58. கண்ணோட்டம் - Benignity |
| 1. கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை உண்மையால் உண்டு இவ்வுலகு. | Since true benignity, that grace exceeding great, resides In kingly souls, world in happy state abides.
| 571 | |
| 2. கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. | The world goes on its wonted way, since grace benign is there; All other men are burthen for the earth to bear.
| 572 | |
| 3. பண் என்னாம் பாடற்கு இயைபுஇன்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். | Where not accordant with the song, what use of sounding chords? What gain of eye that no benignant light affords?
| 573 | |
| 4. உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால் கண்ணேட்டம் இல்லாத கண். | The seeming eye to face gives no expressive light, When not with duly meted kindness bright.
| 574 | |
| 5. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல் புண் என்று உணரப்படும். | Benignity is eyes ' adorning grace; Without it eyes' are wounds disfiguring face.
| 575 | |
| 6. மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர். | Whose eyes'neath brow infixed diffuse no ray Of grace; like tree in earth infixed are they.
| 576 | |
| 7. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல். | Eyeless are they whose eyes with no benignant lustre, shine; Who've eyes can never lack the light of grace benign.
| 577 | |
| 8. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்து இவ்வுலகு. | Who can benignant smile, yet leave no work undone; By them as very own may all the earth be won.
| 578 | |
| 9. ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் பொறுத்து ஆற்றும் பண்பே தலை. | To smile on those that vex, with kindly face, Enduring long, is most excelling grace.
| 579 | |
| 10. பெயக் கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர். | They drink with smiling grace, though poison interfused they see, Who seek the praise of all - esteemed courtesy.
| 580 | |
|
|