53. சுற்றம் தழால் - Cherishing one's Kindred |
| 1. பற்றுஅற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. | When wealth is fled, old kindness still to show, Is kindly grace that only kinsmen know.
| 521 | |
| 2. விருப்பு அறாச் சுற்றம் இயையின் அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும். | The gift of kin's unfailing love bestows Much gain of good , like flower that fadeless blows.
| 522 | |
| 3. அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடுஇன்றி நீர்நிறைந் தற்று. | His joy of life who mingles not with kinsmen gathered round, Is lake where streams pour in, with no encircling bound.
| 523 | |
| 4. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன். | The profit gained by wealth's increase, Is living compassed round by relatives in peace.
| 524 | |
| 5. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும். | Who knows the use of pleasant words, and liberal gifts can give, Connections, heaps of them, surroundings him shall live.
| 525 | |
| 6. பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குஉடையார் மாநிலத்து இல். | Than one who gifts bestows and wrath restrains, Through the wide world none larger following gains.
| 526 | |
| 7. காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள. | The crows conceal not, call their friends to come, then eat; Increase of good such worthy ones shall meet.
| 527 | |
| 8. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். | Where 'king regards not all alike, but each in his degree, 'Neath such discerning rule many dwell happily.
| 528 | |
| 9. தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். | 'Who once were his, and then forsook him, as before Will come around, when cause of disagreement is no more.
| 529 | |
| 10. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக்கொளல். | Who causeless went away , then to return, for any cause, ask, leave; The king should sift their motives well, consider and receive!
| 530 | |
|
|