய்தல் நீரின்மையால் எள்ளு முதலிய செடி கொடிகள் செந்நிறமடைதல்
8487 மங்கல மகளிர் மங்கல மங்கையர், சுமங்கலிகள்
8488 மங்குல் இருட்சி, திசை, மேகம்
8489 மங்குல் வான் இருண்ட மேகம்
8490 மங்கை பெண்
8491 மஞ்சள் செடி வகை
8492 மஞ்சிகை ஒரு வகைப் பெட்டி, கொட்டாரம்
8493 மஞ்சு மேகத்தின் வெள்ளிய பாகம்
8494 மஞ்ஞை மயில்
8495 மட்டம் கள்
8496 மட்டு கள், மது வைக்கும் சாடி
8497 மடக் குறுமாக்கள் மடப்பத்தையுடைய சிறிய அறிவில்லாத மகளிர்
8498 மடங்கல் இயமன், இயமனுக்கு ஏவல் செய்யும் கூற்றம், ஊழிக் காலம், ஒடுக்கம், ஊழித் தீ, வடவைத் தீ, சிங்கம், மீளுதல்
8499 மடங்கற் காலை ஊழி முடிவாகிய காலம்
8500 மடங்காப் போர் மீளாத போர்
8501 மடங்கி மீட்டுக் கொண்டு
8502 மடங்குதல் தாழ்தல், வளைதல், மீளுதல், ஓரிடம் முன்னே வளைதல்
8503 மடத் தகை மடப்பத்தையுடைய அழகு
8504 மடந்தை பெண், தோழி
8505 மட நடை மாயினம் மடப்பத்தை யுடைத்தாகிய நடையினையுடைய அன்னத் திரள்
8506 மட நாகு இளைய பசு
8507 மட நெஞ்சு அறியாமையையுடைய நெஞ்சு
8508 மட நோக்கு உள்ளொன்று கொள்ளாத நோக்கு
8509 மடப் பிணை பெண் மான்
8510 மடப் பெடை அறியாமையையுடைய பெடை
8511 மடம் மகடூஉக் குணம் நான்கனுள் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமையாகிய பேதமை, மென்மை, மடப்பம், அறியாமை
8512 மடம் கெழு நெஞ்சு அறியாமை பொருந்திய நெஞ்சு
8513 மடம் சேர்ந்த சொல்லர் மடப்பம் பொருந்திய சொல்லினையுடையர்
8514 மடம்படுதல் அறியாமையிலே புகுதல்
8515 மட மகள் இளமகள்
8516 மட மருங்குல் நோக்கினார்க்கு அறியாமையைக் கொடுக்கும் மருங்குல்
8517 மட மான் மடப்பத்தையுடைய மான்
8518 மடமை மென்மை, மடப்பம், இளமை
8519 மட மொழி மடப்பத்தை உடைத்தாகிய மொழி
8520 மடல் பனங் கருக்கு, பனை மடல், வாழை மடல், மடல்மா
8521 மடல் புணையா நீந்துதல் மடல்மாவை ஒரு தெப்பமாகக் கொண்டு காமக்கடலை நீந்துதல்
8522 மடவந்தனள் வெருவினாள்
8523 மடவம் அறிவிலேம்
8524 மடவர் அறிவில்லார், அறியாதவர்கள்
8525 மடவரல் மடப்பம், மடப்பத்தை யுடையாள்
8526 மடவரல் மென் நடைப் பேடை மடப்பம் வருதலினையும் மெல்லிய நடையினையும் உடைய பெட்டை
8527 மடவள் அறிவிலாள்
8528 மடவன் அறிவிலான், மெல்லியன்
8529 மடவருதல் மடப்பம் வருதல்
8530 மடவை மடவாய்
8531 மடவோர் அறிவிலார், மங்கையர்
8532 மடவோன் அறிவில்லாதோன்
8533 மடற் பெண்ணை மடலை யுடைத்தாகிய பனை
8534 மடா பாண்ட வகை
8535 மடாஅ மடுத்து
8536 மடாய் மடுப்பை யுடையாய், மடிப்பையுடையாய்
8537 மடி அறுவை, ஆடை, சோம்புதல்
8538 மடிதல் ஊக்கம் குறைதல், சுருங்குதல், தூங்குதல், மறத்தல், முயற்சியறுதல் கிடத்தல், தவிர்தல், தொழிலற்றிருத்தல், கெடுதல், துயிலுதல்
8539 மடிந்த மறந்த
8540 மடியன்மின் மனத்தே வெறுத்துக் குவிந்திராதே கொள்ளும்
8541 மடியா விழவு நீங்காத விழவு
8542 மடியுளம் சோம்பிய உள்ளம்
8543 மடி வாய் வளைந்த வாய்
8544 மடி வாய்த் தண்ணுமை தோலை மடித்துப் போர்த்த மத்தளம்
8545 மடிவு சோம்பல்
8546 மடிவை தழை, உடை
8547 மடு குளம்
