8851 மாக்கள் ஐயறிவையே உடைய மனிதர்கள், அறிவில்லாத மகளிர்
8852 மாக் குரல் கரிய குரல்
8853 மா கடல் பெருமையை யுடைய கடல்
8854 மாகம் ஆகாயம், வானம், திக்கு
8855 மா கூர்தல் மாக்கள் குளிராலே உடல் வளைதல்
8856 மாங்காடு ஓர் ஊர்
8857 மாங்காய் மாவின் காய்
8858 மாங்குடி மருதனார் ஒரு புலவர்
8859 மாசி பதினோராம் மாதம்
8860 மா சிதறு இருக்கை (பகைவரிடத்துக் கவர்ந்த) யானை பசு முதலிய விலங்குகளை இரப்போர்க்கு அளவிறந்து கொடுக்கும் பாசறை
8861 மாசு அழுக்கு, புழுதி, குற்றம்
8862 மாசுணம் பெரும் பாம்பு
8863 மாஞ்சினை மாமரத்தின் கிளை
8864 மாட்சி அழகு, நன்மை
8865 மாட்டல் பொருத்தல்
8866 மாட்டு இடத்து
8867 மாட்டுதல் அழித்தல், இணைத்தல், எரித்தல், விளக்கு முதலிய கொளுத்துதல்
8868 மாட்டு மாட்டோடுதல் இடந் தோறும் இடந்தோறும் ஓடிச் செல்லுதல்
8869 மாட ஒள் எரி கலங்கள் துறையறிந்து வருதற் பொருட்டு உயரிய மாடத்தின் மீது அமைக்கப்படும் ஒள்ளிய விளக்கு
8870 மாடம் மாளிகை
8871 மாடு இடம், ஓர் ஏழனுருபு
8872 மாண் மடங்கு, மாட்சிமை
8873 மாண்ட மாட்சிமைப்பட்ட
8874 மாண்டது மாட்சிமைப்பட்டது
8875 மாண்ட மனம் இறந்துபடும் மாட்சிமைப்பட்ட மனம்
8876 மாண்நலம் மாட்சிமையுடைய நலம்
8877 மாண மாட்சிமைப்பட்டிருக்க, மாட்சிமைப்பட
8878 மாணாக்கன் மாணவகன்
8879 மாணாசெயல் மாட்சிமைப்படாத குறைகளைச் செய்தல்
8880 மாணா நோய் ஒரு மருந்தாலும் மாட்சிமைப்படாத காம நோய்
8881 மாணாமை மாட்சிமைப்படாமை, மிகாமை
8882 மாணுதல் மாட்சிமைப்படுதல்
8883 மாணும் மாட்சிமைப்படுகின்ற
8884 மாத் தகட்டு ஒள் வீ பெரிய இதழ்களையுடைய ஒளி பொருந்திய மலர்
8885 மாத்திரம் அளவு, அளவை
8886 மாத்திரை அளவு
8887 மாதர் காதல், அழகு, மகளிர்
8888 மாதர் உறாஅது உறீஇய காமக் கடல் மாதர் தாம் காமுறாதே என்னைக் காமுறுத்தின காமமாகிய கடல்
8889 மாதர் மகளிர் காதலையுடைய மகளிர்
8890 மாதரார் காதலையுடைய மகளிர்
8891 மாதிரம் ஆகாயம், திக்கு
8892 மா தீண்டு துறுகல் விலங்குகள் உராயும் கல் (ஆ தீண்டு குற்றி போல உள்ளது)
8893 மாதோ அசைச் சொல்
8894 மாந்தர் ஆடவர், ஊர் காவலர்
8895 மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஒரு சேர அரசன்
8896 மாந்தரன் ஒரு பழைய சேரவரசன்
8897 மாந்தல் நிறையத் தின்றல்
8898 மாந்தி நிறையத் தின்று
8899 மாந்துதல் உண்ணுதல்
8900 மாப்பிணை மான் பிணை
8901 மா மருண்டன்ன மழைக் கண் மான் மருண்டு நோக்கினாலொத்த குளிர்ச்சியையுடைய கண்
8902 மா மலர் பெருமையையுடைய மலர்
8903 மாமலர் முண்டகம் கருமையையுடைத்தாகிய மலரையுடைய கழி முள்ளி
8904 மா மழை கருமையையுடைய மழை
8905 மா மறுத்த மலர் மார்பு திருமகள் பிறர் மார்பை மறுத்தற்கு ஏதுவாகிய பரந்த மார்பு
8906 மாமூலனார் சங்கப் புலவருள் ஒருவர்
8907 மாமெய் மாந்தளிர் போலும் நிறத்தையுடைய மெய்
8908 மாமேனி கரிய மேனி
8909 மாமை அழகு, கருமை, பசலை, மாந்தளிரின் தன்மை
8910 மாய்த்த தீட்டப்பெற்றன
8911 மாய்த்தல் தீட்டுதல், மறைத்தல்
8912 மாய்தல் இறத்தல், ஒளி மழுங்குதல், மறத்தல், மறைதல், பொலிதல், கெடுதல்
8913 மாய்ந்தான் தோன்றானாயினான்
8914 மாய்ந்திசினோர் மாய்ந்தோர்
8915 மாய்ப்பது உயிரைப் போக்குவது
8916 மாயச் சூள் பொய்ச் சூள்
8917 மாயப் புணர்ச்சி பொய்யாகிய களவிற் கூட்டம்
8918 மாயப் பொதுவன் பொய்யை வல்ல பொதுவன்
8919 மாயம் தூர்த்தத்தன்மை, பரத்தைமை, பொய், வஞ்சனை
