பக்கம் எண் :

110

449 முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போலத் தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை.

9

450 இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும்.

இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது.

10

46.சிற்றினஞ் சேராமை

சிற்றினஞ் சேராமையாவது காமுகரையும், சூதாடிகளையும், பெண்டிர் முதலாயினோரையும் சேர்ந்தொழுகினால் வருங் குற்றமும், சேரமையால் வரும் நன்மையும் கூறுதல், பெரியார் துணையாயினாலும் சிறியாரினத்தாரோடு ஒழுகின், அது தீமை பயக்கும்
என்று அதன்பின் இது கூறப்பட்டது.

 

451 சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர்.

இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது.

1

452 நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்.

நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை, தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை.

இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.

2