| 705 |
ஆ |
ஆக, பசு |
| 706 |
ஆஅங்கு |
ஓர் உவம உருபு, போல |
| 707 |
ஆஅய் |
ஆய் என்னும் வள்ளல் |
| 708 |
ஆக்கம் |
நுகர் பொருள், அமைத்துக் கோடல், இலாபம், செல்வம் |
| 709 |
ஆக |
ஆயிருக்க, ஆவதாக |
| 710 |
ஆகம் |
கொங்கை, மார்பு, உடம்பு |
| 711 |
ஆகன்மாறு |
ஆகையால் |
| 712 |
ஆகிய |
ஆகவேண்டி |
| 713 |
ஆகியர் |
ஆவர் |
| 714 |
ஆகிலியர் |
ஆகாதொழிக |
| 715 |
ஆகின்று |
ஆயிற்று, ஆயது |
| 716 |
ஆகுதலான் |
ஆகையினால் |
| 717 |
ஆகுதும் |
ஆவேம் |
| 718 |
ஆகுமதி |
ஆகுக |
| 719 |
ஆகுலம் |
துன்பம், வருத்தம் |
| 720 |
ஆகுவல் |
ஆயிருப்பேன் |
| 721 |
ஆகுளி |
ஒருவகைச் சிறுபறை |
| 722 |
ஆங்க |
அங்ஙனம், ஓர் அசை |
| 723 |
ஆங்கண் |
அவ்விடம், இடம், ஊர் |
| 724 |
ஆங்கனம் |
அங்ஙனம் |
| 725 |
ஆங்கு |
அக்காலத்தில், அப்படி, ஓர் உவம உருபு, அங்ஙனம், அத்தன்மை, அப்பருவத்து, அப்பொழுது, அப்போது, அவ்விடம், அவனிடத்தே, இடம், முற்பிறப்பு |
| 726 |
ஆங்கு இற |
அவ்விடத்தினின்று போ |
| 727 |
ஆங்கே |
அக்காலத்தே, அப்பொழுதே, அவ் இடத்தே |
| 728 |
ஆசாகு |
இரங்கற் குறிப்பு மொழி |
| 729 |
ஆசினி |
ஈரப் பலா |
| 730 |
ஆசு |
பற்றுக்கோடு, குற்றம் |
| 731 |
ஆசை |
விருப்பம் |
| 732 |
ஆட்டு |
கூத்து, விளையாட்டு |
| 733 |
ஆட்டுதல் |
அலைத்தல் |
| 734 |
ஆடல் |
நீராடுதல், ஆளுதல், நடனம் ஆடுதல் |
| 735 |
ஆடல் தகையள் |
ஆடுதலால் உண்டான அழகை யுடையவள் |
| 736 |
ஆடவர் |
ஆண்மக்கள், மறவர், வீரர் |
| 737 |
ஆடி |
அளைந்து, நுகர்ந்து, ஆடுதலால், விளையாடுகையினாலே |
| 738 |
ஆடிய |
ஆடல் வேண்டி, ஆடுதற்கு |
| 739 |
ஆடு |
கொல்லுகை, சமைக்கை, யாடு, வெற்றி, மேடராசி, அசைப்பாய் |
| 740 |
ஆடுகழை |
அசைகின்ற மூங்கில் |
| 741 |
ஆடுகளம் |
கூத்தாடுதற்குரிய இடம் |
| 742 |
ஆடுகள மகள் |
ஆடுகின்ற களத்திற்குரிய பெண், ஆடல் மகள் |
| 743 |
ஆடுதல் |
சஞ்சரித்தல், அளைதல், அசைதல், சொல்லுதல், நீராடுதல், விளையாடுதல், நடனம் ஆடுதல், உண்ணுதல், உலாவுதல், செல்லுதல், திரிதல், உரைத்தல், பரத்தல், கொண்டாடுதல் |
| 744 |
ஆடுநடை |
தாளத்திற்கேற்ப நடக்கும் அசைந்த நடை |
| 745 |
ஆடுநர் |
கூத்தர் |
| 746 |
ஆடுப |
நீராடுவார் |
| 747 |
ஆடுமகள் |
தேவராட்டி, விறலி |
| 748 |
ஆடுமார் |
விளையாடவேண்டி |
| 749 |
ஆடை |
தயிராடை, துகில், உடை |
| 750 |
ஆண் |
வீரன் |
| 751 |
ஆண் எழில் முற்றுதல் |
ஆண் தன்மையின் அழகாகிய மதிலைச் சூழவிட்டிருத்தல் |
| 752 |
