9525 வகை மனையின் பகுப்பு, கூறுபாடு, பகுதி, வகுத்துக் கூறுதல், வகுப்பு, வகுப்பையுடைய உறுப்பு
9526 வகை அணிப் பொலிதல் வகுப்புடைய கோலத்தாலே பொலிவு பெறுதல்
9527 வகைபெற தாழும்படி
9528 வகைமை கூறுபாடு
9529 வங்கப் பாண்டி பள்ளியோடம் போன்ற வண்டி
9530 வங்கம் மரக்கலம், வெள்ளி, பள்ளியோடம் போன்ற வண்டி, கப்பல், ஒடம்
9531 வங்கா ஒரு பறவை
9532 வங்கூழ் காற்று
9533 வச்சியம் வசியம்
9534 வச்சிரத் தடக் கை நெடியோன் இந்திரன்
9535 வச்சிரம் வச்சிராயுதம்
9536 வசி பிளவு, தழும்பு
9537 வசித்தல் வசியஞ் செய்தல்
9538 வசி தடி கண்டமாக்கிய துண்டம்
9539 வசிதல் பிளத்தல்
9540 வசிந்து வயமாக்கி
9541 வசிபடல் பிளவுபடல்
9542 வசிவு பிளத்தலால் உண்டாகும் வடு
9543 வசை பழிப்பு, குற்றம்
9544 வசை இல் தீம் நீர் குற்றம் இல்லாத இனிய நீர்
9545 வசைதல் வசை கூறுதல்
9546 வசையுநர் பகைவர்
9547 வஞ்சம் பொய், பொய்வன்மை
9548 வஞ்சன் ஓர் உபகாரி
9549 வஞ்சி சேரர் தலைநகரான கருவூர், மேற்செலவு, ஒரு வகை மரம், ஒரு வகைக் கொடி
9550 வஞ்சினம் சூளுறவு
9551 வட்கர் வட்கார், பகைவர், குற்றம்
9552 வட்டம் அப்ப வகை, வட்டப் பாறை, ஆலவட்டம், கேடகம், நீர் எறி கருவி, பாராவளை
9553 வட்டி கடகப் பெட்டி, கூடை
9554 வட்டித்தல் சுழலுதல், சுழற்றுதல், உருட்டுதல், கட்டுதல்
9555 வட்டில் தட்டு
9556 வட்டு சூதாடு கருவி, நீர்எறி கருவி வகை, விளையாட்டுக் கருவி வகை
9557 வடக்கிருத்தல் உயிர் துறக்குந் துணிவுடன் வடக்கு நோக்கி இருந்து பிராயோபவேச விரதத்தை மேற் கொள்ளுதல்
9558 வட குன்றம் இமயம்
9559 வடதெற்கு வடக்கும் தெற்கும்
9560 வடந்தை வடதிசையிலுள்ளது, வட காற்று
9561 வடபுலம் வடதேசம், உத்தரகுரு
9562 வட பெருங்கல் வடமலை, இமயமலை
9563 வட பொழில் வடக்கிலுள்ள பிரதேசம்
9564 வட மலை மகா மேரு, இமய மலை
9565 வடமீன் அருந்ததி
9566 வட வடுகர் வடக்கேயுள்ள வடுக வீரர்
9567 வடவர் வட நாட்டார்
9568 வட வளம் வட நாட்டில் விளைந்த பண்டம்
9569 வடவனம் மரவகை
9570 வடாது வடக்குள்ளது
9571 வடி கூர்மை, திருத்தம், வாரி முடிக் கை, மாவடு, மாம்பிஞ்சு, மாம்பிஞ்சின் பிளவு
9572 வடித்தல் திருத்தமாகச் செய்தல், தகடாக்குதல், யாழ்நரம்பை உருவுதல், கிள்ளியெடுத்தல்
9573 வடித்தன்ன வார்த்துச் செய்தாற் போன்ற
9574 வடித்த நனை வடிக்கப் பெற்ற கள்
9575 வடித்திசின் வடிப்பாய்
9576 வடிதல் திருந்துதல், அழகுபெறுதல்
9577 வடிந்த அழகுபெற்ற, தோன்றிய
9578 வடி நரம்பு வடித்த நரம்பு
9579 வடி நாவின் வல்லார் வழுவின சொற்கள் சொல்லாத படி தெள்ளிய நாவினாலே வார்த்தை சொல்ல வல்லவர்
