52. தெரிந்து வினையாடல் - Selection and Employment |
| 1. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். | Who good and evil scanning, ever makes the good his joy; Such man of virtuous mood should king employ.
| 511 | |
| 2. வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. | Who swells the revenues, spreads plenty o'er the land, Seeks out what hinders progress, his the workman's hand.
| 512 | |
| 3. அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும் நன்குஉடையான் கட்டே தெளிவு. | A loyal love with wisdom, clearness, mind from avarice free; Who hath these four good gifts should ever trusted be.
| 513 | |
| 4. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறு ஆகும் மாந்தர் பலர். | Even when tests of every kind are multiplied, Full many a man proves otherwise, aby action tried!
| 514 | |
| 5. அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று. | No specious fav'rite should the king's commision bear, But he that knows, and work performs with patient care.
| 515 | |
| 6. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். | Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?' Of hour befitting both assured, let every work proceed.
| 516 | |
| 7. இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல். | 'This man, this work shall thus work out,' let thoughtful king command; Then leave the matter wholly in his servant's hand.
| 517 | |
| 8. வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை அதற்குரியன் ஆகச் செயல். | As each man's special aptitude is known, Bid each man make that special work his own.
| 518 | |
| 9. வினைக்கண் வினை உடையான் கேண்மை வேறு ஆகா நினைப்பானை நீங்கும் திரு. | Fortune deserts the king who ill can bear, Informal friendly ways of men his toils who share.
| 519 | |
| 10. நாள்தோறும் நாடுக மன்னன் வினை செய்வான் கோடாமை கோடாது உலகு. | Let king search out his servants'deeds each day; When these do right, the world goes rightly on its way.
| 520 | |
|
|