121

60. ஊக்கம் உடைமை - Energy
 

1. உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று.

'Tis energy gives men o'er that they own a true control;
They nothing own who own not energy of soul.

591
 
 

2. உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை
நில்லாது நீங்கி விடும்.

The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs.

592
 
 

3. ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார்.

'Lost is our wealth', they utter not this cry distressed,
The men of firm concentred energy of soul possessed.

593
 
 

4. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை.

The man of energy of soul inflexible,
Good fortune seeks him out and comes a friend to dwell.

594
 
 

5. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

With rising flood the rising lotus flower its stem unwinds,
The dignity of men is measured by their mind,

595
 
 

6. உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

Whate'er you ponder, let your aim be lofty still,
Fate cannot hinder always, thwart you as it will.

596
 
 

7. சிதைவு இடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.

The men of lofty mind quail not in ruin's fateful hour,
The elephant retains his dignity mind arrow's deadly shower.

597
 
 

8. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.

The soulless man can never gain
Th' ennobling sense of power with men.

598
 
 

9. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்.

Huge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed!

599
 
 

10. உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார்
மரம் மக்கள் ஆதலே வேறு.

Firmness of soul in man is real excellence;
Others are trees, their human form a mere pretence.

600