9031 மீ மேல், மேலிடம்
9032 மீக்கூற்றம் புகழ், மேலாகக் கூறுங்கூற்று
9033 மீக்கூறுதல் ஆணை கூறுதல், புகழ்தல், மிகுத்துச் சொல்லுதல்
9034 மீகை மேலெடுத்த கை
9035 மீட்சி திரும்புகை
9036 மீட்டு மீளப்பண்ணி
9037 மீண்டும் மீண்டு, திரும்பவும்
9038 மீ நீர் நீரின் மேற்பரப்பு
9039 மீப்பு மிகுதி
9040 மீமிசை மேலிடத்தில்
9041 மீவரல் மேலே கிடந்து அசைதல்
9042 மீள்தருதல் மீண்டு வருதல், மீளுதலைச் செய்தல்
9043 மீள்தல் திரும்பக் கொணர்தல்
9044 மீளி கூற்றுவன், வீரம், மறம், பாலை நிலத் தலைவன்
9045 மீளி வேல் கூற்றுவனை ஒத்த வேல்
9046 மீன் கிரகம், நட்சத்திரம், விண்மீன், நீர் வாழ் பிராணி வகை
9047 மீன் உணங்கல் கருவாடு
9048 மீன் நெய் மீனிலிருந்து வடிக்கும் நெய்
மேல்