103

51. தெரிந்து தெளிதல் - Selection and Confidence
 

1. அறம்பொருள் இன்பம்உயிர் அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப்படும்

How treats he virtue, wealth and pleasure? How , when life's at stake,
Comports himself? This four - fold test of man will full assurance make.

501
 
 

2. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாண்உடையான் கட்டே தெளிவு.

Of noble race, of faultless worth, of generous pride
That shrinks from shame or stain; in him may king confide.

502
 
 

3. அரியகற்று ஆசு அற்றார் கண்ணும் தெரியும்கால்
இன்மை அரிதே வெளிறு.

Though deeply learned, unflecked by fault, 'tis rare to see,
When closely scanned, a man from all unwisdom free.

503
 
 

4. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

Weigh well the good of each, his failings closely scan,
As these or those prevail, so estimate the man.

504
 
 

5. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல்.

Of greatness and of meanness too,
The deeds of each are touchstone true.

505
 
 

6. அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

Beware of trusting men who have no kith or kin,
No bonds restrain such men, no shame deters from sin.

506
 
 

7. காதன்மை கந்தா அறிவு அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.

By fond affection led who trusts in men of unwise soul,
Yeilds all his being up to folly's blind control.

507
 
 

8. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

Who trusts an untried stranger, brings disgrace,
Remediless, on all his race.

508
 
 

9. தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

Trust no man whom you have not fully tried,
When tested, in his prudence proved confide.

509
 
 

10. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

Trust where you have not tried, doubt of a friend to feel,
Once trusted, wounds inflict that nought can heal.

510