ஆண்டலை |
ஆண்டலைப்புள் |
| 753 |
ஆண்டாய் |
அடிமைத் தொழில் கொண்டாய் |
| 754 |
ஆண்டார் |
காத்துப் போந்தவர் |
| 755 |
ஆண்டிசினோர் |
ஆண்டோர் |
| 756 |
ஆண்டு |
அவ்விடம், ஆங்கு |
| 757 |
ஆண்டை |
அவ்விடம் |
| 758 |
ஆண்தகை |
ஆளுந்தகைமை, ஆண்மைக் கூறுபாடு |
| 759 |
ஆண்தகை விறல் வேள் |
முருகன் |
| 760 |
ஆண்மை |
ஆள்வினை, ஆளுந் தன்மை, வீரம் |
| 761 |
ஆணம் |
நேயம் |
| 762 |
ஆணை |
ஆக்கினை. ஆன்றோர் மரபு, ஏவல் |
| 763 |
ஆணை கடக்கிற்பார் |
ஆணையைத் தப்புவார் |
| 764 |
ஆத்திரை |
பயணம் |
| 765 |
ஆதல் |
பேறு |
| 766 |
ஆதன் |
ஒரு தலைவன் |
| 767 |
ஆதன் அழிசி |
ஒரு தலைவன் |
| 768 |
ஆதன் ஓரி |
ஒரு தலைவன் |
| 769 |
ஆதன் நுங்கன் |
ஒரு தலைவன் |
| 770 |
ஆதி |
குதிரையின் நேரோட்டம், ஆதி என்னும் நெடுஞ் செலவு |
| 771 |
ஆதி அந்தணன் |
பிரமதேவன் |
| 772 |
ஆதி உரு |
பழைய உரு |
| 773 |
ஆதிரை முதல்வன் |
சிவன் |
| 774 |
ஆதிரையான் |
ஆதிரை நாளை யுடைய இறைவன், சிவன் |
| 775 |
ஆந்தை |
ஒரு புலவர், ஓர் உபகாரி |
| 776 |
ஆப்பி |
பசுவின் சாணம் |
| 777 |
ஆம் |
நீர், ஈரம், இகழ்ச்சிக் குறிப்பு, ஆயிருக்கும் |
| 778 |
ஆம்பல் |
ஆம்பற்குழல், ஒரு கொடி, ஒரு பண், வெண் கலத்தால் ஆம்பற் பூ வடிவமாக அணைசுபண்ணி நுனியில் வைக்கப்பட்ட புல்லாங் குழல், ஒரு பேர் எண் |
| 779 |
ஆம்பல் அல்லி |
ஆம்பலாகிய அல்லிக்காய் அரிசி |
| 780 |
ஆம்பல் வள்ளித் தொடி |
ஆம்பல் தண்டால் செய்த வளை |
| 781 |
ஆம்பி |
காளான் |
| 782 |
ஆமா |
காட்டுப் பசு |
| 783 |
ஆமான் |
காட்டுப் பசு |
| 784 |
ஆமான் குழவி |
ஆமாவின் கன்று |
| 785 |
ஆமான் புகல்வி |
ஆமான் ஏறு |
| 786 |
ஆமூர் |
ஓர் ஊர் |
| 787 |
ஆய் |
அழகு, நுண்மை, சிறுமை, மென்மை, இடைச் சாதி, தேடு, கடைஎழு வள்ளல்களுள் ஒருவன் |
| 788 |
ஆய் அண்டிரன் |
ஒரு தலைவன் |
| 789 |
ஆய் கரும்பு |
சிறந்த கரும்பு, மெல்லிய கரும்பு |
| 790 |
ஆய்த்தியேம் |
ஆய்த்தியரேம், இடைச்சாதிப் பெண்கள் |
| 791 |
ஆய்தல் |
ஆராய்தல், ஆராய்ந்து பார்த்தல் |
| 792 |
ஆய் நலம் |
அழகிய இன்பம், ஆராய்ந்த நலம், கெட்ட நலம், நுணுகிய நலம் |
| 793 |
ஆய்பு |
ஆராய்ந்து |
| 794 |
ஆய் மகள் |
இடைச்சி |
| 795 |
ஆய்வருதல் |
ஆராய்தல் |
| 796 |
ஆயத்தார் |
கூட்டத்தார் |
| 797 |
ஆயம் |
கவற்றில் தாயம், திரள், தோழியர் குழாம், சுற்றம், பெருந்தாயம், மகளிர் திரள், இனம் |
| 798 |
ஆய மகள் |
ஆய்ச்சாதியில் பிறந்த மகள் |
| 799 |
