62. ஆள்வினை உடைமை - Manly Effort |
| 1. அருமை உடைத்துஎன்று அசாவாவை வேண்டும் பெருமை முயற்சி தரும். | Say not 'Tis hard', in weak , desponding hour, For strenuous efforts gives prevailing power.
| 611 | |
| 2. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. | In action be thou' ware of act's defeat; The world leaves those who work leave incomplete!
| 612 | |
| 3. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. | In strenuous effort doth reside The power of helping others; noble pride!
| 613 | |
| 4. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். | Beneficent intent in men by whom no strenuous work is wrought, Like battle-axe in sexless being's hand availeth nought.
| 614 | |
| 5. இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும்தூண். | Whose heart delighteth not in pleasure, but in action finds delight, He wipes away his kinsmen's grief and stands the pillar of their might.
| 615 | |
| 6. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றுஇன்மை இன்மை புகுத்தி விடும். | Effort brings fortune's sure increase, Its absence brings to nothingness.
| 616 | |
| 7. மடியுளாள் மாமுகடி என்ப மடிஇலான் தாள்உளாள் தாமரையி னாள். | In sluggishness is seen misfortune's lurid form, the wise declare; Where man unslothful toils, she of the lotus flower is there!
| 617 | |
| 8. பொறிஇன்மை யார்க்கும் பழியன்று அறிவுஅறிந்து ஆள்வினை இன்மை பழி. | 'Tis no reproach unpropitious fate should ban; But not to do man's work is foul disgrace to man!
| 618 | |
| 9. தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். | 'Though fate divine should make you labour vain; Efforts its labour's sure reward will gain.
| 619 | |
| 10. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் | Who strive with undismayed , unfaltering mind. At length shall leave opposing fate behind.
| 620 | |
|
|