| 9049 |
முக்கட் செல்வன் |
மூன்று திரு நயனத்தையுடைய செல்வன், முக்கட்பகவன், சிவபிரான் |
| 9050 |
முக்கண்ணான் |
மூன்று கண்களை உடையவன், சிவபிரான் |
| 9051 |
முக் காவனாடு |
தமிழகத்துப் பழைய சிறு நாடுகளுள் ஒன்று |
| 9052 |
முக்காழ் |
முக்கண்டன் சட்டுவடம், மூன்று வடம் |
| 9053 |
முக்கி |
தின்று |
| 9054 |
முக்குதல் |
நிரம்ப வாயிற் பெய்து உண்ணுதல் |
| 9055 |
முக்கோற் பகவர் |
திரிதண்டம் தாங்கிய சந்நியாசிகள் |
| 9056 |
முகஞ் செய்த குரும்பை |
அடிவரைந்து கட்புலனான குரும்பை |
| 9057 |
முகடு |
உச்சி, தலை |
| 9058 |
முகத்தல் |
மொள்ளுதல், கைக்கொள்ளுதல் |
| 9059 |
முகத்தள் |
முகத்தையுடையவள் |
| 9060 |
முகம் |
ஏழாம் வேற்றுமையுருபு, பக்குவம், தலையின் முகப்பு |
| 9061 |
முகம் புகுதல் |
தயவுக்காக எதிர் சென்று நிற்றல் |
| 9062 |
முகவை |
நீர் முகக்குங் கருவி, மிகுதியாகக் கொடுக்கப்படும் பொருள் |
| 9063 |
முகன் |
முகம் |
| 9064 |
முகிழ் |
மொக்குள், அரும்பு, தோன்றுதல் |
| 9065 |
முகிழ்த்தல் |
தோன்றுதல் |
| 9066 |
முகை |
குகை, துறுகல் அரும்பு, மொட்டு |
| 9067 |
முகைதல், முகைத்தல் |
அரும்புதல் |
| 9068 |
முச்சி |
கொண்டை முடி, சூட்டு |
| 9069 |
முசிறி |
மேல் கடற்கரையிலுள்ள பழைய துறைமுகப் பட்டினம் |
| 9070 |
முசுக்கலை |
ஒருவகைக் குரங்கின் ஆண் |
| 9071 |
முசுண்டை |
கொடிவகை |
| 9072 |
முசுறி (முசிறி) |
சேரநாட்டிலுள்ளதோர் ஊர் |
| 9073 |
முஞ்சம் |
குழந்தைகளின் உச்சியில் அணியும் அணி வகை |
| 9074 |
முஞ்ஞை |
முன்னைக் கொடி |
| 9075 |
முட்டு |
குறைவு, தடை |
| 9076 |
முட்டுதல் |
உடம்பில் தீண்டுதல், எதிர்த்தல், தடைப்படுதல் |
| 9077 |
முட்டை |
அண்டம் |
| 9078 |
முடங்கர் |
ஈன்றணிமையில் உண்டாம் அசதி |
| 9079 |
முடங்கிறை |
கூடல்வாய் |
| 9080 |
முடங்குதல் |
படுத்துக்கொள்ளுதல், ஓர் இடம் கூனாய்ப் புறப்படுதல் |
| 9081 |
முடந்தை |
வளைந்தது |
| 9082 |
முடம் |
வளைந்தது, வளைவு |
| 9083 |
முடலை |
முறுக்கு |
| 9084 |
முடவு |
முடம், வளைவு |
| 9085 |
முடி |
கிரீடம், முடிச்சு, மயிர் முடி |
| 9086 |
முடித்தல் |
சூட்டுதல், நிறைவேற்றுதல், சூடுதல் |
| 9087 |
முடிதல் |
தோன்றுதல் |
| 9088 |
முடிநர் |
கட்டுபவர் |
| 9089 |
முடி நாறு |
நாற்று முடி |
| 9090 |
முடிமார் |
முடிப்பவர் |
| 9091 |
முடியகம் புகாஅக் கூந்தல் |
