129
2. அமைச்சியல் - Ministers of State |
64. அமைச்சு - The Office of Minister of State |
| 1. கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. | A minister is he who grasps, with wisdom large. Means,time, work's mode and functions rare he must discharge.
| 631 | |
| 2. வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. | A minister must greatness own of guardian power, determined mind. Learn'd wisdom, manly effort with the former five combined.
| 632 | |
| 3. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு. | A minister is he whose power can foes divide, Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.
| 633 | |
| 4. தெரிதலும் தேர்ந்து செயலும் ஒரு தலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு. | A minister has power to see the methods help afford, To ponder long, then utter calm conclusive word.
| 634 | |
| 5. அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை. | The man who virtue knows, has use of wise and plesant words, With plans for every season apt, in counsel aid affords.
| 635 | |
| 6. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன் நிற்பவை. | When native subtilty combines with sound scholastic lore, 'Tis subtilty surpassing all , which nothing stands before. | 636 | |
| 7. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். | Though knowing all that books can teach, ' tis truest tact To follow common sense of men in act.
| 637 | |
| 8. அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழை இருந்தான் கூறல் கடன். | 'Tis duty of the man in place aloud to say The very truth, though unwise king may cast his words away.
| 638 | |
| 9. பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும். | A minister who by king's side plots evil things Worse woes than countless foemen brings.
| 639 | |
| 10. முறைப்படச் சூழ்ந்தும் முடிவுஇலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர். | For gain of end desired just counsel nought avails To minister, when tact in execution fails.
| 640 | |
|
|