8548 மடுக்கும் கொளுத்தும்
8549 மடுத்த கொண்டுபோய
8550 மடுத்தல் ஊட்டுதல், குத்துதல், செலுத்துதல், ஊற்றுதல்
8551 மடை ஆணி, ஆபரணக் கடைப் பூட்டு, சோறு, பலி, தெய்வ பலி, மடுக்கப்படுவது, மூட்டுவாய்
8552 மண் அணு, மத்தளம் முதலியவற்றில் பூசும் மார்ச்சனை, நிலம், நாடு
8553 மண் அளை மண்ணாலாகிய வளை
8554 மண்டல் மடுத்தல், மிக்குச் செல்லல்
8555 மண்டாத கூறி மிக்கு விரும்பிச் செல்லாத சொற்களைச் சொல்லி
8556 மண்டாத சொல்லுதல் விரும்பாதனவற்றைக் கூறுதல்
8557 மண்டிலம் சந்திரன், சூரியன், பூமி, மண்டலம், வட்டம், ஆதித்தன், கண்ணாடி, ஞாயிற்றின் மண்டிலம், ஞாயிறு, நாடு, மதி
8558 மண்டு அமர் மிக்குச் செல்கின்ற போர்
8559 மண்டுதல் செலுத்துதல், சேர இணைத்தல், நெருக்கித் தாக்குதல், விரைந்து செல்லுதல், மிக்குச் செல்லுதல், மிகுதல்
8560 மண்டை இரப்போர் கலம், மொந்தை
8561 மண்ணா மணி கழுவாத நீலமணி,
8562 மண்ணி கழுவி, பண்ணி, பூசி, மண்ணுதல்
8563 மண்ணி ஒப்பமிடுதல், கழுவுதல் செப்பமிடுதல், செய்தல், பூசுதல், மூழ்குதல்
8564 மண்ணுறுத்தல் அலங்கரித்தல்
8565 மண்ணை கூர் மழுங்குதல்
8566 மண் புரை மண் பொதிந்த வீடு
8567 மணக்குங்கால் கூடியிருக்கும் காலம்
8568 மணத்தல் கூடுதல், முயங்குதல், அணைத்தல், கலத்தல், கூடியிருத்தல், நேர்தல், புணர்தல், பொருந்துதல்
8569 மணந்தக்கால் புணர
8570 மணந்தனைவிடின் தோள் மணந்தனையாய் விடின், மணந்தால்
8571 மணம் நறுநாற்றம், வாசனைப் பொருள்
8572 மண முழ திருமணத்தை உணர்த்தும் முழவோசை
8573 மணல் எக்கர் எக்கராகிய மணல்
8574 மணல் முற்றம் மணல் பரப்பப்பட்டுள்ள முற்றம்
8575 மணல் வரைப்பு மணல் பரப்பிய இடம்
8576 மணற்கோடு மணற்கோட்டை, வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற் குவியல்
8577 மணன் அயர்தல் திருமணம் செய்தல்
8578 மணி இரத்தினம், கண்டை மணி, நீலமணி, பளிங்கு, மாணிக்கம், அரதனம், உள்ளிடு மணி, ஒலிக்கின்ற மணி, தேர் மணி, பவளம்
8579 மணி ஏர் மாண் நலம் நீலமணி போலும் சிறந்த அழகு
8580 மணிக் கலம் கண்ணாடிக்குப்பி
8581 மணிக் குரல் நீலமணி போலும் பூங் கொத்து
8582 மணிச்சிகை குன்றி
8583 மணி செய் மண்டை மணிகள் இழைத்த பொற்கலம்
8584 மணி நிறம் கரு நீல நிறம்
8585 மணி புரை செவ் வாய் பவளத்தை ஒக்கின்ற சிவந்த வாய்
8586 மணிமருள் அவ் வாய் மணியை ஒக் கின்ற அழகினையுடைய வாய்
8587 மணி மருள்பூ நீலமணி போன்ற மலர்
8588 மணி மிடை பொன் நீலமணி இடைப் பட்ட பொன்
8589 மணி வாய்க் காக்கை கருமணி போன்ற வாயினையுடைய காக்கை
8590 மணை வெட்டுக் கருவியின் அடிக் கட்டை
8591 மத்தகம் தலைக்கோலம்
8592 மத்தம் மத்து, தயிர் கடை கருவி
8593 மத்தரி பறை வகை
8594 மத்தி ஒர் உபகாரி
8595 மத்திகை குதிரைச் சம்மட்டி
8596 மத வலி
8597 மதம் கஸ்தூரி, செருக்கு, வலிமை
8598 மதர் செருக்கு, ஒளி, அழகு
8599 மதர் அணி ஒளி மிக்க ஆபரணம்
8600 மதர் எழில் கதிர்த்த அழகு
8601 மதலை பற்று, கொடுங்கை, பிறப்பு
8602 மதலைப்பள்ளி கொடுங்கையைத் தாங்குதலையுடைய பலகையாகிய கபோதகத் தலை