9580 வடிம்பு கால் முதலியவற்றின் விளிம்பு
9581 வடி மணி வடித்த மணி
9582 வடிய வடு வகிரின் தன்மையையுடைய கண்கள்
9583 வடியாப் பித்தை கோதப் பெறாத மயிர்
9584 வடிவு ஆர் குழை மகரத்தின் வடிவு நிறைந்த குழை
9585 வடு தழும்பு, உளியாற் செதுக்கின உரு, குற்றம், பிஞ்சு, கருமணல், அடையாளம், அலர்
9586 வடுக் கொள்தல் தழும்பு படுதல்
9587 வண்கை வண்மையையுடைய கை, வளவிய கை
9588 வண் சினை வளவிய கிளை
9589 வண்டல் விளையாட்டாக இழைத்த சிற்றில்
9590 வண்டல் ஆயம் விளையாடும் தோழியர் கூட்டம்
9591 வண்டலவர் விளையாட்டு மகளிர்
9592 வண்டற் பாவை வண்டலாற் செய்த விளையாட்டுப் பாவை
9593 வண்டு வண்டு, கரும்பு, தேன், ஞிமிறு, என நால்வகைப்பட்ட அறுகாற் சிறு பறவை
9594 வண்டு ஆர்த்தல் வண்டுகள் ஆரவாரித்தல்
9595 வண்ணக்கன் நாணய சோதகன்
9596 வண்ண நீர் அரக்கு நீர்
9597 வண்ணம் அழகு, இயற்கை அழகு, நிறம், குணம், இனம்
9598 வண் பரி வளவிய பரி
9599 வண் பெயல் வளவிய மழை
9600 வண் மகிழ் வண்மையினாகிய களிப்பு
9601 வண்மை பெருமை, ஈகை
9602 வணக்குதல் பணியச் செய்தல், தாழ்த்துதல்
9603 வணங்கார் பகைவர்
9604 வணங்கி தொழுது, வளைந்து
9605 வணங்கு இறை வளைந்த முன் கை
9606 வணங்குதல் ஏவல் தொழில் செய்தல், வளைதல்
9607 வணர் வளைவு
9608 வணர் ஐம்பால் கடை குழன்ற ஐம்பால்
9609 வணர்தல் வளைதல், நுனி சுருண்டிருத்தல், மயிர் குழன்றிருத்தல்
9610 வணர்ந்து ஒலி ஐம்பால் கடை குழன்று தழைக்கின்ற ஐம்பால்
9611 வணர் மருப்பு வளைந்த கொம்பு
9612 வத்தம் சோறு, நெல்
9613 வதி விலங்கு முதலியன தங்கும் இடம்
9614 வதி சேர்தல் தங்குமிடம் சென்று தங்குதல்
9615 வதிதல் தங்குதல், துயிலுதல்
9616 வதிவயின் தங்கும் இடத்திற்கு
9617 வதுவை மணமகள், மணம், மணமாலை, கலியாணம்
9618 வதுவை அயர்தல் வரைந்து கொள்ளுதல், கலியாணம் செய்தல்
9619 வதுவை நாற்றம் புது மணம்
9620 வந்தக்கடை வந்து புகுந்த இடத்து
9621 வந்தக்கால் வர
9622 வந்ததை வந்ததனை, வந்தது
9623 வந்தன்று வந்தது
9624 வந்தாங்கு வந்தாற் போல்
9625 வந்திகை கையில் தோளின் கீழ் அணியப்படும் ஆபரணம்
9626 வந்திசின் வருவாயாக
9627 வந்தீ வருவாய்
9628 வந்தீக வருக
9629 வந்தீத்தந்தாய் வந்தாய்
9630 வந்தீய வர
9631 வந்தீயாய் வாராய்
9632 வந்தீயான் கொல் வாரானோ
9633 வந்தென வந்ததாக
9634 வந்தை வா
9635 வம் வா, வாரீர்
9636 வம்பப் பெரும் புயல் புதிய மழை
9637 வம்ப மள்ளர் நிலையில்லாத வீரர், புதிய வீரர்
9638 வம்ப மாக்கள் அயல் நாட்டு மாக்கள், ஏதிலார்
