50. இடன் அறிதல் - Knowing the Place |
| 1. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடம்கண்ட பின்அல் லது. | Begin no work of war, despise no foe, Till place where you can wholly circumvent you know.
| 491 | |
| 2. முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண்சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும். | Though skill in war combine with courage tried on battle - field, The added gain of fort doth great advantage yeild.
| 492 | |
| 3. ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். | E'en weak ones mightily prevail, if palce of strong defence, They find, protect themselves, and work their foes offence.
| 493 | |
| 4. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து துன்னியார் துன்னிச் செயின். | The foes who thought to triumph, find their thoughts were vain, If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.
| 494 | |
| 5. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. | The crocodile prevails in its own flow of water wide, If this it leaves, 'tis slain by anything beside.
| 495 | |
| 6. கடல்ஓடா கால்வல் நெடும்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. | The lofty car, with mighty wheel, sails not o'er watery main, The boast that skims the sea, runs not on earth's hard plain.
| 496 | |
| 7. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின். | Save their own fearless might they need no other aid, If in right place they fight, all due provision made.
| 497 | |
| 8. சிறுபடையான் செல்இடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். | If lord of army vast the safe retreat assail Of him whose host is small, his mightiest efforts fail.
| 498 | |
| 9. சிறைநலனும் சீரும் இலர் எனினும் மாந்தர் உறை நிலத்தோடு ஒட்டல் அரிது. | Though fort be none, and store of wealth they lack, 'Tis hard a people's homesteads to attack!
| 499 | |
| 10. கால்ஆழ் களரில் நரிஅடும் கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு. | The jackal slays, in miry paths of foot - betraying fen, The elephant of fearless eye and tusks transfixing armed men.
| 500 | |
|
|