8603 மத வலி மிகு வலி, அரசன், முருகன்
8604 மதவு மத
8605 மதவு நடை வலிய நடை, மெல்லிய நடை
8606 மதன் அழகு, செருக்கு, வலிமை
8607 மதன் இலள் வலியள் அல்லள்
8608 மதாணி கழுத்தணியின் தொங்கல்
8609 மதி அறிவு, சந்திரன், ஒரு படர்க்கை அசைச் சொல், முன்னிலை அசைநிலைச் சொல்
8610 மதி சேரந்த அரவு மதியைச் சேர்ந்து மறைத்த பாம்பு
8611 மதித்தல் துணிதல்
8612 மதித்தீத்தை மதிப்பாய்
8613 மதி திரிதல் அறிவு வேறுபடுதல்
8614 மதி மருள் வாள் முகம் மதி என்று மருளும் ஒளியினையுடைய முகம்
8615 மதிமொழி அறிவாகிய சொல்
8616 மதியம் திங்கள், பூரண சந்திரன்
8617 மதில் கோட்டைச் சுவர்
8618 மதில் என மதித்தல் மடல்மா மீதேறி மதிலைச் சூழ்போதற்குக் கருதுதல்
8619 மதில் மரம் கோட்டை மதிலின் கதவிலிடும் கணைய மரம்
8620 மதில் முகம் மதிற் கதவு
8621 மதிவல்லோர் அறிவாளர்
8622 மதுகை வலிமை, வன்மை, வலி
8623 மதுரை பாண்டியர் தலைநகரம்
8624 மதைஇய மதர்த்த
8625 மதைஇனள் மிகுதியையுடையள்
8626 மந்தி சூரியன், குரங்கு, பெண் குரங்கு
8627 மந்தி உயங்கல் மந்திகள் ஊண் இன்றி வருந்துதல்
8628 மந்தி குறை கூறும் மந்தியை எனக்குத் தரவேண்டும் என்று குறையைக் கடுவன் சொல்லும்
8629 மந்திர விதி மந்திரம் உபயோகிக்கும் முறை
8630 மம்மர் மயக்கம்
8631 மயக்கல் கலத்தல், மயங்க உழுதல்
8632 மயக்கிய ஊடலணர்த்துதற்கு
8633 மயக்கு போர் செய்கை, மயக்கம்
8634 மயக்குதல் கலத்தல், சிதைத்தல், நிலைநெகிழ்த்துதல், ஊடலுணர்த்தல்
8635 மயக்குப்படுதல் மயக்கமுறுதல்
8636 மயங்கியோர் அறிவு திரிந்தோர், அறிவு கெட்டோர்
8637 மயங்கு அதர் விலங்குகள் பலகாலும் திரிகையினாலே மயங்கின வழி
8638 மயங்கு அமர் இரு படையும் தம்முள் மயங்கின போர்
8639 மயங்குதல் கலத்தல், கைகலத்தல், தாக்கப்படுதல், நெருங்குதல், போலுதல், வருந்துதல், கலங்குதல், கையுறவு எய்துதல்
8640 மயங்கு நோய் மனம் மயங்குதற்குக் காரணமான காம நோய்
8641 மயர் மயக்கம், மறவி
8642 மயல் மயக்கத்தால் வந்தது, மயக்கம்
8643 மயிர் கூந்தல் மயிர், விலங்கு முதலியவற்றின் மயிர்
8644 மயிர்க் கண் முரசம் மயிர் சீவாத தோலால் கட்டிய முரசம்
8645 மயிர் குறை கருவி கத்தரிகை
8646 மயிர்ப் புருவை மயிரையுடைய பெண் ஆடு
8647 மயில் பறவை வகை
8648 மயில் ஆல மயில் ஆரவாரித்து ஆடும் படியாக
8649 மயில் எருத்து உறழ் அணி காயாம் பூங் கண்ணி
8650 மயிலை இருவாட்சி
8651 மயிற் பீலி மயில் இறகு
8652 மரக் கோட்டம் மரத்தின் வளைவான இடம்
8653 மரந்தலை மரம்
8654 மரந்தை சேரனின் நகரம்
8655 மரபு தன்மை, முறைமை, மேம்பாடு, பயிற்சி
8656 மரபுளி முறைமை
8657 மரம் மரக்கலம், வில்
8658 மரம் நந்த மரங்கள் தழைக்க, மரங்கள் பூப் பெருக்க
8659 மரல் பெருங்குரும்பை, மருள்
8660 மரவம் வெண் கடம்பு
8661 மரன் மரம்
8662 மரா வெண் கடம்பு
8663 மராஅம் மரவம், மராமரம்
8664 மராஅ யானை மருவாத யானை, பழகாத யானை
8665 மராம் மரவம்
8666 மரீஇ மருவிய, மருவி
8667 மரீஇய மருவிய, மருவிப்போந்த, விரும்பின
மேல்