9639 வம்ப மாரி காலமல்லாத காலத்துப் பெய்யும் மழை
9640 வம்பலர் வழிப்போவார்
9641 வம்பலன் புதியோன், வழிப் போக்கன்
9642 வம்ப வேந்தன் புதிய வேந்தன்
9643 வம்பு புதுமை, தேர்ச் சீலை, யானைக் கச்சு, முலைக் கச்சு, நிலையின்மை, கையுறை
9644 வம்மின் வாரும், வாருங்கோள்
9645 வம்மோ வாராய்
9646 வய மிகுதி, வலி
9647 வயக்கு ஒளி, விளங்குதல்
9648 வயக்குதல் விளக்குதல்
9649 வயக்குறா மணி விளக்கமுறுத்தாத மணி
9650 வயங்கல் கண்ணாடி
9651 வயங்கிட்டு விளங்க விட்டு, வயங்க
9652 வயங்கு ஒளி எக்கர் விளங்குகின்ற ஒளியையுடைய இடு மணல்
9653 வயங்கு ஒளிர் பனைக் கொடி ஒளி பெறுகின்ற பனைக் கொடி
9654 வயங்குதல் ஒளி செய்தல், விளங்குதல், மிகுதல்
9655 வயந்தகம் மகளிர் தலைக் கோலத்தின் தொங்கலுறுப்பு
9656 வயப் புலி வலியுள்ள புலி, சிங்கம்
9657 வயம் வெற்றி, மூலம், வலி
9658 வயமா சிங்கம், குதிரை
9659 வயமான் வயமா, புலி, சிங்கம், வலியினையுடைய குதிரை, வலியையுடைய யானை முதலியவை
9660 வயலை பசலைக் கொடி
9661 வயலைக் கொடி பசலைக் கொடி
9662 வயவன் வீரன், படைத்தலைவன்
9663 வயவு வலிமை, வயாநடுக்கம், விருப்பம், வேட்கை நோய், கருப்பம் தங்கிய காலத்துப் பிறக்கும் வேட்கையாகிய நோய்
9664 வயவு நோய் வயா நடுக்கம், கருப்பக்காலத்து உண்டாகும் மசக்கை முதலியன
9665 வயா (ஈன்ற கன்றின் மேலுள்ள) வேட்கைப் பெருக்கம், கருவுற்றிருக்கும் மகளிர்க்கு அக்காலத்துளதாகும் வேட்கைப் பெருக்கம்
9666 வயாஅம் விரும்பும்
9667 வயா நோய் வயா நடுக்கம், கருப்பக் காலத்து உண்டாகும் மசக்கை முதலியன
9668 வயாவுதல் விரும்புதல்
9669 வயிர் மூங்கில், ஊது கொம்பு
9670 வயிரிய மாக்கள் பாடகர்
9671 வயிரியர் கூத்தர்
9672 வயிற்றுத் தீ உதராக்கினி, பசி
9673 வயின் பக்கம், பக்குவம், முறை, உலகம்
9674 வயின்வயின் முறைமுறை
9675 வரகு ஒரு வகைத் தானியம்
9676 வரம் தெய்வம் முதலியவற்றால் பெறும் பேறு
9677 வரம்பு எல்லை, வரப்பு
9678 வரவு வழி, வணங்குகை
9679 வரன்றி வாரியடித்துக் கொண்டு
9680 வரால் வெளிறின கருநிறமும் மூன்றடி வளர்ச்சியுமுடைய மீன் வகை
9681 வராற் போத்து இள வரால்
9682 வரி தொய்யில் முதலிய இரேகை, ஒழுங்கு நிரை, அறல், நிறம், புள்ளி, பாட்டு, புகர், தேமல், கோடு, எழுத்து, அருப்புத் தொழில், குடர், சுணங்கு, திதலை, வளை
9683 வரிக் குடர் வரிகளையுடைய குடர்கள்
9684 வரிக் குழை வரியினையுடைத்தாகிய குழை
9685 வரிசை மேம்பாடு, தகுதி, பாராட்டு
9686 வரிசைப் பெரும்பாட்டு பாராட்டும் பெரிய பாட்டு
9687 வரித்தல் கோலஞ் செய்தல்
9688 வரிதல் சித்திரம் எழுதுதல்
