55. செங்கோன்மை - The Right Sceptre |
| 1. ஓர்ந்து கண்ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை. | Search out, to no one favour show, with heart that justice loves Consult,then act; this is the rule that right approves.
| 541 | |
| 2. வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. | All earth looks up to heav'n whence raindrops fall; All subjects looks to king that ruleth all.
| 542 | |
| 3. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். | Learning and virtue of the sages spring, From all - controlling sceptre of the king.
| 543 | |
| 4. குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. | Whose heart embraces subjects all, lord over mighty land Who rules, the world his feet embracing stands.
| 544 | |
| 5. இயல்பு உளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. | Were king, who righteous laws regards, the sceptre wields, There fall the showers ,there rich abundance crowns the fields.
| 545 | |
| 6. வேல்அன்று வென்றி தருவது மன்னவன் கோல் அதூஉம் கோடாது எனின். | Not lance gives kings the victory, But sceptre swayed with equity.
| 546 | |
| 7. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். | The king all the whole realm of earth protects; And justice guards the king who right respects.
| 547 | |
| 8. எண்பதத்தால் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தால் தானே கெடும். | Hard of access, nought searching out, with partial hand The king who rules, shall sink and perish from the land.
| 548 | |
| 9. குடிபுறம் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் வடுஅன்று வேந்தன் தொழில். | Abroad to guard, at home to punish, brings No just reproach; 'tis work assigned to kings.
| 549 | |
| 10. கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைம்கூழ் களை கட்டதனோடு நேர். | By punishment of death the cruel to restrain, Is as when farmer frees from weeds the tender grain.
| 550 | |
|
|