453 மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா மின்னா னெனப்படுஞ் சொல். மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம், ஆயினும் தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப்படுஞ் சொல் உண்டாம். இது பிறரால் பழிக்கப்படுமென்றது. 3 454 நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க் கினத்தினியல்ப தாகு மறிவு. நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மைத்தாவது போல, மக்கட்கு அறிவு இனத்தின் தன்மையதாய் வேறுபடும். 4 455 மனத்து ளதுபோலக் காட்டி யொருவற் கினத்துள தாகு மறிவு. ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றிப் பின் தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும். 5 456 மனத்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு மினந்தூய்மை தூவா வரும். மனம் நன்றாதலும் செய்வினை நன்றாதலுமாகிய இரண்டும். இனம் நன்றாதலைப் பற்றி வரும். இனிச் சேராமையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்டும் நன்றாம் என்று கூறினார். 6 457 மனம்தூயார்க் கெச்சம்நன் றாகு மினந்தூயார்க் கில்லைநன் றாகா வினை. மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை. இது மேலதற்குப் பயன் கூறிற்று. 7
|