| 1. அன்பு உடைமை ஆன்றகுடிப்பிறத்தல் வேந்துஅவாம் பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு. | Benevolence, high birth the courtesy kings love;- These qualities the envoy of a king approve.
| 681 | |
| 2. அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு இன்றி அமையாத மூன்று. | Love, knowledge, power of chosen words, three things, Should he possess who speaks the words of kings.
| 682 | |
| 3. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றிவினை உரைப்பான் பண்பு. | Mighty in lore amongst the learned must he be, Midst jav'lin-bearing kings who speaks the words of victory.
| 683 | |
| 4. அறிவு உரு ஆராய்ந்த கல்வி இம்மூன்றன் செறிவு உடையான் செல்க வினைக்கு. | Sense, goodly grace, and knowledge exquisite, Who hath these three for envoy's task is fit.
| 684 | |
| 5. தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது. | In terms concise, avoiding wrathful speech who utters pleasant word, An envoy he who gains advantage for his lord.
| 685 | |
| 6. கற்றுக் கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது. | An envoy meet is he , well - learned of fearless eye Who speaks right home, preparerd for each emergency.
| 686 | |
| 7. கடன் அறிந்து காலம் கருதிஇடன் அறிந்து எண்ணி உரைப்பான் தலை. | He is the best who knows what's due, the time considered well, The place selects, then ponders long ere he his errand tell.
| 687 | |
| 8. தூய்மை துணைமை துணிவு உடைமை இம்மூன்றின் வாய்மை வழி உரைப்பான் பண்பு. | Integrity, resources, soul determined, truthfulness; Who rightly speaks his message must these marks possess.
| 688 | |
| 9. விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன் கணவன். | His faltering lips must utter no unworthy thing, Who stands, with steady eye, to speak the mandates of his king.
| 689 | |
| 10. இறுதிபயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு உறுதி பயப்பதாம் தூது. | Death to the faithful one his embassy may bring; To envoy gains assured advantage for his king.
| 690 | |
|
|