முடிப்பதற்குரிய நீட்சி அற்ற கூந்தல் |
| 9092 |
முடியர் |
முடிப்பானாக |
| 9093 |
முடியா |
முடித்து |
| 9094 |
முடுக்கர் |
இடைவெளி, நீர்க்குத்தான இடம், முடுக்கு |
| 9095 |
முடுக்குதல் |
திருகாணி முதலியன உட்செலுத்துதல், விரைந்து கடித்தல், உழுதல் |
| 9096 |
முடுவல் |
பெண் நாய் |
| 9097 |
முடை |
புலால் நாற்றம் |
| 9098 |
முடைதல் |
பின்னுதல் |
| 9099 |
முண்டகம் |
கழி முள்ளி, தாழை |
| 9100 |
முண்டை |
முட்டை |
| 9101 |
முணக்கல், முணக்குதல் |
உள் வளைத்தல், அடக்குதல் |
| 9102 |
முணங்கு |
சோம்பல் |
| 9103 |
முணங்கு நிமிர்தல் |
சோம்பல் முறித்தல் |
| 9104 |
முணைஇய |
வெறுத்த |
| 9105 |
முணைதல் |
வெறுத்தல் |
| 9106 |
முத்தம் |
முத்து |
| 9107 |
முத்தி |
முத்தங் கொண்டு |
| 9108 |
முத்தியெறிதல் |
கழித்தல் |
| 9109 |
முத்தினள் |
முத்தங் கொண்டாள் |
| 9110 |
முத்தீ |
காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி, என்ற மூவகை வேதாக்கினி |
| 9111 |
முத்துதல் |
முத்தமிடுதல் |
| 9112 |
முத்து நீர் |
பனிநீர்த் திவலை |
| 9113 |
முத்தூறு |
முத்தூற்றுக் கூற்றம் |
| 9114 |
முத்தை |
முந்தை |
| 9115 |
முதல் |
இடம், தறி, மரம் முதலியவற்றின் அடி, சிறு தூறு, காரணம், ஏழாம் வேற்றுமை உருபு |
| 9116 |
முதல் வஞ்சி |
முதுமொழி வஞ்சி, தகப்பனுடைய வீரச் செயலை மகன் கூறும் புறத்துறை |
| 9117 |
முதல்வன் |
எல்லாப் பொருட்குங் காரணனான கடவுள், தந்தை |
| 9118 |
முதலை |
நீர்வாழ் விலங்கு |
| 9119 |
முதற்று |
முதலாகவுடையது |
| 9120 |
முதாஅரி |
முதுமை, முதுமையுறுகை |
| 9121 |
முதியவன் |
பிரமன், மூத்தோன் |
| 9122 |
முதியன் |
முதியவன், மூத்தோன் |
| 9123 |
முதிர்தல் |
முற்றுதல், பக்குவமாதல், மிகுதல் |
| 9124 |
முதிர்வு |
மூப்பு |
| 9125 |
முதிரம் |
குமணனுக்குரிய ஒரு மலை |
| 9126 |
முதிரை |
அவரை துவரை முதலியன |
| 9127 |
முது |
பேரறிவு |
| 9128 |
முதுக்குறைமை |
முதுக்குறைவு, பேரறிவு, முதுமைக்கண் உறைகின்ற நிலைமை |
| 9129 |
முது கலை |
ஆண் குரங்கு |
| 9130 |
முதுகாடு |
மயானம் |
| 9131 |
முதுச் சுவர் |
பழைய சுவர் |
| 9132 |
முதுநீர் |
கடல் |
| 9133 |
முதுநூல் |
வேதம் |
| 9134 |
முது பகடு |
கிழ எருது |
| 9135 |
முது பாழ் |
முது நிலம் |
| 9136 |
முதுபொழில் |
நாவலந் தீவு |
| 9137 |
முது மரம் |
ஆல் |
| 9138 |
முது முதல்வன் |
