7. மக்கட்பேறு - The Obtaining of Sons |
| 1. பெறும் அவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவு அறிந்த மக்கள்பேறு அல்ல பிற | Of all that men acquire, we know not any greater gain, Than that which by the birth of learned children men obtain.
| 61 | |
| 2. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புஉடை மக்கள் பெறின் | Who children gain, that none reproach, of virtuous worth, No evils touch them, through the sev'n-fold maze of birth.
| 62 | |
| 3. தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள் தம்தம் வினையால் வரும். | 'Man's children are his fortune, ' say the wise; From each one's deeds his varied fortunes rise.
| 63 | |
| 4. அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ். | Than God's ambrosia sweeter far the food before men laid, In which the little hands of children of their own have play'd.
| 64 | |
| 5. மக்கள்மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்றுஅவர் சொல்கேட்டல் இன்பம் செவிக்கு. | To parent sweet the touch of children dear; Their voice is sweetest music to his ear.
| 65 | |
| 6. குழல்இனிது யாழ்இனிது என்ப தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர். | 'The pipe is sweet', 'the lute is sweet,' by them 't will be averred, Who music of their infants' lisping lips have never heard.
| 66 | |
| 7. தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். | Sire greatest boon on son confers, who makes him meet, In councils of the wise to fill the highest seat.
| 67 | |
| 8. தம்மில் தம்மக்கள் அறிவுஉடைமை மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் இனிது. | Their children's wisdom greater than their own confessed, Through the wide world is sweet to every human breast.
| 68 | |
| 9. ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய். | When mother hears him named 'fulfill'd of wisdom's lore,' Far greater joy she feels, than when her son she bore.
| 69 | |
| 10. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என் னோற்றான்கொல் எனும்சொல். | To sire, what best requital can by grateful child be done? To make men say, 'what merit gained the father such a son?'
| 70 | |
|
|