9689 வரிந்த வரிபட்ட
9690 வரிநிழல் செறியாத நிழல்
9691 வரிப்ப கோலஞ் செய்வன
9692 வரிப் பந்து வரியினையுடைய பந்து
9693 வரிபுனை வல் வில் வரிந்து புனைந்த வலிய வில்
9694 வரிமணல் அறலினையுடைய மணல்
9695 வரி வண்டு பாட்டினையுடைய வண்டு, வரியினையுடைய வண்டு
9696 வரிவயம் புலி
9697 வரிவலை கட்டிய வலை
9698 வரின் வந்தால்
9699 வருட தடவ
9700 வருடை வரையாடு, ஆடு, மேடராசி, மான்
9701 வருத்த வருத்துகையினாலே
9702 வருத்தம் துன்பம், ஆற்றாமை
9703 வருத்து வருத்தம்
9704 வருத்துதல் வருந்தச் செய்தல்
9705 வருத்துறும் வருத்தமுறா நிற்கும்
9706 வருதி வருகின்றாய்
9707 வருதிர் வாரா நின்றீர்
9708 வருதும் வருவேம்
9709 வருந்த வருந்தும்படி
9710 வருந்தல் வருந்தாதேகொள்
9711 வருந்தாதி வருந்தாதேகொள்
9712 வருந்திய செல்லல் வருந்திய வருத்தம்
9713 வருந்தியாள் வருந்தினவள்
9714 வருந்தினை வதிந்த வருந்தித் தங்கின
9715 வருநர் புதிதாய் வருபவர், விருந்தினர், தலைவன்
9716 வருபவர் வருமவர்
9717 வரு பொருள் எதிர் கால நிகழ்ச்சி
9718 வரும் வருவார்
9719 வரு முலை எழுகின்ற முலை
9720 வருவது வருக
9721 வருவதை வருகின்ற நிலைமை
9722 வருவான் வருவதற்கு
9723 வரு வைகல் ஞாயிறு தோன்றுகின்ற விடியற் காலம்
9724 வரூஉம் வருவான்
9725 வரை மூங்கில், மலை, மலைச் சிகரம், பக்கமலை, இடம், எல்லை, நெறி
9726 வரை உறழ் நீள் மதில் வரையை மாறுபடுகின்ற நீண்ட மதில்
9727 வரைக் கட்சி மலைக் காடு
9728 வரைக் கவான் மலைக் குகை
9729 வரைக நீங்குக
9730 வரைச் சிலம்பு மலைச் சாரல்
9731 வரைத் தீம் தேன் மலையிலுள்ள தேனிறால்
9732 வரைத்து அளவு, அளவையுடையது, எல்லைத்து
9733 வரைதல் நிர்ணயித்தல், அளவு படுத்துதல், கொள்ளுதல், கைவிடுதல், திருமணம் செய்தல், கூறுபடுத்தல்
9734 வரைந்தனை கொண்மோ வரைந்து கொள்வாயாக
9735 வரை நில்லா விழுமம் எல்லையில்லாத இடும்பை
9736 வரைப்பு மதில், மாளிகை, ஊர், உலகம், எல்லை, குளம், முற்றம்
9737 வரைபவன் என்னை நெஞ்சாலே வரைந்திருக்கின்றவன்
9738 வரையர மகளிர் மலைவாழ் தெய்வப் பெண்டிர்
9739 வரையலள் மணஞ் செய்யப்படாள்
9740 வரையா அளவற்ற
9741 வரையா நுகர்ச்சி களவுப் புணர்ச்சி
9742 வரையாமை குறைபடாமல் வழங்குதல்
9743 வரையா ஈகை பெருங் கொடை
9744 வரைவு எல்லை
9745 வரைவுடன்படுதல் தலைவியின் சுற்றத்தார் தலைமகற்கு அவளை மணம்புரிவிக்கச் சம்மதிக்கும் அகத் துறை
9746 வரைவு மலிதல் மணம் நிகழ்வது பற்றி மகிழ்வுறுதல்
9747 வல் சூதுபலகை, விரைவாக, உணர்ந்திருத்தல்
9748 வல்சி உணவு, சோறு, நெல்