ஆயமகன் |
ஆய்ச்சாதியில் பிறந்த மகன் |
| 800 |
ஆயர் |
இடையர் |
| 801 |
ஆயர் மகளிர் |
ஆய்ச்சாதி மகளிர் |
| 802 |
ஆயனை |
ஆயனாம் தன்மையையுடைய |
| 803 |
ஆயிடை |
அக்காலத்து, அவ் இடத்து |
| 804 |
ஆயின் |
ஆராய்ந்து பார்ப்பாயாயின், ஆனால் |
| 805 |
ஆயினை |
ஆயினாய் |
| 806 |
ஆயும் |
ஓய்ந்து பறக்கும் |
| 807 |
ஆர் |
ஆரக்கால், மலரின் பொருத்து வாய், காம்பு, ஆத்தி, அருமையான |
| 808 |
ஆர் அஞர் |
பொறுத்தற்கு அரிய மனக்கவற்சி, பொறுத்தற்கு அரிய வருத்தம் |
| 809 |
ஆர் அமர் |
பொறுத்தற்கு அரிய போர் |
| 810 |
ஆர் அரண் |
வெல்லுதற்கு அரிய மதில், அழித்தற்கு அருமையான அரண் |
| 811 |
ஆர் அறிவாளர் |
நிறைந்த அறிவினையுடையவர் |
| 812 |
ஆர் இருள் |
நிறைந்த இருள், நிறைந்த இராக் காலம், போக்குதற்கு அரிய இருள், வருதற்கு அரிய கங்குல் |
| 813 |
ஆர் உயிர் |
அரிய உயிர், பெறுதற்கு அரிய உயிர் |
| 814 |
ஆர் உறல் |
ஆர்த்தலுறல், நிறைவுறல் |
| 815 |
ஆர்க |
உண்ணுக |
| 816 |
ஆர்கலி |
வெள்ளம், ஆரவாரம் |
| 817 |
ஆர்கலி உவகையர் |
நிறைந்த செருக் கினையுடைய உவகையர் |
| 818 |
ஆர்கலி உழவர் |
மிக்க ஆரவாரத்தையுடைய உழவர் |
| 819 |
ஆர்கலி எழிலி |
ஒலியை யுடைய மேகம் |
| 820 |
ஆர் குரல் |
மிக்க ஒலி |
| 821 |
ஆர் குவை |
உண்டு நிறைவை |
| 822 |
ஆர்கை |
உண்டல் |
| 823 |
ஆர்த்த |
கட்டிய |
| 824 |
ஆர்த்தல் |
அலர் தூற்றுதல், ஆரவாரித்தல், ஒலித்தல் |
| 825 |
ஆர்த்துதல் |
நுகர்வித்தல், கொடுத்தல், நிறைவித்தல் |
| 826 |
ஆர்தல் |
உண்ணுதல், நிறைதல், நுகர்தல் |
| 827 |
ஆர்ப்ப |
ஆர்க்கும்படியாக, ஆரவாரம்எழ, ஆரவாரிப்ப, ஆரவாரியா நிற்க, ஒலிப்ப, பாட |
| 828 |
ஆர்ப்பார்ப்ப |
ஆரவாரிப்ப ஆரவாரிப்ப |
| 829 |
ஆர்ப்பு |
ஆரவாரம், ஒலி |
| 830 |
ஆர்பதம், ஆர் பதன் |
உணவு |
| 831 |
ஆர்பு |
ஆர்த்து |
| 832 |
ஆர்வம் |
நெஞ்சு கருதின பொருள்களின்மீது தோன்றின பற்றுள்ளம் |
| 833 |
ஆர்வலன் |
பரிசிலன் |
| 834 |
ஆர்வு |
ஆசை, அனுபவித்தல் |
| 835 |
ஆர்வுற்ற |
நிறைவுற்ற |
| 836 |
ஆர்வுற்ற பூசல் |
பசப்புற்ற வருத்தம் |
| 837 |
ஆர்வுற்றார் |
நுகரப்பட்டார் |
| 838 |
ஆர்வுற்று |
நிறைவுற்று |
| 839 |
ஆர |
திருப்தி உண்டாக, நிறைய, நுகர |
| 840 |
ஆர நெருப்பு |
சந்தன நெருப்பு |
| 841 |
ஆரம் |
ஆரக்கால், சந்தனம், மாலை, முத்தாற் செய்த கச்சு, வண்டியின் ஓர் உறுப்பு, முத்து வடம் |
| 842 |
ஆரல் |
கார்த்திகை, ஆரால் மீன் |
| 843 |
ஆரா |
