66. வினைத்துய்மை - Purity in Action |
| 1. துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். | The good external help confers is worldly gain; By action good men every needed gift obtain.
| 651 | |
| 2. என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. | From action evermore thyself restrain Of glory and of good that yields no gain.
| 652 | |
| 3. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னும் அவர். | Who tell themselves that nobler things shall yet be won, All deeds that dim the light of glory must they shun.
| 653 | |
| 4. இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கு அற்ற காட்சியவர். | Though troubles press, no shameful deed they do. Whose eyes the ever-during vision view.
| 654 | |
| 5. எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று. | Do nought that soul repenting must deplore. If thou hast sinned, 'tis well if thou dost sin no more.
| 655 | |
| 6. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. | Though her that bore thee hung'ring thou behold, no deed Do thou, that men of perfect soul have crime decreed.
| 656 | |
| 7. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழி நல்குரவே தலை. | Than store of wealth guilt-laden souls obtain, The sorest poverty of perfect soul is richer gain.
| 657 | |
| 8. கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும். | To those who hate reproof and do forbidden thing, What prospers now, in after days shall anguish bring.
| 658 | |
| 9. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பால் அவை. | What's gained through tears with tears shall go; From loss good deeds entail harvests of blessings grow.
| 659 | |
| 10. சலத்தால் பொருள்செய்து ஏம்ஆர்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்து இரீஇ அற்று. | In pot of clay unburnt he water pours and would retain. Who seeks by wrong the realm in wealth and safety to maintain.
| 660 | |
|
|