9749 வல்லவர் நூல் வல்ல ஆசிரியர்
9750 வல்லவன் சமர்த்தன்
9751 வல்லா கொல்லோ வல்லமை இல்லாலாதனவோ
9752 வல்லாங்கு இயன்றஅளவில், சதுரப்பட
9753 வல்லாதீமோ வல்லமை இன்றி இருக்க
9754 வல்லார் திறமையுடையவர், திறமையில்லாதவர்
9755 வல்லாளன் வலிமை மிக்கவன்
9756 வல்லாறு வல்லாங்கு
9757 வல்லி கொடி
9758 வல்லிகை குதிரைக் கழுத்தில் கட்டும் வடம்
9759 வல்லியம் புலி
9760 வல்லினும் அறியினும்
9761 வல்லு சூதாடு கருவி
9762 வல்லுதல் செய்யமாட்டுதல்
9763 வல்லுநர் வல்லோர்
9764 வல்லுப் பலகை வல்லப் பலகை, நெத்தப் பலகை, சூதாடுதற்கு உரிய அறை கீறிய பலகை
9765 வல்லுவள் வல்லள்
9766 வல்லுவை வல்லாய்
9767 வல்லே விரைவாக
9768 வல்லேறு இடி
9769 வல்லை வன்மையுடையாய், கடுக, விரைய
9770 வல்லோன் வல்லான்
9771 வல் வாய் எல்லரி ஒருவகைப் பறை
9772 வல் விரைதல் மிக விரைதல்
9773 வல்வில் ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஓர் அம்பை எய்யும், திறமை, வலிய வில்
9774 வல் வில் ஓரி ஓரி, கடை எழு வள்ளல்களுள் ஒருவன்
9775 வல் வில் வேட்டுவன் ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும் படி ஓர் அம்பை எய்யும் திறலுடையவன்
9776 வல் வினை வலிதாகிய தொழில்
9777 வலங் கொள்தல் வலமாகச் சுற்றி வருதல், பிரதட்சிணம் செய்தல்
9778 வலங்கொளீஇ வா வலஞ் செய்வித்து வா
9779 வலஞ் சுரிதல் வலமாகச் சுழலுதல், வலப்புறமாகச் சுழிந்திருத்தல்
9780 வலஞ்சுரி மராஅம் வலமாகச் சுரித்த வெண் கடப்ப மலர்
9781 வலஞ் செய்து வலம் வந்து
9782 வலத்தல் சுற்றுதல், பின்னுதல், தொடுத்தல், பிணித்தல்
9783 வலந்தன சூழப்பட்டன, சுற்றிப் பிணித்தன
9784 வலந்து கட்டுண்டு
9785 வலம் வலி, வெற்றி, ஆணை, ஏழன் உருபு
9786 வலம்படுதல் வெற்றியுண்டாதல்
9787 வலம்புரி நந்தியா வட்டம், வலம்புரிச்சங்கின் வடிவமைந்த தலைக்கோல வகை
9788 வலவயின் வெற்றிக்களம்
9789 வலவன் தேர்ப் பாகன்
9790 வலன் வலம், வலப்பக்கத்திலிருப்பவன், வலக்கை, வெற்றி
9791 வலார் வளார்
9792 வலி அகங்காரம், வலிமை
9793 வலி என வலியைத் தரும் என்று கருதி
9794 வலித்தல் பற்றிக் கொள்ளுதல், துணிதல், வற்றுதல், கருத்தோடு செய்தல்
9795 வலித்தன்று துணிந்தது
9796 வலித்தி துணிவை
9797 வலிப்பல் துணிவல்
9798 வலிப்பளவை துணியுமளவு
9799 வலிமுன்பு மிக்க வலி
9800 வலியன் வலிமையுள்ளோன்
9801 வலிவாய் துணிவாயாக
9802 வலியுறுக்கும் இறுகப் பிடிக்கும்
9803 வலியுறுத்துதல் பலப்படுத்துதல், உலோபஞ் செய்தல்
9804 வலை பிராணிகளை அகப்படுக்குங் கருவி, யாகபத்தினி நெற்றியில் அணிந்து கொள்ளும் அணி வகை