அமையாத, நிறையாத |
| 844 |
ஆராக் கவவு |
அமைதி பெறாத முயக்கம், நிறையாத முயக்கம் |
| 845 |
ஆராக் கனை காமம் |
நிறையாத செறிந்த காம வேட்கை |
| 846 |
ஆராது |
ஆராமல், பொருந்தாதபடி |
| 847 |
ஆராமை |
தெவிட்டாமை, அமையாமை |
| 848 |
ஆரி |
அருமையையுடையது |
| 849 |
ஆரிடை |
அரியவழி, அரிய இடம், தொலையாத வழி, வருதற்கு அரியஇடம், வழி |
| 850 |
ஆரிப் படுகர் |
அரிதாய் இழியும் வழி |
| 851 |
ஆரியர் |
ஆரியக் கூத்தர் |
| 852 |
ஆருந்து |
ஆரும் |
| 853 |
ஆரை |
அச்சு மரம், தொத்துளிப் பாய், ஆரக்கால் |
| 854 |
ஆல் |
கார்த்திகை, தொழிற்பெயர் விகுதி, ஆயிருக்குமாயின், ஆயில், அசை நிலை |
| 855 |
ஆல் அமர் செல்வன், ஆல்கெழு கடவுள் |
ஆலின் கீழ் அமர்ந்த இறைவன் |
| 856 |
ஆலங்கானம் |
தலையாலங்காடு |
| 857 |
ஆலம் |
ஆலமரம், நீர் |
| 858 |
ஆலி |
ஆலங்கட்டி, பனிக் கட்டி, ஆரவாரித்து |
| 859 |
ஆலின |
ஒலித்தன |
| 860 |
ஆலுதல் |
ஒலித்தல், ஆரவாரித்தல், கூவுதல் |
| 861 |
ஆலை |
யானைக் கூடம், கரும்பு ஆலை |
| 862 |
ஆவணம் |
கடைத் தெரு |
| 863 |
ஆவணமாக்கள் |
பிராமணம் வாங்கு வோர் |
| 864 |
ஆவது |
ஆம் தன்மை |
| 865 |
ஆவம் |
அம்பறாத் தூணி |
| 866 |
ஆவி |
வேளிர் தலைவருள் ஒருவன், புகை |
| 867 |
ஆவித்தல் |
அங்காத்தல் |
| 868 |
ஆவியர் |
வேள் ஆவியின் மரபினர் |
| 869 |
ஆவினன் குடி |
முருகக் கடவுளின் படைவீடுகளில் ஒன்றான பழனி |
| 870 |
ஆவுதி |
ஆகுதி, வேள்வியில் தேவர்க்குச் செலுத்தும் பொருள் |
| 871 |
ஆழ்ச்சி |
குழிப் பாய்தல் |
| 872 |
ஆழ்தல் |
அழுந்துதல் |
| 873 |
ஆழ் துயரம் |
அழுந்தின துயரம் |
| 874 |
ஆழல் |
ஆழ்தல், அழுந்தாதே, அழாதே |
| 875 |
ஆழி |
கடல், கடற்கரை, சக்கரம் |
| 876 |
ஆள் |
மனிதர், வீரர் |
| 877 |
ஆள் இல் பெண்டிர் |
பொருள் தேடி வந்து பாதுகாக்கும் கணவனை இழந்த கைம்மை மகளிர் |
| 878 |
ஆள்பவர் |
நாட்டை ஆளுகின்ற அரசர் |
| 879 |
ஆள்பவன் |
தொழில் கொள்கின்றவன் |
| 880 |
ஆள்வல் |
ஆண்டு போதுவேன் |
| 881 |
ஆள் வழக்கற்ற |
மனிதர் நடமாட்டமே இல்லாத |
| 882 |
ஆள்வினை |
முயற்சி |
| 883 |
ஆள்வினைத் திறம் |
முயற்சியிடம் |
| 884 |
ஆளல் |
அடிமைத் தொழில் கொள்ளுதல் |
| 885 |
ஆளன் |
ஆண்மையை உடையோன் |
| 886 |
ஆளி |
யானையாளி, ஆள்பவன் |
| 887 |
ஆளிய வருவான் |
ஆளவரும் அரசன் |
| 888 |
ஆற்ற |
முற்ற, மிக |
| 889 |
ஆற்றல் |
செய்தல், வலி |
| 890 |
ஆற்றல் நோய் |
வலியையுடைய காம நோய் |
| 891 |
ஆற்றலம் |
