67. வினைத்திட்பம் - Power in Action |
| 1. வினைதிட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. | What men call ' power in action 'know for' power of mind'; Externe to man all other aids you find.
| 661 | |
| 2. ஊறு ஓரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். | 'Each hindrance shun','unyielding onward press, if obstacle be there' These two define you way, so those that search out truth declare.
| 662 | |
| 3. கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் ஏற்றா விழுமம் தரும். | Man's fitting work is known but by success achieved; In midst the plan revealed brings ruin ne'er to be retrieved.
| 663 | |
| 4. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். | Easy to every man the speech that shows the way; Hard thing to shape one's life by words they say!
| 664 | |
| 5. வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறு எய்தி உள்ளப்படும். | The power in act of men renowned and great, With king acceptance finds and fame through all the state.
| 665 | |
| 6. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். | Whate'er men think, ev'n as they think, may men obtain, If those who think can steadfastness of will retain.
| 666 | |
| 7. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெரும்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. | Despise not men of modest bearing; Look not at form , but what men are; For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car!
| 667 | |
| 8. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல். | What clearly eye discerns as right, with steadfast will, And mind unslumbering , that should man fulfil.
| 668 | |
| 9. துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி இன்பம் பயக்கும் வினை. | Though toil and trouble face thee, firm resolve hold fast, And do the deeds that pleasure yeild at last.
| 669 | |
| 10. எனைத் திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு. | The world desires not men of every power possessed, Who power in act desire not,-crown of all the rest.
| 670 | |
|
|