9805 வலைஞன் மீன் பிடிப்போன்
9806 வலைப்படுதல் வலையிலே அகப்படுதல்
9807 வலைவன் வலையன்
9808 வவ்வு கவர்கை, சுற்றுதல்
9809 வவ்வுதல் கவ்வுதல்
9810 வழக்கறுத்தல் போக்கைத் தடுத்தல்
9811 வழக்கு ஓட்டம், போக்குதல்
9812 வழங்கல் இயங்கல், திரிதல், உலாவுதல், திரிகின்ற தன்மை
9813 வழங்காத் தேர் பேய்த் தேர்
9814 வழங்காப் பொழுது உச்சி வேளை, ஒருவரும் வழங்காத உச்சிக் காலம்
9815 வழங்குதல் இயங்குதல், உலாவுதல், அசைந்தாடுதல், கூத்தாடுதல், கொடுத்தல், பிரயோகித்தல், சொல்லுதல், ஊரப்படுதல், ஏறுதல்
9816 வழங்குந்து செல்லும்
9817 வழலை ஒரு வகைப்பாம்பு
9818 வழாஅமை வழுவாமை
9819 வழாஅல் வழுக்குகை
9820 வழாது இடை விடாமல்
9821 வழி வழிபாடு, ஏவல், சுற்றம், கிளை, சுவடு, பின்னானது, இடம், மரபு
9822 வழி தபுத்தல் கிளையொடும் கெடுத்தல்
9823 வழிநடத்தல் ஏவல் கேட்டு நடக்கை
9824 வழிநடை வழிச் செல்லுகை
9825 வழிநாள் பின்னாள்
9826 வழிபடுதல் வணங்குதல்
9827 வழி முறை பின்பு, பின்னாக
9828 வழிமுறைத் தாய் தகப்பனுக்கு இரண்டாந் தாரமாகிய சிறிய தாய், பின்னர் வந்த தாய்
9829 வழிமொழி பணி மொழி
9830 வழிமொழிதல் வழிபாடு கூறுதல், வழிபாடாகச் சொல்லுதல்
9831 வழியடை இடையூறு
9832 வழீஇ தப்பி, வழுவுகையினாலே
9833 வழு பாவம், தப்பு
9834 வழுக்கு வழும்பு
9835 வழுக்குதல் தவறு செய்தல், தப்புதல்
9836 வழுத்துதல் துதித்தல்
9837 வழுதி பாண்டிய மன்னன்
9838 வழும்பு தீங்கு, நிணம்
9839 வழுவாய் பாவம்
9840 வழுவுதல் தவறுதல், சறுக்குதல்
9841 வழூஉ வழு
9842 வழூஉச் சொற் கோவலர் வழுவின சொல்லையுடைய கோவலர்
9843 வழூஉம் வழுக்கும்
9844 வழை சுரபுன்னை, வழைச்சு
9845 வழைச்சு புதுமை, இளமை
9846 வள் பெருமை, கடிவாளம், கூர்மை
9847 வள் இதழ் பெரிய இதழ், வள்ளிய இதழ்கள்
9848 வள் உகிர் பெரிய உகிர்
9849 வள் உருள் நேமியான் வள்ளிய உருண்ட நேமிப்படையவன்
9850 வள் உறை வளவிய துளி
9851 வள் உயிர் வளம் பொருந்திய ஒலி, பேரொலி
9852 வள் எயிறு கூர்மையான பற்கள்
9853 வள்பு வள், வார்
9854 வள் வாய் ஆழி பெருமை பொருந்திய தேர் உருள்
9855 வள்ளம் வட்டி
9856 வள்ளி கைவளை, முருகக் கடவுளின் தேவி, தண்டு, பூங்கொடி, வள்ளிக் கொடி
9857 வள்ளி அம் கானங் கிழவோன் வள்ளிக் கொடி படர்ந்த காட்டையுடையவன்
9858 வள்ளி கீழ் விழா வள்ளிக்கொடி கிழங்கைக் கீழ் விழச் செய்யா
9859 வள்ளியையாக உபகாரியாவாய்
9860 வள்ளியோன் வண்மையுடையோன்
9861 வள்ளுரம் பசுந் தசை
9862 வள்ளை கொடி வகை, உலக்கைப் பாட்டு
9863 வளகு நீண்ட மரவகை
9864 வளப்பாடு பெருக்கம்