பொறுக்கமாட்டேம் |
| 892 |
ஆற்றலர் |
ஆற்றார் |
| 893 |
ஆற்றறுத்தல் |
வலியறுத்தல் |
| 894 |
ஆற்றாக்கால் |
இயலாத போது |
| 895 |
ஆற்றாதவர் |
பிரிவாற்றாதவர் |
| 896 |
ஆற்றாது |
நடத்தாமல், சீர் நில்லாது |
| 897 |
ஆற்றாம் |
வன்மை இலேமாயினேம் |
| 898 |
ஆற்றாமை |
செய்ய மாட்டாமை, நடத் தாமை, பொறுக்க மாட்டாமை, மாட்டாமை |
| 899 |
ஆற்றார் |
மாட்டார், பொறாதிருப்பர், பகைவர் |
| 900 |
ஆற்றாள் |
செய்யாள், மாட்டாள் |
| 901 |
ஆற்றியார் |
செய்தவர் |
| 902 |
ஆற்றின் |
நெறியால் |
| 903 |
ஆற்றீர் |
மாட்டீர் |
| 904 |
ஆற்று |
வலி |
| 905 |
ஆற்றுக் கவலை |
ஆற்றிடைக் குறையாகிய துருத்தி |
| 906 |
ஆற்றுகிற்பார் |
நிகழ்த்துவார் |
| 907 |
ஆற்றுகேன் |
வல்லேன் |
| 908 |
ஆற்றுதல் |
உதவுதல், முடித்தல், செய்தல், இல்வாழ்க்கை, நடத்துதல், செலுத்துதல், தீர்த்தல், நிகழ்த்துதல், போர்த் தொழிலை நடத்துதல் |
| 909 |
ஆற்றுப் படுத்தல் |
வழிப் படுத்தல், வழி காட்டுதல், போக்குதல் |
| 910 |
ஆற்றுவள் |
பொறுத்திருப்பாள் |
| 911 |
ஆற்றேம் |
நடத்த மாட்டேம், |
| 912 |
ஆறு |
நதி, வழி, அறநெறி, உலக வொழுக்கம், ஒழுக்கம், தன்மை, அங்கம், ஓர் எண் |
| 913 |
ஆறு அல்ல மொழி |
அறநெறி அல்லாத தீமொழி |
| 914 |
ஆறு எழுத்து |
ஷடாக்ஷரம், 'நமக் குமாராய' என்னும் ஆறு எழுத்தாலாகிய மந்திரம் |
| 915 |
ஆறு கொள்ளல் |
வழியாகக் கொள்ளுதல் |
| 916 |
ஆறுதல் |
தணிதல் |
| 917 |
ஆறு மயங்குதல் |
பழைய வழிகள் மயங்குதல், வழி தப்பி வருதல் |
| 918 |
ஆன் |
பசு, பெற்றம் |
| 919 |
ஆன் ஏறு |
இடபம், காளை |
| 920 |
ஆன்பயம் |
பசுப் பால் |
| 921 |
ஆன் பொருநை |
ஓர் யாறு |
| 922 |
ஆன்ற |
இல்லாமற் போன, அமைந்த, நிறைந்த |
| 923 |
ஆன்ற ஒலி |
அடங்கிய ஒலி |
| 924 |
ஆன்றல் |
அமைதல், ஒழிதல் |
| 925 |
ஆன்றவர் |
தேவர் |
| 926 |
ஆன்றிசின் |
அமைவாயாக |
| 927 |
ஆன்று |
அமைந்து, நிறைந்து, நீங்கி அடங்கப்பட்டு |
| 928 |
ஆன்றோர் |
அமைந்த சான்றோர் |
| 929 |
ஆன்றோள் |
மாண்புடையாள் |
| 930 |
ஆனா |
அமையா, இமையாத |
| 931 |
ஆனாது |
இடை விடாது, அமையாமல், மேன் மேலே |
| 932 |
ஆனாப் பரிய அலவன் |
அமையாத செலவுகளையுடைய நண்டுகள் |
| 933 |
ஆனாமை |
அமையாமை, அடங்காமை |
| 934 |
ஆனா விருப்பு |
அமையாத விருப்பம் |
| 935 |
ஆனியம் |
நட்சத்திரம், நாள் |
| 936 |
ஆனிலையுலகம் |
ஆனுலகு, கோலோகம் |
| 937 |
ஆனும் |
ஆயினும் |
| 938 |
ஆனுருக்கு |
பசுவின் நெய் |