இறைவன், சிவ பெருமான் |
| 9139 |
முது முறை |
மூத்த முறைமை |
| 9140 |
முதுமை |
அறிவு, பழமை |
| 9141 |
முது மொழி |
சான்றோர் செய்யுட்கள், வேதம், பிரணவம் |
| 9142 |
முது வாய் |
முதிய வாக்கு |
| 9143 |
முதுவெள்ளிலை |
ஓர் ஊர் |
| 9144 |
முதுவோர் |
அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, அண்ணன், முதலிய பெரியோர்கள் |
| 9145 |
முதை |
முதைப் புனம், பழமை |
| 9146 |
முதைச் சுவல் |
பழங் கொல்லையாகிய மேட்டு நிலம் |
| 9147 |
முதைப் புனம் |
முற்றிய தினைப்புனம் |
| 9148 |
முதையல் |
பழங்காடு |
| 9149 |
முந்திசினோர் |
முன்னோர் |
| 9150 |
முந்துறீஇ |
முன்னிட்டு |
| 9151 |
முந்துறுத்தல் |
காட்டிக் கொள்ளுதல், தோற்றுவித்தல், முன்னிடுதல் |
| 9152 |
முந்தூழ் |
மூங்கில் |
| 9153 |
முந்தை |
முன் |
| 9154 |
முந்தை இருந்து |
முன்னே இருந்து |
| 9155 |
முந்தைய |
முற்பட்டன |
| 9156 |
முந்நீர் |
கடல் |
| 9157 |
முந்நீர் |
அகம். கடல் சூழ்ந்த உலகம் |
| 9158 |
முந்நூறு |
மூன்று நூறு |
| 9159 |
முப்புடைக்காய் |
தேங்காய் |
| 9160 |
முயக்கம் |
புல்லுதல் |
| 9161 |
முயக்கு |
தழுவுதல், புணர்ச்சி |
| 9162 |
முயங்கலேன் |
முயங்கேன் |
| 9163 |
முயங்கிக் கலந்து |
புல்லிக் கூடி |
| 9164 |
முயங்கிப் பொதிவேம் |
தழுவிக் கொண்டு பொதிந்து விடக் கடவேம் |
| 9165 |
முயங்கியுழி |
முயங்கிய இடம் |
| 9166 |
முயங்குதல் |
புணர்தல், புல்லுதல், பொருந்துதல், கூடுதல், தழுவுதல் |
| 9167 |
முயல் பொருள் |
முயன்று தேடும் பொருள் |
| 9168 |
முயல்வளவை |
முயலுமளவில் |
| 9169 |
முயற்சி |
ஊக்கம் |
| 9170 |
முயறி |
முயல்வை |
| 9171 |
முயிறு |
முசிறு, செந்நிறமுள்ள எறும்பு |
| 9172 |
முரச்சுதல் |
முற்றுவித்தல் |
| 9173 |
முரசம் |
போர்ப்பறை |
| 9174 |
முரசு |
முரசம் |
| 9175 |
முரசு கட்டில் |
அரசற்குரிய முரசு வைக்கும் ஆசனம் |
| 9176 |
முரஞ்சு |
முதிருகை |
| 9177 |
முரண் |
பகைமை, மாறுபாடு, வலி |
| 9178 |
முரணியோர் |
மாறுபட்டோர் |
| 9179 |
முரணுதல் |
மாறுபடுதல் |
| 9180 |
முரம்பு |
பருக்கைக் கல்லுள்ள மேட்டு நிலம், வன்னிலம் |
| 9181 |
முரல்தல் |
ஒலித்தல், கதறுதல், பாடுதல் |
| 9182 |
முரல்பவர் |
பாடுபவர் |
| 9183 |
முரல்வு |
யாழின் மெல் ஓசை |
| 9184 |
முரலல் |
ஒலித்தல் |
| 9185 |
முர வாய் |
ஒடிந்த வாய் |
| 9186 |
முரவு |
முரிவு, சிதைவு |