9865 வளம் உணவு, செல்வம், பெருமை
9866 வளம் கெழு பொய்கை செல்வம் மிக்க பொய்கை
9867 வளம் பாடுதல் பெருமையைப் பாடுதல்
9868 வளமை வளம், செல்வம், வளப்பம், செல்வச் செருக்கு
9869 வளவன் சோழன்
9870 வளன் வளம், பயிர்கள்
9871 வளன் உண்ணல் செல்வத்தை நுகர்தல்
9872 வளாகம் உலகம், பரப்பு
9873 வளாவுதல் சூழ்தல்
9874 வளி காற்று, வளியாகிய தெய்வம்
9875 வளிக் குதிரை காற்றுப்போற் கடிய குதிரை
9876 வளி தரும் செல்வன் காற்றைத் தருகின்ற ஞாயிறு
9877 வளி மகன் வீமன்
9878 வளி மறை வீடு
9879 வளை சங்கு, கைவளை, தொடி, வளையல்
9880 வளைஇ சூழ்ந்து
9881 வளைஇய சூழப்பட்ட, சூழ்ந்த, வளைத்த
9882 வளை ஓடுதல் வளை கழலுதல்
9883 வளைத்தல் சூழ்தல், எழுதுதல்
9884 வளைதல் சுற்றிவருதல்
9885 வளையவர் வளையினையுடைய இளைய மகளிர்
9886 வளையுபு வளைந்து
9887 வளையோர் வளையினையுடைய மகளிர்
9888 வளை வெண் மருப்பு வளைந்திருக்கின்ற வெண்மையான கொம்பு
9889 வற்புலம் மேட்டு நிலம்
9890 வற்றல் பசுமை அறுதல்
9891 வறநிலை ஆறு கொடிய வழி
9892 வறப்பின் பெய்யாதொழியின்
9893 வறம் வற்றுகை, நீர் இல்லாமை, பஞ்ச காலம், கோடைக் காலம், வறண்ட பூமி, கோடை, வற்கடம்
9894 வறம் கூர் வானம் கோடைக் காலம், மிக்க வானம்
9895 வறல் உலர்கை, வறட்சியான நிலம், சுள்ளி, நீர் இல்லாமை, வறந்த நிலம்
9896 வறள் மணற்பாங்கு, நீர் அற்ற இடம்
9897 வறற் காலை நீர் இல்லாத காலம்
9898 வறன் வறட்சி, வறம், பஞ்ச காலம், ஈரம் அற்ற நிலம், வற்கடம், வற்கடமான காலம்
9899 வறிதாக சிறிதாகையினாலே, வறுவிதாக
9900 வறிதாகின்று வறுமையையுடையதாகின்றது
9901 வறிது உள்ளீடற்று வெறுவிதாகை, சிறிது, ஆதாரமின்றி
9902 வறுங் கை பூண் அணியாத கை
9903 வறுந் தலை அலங்கரிக்கப்படாத தலை
9904 வறுவிது குறையாக இருப்பது
9905 வறுவியன் கூடாதவனாய்
9906 வறை பொரிக் கறி, வறுவல்
9907 வன்கண் தறுகண்மை, கலங்காமை
9908 வன்கண்ணன் தறுகண்மையையுடையவன்
9909 வன்கண்மை வீரம்
9910 வன் கனி செங்காய்
9911 வன் கை வலிய சுரம்
9912 வன் பறழ் வலிய குட்டி
9913 வன் பால் வன்பார், முல்லை நிலம்
9914 வன்பு உள்ளத் திண்மை
9915 வன் புலம் வலிய நிலம், குறிஞ்சி நிலம், முல்லை நிலம்
9916 வன்புலனாடு மலை நாடு
9917 வன்புறை வற்புறுத்தல்
9918 வன்புறை எதிரழிதல் தலைவன் ஆற்றுவித்துப் பிரிந்த பின் தனிமையால் தலைவி வருந்துதலைக் கூறும் அகத்துறை
9919 வன்மான் யானை
9920 வன்மை திண்மை, வலிமை
9921 வனப்பு அழகு, பொலிவு
9922 வனப்பு ஓடுதல் அழகு கெடுதல்
9923 வனம் அழகு
9924 வனைதல் பதித்தல், செய்தல்
மேல்