11

6. வாழ்க்கைத் துணைநலம் - The Goodness of the Help to Domestic life
 

1. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

As doth the house beseem, she shows her wifely dignity;
As doth her husband's wealth befit, she spends: helpmeet is she.

51
 
 

2. மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்

If household excellence be wanting in the wife,
Howe'er with splendour lived, all worthless is the life.

52
 
 

3. இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை

There is no lack within the house, where wife in worth excels,
There is no luck with the house, where wife dishonoured dwells.

53
 
 

4. பெண்ணின் பெரும்தக்க யாஉளகற்பு என்னும்
திண்மை உண்டாகப் பெறின்.

If women might of chastity retain,
What choicer treasure doth the world contain?

54
 
 

5. தெய்வம் தொழாஅள் கொழுநன்தொழுது எழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை.

No God adoring , low she bends before her lord;
Then rising, serves: the rain falls instant at her word!

55
 
 

6. தன்காத்துத் தன்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

Who gaurds herself, for husband's comfort cares, her household's fame,
In perfect wise with sleepless soul preserves,-give her a woman's name.

56
 
 

7. சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

Of what avail is watch and ward?
Honour's a woman's safest guard.

57
 
 

8. பெற்றால் பெறின்பெறுவர் பெண்டிர் பெரும்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

If wife be wholly true to him who gained her as his bride,
Great glory gains she in the world where gods bliss abide.

58
 
 

9. புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

Who have not spouses that in virtue's praise delight,
They lion-like can never walk in scorner's sight.

59
 
 

10. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.

The house's 'blessing', men pronounce the house - wife excellent;
The gain of blessed childern is its goodly ornament.

60