8920 மாயம் மருள்வார் பொய்யை மெய் என்று மயங்குபவர்
8921 மாய மகிழ்நன் பொய்யை வல்ல மகிழ்நன்
8922 மாய மலர் மார்பு மாயத்தைச் செய்த மலர்ந்த மார்பு
8923 மாய வண்ணன் திருமால்
8924 மாயவள் கரிய நிறமுடையவள், மாமை நிறத்தையுடையவள்
8925 மாயிதழ் கரிய இதழ்
8926 மாயோள் கருநிறமுடையவள், பெண், மாமை நிறமுடையவள்
8927 மாயோன் கரிய நிறமுடையவன், திருமால், கண்ணன்
8928 மார் வினையெச்ச விகுதி
8929 மார்க்கம் குதிரைக் கதி
8930 மார்பின் மறுப்பட்ட சாந்தம் மார்பிற் பூசின பாடு அழிந்த சந்தனம்
8931 மார்பு வடிம்பு, தடாகம்
8932 மாரி மழை, மாரிக் காலம்
8933 மாரிப் பித்திகம் மழைக் காலத்தில் மலரும் பிச்சிப் பூ
8934 மாரி வீழ் இருங் கூந்தல் மழை விரும்பின கரிதாகிய கூந்தல்
8935 மால் கருமை, காமம், திருமால், வேட்கை, பெருமை, மயக்கம், மேகம்
8936 மால் இருள் மயக்கத்தையுடைய இருள்
8937 மால்தல் மயங்குதல்
8938 மால்பு கண்ணேணி
8939 மாலை மாலைக் காலம், இரவின் முதல்யாமம், தொடுத்த பூந் தொடை, பாசம், இயல்பு
8940 மாலை அந்தி அந்தி வேளை
8941 மாலையணிதல் புணர்ச்சி இன்பம் துய்த்தல்
8942 மாலையர் இயல்புடையர்
8943 மாலையொடு மாலையாலே
8944 மா வதி சேர மாக்கள் தாம் தங்கு மிடத்தே சென்று தங்க
8945 மாவள்ளியன் பெரிய கொடையை யுடையவன்
8946 மாவன் ஓர் உபகாரி
8947 மா விசும்பு பெருமையையுடைய விசும்பு
8948 மாவிலங்கை திண்டிவனத் தருகிலிருந்த ஓய்மான் நல்லியக் கோடனது தலைநகர்
8949 மாழ்கல் மயங்கல்
8950 மாழாத்தல் மயங்குதல்
8951 மாழை இளமை, மாவடு, அழகு
8952 மாழை மட மான் பிணை இளமையையுடைய மட மான் பிணை
8953 மாற்றம் வஞ்சின மொழி
8954 மற்றாத மறுக்காத
8955 மாற்றார் பகைவர்
8956 மாற்றிய வானம் பெய்யாமற் போன மேகம்
8957 மாற்று ஒழிக்கை, பரிகாரம், மாற்றம்
8958 மாற்றுதல் ஓடச்செய்தல், ஒழிதல்
8959 மாற்றுமை மாறுபாடு
8960 மாற்றோர் பகைவர்
8961 மாற போக, நீங்க
8962 மாறன் பாண்டியன்
8963 மாறாப் போர் முதுகிடாத போர்
8964 மாறிய கவின் தாராது விட்ட அழகு
8965 மாறியோர் விற்றவர்
8966 மாறு பகை, இறந்துபாடு, உத்தரம், ஏதுப்பொருள் படுவதோர், இடைச்சொல், விதம், கைவிடு, மாறாகிய அரசன், மாறுதல், மாறுபடுதல், மாறுபாடு, போ, மீண்டுபோ
8967 மாறு இரட்டுதல் மாறி மாறி ஒலித்தல்
8968 மாறுக ஒழிந்துபோக
8969 மாறுதல் பின்வாங்குதல், பொய்படுதல், கழித்தல், கைவிடுதல், முதுகிடுதல், விற்றல், ஒழிதல், கெடுதல், கைவிட்டு நீங்குதல், கைவிட்டுப்போதல், கொள்ளுதல், தவிர்தல், நில்லாது போதல், நீங்குதல், மனம் வேறுபடுதல், மாற்றுதல், மீளுதல்
8970 மாறு மாறு மாறாய் மாறாய், எதிர் எதிராக
8971 மாறுற்று மாறுபடுகையினால்
8972 மாறெதிர் கூறுதல் எதிராகச் சில மொழிகளைக் கூறுதல்
8973 மான் ஒரு வகை விலங்கு, சிங்கம், குதிரை, அசுணமா, யானை
8974 மான் நோக்கின் மடந்தை மான் போலும் நோக்கினையுடைய மடந்தை
8975 மான் நோக்கியவர் மானினது நோக்கம் போலும் நோக்கினை யுடைய பரத்தையர்
8976 மான் பிணை இயல் வென்றாய் மான் பிணையினது நோக்கின் இயல்பை வென்றவனே
8977 மான் பிணை யன்னார் மான் பிணை போலும் நோக்கினையுடைய பரத்தையர்
8978 மான்மறி வள்ளி நாயகி
8979 மான்ற மயங்கின
8980 மான்றல் மயங்குதல்
8981 மான்று மயங்கிய
8982 மான ஒப்ப
8983 மான விறல் வேள் முற்காலத்துச் சிற்றரசர் சிலர்க்கு வழங்கிய பட்டப் பெயர்
8984 மானோக்கி மான் போலும் நோக்கினையுடையாய்
மேல்